பக்கங்கள்

ஓ பி சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓ பி சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 டிசம்பர், 2022

ஓபிசி வகுப்பினருக்கான வருமான உச்சவரம்பை திருத்த வேண்டும்: மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் வில்சன் வலியுறுத்தல்


புதுடில்லி,டிச.9- நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் பேசியதாவது: 

''ஆர்.என். பிரசாத் தலைமையிலான வல்லுநர் குழு 10.3.1993  அன்று சமூக ரீதியாக முன்னேறிய நபர்களை தவிர்ப்பதற்காக கிரீமிலேயர் முறையை கண்டறிந்தது. ஓபிசி இடஒதுக்கீடுகளில் இருந்து கிரீமிலேயர் வகுப்பினரை விலக்குவதற்கான அறிக்கையினை வகைப்படுத்தி அக்குழு சமர்ப் பித்தது. இது செப்டம்பர் 8, 1993 இல் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு திட்டத்தை செயல்படுத்துவதற்கும், கிரீமிலேயரை விலக்குவதற்கும் ஏற்றுக் கொள்ளப் பட்டது. தொடக்கத்தில், அதாவது 1993 ஆம் ஆண் டில் வருமான வரம்பானது ஒரு லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அது உயர்த்தப்பட் டது. கடைசியாக செப்டம்பர் 2017 இல் ரூ.6 லட்சத்தி லிருந்து ரூ.8 லட்சமாக திருத்தப்பட்டது.

இதில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வருமான உச்சவரம்பு மறுபரிசீலனை செய்யப்பட வில்லை. பணவீக்கம், பணமதிப்பு, நேர மாற்றங் களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாததால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமத்துவம் அடைய முடியவில்லை. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பான ரூ.8 லட்சத்தைத் திருத்துவதற்கான காலம் ஏற்கனவே 1.9.2020 இல் முடிந்துவிட்டது. எனவே, வருமான உச்சவரம்பை ரூ.15 லட்சமாக திருத்துவது தற்போதைய தேவையாக உள்ளது. அதே போன்று கிரீமிலேயரை நிர்ணயிக்கும் காரணிகள் திருத்தப்பட வேண்டும். எனவே, ஓபிசி வகுப்பினரின் வருமான உச்சவரம்பை திருத்து வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்,’’ என கோரிக்கை வைத்துள்ளார்.

வியாழன், 8 செப்டம்பர், 2022

யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் சார்பில் நூறு விடுதலை சந்தா

நூறு விடுதலை சந்தா

 

சென்னை பெரியார் திடலில்   5.9.2022  அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை ஆசிரியராக அறுபது ஆண்டுகள் தொண்டு செய்தமைக்கு பாராட்டு தெரிவித்து, யூனியன் வங்கி ஓபிசி நல சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் சார்பில்  நூறு விடுதலை சந்தாவுக்குரிய  ரூ.இரண்டு லட்சம் காசோலையை நிர்வாகிகள் கோ.கருணாநிதி (தலைவர்), கே.சந்திரன் (ஆலோசகர்), எம்.பாக்யராஜ் (அ.இ.பொதுச் செயலாளர்), ஜி.சரஸ்வதி (பொருளாளர்), பி.லோகேஷ் பிரபு (செயலாளர்), சி.பி.குணசேகரன் (துணைத் தலைவர்) ஆகியோர்  தமிழர் தலைவரிடம் அளித்தனர்