சமூக நீதி

பக்கங்கள்

▼

வியாழன், 9 டிசம்பர், 2021

ஜாதி குறித்து உச்சநீதிமன்றம் [29-11-2021 நாளிட்ட 'இந்து' ஆங்கில நாளிதழின் தமிழாக்கம்]



     December 08, 2021 • Viduthalai

இடஒதுக்கீட்டுக்காக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள் பிரிவினை அடையாளம் கண்டு மதிப்பீடு செய்வதற்கு பின்பற்றப்பட்ட கொள்கைகளின் தரத்தைப் பற்றி இந்திய உச்சநீதி மன்றத்தினால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் இப் பொருள் பற்றி நடைபெற்று வரும் விவாதங்களுக்கு தொடர்புடையவையும், மிகவும் பொருத்தமான வையும் ஆகும். மனநிறைவளிக்கும் வகையில் அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசால் இயலாத அளவுக்கு கூர்மையாகக் கேட்கப்பட்ட அக் கேள்விகளுக்கு, குறிப்பாக ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள பிரிவு மக்கள் மட்டுமே பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறமுடியும் என்று  நிர்ணயிக்கப் பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம் கேட்டுப் பெற் றுள்ளது.  எனவே, இந்த இடஒதுக்கீட்டு சலுகையை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விவரங்களின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு தேவை என்பதும்,  எந்தப் பிரிவு மக்கள் அந்த சலு கையைப் பெறப்போகிறார்கள் எவர் பெறப்போவ தில்லை என்பதற்கான நிபந்தனைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதும்,  இப்போது ஒரு நிர்ணயிக்கப் பட்ட கொள்கையாக ஆகிவிட்டது. பொருளாதார நிலையில் பின்பதங்கி உள்ளவர்களுக்கான  பயனீட் டாளர்களை அடையாளம் காண்பதற்கு முன், அது பற்றிய ஆய்வு ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு உச்சநீதி மன்றம் விரும்புவது நியாயமானதேயாகும். 2019 ஆம் ஆண்டில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற  அரசமைப்பு சட்ட அமர்வின் முன் பரிசீலனையில் உள்ளன என்ற உண்மையின் அடிப்படையில்,  மூன்று நீதிபதிகள் அமர்வு இது பற்றி விசாரணை  செய்வது  தவிர்க்க இயலாத ஒரு தேவையாகும். இந்த அமர்வினால் நடந்து வரும் வழக்கு விசாரணையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 27 சத இட ஒதுக்கீடு மற்றும்  நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு,  அறிமுகப்படுத்தப் பட்டுள்ள அனைத்திந்திய பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவை உச்சநீதிமன்ற அமர்வின் முன் பரிசீலனையில் உள்ளன. அரசின் எந்த கொள்கை முடிவையும் தாங்கள் பரிசீலிக்கப் போவதில்லை என்றும்,  அதற்கான அரசமைப்பு சட்ட தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிக்கவே தாங்கள் விரும்புவதாகவும் இந்த அமர்வு கூறியுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு  இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஆண்டுக்கு ரூ.8 லட்சத் துக்கும் மேல் வருவாய் உச்ச வரம்பாக நிர்ணயிக் கப்பட்டுள்ளபடியால், ரூ.8 லட்சத்துக்கும் மேல் வருவாய் பெறுபவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவர். இதே வருவாய் உச்ச வரம்புதான் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வியிலும், சமூக அள விலும்  பின்தங்கியுள்ள மக்களுடன், அவ்வாறு சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கி இராமல், முன் னேற்றம் அடைந்தவர்களை சமப்படுத்திக் காண்பது சரியானதுதானா என்ற நுணுக்கமான கேள்வி எழுகிறது.

எவ்வாறு இருந்தாலும், அகில இந்திய இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள் பிரிவுக்கும் இடஒதுக்கீடு அளிப்பது செல்லத் தக்கதுதானா என்பதை மட்டுமே இந்த அமர்வு முடிவு செய்யும். அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடு,  தற்போது நடைமுறையில் உள்ள சேர்க்கை விதிகளின்படி செய்யப்பட்டு வருவதாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டு நடைமுறை, ஒன்றிய அரசு மற்றும் மாநிலஅரசுகளினால் நடத்தப்படும் அவரவர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தனித் தனியாக செய்யப் பட்டு வருகிறது.  ஆனால், அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டு இடங்களில் இவ்வளவு ஆண்டுகள் காலமாக இந்த இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வர வில்லை. இந்த மாணவர் தொகுப்பு, இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பு மாணவர் இடங்களில் 15 சதவிகித இடங்களும், முதுகலை மருத்துவ பட்டப் படிப்பு மாணவர் இடங்களில் 50 சதவிகித இடங்களும் மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கும் செய்யும் இடங்களைக் கொண்டு உருவாக்கப் படுவதுதான் இந்த அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான இந்த தொகுப்பு. இந்தப் பிரிவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இது வரை அளிக்காமல் இருந்ததால் ஏற்பட்ட முரண்பாடு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.

விடைகாண இயலாமல் இருக்கும் மிகப் பெரிய கேள்வி,  இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு நட வடிக்கையாகக் கருத முடியுமா என்பதும், சமூக அளவில் முன்னேறியுள்ள சமூகப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு சலுகையில் ஒரு பங்கு அளிக்க இயலுமா என்பதும்தான். இந்தக் கேள்விக்கான முடிவை அர சமைப்பு சட்ட அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும்.

நன்றி: 'தி இந்து' - 29-11-2021

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்


parthasarathy r நேரம் 1:35 AM கருத்துகள் இல்லை:
பகிர்

வியாழன், 25 நவம்பர், 2021

ஜாதி வேறுபாடற்ற மயானங்கள் கொண்ட 111 சிற்றூர்களுக்கு தலா ரூ.10 லட்சம் அரசாணை வெளியீடு!


  November 24, 2021 • Viduthalai

சென்னை, நவ. 24- தமிழ்நாட்டில் பல கிராமங்களில் ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில் மற்ற வர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக வளர்ச்சிப் பணிகளைச் செயல்படுத்த அரசு சார்பில் ரூ. 10 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் அறிவிப்பை வெளியிட்டார்.

முதலமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது,

அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை மாவட்டம் நீங்கலாக) ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டிலுள்ள சிற்றூர்களின் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்கு ஊக்கத் தொகையாக முதற்கட்டமாக ஒரு மாவட்டத்திற்கு 3 சிற்றூர்கள் வீதம் 37 மாவட்டங்களிலுள்ள 111 சிற்றூர்களுக்கு தலா ரூ.10,00,000/- வீதம் மொத்தம் ரூபாய் 11 கோடியே 10 இலட்சம் பரிசுத்தொகை வழங்கிட ஏதுவாக நிதி ஒப்பளிப்பு வழங்கி அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை கொண்ட சிற்றூர் களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதற்கு ரூ.11 கோடி ஒதுக்கி அர சாணை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசுக்கு பலரும் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.

parthasarathy r நேரம் 7:51 PM கருத்துகள் இல்லை:
பகிர்

வெள்ளி, 12 நவம்பர், 2021

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து

 

      November 01, 2021 • Viduthalai

உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மதுரை, நவ.1 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு வில், தமிழ்நாட்டில் மிக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர் கள் உள்ளனர்.

இவர்களுக்கு மொத்த மாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட் டுள்ளது. இதில் 10.5 சதவீ தத்தை வன்னியர் சமுதா யத்தினருக்கு உள்ஒதுக் கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.

இதனால் மிகவும் பிற் பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டது. முறை யாக ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்திய பின் னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

எனவே, வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக் கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறு வனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந் தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள் தோறும் விசாரித்தனர்.

விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னி யர்களுக்கு வழங்கி இருப் பது, சட்டத்துக்கு முர ணான இட ஒதுக்கீடாக உள்ளது.

ஜாதி ரீதியான கணக் கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன் றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற ஜாதி மாண வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர். அரசு தரப்பிலும் சட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத் தனர். பின்னர் இந்த வழக் கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.

இந்தநிலையில் இன்று (1.11.2021) காலை யில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறியிருந்ததாவது:-

மிகவும் பிற்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட் டில் உள்ஒதுக்கீடாக வன் னியர்களுக்கு 10.5 சதவீ தத்தை ஒதுக்க மாநில அர சுக்கு அதிகாரம் உள்ளதா?

ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படாத சூழ் நிலையில் இது போன்ற அரசாணை பிறப்பிக்க லாமா? ஜாதி அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என் பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்கள் ஏற்றுக் கொள் பவையாக இல்லை. இந்த அரசாணை அரசமைப்பு சட்டங்களுக்கு எதிரான தாக உள்ளது.

எனவே வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக் கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அர சுப்பணிகளில் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின் றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படு கிறது. இவ்வாறு நீதி பதிகள் உத்தரவில் கூறி யுள்ளனர்.

parthasarathy r நேரம் 3:55 AM கருத்துகள் இல்லை:
பகிர்

வெள்ளி, 8 அக்டோபர், 2021

எந்த அடிப்படையில் பொருளாதார வரம்பை முடிவு செய்தீர்கள்?

 

October 08, 2021 • Viduthalai

10 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி. அக்.8 மருத்துவ கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் பொரு ளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (Economically Weaker Section - EWS) 10 சதவீத இடமும் ஒதுக் கிய ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொ டரப்பட்ட வழக்கு நேற்று (7.10.2021) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் டி.ஒ. சந்திரசூட், விக்ரம் நாத் மற்றும் பி.வி. நாகரத்னா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூ ரிகளில் 2021_2022ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர இடஒதுக்கீடு கடை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீத இடங்களும் எம்.எஸ்., மற்றும் எம்.டி. உள்ளிட்ட முதுநிலை படிப்பில் சேர 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக வகைப்படுத்த 8 லட்ச ரூபாய் என்ற அளவீடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இதற்காக ஒன்றிய அரசு நடத்திய ஆய்வு என்ன ? இது குறித்த தரவுகள் ஏதும் உள்ளதா ? எந்த அடிப்படையில் ரூ.8 லட்சம் என்ற தொகை வரையறுக்கப்பட்டது ? என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இது அரசின் கொள்கை முடிவு என்று கூற முடியாது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக் குரைஞரிகளிடம் கூறிய நீதிபதிகள் இந்த வழக் கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

parthasarathy r நேரம் 5:35 AM கருத்துகள் இல்லை:
பகிர்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்க்கப்படும்

 

September 04, 2021 • Viduthalai

சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னை, செப். 4- அரசு வேலைவாய்ப்பில் 3 சத வீத இடஒதுக்கீடு பெறு வதற்கான விளையாட்டு களில் ஒன்றாக சிலம்பமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளை யாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்குப் பதில் அளித்து, அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று (3.9.2021) வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:

மாநிலத்தின் 4 மண் டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது. இங்குஉயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையைஅடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளன. இதற்கான தொழில்நுட்ப பொருளா தார சாத்தியக்கூறு அறிக் கையை தயாரிக்க ஆலோ சகர்களை நியமிக்க உத் தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களால் உரு வாக்கப்பட்ட, வரலாற் றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம், அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக் கொள் ளப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பு டைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதி யாக தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மய்யம் தொடங் கப்படும்.

கிராமப்புற மக்களின் உடற்தகுதி, ஆரோக்கி யத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகமானது அதன் உறுப்புக் கல்லூ ரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் அரு கில்உள்ள கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமப்புற பயிற்சி திட் டத்தின் கீழ் உடற்தகுதி பயிற்சிமேற்கொள்ளும்.

மக்களின் நன்மைக் காக யோகாசனங்கள், மனக்கட்டுப்பாடு போன் றவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கி யத்துக்காக தமிழ்நாடு உடற்கல்வியியல், விளை யாட்டுப் பல்கலைக்கழகம் மூலம் ‘யோகா’என்னும் செயலி உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்பு பிரிவின் மூலம் தமிழ்நாடு உடற்கல்வியியல், விளை யாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நேர்முகத் தேர் வுக்கான பல்வேறு பயிற் சிகள் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வளாகத் தில் உள்ள கட்டமைப்பு வசதிகளை ‘கேலோ இந் தியா’ திட்டம் மூலம் தரம் உயர்த்தவும், புதிதாக உரு வாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 11 அறிவிப்பு களை பேரவையில் அமைச் சர் வெளியிட்டார்.

parthasarathy r நேரம் 9:23 AM கருத்துகள் இல்லை:
பகிர்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இன்று உலக சமூக நீதி நாள்- சமூகநீதியின் முன்னோடிகளான மருத்துவர்கள்

 

February 20, 2021 • Viduthalai

சமூக நீதிக்காக தமிழகத்தில் அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் தளகர்த்தாக்களில் இருவர் மருத்துவர். சமூக நீதிக்காக போராடுவதில் மருத்துவர்கள் எப்போதும் முன்னணியில்  களமாற்றி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த நாளில் பதிவிடுவதை பெருமையாக கருதுகிறேன்.

உலகின் சமூகப் புரட்சிக்கு வித்திட்டதில் மருத் துவ இனத்திற்கு வரலாற்றில் பெரும்பங்கு எப்போதும் உண்டு.உலகின் மிகப்பெரும் புரட்சியாளன் சேகு வேரா ஒரு மருத்துவர் என்பது நாமறிந்ததே.

இந்தியாவில் எப்போதும் ஓர் தனித்துவமிக்க மாநிலமாக ,ஏன் மற்ற மாநிலங்களுக்கு மாநில சுயாட் சியை,சுயமரியாதையை, சமூக நீதியை, மொழியுரி மையை,கற்றுக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் எப்போதும் திகழ்ந்திருக்கிறது.

அயோத்திதாச பண்டிதர் ஆரம்பித்து வைத்த இந்த வரலாற்றை நீதிக் கட்சி நிலைநாட்டியது.

நீதிக்கட்சியை உருவாக்கிய மூவரில் இருவர் மருத்துவர்களே.

மருத்துவர் டி..எம்.நாயர் (1868-1919)

மருத்துவர் சி.நடேசனார் (1875-1937)

மருத்துவர் டி.எம்.நாயர்:

பெரியாராலேயே 'திராவிட லெனின்' என்று அழைக்கப்பட்டவர். பிரிட்டன் பிரான்சில் மருத்துவப் படிப்புகளை முடித்த இவர் நீதிக்கட்சியை தொடங்கிய வர்களில் ஒருவர்...  'ஜஸ்டிஸ்' பத்திரிகையின் ஆசிரி யராக இருந்தவர்.

மருத்துவர் சி.நடேசனார்:

பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்டபோது 'திராவிட இல்லம்' விடு தியை தொடங்கினார். சென்னை அய்க்கிய சங்கம், சென்னை 'பப்ளிக் சர்விஸ் கமிஷன்' அமைப்பதில் இவரின் பங்கு அளப்பரியது.

தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், ஆதி திராவிட நலனுக்காக மிகத் தீவிரமாக போராடினார்.

தமிழகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதில் நீதிக்கட்சியின் பங்கு அளப் பரியது. அதன் தள கர்த்தாக்கள் இருவர் மருத்துவர் என்பது மருத்துவ உலகிற்கு வரலாற்றுப் பெருமை.

மருத்துவ உலகம் மருத்ததுவம்  தாண்டி சமுகத் திற்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டிய வரலாற்று கடமையை சேகுவேராக்களும்,  நடேசனார்களும், நாயர்களும், முத்துலெட்சுமிகளும், ரவீந்திரநாத்து களும் நமக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!

ஸ்டெதாஸ்கோப்புகள் சமூக இதயத் துடிப்பு களையும் கேட்கட்டும்!

நம்பிக்கையோடு

மருத்துவர் ச.தட்சிணாமூர்த்தி,

தலைவர் - திசைகள் அமைப்பு,

அறந்தாங்கி, 9159969415

parthasarathy r நேரம் 5:25 AM கருத்துகள் இல்லை:
பகிர்
‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.