பக்கங்கள்

கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்டனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஜனவரி, 2019

இடஒதுக்கீட்டுக்காக அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது தீங்கானது

சரத்பவார்




கோலாபூர்,ஜன.14இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வது, அதன் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தேசிய வாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, மகாராட்டி ரத்திலுள்ள கோலாபூரில் செய் தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசு தேர்தலைக் கருத்தில்கொண்டு, அவசர கதியில் சட்டங்களை இயற்றி வருகிறது. எப்படியிருந்தாலும்,வாக் காளர்களிடம்இந்தச்சட்டங்கள் வரவேற்பைப் பெறப்போவ தில்லை.

பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள பொதுப்பிரிவி னருக்குஇடஒதுக்கீடு அளிப்ப தற்காக அரசமைப்புச் சட்டத் தின் 15- ஆவது மற்றும் 16-ஆவது சட்டப் பிரிவுகளில் திருத்தம் மேற்கொள்வது, அர சமைப்பின் அடிப்படைக் கொள்கைகளுக்குத் தீங்கு விளை விக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, உச்சநீதிமன்றம் ஏற்கெனவே பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு வழங்கப் படக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தெளிவாகத் தெரிவித் துள்ளது.

தேர்தலைக் கருத்தில் கொண்டு, மேலும் பல சட்டங் களை நிறைவேற்று வதற்காக பட்ஜெட் கூட்டத் தொடரை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு சிந்தித்து வருகிறது. அவசரகதியில் முக்கிய முடிவு களை எடுத்து மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பாஜக நினைக்கிறது. ஆனால், மக்கள் அனைவரும் விழிப்புடன் உள்ளனர். பாஜகவின் தேர்தல் நாடகம் குறித்து அவர்கள் அறிந்து வைத்துள்ளனர். முன் னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்த "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' திரைப் படம், சிவசேனா கட்சி நிறு வனர் பால் தாக்கரே குறித்த தாக்கரே திரைப்படம் போன்ற அரசியல் சார்ந்த திரைப்படங்கள் வாக்காளர்களிடம் எந்த பாதிப் பையும் ஏற்படுத்தாது என்றார்.

- விடுதலை நாளேடு, 14.1.19

செவ்வாய், 15 ஜனவரி, 2019

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்


புதுடில்லி, ஜன.13 பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிப்பது என்பது ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான சதி என்று குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி கூறியுள்ளார்.  அவருடைய கருத்தை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். நான் பலரிடமும் இதுகுறித்து பேசினேன். எல்லோருமே பாஜகவின் தந்திரம் என்றே கூறுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதி யினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டதும் முதலில் வரவேற்ற கட்சியான ஆம் ஆத்மியின் ஒருங் கிணைப்பாளர் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டவரப்பட வேண்டும் என்று முதலில் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். பொருளாதாரத்தில் நலிவுற்ற உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது ஜாதி வாரியான இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழிப்பது என்றும், பாஜகவின் தந்திரமான அச்செயல் மிகவும் ஆபத்தானது என்றும்  தற்பொழுது டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பால் கவுதம்
ஆம் ஆத்மி கட்சியின் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் பிரதிநிதியாக உள்ளவரும், டில்லி அமைச்சருமாகிய ராஜேந்திர பால் கவுதம் கூறியதாவது:
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு எதிரானவை.பொருளாதாரத்தில்பின்தங்கி யோர் என்று கூறிக்கொண்டு இடஒதுக்கீட் டுக் கொள்கையை மாற்ற விரும்புகின்றன. ஏற்கெனவே பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலின்போதுஆர்.எஸ்.எஸ். தலைவர் இக்கருத்தை வலியுறுத்திக் கூறியிருந் தார். ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டை ஒழிக்க முடியாததால், புதிய இட ஒதுக்கீட்டை பாஜக கொண்டு வருகிறது என்று பாஜகவின் தலைவர்கள் சிலர் என்னிடம் கூறினார்கள்.
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை  இடஒதுக்கீட்டின்கீழ் கொண்டுவர முடியாது.  சமூக ரீதியில் பின்தங்கியோருக்கானதாகவே இடஒதுக்கீடு இருக்கவேண்டும். சமுதா யத்தில் பெரும்பான்மையாக உள்ள மக்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி உரிமை, சொத்துரிமை இல்லாமல் உள்ளனர். அவர்களையும் முன்னுக்குக் கொண்டுவரவேண்டும் என்பதற்காகவே  சமூகத்தில் பின்தங்கியவர்களை அடையா ளம் கண்டு, அந்த அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
10 விழுக்காடு இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த பாஜக  அவசரம் காட்டுவதிலிருந்து அதன் பின்னால் உள்ள சதித்திட்டம் வெளிப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புக்கு முன்னதாக அதுகுறித்து ஆலோசிப்பதற்காக எந்த ஒரு குழுவும் அமைக்கப்படவில்லை. வல்லுநர்கள், பொதுமக்கள் என்று எவரிடமும் கருத்து களைப் பெறவில்லை. மக்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லை. பாஜக அரசு எந்த ஒரு வேலை வாய்ப்பையும் உருவாக்குவதில் தோல்வி அடைந்துள்ளது. இந்த புதிய இடஒதுக்கீடு இடஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்வ துடன், ஜாதி அடிப்படையிலான இடஒதுக் கீட்டை ஒழிப்பதாகும் என்றார்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சவ்ரப் பரத்வாஜ் புதிய இடஒதுக்கீடு ஒரு ஏமாற் றுத் திட்டம் என்று கூறினார். ஆம்ஆத்மி கட்சியின் பொறுப்பாளர் அதிஷி கூறிய தாவது:
நீண்ட காலமாக இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டினை பாஜக ஆதரித்து வந்துள்ளது. தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாஜக அரசின் செயலை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்க்கும் என்றார்.
-விடுதலைநாளேடு,13.1.19

வியாழன், 10 ஜனவரி, 2019

உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?

பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள்!


புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்குரலை நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசினர்.

கனிமொழி எம்.பி.,




மாநிலங்களவையில் தி.மு.க. குழுவின் தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி., உரை யாற்றுகையில்,

பெரியார் பிறந்த மண்


நான் சமூகநீதிக்கென நூறு ஆண்டுகளுக் கும் மேற்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கும் பெரியாரின்  மண்ணில் இருந்து வந்திருக் கிறேன். பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை அளித்த மண் எங்கள் மண். முதன் முதலாக இந்த நாட்டில் வகுப்புவாரி ஒதுக்கீட்டை நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவந்தது எங்கள் மண். நாட்டில் முதன் முறையாக 1969 ஆம் ஆண்டில் பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு  இட ஒதுக்கீடு 25% இல் இருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,  பொருளா தார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

பொருளாதார இடஒதுக்கீடு!


உச்சநீதிமன்றம் மறுப்பு!


பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதம ராகஇருந்தபோது பொருளாதாரஅடிப் படையிலான இட  ஒதுக்கீடு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்றம் இது தொடர்பான வழக்கில், பொருளாதாரஅடிப்படையில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்க முடியாது'' என்று திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டது. சமூகரீதியாகப் பின் தங்கியவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படைக் காரணியாகக் கருதவே முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

இந்த அரசு ஓர் இரவில் கொண்டு வரு கிறது. ஆனால் அதுபற்றி எழும் சில எதிர்ப்புக்  குரல்களையும் அடக்கலாமா?

பண்டித நேரு மறுத்த பொருளாதார இடஒதுக்கீடு!


நாட்டின் முதல் பிரதமர்பண்டித ஜவகர்லால் நேரு கொண்டுவந்த  முதல் அரசியல்சாசனத் திருத்தத்தில் சமூக,கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு  இட ஒதுக்கீடு அளித்தார். அதில் பொருளாதார அடிப்படையில்'' என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், இன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இந்த  அரசு சொல்கிறது. நான் கேட்கிறேன்; பத்து சதவிகிதம்  என்று எந்த அடிப்படையில்  தீர்மானித்தீர்கள்? அரசு ஆய்வு ஏதும் நடத்தியதா? தி.மு.க. அரசாங்கம் தமிழகத்தில் சட்டநாதன்  ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை  அமைத்து அறிவியல் ரீதியாக பல கட்ட சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது

மண்டல் கமிஷன் அமைத்து அதன் அடிப்படையில்  மத்தியிலும் இட ஒதுக் கீடு வழங்கப்பட்டது.  ஆனால் இன்று திடீரென பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்கிறீர்கள். இந்த எண்ணிக்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அது தொடர்பாக என்ன மதிப்பீட்டாய்வு செய்தீர்கள்?

மத்திய அரசுப் பணிகளில் இன்றுவரை பிற் படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. குரூப் ஏ' பணிகளில் 17% இடஒதுக்கீடும், குரூப் `பி பணிகளில்14%  இட ஒதுக்கீடும், குரூப் சி'பணிகளில் 11% இட ஒதுக்கீடும், குரூப் டி' பணிகளில்10ரூ  இடஒதுக்கீடும் தான் வழங்கப்பட்டுவருகிறது. முதலில் இந்த இடஒதுக்கீட்டையே உங்களால் ஒழுங்காக நடைமுறைப்படுத்த இயல வில்லை. பிறகு எதற்கு வேறு கனவு களுக்கு வண்ணம்பூசுகிறீர்கள்?

நேற்று மாண்புமிகு நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள் பேசும்போது, இந்த மசோதா இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு அனுப்பப்படாது'' என்று கூறியிருக்கிறார். அவர் நாட்டின் மிகச் சிறந்த சட்ட மூளைக்காரர். அவரது அறிவுக்கூர்மையை நான்  வியக்கிறேன். ஆனால், இது எப்படிச் சாத்தியம்? இந்த மசோதா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும். இந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுபற்றி நான் ஏற்கெனவே தாக்கீது கொடுத்திருக்கிறேன்!

இவ்வாறு கனிமொழி எம்.பி., மாநிலங் களவையில் உரையாற்றினார்.

124 ஆவது சட்ட திருத்தம் என்பது மோடி அரசின் மோசடி: வைகோ கண்டனம்




மத்திய பாஜ அரசு சமூகநீதி தத்துவத்தின் அடித்தளத்தை தகர்த்து தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரி வித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பாஜ அரசு சமூகநீதித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. மக்களவையில் நிறை வேற்றப்பட்ட  அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த முன்வடிவு, மோடி அரசின் மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது. பொருளாதார அளவுகோல் என்பது அவ் வப்போது மாறக்கூடியது என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் முதல்  சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே வரை யறை செய்யப்பட்டுவிட்டது. தற்போது பாஜ அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்று சட்ட முன்வடிவு கொண்டு வந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, இடஒதுக்கீட்டு கோட்பாட்டையே சீர்குலைக்கும் சதி  வலைப் பின்னல் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இவ்வாறு அவர்  வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்




மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி நவநீதி கிருஷ்ணன் பேசியதாவது:-

10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது. இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் ஜாதிவாரியாகத்தான் இருக்கவேண்டும். தமி ழகத்தில் 69% இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க் கிறது. எந்தவொரு ஆவணமும் கணக் கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது என்றார். இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது.

10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது: அரவிந்த் கெஜ்ரிவால்




பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப் பிரிவினருக்கு (உயர் ஜாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124- ஆவது சட்ட திருத்தம் செய் யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரி வால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியி ருப்பதாவது;

10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது. ஏழைகளுக்கு உதவு வதை இலக்காகக் கொள்ளவில்லை. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதித்திட்டம், அரசின் இந்த முடிவுக்கு பின்னால் ஒளிந்திருப்பதாக கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்




சமூக நீதியைக் காப்பாற்றவும், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையைத் திணிக்கும் சதி முயற்சியை முறியடிக்கவும் ஏதுவாக, சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 11.1.2019 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைப்பு விடுக்கிறது என தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

-  விடுதலை நாளேடு, 10.1.19

புதன், 9 ஜனவரி, 2019

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு - தலைவர்கள் கண்டனம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு-தேர்தல் வித்தை: காங்கிரஸ்

புதுடில்லி, ஜன.8 பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.


5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின்  செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தேர்தல் வித்தையாகும் என காங் கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.  2019 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.

4 வருடங்கள், 8 மாதங்கள் ஆட்சி செய்த போது இதுபற்றி ஏன் நினைக்கவில்லை? தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங் களுக்கு முன்னர், இது வித்தை காட்டும் நடவடிக்கையாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விமர்சனம் செய்துள்ளார். இதுவரையில் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்த வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

இப்போது கொண்டு வரும் இடஒதுக்கீடை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியமாகும். வியாழன் அன்று மாற்றம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வரலாம் என தெரிகிறது.

இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

-  விடுதலை நாளேடு, 8.1.19

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜன.9 உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரி வித்து தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் நேற்று (8.1.2019) கூறியதாவது:

செய்தியாளர்: 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து தாக்கல் செய்திருக்கின் றார்கள். அதுகுறித்து என்ன கருத்து தெரிவிக்கின்றீர்கள்?

மு.க.ஸ்டாலின்: இன்றைக்குக் காலையில் சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியபோது, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார் அவர்கள், இதுபோன்று அதி காரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வர வில்லை. அதுபோல் ஒரு சூழ்நிலை வந்தால், அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம், நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதி தந் திருக்கின்றார்.

ஆனால், உண்மை நிலை என்ன வென்று கேட்டால், பொருளாதார அளவென்பது ஒரு முறையற்றது, சரியானதல்ல. ஒரு பணக்காரன் அவன் தொழில் சம்பந்தமாக ஒரு ஏழையாகப் போய்விட்டால், அதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது? ஆகவே, இந்தச் சூழ்நிலையில்தான் இந்தச் சட்டத்தை திட்டமிட்டு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஏதோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு உதவி செய்வது போல, ஒரு நாடகத்தை நடத்தி, அவர்களைப் பழிவாங்கக்கூடிய வகை யில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற முயற்சிக்கின்றார். இதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின் றோம்.

-இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

பொதுப் பிரிவில் உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை.

இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜனதா அரசு சதி தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை, ஜன. 9- விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.

இது உண்மையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்ட தல்ல, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக் கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட் டம் ஆகும் என சுட்டிக்காட்டுகிறோம். தேர்தல் ஆதாயத்திற்காக முற்பட்ட வகுப் பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சி யைக் கைவிட வேண்டுமென பா.ஜனதா அரசை வலியுறுத்துகிறோம்.

இடஒதுக்கீடு என்பது வெறும் பொரு ளாதார அடிப்படையில் வழங்கப்படுவ தல்ல. பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங் கப்படுவதாகும்.

இதை உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப் புகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

பா.ஜனதா அரசு நீதித்துறையை மதிக் காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதி ரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக் கீட்டுக்குப் பொருளாதார அளவு கோலை வைப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது.

முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவது போல் பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக் கும் இந்த சட்டதிருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட தேயாகும். பா.ஜனதா தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாறமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

10 சதவிகித இடஒதுக்கீடுக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை சாடல்!

டில்லி, ஜன. 9- பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட உள் ளது. இதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவிற்கு பெரும்பாலான கட்சிகள் ஆத ரவு தெரிவித்தாலும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் எது வும் ஆதரவு தெரிவிக்கவில்லை. முக்கியமாக மக்களவையில் இருக்கும் தமிழக அதிமுக எம். பிக்கள் யாரும் இந்த மசோதா விற்கு ஆதரவு அளிக்கவில்லை. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடக்கும் முன் இவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த மசோதாவிற்கு எதி ராக அதிமுக எம்.பியும், மக் களவைத் துணைத் தலைவரு மான தம்பிதுரை பேசினார். அதில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது கொஞ்ச கூட சாத்தியம் இல்லாதது. பொருளாதாரத்தில் பின் தங்கி யவர்கள் முன்னேற்றம் அடைய நிறைய வழிகள் இருக்கிறது. அதைவிட்டுவிட்டு ஏன், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.

நாட்டில் ஜாதி ஒழிந்தால் எல்லாம் ஒழியும். ஜாதி ஒழிந் தால் பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழியும். அரசு ஜாதி ஏற்றத்தாழ்வை அழிக்கத்தான் அரசு முயல வேண்டும். இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரான பெரிய அடி இந்த சட்டம். முதலில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள்.

அரசிடம் மோசமான பொரு ளாதார கொள்கை இருக்கிறது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருக் கிறார்கள். பொருளாதார கொள் கையில் தோல்வி அடைந்த அரசு, இப்போது இடஒதுக்கீடு என்று மக்களை ஏமாற்ற பார்க் கிறது. மக்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பொருளா தார கொள்கைகளை மாற்ற வேண்டும்.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லோர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார். 15 லட்சம் ரூபாய் போட்டாலே போதும் எல்லோரும் பணக்கா ரர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் அரசு அதை செய்யாது. இது தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என்று தம்பிதுரை குறிப்பிட்டார்.

இவ்வளவும் பேசிவிட்டு எதிர்த்து வாக்களிக்காமல் வெளி நடப்பு செய்தது ஏன்?

- விடுதலை நாளேடு, 9.1.19