பக்கங்கள்

திங்கள், 10 ஏப்ரல், 2017

பார்ப்பனர்கள் ஆக்கிரமிப்பு பட்டியல்

#பார்ப்பனர்கள்
மக்கள்தொகையில் ------------------- 3 %,
கோயில்களில்-------------------------100%,
இந்திய ஊடகங்களில்-------------- 90%,
மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சரவையில்
அலுவலக செயலாளர்கள்---------- 80%, ஐ.ஏ.எஸ்--------------------------------------70%, ஐ.பி.எஸ்--------------------------------------61%
உச்சநீதிமன்ற நீதிபதிகள்----------- 56%,
மாநிலத் தலைமை செயலாளர்--- 54%,
ஆளுநர்கள்--------------------------------- 54%,
மாநிலங்களவை உறுப்பினர்கள் 41%,
மக்களவை உறுப்பினர்கள்--------  48%,
மத்திய அமைச்சர் ---------------------- 36%
ஆதாரம்: லோக் சந்தா - மராட்டிய ஏடு - 8.8.2016
(செல்வம் தமிழ்மாறன் பதிவு)

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

செட்டிநாட்டவரின் மூதாதையர்

செட்டி நாட்டவர் கலப்பு மணத்தை ஏற்கிறார்களா? என்று வழக்கறிஞர் கேட்டார்...
இப்போதைய செட்டிநாட்டவரின் மூதாதையர் கலப்பு மணத்தால் வம்சவிருத்தி செய்து கொண்டவர்கள்தான்... 500 ஆண்டுகளுக்கு முன் சோழநாட்டிலிருந்து வெளியேறிய 150 வணிகச் செட்டியார் பாண்டியனிடம் வந்து தாங்கள் குடியேற இடம் கேட்டபோதுதான் அவர் இன்றைய செட்டிநாட்டுப் பகுதிகளை அவர்களுக்காக ஒதுக்கித் தந்தார்... பெண்டு பிள்ளைகள் இல்லாமல் அந்த 150 பேரும் ஆடவர்களாகவே பாண்டி நாட்டில் வந்து குடியேறியதால், அன்று அந்தப் பகுதியில் வாழ்ந்த வேளாள குலப்பெண்களை மணந்துகொண்டார்கள். அதன் காரணமாகவே வெகுகாலம் செட்டியார் குலம் சைவ உணவை மட்டும் உட்கொள்பவர்களாக இருந்து வந்துள்ளது...
என்று இந்தத் தம்பதியர் பழைய வரலாற்று ஆதாரங்களை எடுத்துப் பேசவே எதிர்தரப்பு வழக்கறிஞர் திணறிப்போனார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் வரை வந்து முடிவில் சிதம்பரம் ரெங்கம்மாள் தம்பதிகளுக்கு ஆதரவாக தீர்ப்பு கிடைத்தது.
அதன் பலனாய் அவர்கள் மணம் ஒப்புக் கொள்ளப்பட்டதுடன் சிதம்பரத்திற்கு மலேசியாவில் இருந்து பல இலட்ச ரூபாய் சொத்துக்களும் சேதாரமின்றி அவருக்கே கிடைத்தன.
இந்தத் தம்பதியருக்கு நான்கு குழந்தைகள். இவர்களில் மூத்தவரான மோகனா அம்மையாரைத்தான் பிற்காலம் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் திருமணம் செய்துகொண்டார்.
நூல்: பெண்குல விளக்கு நீலாவதியார்
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

-உண்மை இதழ்,16-30.11.15