பக்கங்கள்

சனி, 29 பிப்ரவரி, 2020

பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர்

11.10.1931 - குடிஅரசிலிருந்து...

கன்னியாகுமரி

பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுமான திரு.எம்.எச்.வீரராகவ அய்யர் ஜமாபந்தி அலுவலாக அன்று கன்னியாகுமாரி முகாம் செய்திருந்தார். அன்று விசாரணைக்கு வைத்திருக்கும் வழக்குகளிலுள்ள கட்சிகள் பலர் காலை 10 மணி தொட்டே சத்திரத்தில் கூட ஆரம்பித்தார்கள்.

ரெவன்யூ உத்தியோகஸ்தர் பலர் சத்திரத் திலுள்ள பல அறைகளில் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். கோர்ட் சாதா ரணமாகக் கூடுகிற அறையில் வழக்கம்போல எல்லா ஏற்பாடுகளுமா யிருந்தன. கடைசியாக மாஜிஸ்திரேட் அவர்களும் வந்தார்கள். திடீ ரென்று இன்று தொட்டு கச்சேரி விசாரணை அருகிலுள்ள போலீஸ் டேஷனில் நடைபெறும்  என்று ஆணை பிறப்பித்தார். போலீசாரும், சேவகர்களும் மேஜைகளை யும், நாற்காலி களையும் கணப்பொழுதில் சத்திரத்திலிருந்து அப்புறப்படுத்தினார்கள். கச்சேரியும் சிறிதும் இடவசதியில்லாத போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது.

திரு. அய்யருக்கு முன்னிருந்த மாஜிஸ்தி ரேட்டுகள் வழக்கமாகவே சத்திரத்திலேயே தங்கள் கோர்ட்டை நடத்திவந்தார்கள். இன் னும் 1 மணி வரையிலும் சத்திரத்திலேதான் கோர்ட் நடைபெறுமென்று எல்லோரும் எண்ணியிருந்தனர்.

எனவே இந்த விசேஷமான மாற்றத் திற்குக்காரணமேதேனுமிருக்க வேண்டு மென்று நிச்சயித்துக்கொண்டு கோர்ட்டுக்கு வந்திருந்த சில நண்பர்களிடம் விசாரித்துப் பார்த்தேன். உண்மைதெரிந்தது.

ஜாதித் திமிர் நிறைந்த இந்தப் பார்ப்பன உத்தியோகஸ்தருக்கு எல்லா வகுப்பினரும் சத்திரத்தில் வருவது பிடிக்கவில்லை. சத்திரம் ஜாதி இந்துக்களுடைய உபயோகத்திற் கென்று கட்டப்பட்டிருக்கிறதாம். (ஆனால் சத்திரத் திலேயே தொங்கவிடப்பட்டிருக்கும் அறிக் கையில் இந்து யாத்திரீகர்களுடைய அவசியத் திற்கென்றுதான் வரையப்பட்டிருக் கின்றது. ஜாதி இந்துக்களுக்கென்றில்லை) தாம் கச்சேரி நடத்துவதால் எல்லோருக்கும் பிரவேசனம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுமேயென்று மனம் புழுங்கினார். தம் கச்சேரியைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றிவிட்டார். இன்று இங்கு வந்திருந்த வக்கீல் நண்பரொருவரிடமிருந்து இது சம்பந்தமாக இன்னொரு செய்தி கிடைத்தது - நேற்று சுசீந்திரம் சத்தியாக்கிரக கேஸ்கள் விசா ரணைக்கு வந்தன. சர்க்கார் தரப்பு வக்கீல் திரு. சக்கரபாணி அய்யர் அவர்கள் வராததால் நாளது புரட்டாதி 10ஆம் தேதிக்கு ஒத்திபோடப்பட்டன. கோர்ட்டில் வைத்து பிரதிவாதிகளிடம் மாஜிஸ்திரேட் 10ஆம் தேதி கன்னியாகுமரி சத்திரத்தில் விசாரணை நடைபெறுமென்றார். கொஞ்சம் பொறுத்து திடீரென்று சத்திரத்தில் எல்லோருக்கும் பிரவேசனம் இல்லையே! ஏதானாலும் கன்னியாகுமரிக்கு வாருங்கள். போலீஸ் ஸ்டேஷனிலாவதுகச்சேரி கூடலாம் என்று சொன்னாராம்.

நேற்று தாம் செய்து கொண்ட முடிவைத் தான் திரு. அய்யர் நிறைவேற்றி வைத்திருக் கிறார். இந்த நாகரிக காலத்திலும் திரு. அய்யர் புதிதாகத் தீண்டாதாருக்குத் துரோகம் செய்ய முனைகிறார். இவருக்கு முன்வேலை பார்த்த மாஜிஸ்திரேட்டுகள் திரு. பத்மனாபன் தம்பி, திரு. ஆண்டிப் பிள்ளை முதலியவர்கள் இந்தச் சத்திரத்திலேயே கச்சேரி நடத்தி வந்திருக் கிறார்கள். வழக்கத்திற்கு மாறாக நடக்க மாட் டோமென்று நெஞ்சிற் தட்டிக் கொள்ளுகிற அரசாங்கத்தின் உத்தியோகஸ்தர் தீண்டாதா ருடைய உரிமைக்கு உலைவைக்க மட்டும் வழக்கத்தை மீறத் தயங்குவதில்லையென்னும் உண்மையை நிரூபித்து விட்டார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் திருவிதாங்கூரில் இத்தகைய மனப்பான்மையை உடைய பார்ப்பன உத்தியோகஸ்தர்களிடம் எவ்வளவு நியாயம் சம்பாதித்துக் கொள்ளக் கூடுமென் பதை வாசகர்களே அறிந்து வேண்டுவன செய்வார்களாக, ஏழைகளின் சொல் அம்பல மேறுவதில்லை. திருவிதாங்கூர் அரசாங்கம் பார்ப்பனரது அம்பலம்.

 - விடுதலை நாளேடு 29 2 20

வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

மகாராட்டிரம், பீகாரைப் பின்பற்றி தமிழ்நாடு சட்டமன்றத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றிடுக!

தமிழ்நாடு சமூகநீதி மண் என்ற வரலாற்றை நிலை நிறுத்திடுக!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மகாராட்டிரம், பீகார் மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற் கொள்ள தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர்  தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

2020-2021 இல் நடைபெறவிருக்கும் நாட்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில், ஜாதி வாரியான கணக் கெடுப்பு கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்பதை, தொடர்ந்து திராவிடர் கழகமும், முற்போக்கு சமூகநீதி அமைப்புகளும், கட்சிகளும் வற்புறுத்தி வருகின்றன!

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், இதர பிற்படுத்தப்பட்டோர், முன்னேறியோர் (எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., எஃப்.சி.) போன்ற பல ஜாதியினரும், வகுப் பினரும் மக்கள் தொகையில் எவ்வளவு உள்ளனர் என்பதைக் கண்டறிய இது கட்டாயம் தேவை. 1901 இல் முதன்முதலில் பிரிட்டிஷ் அரசு மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடங்கியபோதே, இம்முறை பின்பற்றப்பட்டது.

ஜாதி சட்டப்படி இன்னும் ஒழிக்கப்படவில்லையே!

ஜாதியும், ஜாதி அடிப்படையிலான பேதங்களும், சடங்குகள், சம்பிரதாயங்கள், சட்டங்கள், நம் நாட்டில் நடைமுறையில் இருக்கின்றன என்பது யதார்த்தம்.

ஜாதியை ஒழிக்க இந்த 73 ஆண்டுகால ‘‘சுதந்திர சுயராஜ்ஜியத்தில்'' எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதால்தான் தந்தை பெரியார் கட்டளைப்படி 1957 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நகலை எரித்து 3000 பேர்,  6 மாதம் முதல் 3 ஆண்டுவரை கருஞ்சட்டைத் தோழர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தனர்.

திராவிடர் கழகம் நடத்திய

சட்ட எரிப்புப் போராட்டம்

அப்போராட்டத்தின் காரணமாக இருபால் தோழர் கள் சுமார் 16 பேர் மரணமடைந்து, வரலாற்றில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்!

தந்தை பெரியார் நடத்திய கடைசி மாநாட்டில்கூட (1973 ஆம் ஆண்டு) இதுபற்றிதான் முக்கியத் தீர்மானம் நிறைவேற்றி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கோவில் கருவறைக்குள் நுழைந்து, ஜாதி இழிவைத் துடைத்தெறியும் வாய்ப்புக்காகவே  தந்தை பெரியார் போராடினார்.

பல மாநிலங்களிலும் தீர்மானம்

எனவே, ஏற்கெனவே மகாராட்டிர சட்டமன்றம் இப்படி ஜாதி வாரி கணக்கெடுப்பை வற்புறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அது இப்போது எதிர்க்கட்சி அணி. ஆனால், பீகாரின் நிதீஷ்குமார் கட்சி ஆட்சியில், பா.ஜ.க.வின் கூட்டணி உள்ளதே!  அங்கேயும் சட்டப்பேரவையில் ஜாதிவாரி கணக்கெடுப்புத் தேவை என்று வற்புறுத்தி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் ஒன்றை, ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது!

ஏற்கெனவே நமது திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றிய தீர்மானப்படியே, தமிழ்நாடு அரசும் வருகிற சட்டமன்றத் தொடரில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போதே (2021 இல்) ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றவேண்டியது அவசியம், அவசரமும்கூட!

தமிழ்நாடு சட்டமன்றத்திலும்

தீர்மானம் நிறைவேற்றிடுக!

மகாராட்டிரம், பீகார் மாநிலமும் வழிகாட்டியுள்ளன.

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதைப் பின்பற்றி சமூகநீதி மண் இந்த மண் என்ற வரலாறு படைப்பதில் முந்திக் கொள்ளவேண்டும்!

 

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.2.2020

சனி, 22 பிப்ரவரி, 2020

கோயில்களில் தீட்டு

*பார்ப்பனர்களும் –* *தீட்டும்* 
----------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.

1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

10)  1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

11)  2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

12)  2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள்  நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?✍🏼🌹
- பகிரி வழியாக

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தீண்டாதார் கல்வி

22.11.1931  - குடிஅரசிலிருந்து...

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதிகளும் தேசியப் பத்திரி கைகளும் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்து கிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930- - 1931 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப்பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப் பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின் றனர். இதிலிருந்தே  நமது தேசநிலை எவ்வாறு இருக்கிற

தென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத் தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டா தார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்தரவு பிறப்பித் திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக் கூடங்களில் தீண்டா தார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும்  கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங்களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

- விடுதலை நாளேடு 8 2 20

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2020

தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது எனும் உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்ட விரோதமானது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தாழ்த்தப்பட்டோர் -மலை வாழ் மக்களுக்கு (எஸ்.சி, எஸ்.டி.) பதவி உயர்விலும் இடஒதுக்கீடு உண்டு என்ற சட்டத் திருத்தமும், 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வின் தீர்ப்பும் உள்ள நிலையில், இரு நீதிபதிகள் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு அளித்திருப்பது சட்டப்படி தவறானதாகும் -&- மத்திய அரசு தலையிட வேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடாளுமன்றத்தில் 1995-இல் தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிக்கும் விதமாக அரசமைப்புச் சட்டத்திருத்தம் (77-ஆவது சட்டத் திருத்தம்) நிறை வேற்றப்பட்டது. 1992-இல் மண்டல் குழு வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) பதவி உயர்வில் இன்னும் அய்ந்து ஆண்டுகள் மட்டுமே இடஒதுக்கீடு தர முடியும் என தீர்ப்பளித்ததையடுத்து 77-ஆவது சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

THE CONSTITUTION (SEVENTY-SEVENTH AMENDMENT) ACT, 1995

Amendment of article 16.-In article 16 of the Constitution, after clause (4), the following clause shall be inserted, namely:-

"(4A) Nothing in this article shall prevent the State from making any provision for reservation in matters of promotion to any class or classes of posts in the services under the State in favour of the Scheduled Castes and the Scheduled Tribes which, in the opinion of the State, are not adequately represented in the services under the State.".

இந்த சட்டத்தின் மீதும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு (எம்.நாகராஜ் எதிர் மத்திய அரசு), நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், கே.ஜி.பாலகிருஷ்ணன், எஸ்.எச்.கபாடியா, சி.கே.தாகூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 77-ஆவது அரசமைப்புச் சட்டம் செல்லும் என்று 19.10.2006-இல் தீர்ப்பளித்துள்ளது.

மீண்டும் 8.1.2016-இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் (சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா எதிர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா  தாழ்த்தப்பட்ட  - மலைவாழ் இன நலச் சங்கம்) அரசு வங்கிகளில் அதிகாரிகள் பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு வழங்கலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் எல்.நாகேஷ்வரராவ் மற்றும் ஹேமண்ட் குப்தா ஆகியோர் தங்களது தீர்ப்பில் "பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது கட்டாயம் அல்ல" என்று தீர்ப்பளித்துள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.

தாழ்த்தப்பட்ட - மலைவாழ் மக்களுக்கு (எஸ்.சி., எஸ்.டி.) உயர் பதவிகளில் போதுமான அளவு இடங்கள் இல்லை என்ற நிலையில்தான் நாடாளுமன்றம் 1995-இல் சட்டத்திருத்தம் நிறைவேற்றியுள்ளது. இதனை மறுதலிக்கின்ற வகையில் தீர்ப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில்தான்  மத்திய அரசு தலையிட்டு, 1995-இல் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு சட்டப்படி சரியானதல்ல. 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை - இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரிப்பது சட்டப்படி தவறானதாகும்.மத்திய அரசும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கவனம் செலுத்தட்டும்!

 

- கி. வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

9.2.2020

- விடுதலை நாளேடு, 9.2. 20