பக்கங்கள்

தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாழ்த்தப்பட்டோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 மார்ச், 2020

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர்

தமிழ்நாட்டு பட்டியல் சாதிகள்

  1. ஆதி ஆந்திரா
  2. ஆதி திராவிடர்
  3. ஆதி கர்நாடகர்
  4. அஜிலா
  5. அருந்ததியர்
  6. ஐயனார் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  7. பைரா
  8. பகூடா
  9. பண்டி
  10. பெல்லாரா
  11. பரதர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  12. சக்கிலியன்
  13. சாலாவாடி
  14. சாமார், மூச்சி
  15. சண்டாளா
  16. செருமான்
  17. தேவேந்திர குலத்தான்
  18. டோம், தொம்பரா, பைதி, பானே
  19. தொம்பன்
  20. கொடகலி
  21. கொட்டா
  22. கோசாங்கி
  23. ஹொலையா
  24. ஜக்கலி
  25. ஜம்புவுலு
  26. கடையன்
  27. கக்காளன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  28. கல்லாடி
  29. கணக்கன், பாடண்ணா (நீலகிரி மாவட்டம்)
  30. கரிம்பாலன்
  31. கவரா (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  32. கோலியன்
  33. கூசா
  34. கோத்தன், கோடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  35. குடும்பன்
  36. குறவன், சித்தனார்
  37. மடாரி
  38. மாதிகா
  39. மைலா
  40. மாலா
  41. மன்னன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  42. மாவிலன்
  43. மோகர்
  44. முண்டலா
  45. நலகேயா
  46. நாயாடி
  47. பாதண்ணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  48. பகடை
  49. பள்ளன்
  50. பள்ளுவன்
  51. பம்பாடா
  52. பாணன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  53. பஞ்சமா
  54. பன்னாடி
  55. பன்னியாண்டி
  56. பறையர், பறயன், சாம்பவர்
  57. பரவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  58. பதியன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  59. புலையன், சேரமார்
  60. புதிரை வண்ணான்
  61. ராணேயர்
  62. சாமாகாரா
  63. சாம்பான்
  64. சபரி
  65. செம்மான்
  66. தாண்டன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  67. தோட்டி
  68. திருவள்ளுவர்
  69. வல்லோன்
  70. வள்ளுவன்
  71. வண்ணான் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  72. வாதிரியான்
  73. வேலன்
  74. வேடன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  75. வெட்டியான்
  76. வேட்டுவன் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)

தமிழ்நாட்டு பட்டியல் பழங்குடிகள்

  1. அடியன்
  2. ஆறுநாடன்
  3. இரவாளன்
  4. இருளர்
  5. காடர்
  6. கம்மாரா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  7. காணிக்காரன்,காணிக்கர் (கன்னியாகுமரி மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்திலும்)
  8. கணியன், கண்யான்
  9. காட்டு நாயகன்
  10. கொச்சுவேலன்
  11. கொண்டக்காப்பு
  12. கொண்டாரெட்டி
  13. கொரகா
  14. கோட்டா (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  15. குடியா, மேலக்குடி
  16. குறிச்சன்
  17. குறும்பர் (நீலகிரி மாவட்டத்தில்)
  18. குறுமன்
  19. மகாமலசார்
  20. மலை அரையன்
  21. மலைப் பண்டாரம்
  22. மலை வேடன்
  23. மலைக்குறவன்
  24. மலைசர்
  25. மலையாளி (தருமபுரி, வேலூர், புதுக்கோட்டை, சேலம், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில்)
  26. மலையக்கண்டி
  27. மன்னன்
  28. மூடுகர், மூடுவன்
  29. முத்துவன்
  30. பழையன்
  31. பழியன்
  32. பழியர்
  33. பணியர்
  34. சோளகா
  35. தோடர் (கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டமும் நீங்கலாக)
  36. ஊராளி

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

தீண்டாதார் கல்வி

22.11.1931  - குடிஅரசிலிருந்து...

தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனித்தொகுதி கொடுக்கக் கூடாது என்றும், தனித்தொகுதி கேட்டவர்கள் தாழ்த்தப் பட்டவர்களின் பிரதிநிதிகள் அல்லவென்றும் தேசியவாதிகளும் தேசியப் பத்திரி கைகளும் பிரச்சாரம் செய்துகொண்டு வருகின்றன. ஆனால் அவர்கள் பொதுப் பள்ளிகூடங்களில் கூட சேர்ந்து படிப்பதற்கு நமது நாட்டு மக்கள் தடையாக இருக்கிறார்கள் என்ற விஷயத்தை அறிந்தால் தாழ்த்தப்பட்ட தீண்டாதார்களை உயர்ந்த ஜாதி இந்துக்கள் எவ்வளவு கீழாகவும் கொடுமையாகவும் நடத்து கிறார்கள் என்பது விளங்கும், சென்னை சர்க்கார் 1930- - 1931 வருஷத்தில் தொழில் இலாகா செய்துள்ள வேலையைப் பற்றி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தீண்டப் படாதார்களுக்காக 1784 தனிப்பள்ளிக் கூடங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இவ்வாறு தீண்டப் படாதார்களுக்கெனத் தனிப் பள்ளிக் கூடங்கள் வைப்பதற்குக் காரணம் கிராமாந்தரங்களில் ஜாதித் துவேஷங்கள் வேரூன்றிக் கிடப்பதால் அவர்கள் பொதுப் பள்ளிக் கூடங்களில் சேர்ந்து படிக்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கின் றனர். இதிலிருந்தே  நமது தேசநிலை எவ்வாறு இருக்கிற

தென்பதை அறிந்துகொள்ளலாம். இந்த நிலையில் உள்ள நமது நாட்டில் தீண்டாதார் பொதுத்தொகுதியில் நின்று எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்பதை யோசித்துப்பாருங்கள். பரோடா அரசாங்கத் தார் தீண்டாதார்களும் சமூக சமத்துவம் பெறுவதற்குச் சாதகமாக அங்குள்ள பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டா தார்களை தாராளமாகக் சேர்த்துப் படிப்பிக்க உத்தரவு பிறப்பித் திருக்கின்றனர். ஆனால், நமது நாட்டில்,. பொதுப் பள்ளிக் கூடங்களில் தீண்டா தார்களைச் சேர்க்க மறுக்கக்கூடாது என்ற உத்தரவு இருந்தும், அதைக் கவனிப்பாரும், அமலுக்குக் கொண்டு வரவேண்டும் என்னும்  கவலையுள்ளவர்களும் இல்லை. ஏனெனில், கல்வியிலாகாவில் உள்ள அதிகாரிகளும், பள்ளிக்கூடத்தில் உள்ளவர்களும் பார்ப்பனர்களாக இருப்பதே காரணமாகும், கிராமாந்தரங்களிலும், நகரங்களிலும், பொதுப் பள்ளிக்கூடங்களில் தீண்டாதார்களைத் தாராளமாகச் சேர்த்துக் கொண்டால், 1784 பள்ளிக் கூடங்கள் தனியாக இருக்கவேண்டிய அவசியம் இல்லையே. அவைகளுக்காகும் செலவைச் கொண்டு இன்னும் கல்வியை அதிகமாக விருத்தி செய்யவும் பள்ளிக் கூடங்கள் இல்லாத இடங்களில் பள்ளிக்கூடங்கள் வைக்கவும் முடியுமல்லவா? இதற்காக யார் முயற்சியெடுத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

- விடுதலை நாளேடு 8 2 20

வியாழன், 31 ஜனவரி, 2019

இதுதான் தாழ்த்தப்பட்டோர் நிலை

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பணியாளர் நலத்துறை விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளி விவரம் இதோ:


ஃ 149 உயர் அரசு செயலர் அலுவலர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை.

ஃ கூடுதல் செயலாளர் பதவிகள் 108இல் 2 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர்.

ஃ 477 இணைச் செயலாளர்களில் 31 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (6.5 விழுக்காடு) - கிடைக்க வேண்டியது 15%). 15 பேர் பழங்குடியினர் (3.1 விழுக்காடு) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

ஃ 500 இயக்குநர் பதவிகளில் 17 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (2.9%) - கிடைக்க வேண்டியதோ 15%. பழங்குடியினர் 7 பேர் மட்டுமே (1.2%) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

நேரடியாக நிமிக்கப்பட்ட 3251 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 13.9 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், 7.3 விழுக்காடு பழங்குடியினர். (இரு பிரிவினருக்கும் சட்டப்படி கிடைக்க வேண்டியதோ 22.5%).

சட்டப்படி கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கக் கூடாதவர்களுக்கோ சட்ட விரோதமாக 10 விழுக்காடு இடஒதுக்கீடாம்!

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

வியாழன், 27 டிசம்பர், 2018

"மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம்!"

டில்லியில் பேரணி




புதுடில்லி,டிச.21தலித்உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம், மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமையன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றம் நோக்கி, பேரணி- ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்பேரணி-ஆர்ப்பாட்டம் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்றது.பேரணியில் வந்த வர்கள் நாடாளுமன்ற வீதிக்கு வந்தபின் அங்கே தலைவர்கள் உரையாற்றினார்கள்.

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன் னணியின் தலைவரும் கேரள சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ராதாகிருஷ் ணன் உரையாற்றுகையில்,

மோடி அரசாங்கம், தலித்துகளுக்கு விரோதமான அரசாங்கம் என்று கூறி னார். கடந்த நான்கரை ஆண்டு கால மோடி ஆட்சியில் தலித்துகளுக்கு நீதி வழங்கக்கூடிய விதத்தில் ஒரு நடவ டிக்கையைக்கூட எடுத்திடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிந்திட தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலித் ஒடுக்குமுறைவிடுதலைமுன்னணி யின்துணைத்தலைவரானசுபாஷினி அலி, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட உரிமை களைப் பறித்திடும் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசி யத்தை விளக்கினார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு அறைகூவல்!


தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ராமச்சந்திர டோம் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள் மீது பல முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்றும், டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஜாதிய, மதவெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும், இவற்றுக்கு முடிவு காண் பதற்காகத்தான் இந்தப் பேரணி என் றும், அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம், தலித் உரிமைகளைப் பாது காப்போம் என்றும் கூறினார். பேரணி-ஆர்ப்பாட்டத்தில் பழங்குடிமக்கள் தேசிய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந் திர சவுத்ரி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.பிஜு, ஜர்னதாஸ் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

9 ஆவது அட்டவணையில் இணைத்திடுக!


ஜாதியம், மதவெறியை எதிர்த்துப் போராட வேண்டும், தலித்,- பழங்குடியி னர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், தலித்,- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தை அமல்படுத்து, தலித்- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தை அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்திடுக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித்துகள்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துக, காலியிடங் களை உடனடியாக நிரப்பிடுக, தலித்,- பழங்குடியினர்பதவிஉயர்வுக்குகிரி மிலேயர்ஷரத்துக்களைஅமல்படுத் தாதே, நிலமற்ற தலித்,- பழங்குடியினருக் குப் போதுமான அளவிற்கு நிலப்பட்டா வழங்கிடு.

துணைத் திட்ட ஒதுக்கீட்டை குறைக்காதே!


தலித்,பழங்குடியினர்துணைத்திட் டத்தின்ஒதுக்கீட்டைக்குறைக்காதே, மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படை யில் துணைத் திட்டத்திற்கான தொகையைஒதுக்கிடு,அனைத்துஉயர் கல்வி நிலையங்களிலும் ரோகித் சட் டத்தை அமல்படுத்திடு, சிறையில் வைக்கப்பட்டுள்ள தலித் ஆதரவு செயற்பாட்டாளர்களை விடுதலை செய், தலித்துகளுக்கு எதிராகப் புனையப் பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை கொடு, குறைந்த பட்சக் கூலியை 350 ரூபாயாக உயர்த்திடு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து, அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்கிடு முதலான கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 21.12.18

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

தாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை

ஜூலை 16_-31 (2018) உண்மை இதழில், உங்களுக்குத் தெரியுமா பகுதியில்,

“தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதன்முதலில் அமைச்சராக்கியதும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல, தனியாக ஆணைப் பிறப்பித்ததும் திராவிடக் கட்சியான  நீதிக்கட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’

என்ற செய்தி வெளியிடப்பட்டதைப் படித்த வாசகர்கள் சிலர், முதன்முதலில் எந்த தாழ்த்தப்பட்டவரை நீதிக்கட்சி ஆட்சி அமைச்சராக்கியது? என்றும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல பிறப்பிக்கப்பட்ட ஆணை விவரமும் தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

எனவே, கீழ்க்கண்டவற்றை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.   - ஆசிரியர்

 1.                    நீதிக்கட்சி ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக்கப்பட்டவர் எம்.சி.இராஜா அவர்கள் அப்போது முதலமைச்சர் நீதிக்கட்சி தலைவர் கே.வி.ரெட்டிநாயுடு

(1-4-1937).

2.                     தாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த தடையில்லை என்று பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு மாநிலத்திலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது.

சென்னை அரசாங்கம்

உள்ளூர் அரசாங்க இலாகா உள்ளூர் மற்றும் மாநகராட்சி

அரசாங்க உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

தீர்மானத்தை முன்மொழிந்தவர் திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும், அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.I.மூர்,

அரசாங்கச் செயலாளர்.

ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, நகராட்சிகள்,

கார்ப்பரேஷன், சென்னை, பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,

தொழில் கமிஷனர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லா இலாகாக்கள்,

அரசாங்க செய்தி ஸ்தாபனம். இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது.

சட்டக்குழு அலுவலகம்

25.6.24

- உண்மை இதழ், 1-15.8.18