சமூக நீதி

பக்கங்கள்

▼

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

ஜெய்ப்பூரில் நடந்த ஜாதிக்கொடுமை குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனைத் தாக்கிய உயர்ஜாதியினர்



  November 30, 2021 • Viduthalai

ஜெய்ப்பூர், நவ. 30- தாழ்த்தப்பட்டவர்கள் குதிரையில் வரக்கூடாது என்று கூறி திருமண ஊர்வலத்தில் குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மணமகனை கற்களால் உயர்ஜாதியினர் தாக்கியுள்ளனர்.

 ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகே உள்ளது கெரோடி கிராமம். உயர் ஜாதிப் பிரிவினர் அதிகமாக வசிக்கும் இங்கு, தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த கிராமத்தின் வரலாற்றில் முதல்முறையாக  தாழ்த்தப்பட்ட சமூக வாலிபர் ஒருவர், கடந்த 25.11.2021 அன்று இரவு குதிரை மீது மாப்பிள்ளை ஊர்வலம் நடத்தினார். இதற்கு,  அந்த கிராமத்தைச் சேர்ந்த உயர் ஜாதிப் பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், 70க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு பாதுகாப்பாக சென்றனர். இருப்பினும், ஒரு இடத்தில் ஊர்வலம் வரும்போது திடீரென ஒரு கும்பல் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியது.

நாலாபக்கத்திலும் இருந்தும் 15 நிமிடங்களுக்கு மேல் இடைவிடாமல் கற்கள் பறந்து வந்து தாக்கியதில் காவல்துறையினரும் காயமடைந்தனர். இது தொடர்பாக, 10 பேரை காவல்துறையனிர் இதுவரையில் கைது செய்துள்ளனர்.

parthasarathy r நேரம் 7:14 AM
பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

‹
›
முகப்பு
வலையில் காட்டு

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க
Blogger இயக்குவது.