பக்கங்கள்

புதன், 15 நவம்பர், 2017

தமிழகத்தைப் போல் முசுலிம்களுக்கு இடஒதுக்கீடு : தெலங்கானா முதல்வர் உறுதி

அய்தராபாத், நவ.11 தமிழ கத்தைபோல முசுலிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.

தெலங்கானா மாநில சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் அய்தராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிறுபான்மையினர் இடஒதுக் கீடு குறித்து பிரச்சினை எழுப் பப்பட்டது.

இதுகுறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பதிலளிக் கும்போது, “தமிழகத்தைப் போல, தெலங்கானா மாநிலத் திலும் முசுலிம்களுக்கு தனி யாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட் டத் தொடரின்போது இந்த விவகாரம் தொடர்பாக தெலங் கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி.க்கள் போராடவும் தயா ராக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகால காங்கிரசு ஆட்சி யில் முசுலிம்களின் நலனுக்காக வெறும் ரூ.932 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றறை ஆண்டு காலத்தில் முசுலிம்களின் நலத் திட்டங் களுக்காக ரூ.2,146 கோடி செலவு செய்துள்ளோம்” என்றார்.
- விடுதலை நாளேடு,11.11.17

திங்கள், 13 நவம்பர், 2017

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.30 ஆயிரம் ஆந்திராவில் ஜனவரி முதல் அமல்

அமராவதி, அக்.30 பிற்படுத்தப்பட்டோர் (பிசி) வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஆந்திர அரசு தலா ரூ. 30,000 வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 1ஆ-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆந்திர அரசு வரும் புத்தாண்டு பரிசாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமண திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மணப்பெண்ணுக்கு திருமணத்தின்போது ரூ. 30,000 தொகைக்கான வங்கி வரைவோலை வழங்கப்பட உள்ளது. இதற்கான மணமகள், மணமகன் விவரங்களை பெற்றோரே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட உள்ளது. வெள்ளை ரேசன் அட்டை கொண்ட அனைத்து பி.சி. வகுப்பினரும் இதற்கு தகுதியானவர்கள் என்றும், மணமக னுக்கு 21 வயதும் மணமகளுக்கு 18 வயதும் நிரம்பி இருத்தல் அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் பயனடைய உள்ளதாக மாநில பிற்படுத்தப்பட் டோர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு,30.10.17

கோவா மாநிலத்தில் 'சூத்திரன் பாடல்கள்' நூல் உருவாக்கியுள்ள 'தீ'

பனாஜி, அக்.29 கோவா மாநிலத்தில் இலக்கியத் துறை யில் விருது அளிக்கப்பட்ட நூலுக்கு பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நூலாசிரியர் மற்றும் பதிப் பாளர்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்து மதத்தின் பெயரால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ள ஜாதி மற்றும் மொழி ஆதிக்கம் குறித்து நாட்டுப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள வற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களின் தொகுப்பு நூல் Ôசுதிர் சுக்ட்Õ எனும் நூலாகும். அந்நூல் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அந்நூலின் ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் விஷ்ணு சூர்யா வாக் (வயது 52) ஆவார். பாஜகவின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் ஒரு கவிஞர். நாடகக் கலைஞர், பத்திரிகையின் மேனாள் ஆசிரியர், கருத்துப்பட ஓவியரும் ஆவார். கோவா மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள  பிற்படுத்தப்பட்ட (பந்தாரி) வகுப்பைச் சேர்ந்தவர்.

சுதிர்சுக்ட் (சுதிர்களின் பாடல்) எனும் தலைப் பில் கொங்கணி பாடல்களை அவர் தொகுத்தார். அந் நூல் 2013 ஆம் ஆண்டிலேயே பதிப்பிக்கப்பட்டும் வெளியுலகிற்கு அதிகமாக தெரியாமல் இருந்தது. கோவா மாநில அரசின் நிதியில் இயங்கக்கூடிய கொங்கணி அகாடமியின் கவிதைப் புத்தகத்துக்கான 2016ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு அந்நூல் தேர்வு செய்யப்பட்டது.

அதனையடுத்து கோவா மாநிலத்தில் உயர் ஜாதியினரின் குறிப்பாக கவுட் சரஸ்வத் பார்ப்பன  வகுப்பினரின் கடுமையான எதிர்ப்பால் அந்நூல் குறித்து தகவல் தற்போது பரவியுள்ளது. கொங்கணி அகாடமியின் சார்பில் இன்னமும் அனைத்து விருதுகள் குறித்த தகவல்களும் வெளியாகாத நிலையில்,  சுதிர் சுக்ட் நூல்குறித்து சலசலப்பு ஏற் பட்டுள்ளது.

அந்நூலாசிரியரின் பாடல்களில் முக்கியமான கருத் தோட்டமாக பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமாக உள்ளது.

கோவா மாநிலத்தில் உள்ள எளிய மக்கள் பயன் படுத்துகின்ற கிராமப்புற மக்களின் நடையில் பேச்சு வழக்கிலான கொங்கணி மொழியில் அந் நூலின் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

பார்ப்பனர்கள் தேவநாகரி எழுத்து வடிவத்தில் கொங்கணி மொழியை எழுதுவதையும், பேசுவ தையும் தரமான கொங்கணி மொழி என்று கூறி வருகிறார்கள். சமஸ்கிருத மயப்படுத்தி எழுதியும் வருகிறார்கள்.

அந்நூலின் பாடல்கள் பேச்சு வழக்கு மொழியில் அமைந்துள்ளதால், பார்ப்பனர்களின் கடும் எதிர்ப் புக்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது.

கோவா புத்தக விவாதக் குழு உறுப்பினர் கல்வி யாளர் அகஸ்டோ பிண்டோ அந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

அந்நூலின் முகப்பு பாடலாக கீழ்க்கண்ட பாடல் இடம் பெற்றுள்ளது. சுதிர் சுக்ட் (பந்தாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுதிர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது சுதிர் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவர்)

“நான் ஒரு சுதிர்

என் பாட்டன் ஊமை

என் தந்தையும் செவிடாக இருந்தார்

நான்தான் உண்மையில் இந்த மண்ணின் பூர்வ குடி

வெளியிலிருந்து வந்தவர்கள் வயிறு நிரப்பிக்கொண்டனர்

ஆனால், நான் எப்போதுமே பசியில்.

இந்த மண் ஞானத்துக்கான தலையாய ஊற்றாக தகுதியுடன் இருந்தது

தென்காசி என்று அழைக்கப்படுவதற்கு முன்பாக

பரசுராம் என்பவனால்...

அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில்

நான் கோபாவேசமாவேன்

ஜாதியம் என்னும் புழுவை கோவாவுக்கு முதலில் கொண்டு வந்தான்’’

மேலும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

“பரசுராமன் அம்பு எய்தினான்

கடலுக்குள் சென்று திரும்பியது

இந்த கதை ஆண்டாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது

அவர்கள் வெகுமக்களை ஏமாற்றிவிட்டார்கள்

இதுபோன்ற பொய்களையே நிலைநிறுத்திட அவர்கள் விரும்பினார்கள்

அதாவது இந்த உலகமே அவர்களால் படைக் கப்பட்டது

நீங்கள்தான் முதலில் இருந்தவர்கள் என்றால், நீங்கள் பாவிகள்

பிறகு மகர்கள், பண்டாரிகள், கார்விக்கள், பாகிக்கள்,

கவுடாக்கள், வெலிப்புகள், தாங்கர்கள், கன் பிக்கள் என்போரெல்லாம் யார்?

யார் அவர்கள்?

இந்த மண்ணை வளமாக்க

அவர்கள் வியர்வையையும், குருதியையும் சிந் தியவர்கள்

ஆமாம், ஆமாம்.

அவர்கள் சுதிர்கள்...

நாங்கள் சுவாமிகளை பெற்றிருக்கவில்லை

மற்றும் எங்களுக்கு மடங்கள் இல்லை

கோயில் கருவறை எங்களுக்குத் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும்

கடவுள் உங்கள் கைகளில் இருக்கிறார்

உங்களிடையே உள்ள அனைத்து வேற்றுமைகளுக் கிடையே

நீங்கள் ஒன்றுபட்டு இருக்கிறீர்கள்

கிடைமட்டமானாலும், செங்குத்தான நிலையா னாலும்

உங்கள் நெற்றியில் ஜாதி முத்திரை உள்ளது

அது உங்களை நன்றாகவே உயர்ந்தவர்கள் என்று பொருத்திக் காட்டும்

கோயில் தூண்களைவிட நீங்கள் இளைத்திருப் பீர்கள்

ரதத்தை எங்கள் தோளில் சுமக்கிறோம்

நாங்கள் தடுக்கப்பட்டு வெளியே சுற்றி நிற்கையில்

நீங்கள் கருவறைக்குள் நுழையலாம்

தலைமுறை தலைமுறையாக

சிறிது சிறிதாக சேர்க்கப்பட்ட அனைத்தும்

நாங்கள் அளிக்கின்ற இலைகளில்

அனைத்து பிரசாதங்களும் உங்களுக்கே

ஆமாம் ஆமாம்

ஏனென்றால்,

நாங்கள் சுதிர்கள்.’’

இவ்வாறு பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான எழுத்துப் போராக அந்நூல் வெளியிடப்பட்டு, பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக

'தீ'யாக பரவி வருகிறது.
-விடுதலை நாளேடு, 29.10.17

வாகன நிறுத்துமிடத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு

பெங்களூரு, அக்.30 கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய சாலையில், வாகனம் நிறுத்துமிடத்தில், பெண்கள் வாக னங்கள் நிறுத்த, 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு,  அமலுக்கு வந்ததுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பெங்களூருவில், போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள, பிரிகேட் சாலையில், வாகனங்களை நிறுத்துவதில், பெரும் பிரச்சினை நிலவுகிறது. இதையடுத்து, பெண்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு, 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் பேசியதாவது: வாகனம் நிறுத்து மிடத்தில், பெண்களுக்கு, 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கும் வசதி, நாட்டிலேயே முதன் முறையாக, பிரிகேட் சாலையில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 22 கார்கள் நிறுத்த, இட வசதி உள்ளது. இதில், எட்டு முதல், 10 கார்களை நிறுத்த, பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்படும்.

இது போன்ற திட்டம், அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் கட்டாயமாக செயல்படுத் தப்படும். பேருந்து, ரயில் உட்பட பல பொது சேவைகளில், பெண்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது போல, வாகன நிறுத்துமிடத்திலும் இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

- விடுதலை நாளேடு,30.10.17

சனி, 11 நவம்பர், 2017

கோவா மாநிலத்தில் 'சூத்திரன் பாடல்கள்' நூல் உருவாக்கியுள்ள 'தீ'

பனாஜி, அக்.29 கோவா மாநிலத்தில் இலக்கியத் துறை யில் விருது அளிக்கப்பட்ட நூலுக்கு பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நூலாசிரியர் மற்றும் பதிப் பாளர்மீது வழக்கு தொடுத்துள்ளனர்.

இந்து மதத்தின் பெயரால் சமூகத்தில் ஆழமாக வேரூன்றிப்போயுள்ள ஜாதி மற்றும் மொழி ஆதிக்கம் குறித்து நாட்டுப்புறங்களில் பேச்சு வழக்கில் உள்ள வற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களின் தொகுப்பு நூல் Ôசுதிர் சுக்ட்Õ எனும் நூலாகும். அந்நூல் 2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

அந்நூலின் ஆசிரியர் எழுத்தாளர் கவிஞர் விஷ்ணு சூர்யா வாக் (வயது 52) ஆவார். பாஜகவின் மேனாள் சட்டமன்ற உறுப்பினரான அவர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக உடல்நலக்குறைவில் உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு ஓய்வில் இருந்து வருகிறார். அவர் ஒரு கவிஞர். நாடகக் கலைஞர், பத்திரிகையின் மேனாள் ஆசிரியர், கருத்துப்பட ஓவியரும் ஆவார். கோவா மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள  பிற்படுத்தப்பட்ட (பந்தாரி) வகுப்பைச் சேர்ந்தவர்.

சுதிர்சுக்ட் (சுதிர்களின் பாடல்) எனும் தலைப் பில் கொங்கணி பாடல்களை அவர் தொகுத்தார். அந் நூல் 2013 ஆம் ஆண்டிலேயே பதிப்பிக்கப்பட்டும் வெளியுலகிற்கு அதிகமாக தெரியாமல் இருந்தது. கோவா மாநில அரசின் நிதியில் இயங்கக்கூடிய கொங்கணி அகாடமியின் கவிதைப் புத்தகத்துக்கான 2016ஆம் ஆண்டுக்குரிய விருதுக்கு அந்நூல் தேர்வு செய்யப்பட்டது.

அதனையடுத்து கோவா மாநிலத்தில் உயர் ஜாதியினரின் குறிப்பாக கவுட் சரஸ்வத் பார்ப்பன  வகுப்பினரின் கடுமையான எதிர்ப்பால் அந்நூல் குறித்து தகவல் தற்போது பரவியுள்ளது. கொங்கணி அகாடமியின் சார்பில் இன்னமும் அனைத்து விருதுகள் குறித்த தகவல்களும் வெளியாகாத நிலையில்,  சுதிர் சுக்ட் நூல்குறித்து சலசலப்பு ஏற் பட்டுள்ளது.

அந்நூலாசிரியரின் பாடல்களில் முக்கியமான கருத் தோட்டமாக பார்ப்பனிய எதிர்ப்பு உள்ளடக்கமாக உள்ளது.

கோவா மாநிலத்தில் உள்ள எளிய மக்கள் பயன் படுத்துகின்ற கிராமப்புற மக்களின் நடையில் பேச்சு வழக்கிலான கொங்கணி மொழியில் அந் நூலின் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

பார்ப்பனர்கள் தேவநாகரி எழுத்து வடிவத்தில் கொங்கணி மொழியை எழுதுவதையும், பேசுவ தையும் தரமான கொங்கணி மொழி என்று கூறி வருகிறார்கள். சமஸ்கிருத மயப்படுத்தி எழுதியும் வருகிறார்கள்.

அந்நூலின் பாடல்கள் பேச்சு வழக்கு மொழியில் அமைந்துள்ளதால், பார்ப்பனர்களின் கடும் எதிர்ப் புக்கு அதுவும் ஒரு காரணமாக உள்ளது.

கோவா புத்தக விவாதக் குழு உறுப்பினர் கல்வி யாளர் அகஸ்டோ பிண்டோ அந்நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.

அந்நூலின் முகப்பு பாடலாக கீழ்க்கண்ட பாடல் இடம் பெற்றுள்ளது. சுதிர் சுக்ட் (பந்தாரி வகுப்பைச் சேர்ந்தவர்கள் சுதிர்களுக்கு பிறந்தவர்கள் அல்லது சுதிர் வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுவர்)

“நான் ஒரு சுதிர்

என் பாட்டன் ஊமை

என் தந்தையும் செவிடாக இருந்தார்

நான்தான் உண்மையில் இந்த மண்ணின் பூர்வ குடி

வெளியிலிருந்து வந்தவர்கள் வயிறு நிரப்பிக்கொண்டனர்

ஆனால், நான் எப்போதுமே பசியில்.

இந்த மண் ஞானத்துக்கான தலையாய ஊற்றாக தகுதியுடன் இருந்தது

தென்காசி என்று அழைக்கப்படுவதற்கு முன்பாக

பரசுராம் என்பவனால்...

அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில்

நான் கோபாவேசமாவேன்

ஜாதியம் என்னும் புழுவை கோவாவுக்கு முதலில் கொண்டு வந்தான்’’

மேலும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது:

“பரசுராமன் அம்பு எய்தினான்

கடலுக்குள் சென்று திரும்பியது

இந்த கதை ஆண்டாண்டுகளாக கூறப்பட்டு வருகிறது

அவர்கள் வெகுமக்களை ஏமாற்றிவிட்டார்கள்

இதுபோன்ற பொய்களையே நிலைநிறுத்திட அவர்கள் விரும்பினார்கள்

அதாவது இந்த உலகமே அவர்களால் படைக் கப்பட்டது

நீங்கள்தான் முதலில் இருந்தவர்கள் என்றால், நீங்கள் பாவிகள்

பிறகு மகர்கள், பண்டாரிகள், கார்விக்கள், பாகிக்கள்,

கவுடாக்கள், வெலிப்புகள், தாங்கர்கள், கன் பிக்கள் என்போரெல்லாம் யார்?

யார் அவர்கள்?

இந்த மண்ணை வளமாக்க

அவர்கள் வியர்வையையும், குருதியையும் சிந் தியவர்கள்

ஆமாம், ஆமாம்.

அவர்கள் சுதிர்கள்...

நாங்கள் சுவாமிகளை பெற்றிருக்கவில்லை

மற்றும் எங்களுக்கு மடங்கள் இல்லை

கோயில் கருவறை எங்களுக்குத் திறக்கப்படாமல் மூடப்பட்டிருக்கும்

கடவுள் உங்கள் கைகளில் இருக்கிறார்

உங்களிடையே உள்ள அனைத்து வேற்றுமைகளுக் கிடையே

நீங்கள் ஒன்றுபட்டு இருக்கிறீர்கள்

கிடைமட்டமானாலும், செங்குத்தான நிலையா னாலும்

உங்கள் நெற்றியில் ஜாதி முத்திரை உள்ளது

அது உங்களை நன்றாகவே உயர்ந்தவர்கள் என்று பொருத்திக் காட்டும்

கோயில் தூண்களைவிட நீங்கள் இளைத்திருப் பீர்கள்

ரதத்தை எங்கள் தோளில் சுமக்கிறோம்

நாங்கள் தடுக்கப்பட்டு வெளியே சுற்றி நிற்கையில்

நீங்கள் கருவறைக்குள் நுழையலாம்

தலைமுறை தலைமுறையாக

சிறிது சிறிதாக சேர்க்கப்பட்ட அனைத்தும்

நாங்கள் அளிக்கின்ற இலைகளில்

அனைத்து பிரசாதங்களும் உங்களுக்கே

ஆமாம் ஆமாம்

ஏனென்றால்,

நாங்கள் சுதிர்கள்.’’

இவ்வாறு பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிரான எழுத்துப் போராக அந்நூல் வெளியிடப்பட்டு, பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராக

'தீ'யாக பரவி வருகிறது.
-விடுதலை நாளேடு, 29.10.17

வியாழன், 9 நவம்பர், 2017

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அளித்தால்தான் அனுமதி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

பாட்னா, நவ.9 தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில்,  “தனி யார் துறைகளிலும் இட ஒதுக் கீடு வழங்கப்படுவதுகுறித்து தேசிய அளவிலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்’’ என் றார்.  பாஜகவுடன் கூட்டணி யில் இருந்தபோதிலும், அய்க் கிய ஜனதா தளம் தலைவர் பீகார் மாநில முதல்வர்   நிதிஷ்குமார் மேலும் கூறுகையில், “இடஒதுக்கீடு தனியார் நிறுவ னங்களிலும் கட்டாயம் அளிக் கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியா ளர்கள் நியமனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதிப் படுத்தாமல் நிறுவனங்களுடன் ஒப்பந்தங் களில் கையெழுத்திடக்கூடாது’’ என்றார்.

தனியார் துறைகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக் களுக்கு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அளிக்க வலி யுறுத்தி அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தேசிய பிற்படுப்பட்டோருக் கான ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதை மறுத்து விட்டதுடன், அதற்குரிய எவ்வித நடவடிக்கை களையும் எடுக்க முன்வர வில்லை. தனியார் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை கட்டாயம் அளிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது. வேலை வாய்ப்புகளில்   பிற் படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினத் தவர் களுக்கு இடஒதுக்கீட்டை அளிப்பதற்கு தனியார் துறை கள், தாமாக முன்வர  வேண் டும் என்று உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ் வான் குறிப்பிட்டிருந்தார்
- விடுதலை நாளேடு,9.11.17

வெள்ளி, 3 நவம்பர், 2017

கேரளாவில் இரண்டாவதாக தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அர்ச்சகராக நியமனம்!

கொச்சி, நவ.3 கேரள மாநி லத்தில் திருவாங்கூர் தேவஸ் வம் சார்பில் யது கிருஷ்ணன் முதல் தாழ்த்தப்பட்ட அர்ச்ச கராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது கொச்சி தேவஸ்வத்தின் சார் பில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான உமேஷ் கிருஷ் ணன் அர்ச்சகராக நியமிக்கப் பட்டுள்ளார்.

150 ஆண்டு கால மன்னபுரம் சிவன் கோயிலில் 22 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த யதுகிருஷ்ணன் திரு வாங்கூர் தேவஸ்தானத்தில் அர்ச்சகராக கடந்த மாதம் பணி நியமனம் செய்யப்பட்டார். திருவாங்கூர் தேவஸ்தான வாரி யத்தைத் தொடர்ந்து, கொச்சி தேவஸ்வம் ஜாதி தடைகளைத் தகர்த்து, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உமேஷ் கிருஷ்ணன் என்பவரை அர்ச்சக ராக நியமனம் செய்துள்ளது.

நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் 1.11.2017 அன்று அர்ச்சகராக உமேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.   அன்று காலை 8 மணிக்கு அவர் தம் குடும்பத்தினருடன் கோயிலுக்குள் சென்றார். கொச்சி தேவஸ்வம் அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை வரவேற்றார்கள். அதன்பின்னர் தேவஸ்வம் அலுவலரால் பணி நியமன ஆணை உமேஷ் கிருஷ்ணனி டம் அளிக்கப்பட்டது. வருகைப் பதிவேட்டில் கையொப்ப மிட்டு, கோயிலின் அர்ச்சகர் பொறுப்பை உமேஷ் கிருஷ் ணன் ஏற்றுக்கொண்டார். அத னைத்  தொடர்ந்து கோயிலின் சாவி ஏற்கெனவே பொறுப்பில் இருந்த அர்ச்சகரால் உமேஷ் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப் பட்டது.

அர்ச்சகராகப் பொறுப் பேற்ற உமேஷ் கிருஷ்ணன் தன்னுடைய ஆசிரியர்கள் மற் றும் அனைவருக்கும் நன் றியைத் தெரிவித்துக் கொண் டார்.

சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.யு.அருணன் கோயிலுக்கு நேரில் சென்று அர்ச்சகராகப் பொறுப்பேற்ற உமேஷ் கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏராள மானவர்கள் கோயிலில் திரண்டு அர்ச்சகராக பொறுப் பேற்ற உமேஷ் கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உமேஷ் கிருஷ்ணன் மன்னாக்கட் கண்ணன் சாந்தி மற்றும் கன்னூர் இளையாவூர் தந்திரி பிரகாஷ் சர்மா ஆகி யோரிடம் Ôதந்திர சாஸ்த்திராÕ பயிற்சி பெற்று, கட்டூர் நந்தி லாத்துபறம்பு பகவதி கோயி லில் கடந்த 12 ஆண்டுகளாக பூஜைகளை செய்து வந்துள் ளார். தற்போது, கொச்சி தேவஸ் வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் முதல் தாழ்த்தப் பட்ட அர்ச்சகராகப் பொறுப் பேற்றுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.

நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் அர்ச்சகராகப் பணி யாற்றி ஓய்வு பெறுகின்ற பி.என். பாலகிருஷ்ணன் எம் பிராந்திரியிடமிருந்து அர்ச்சகர் பொறுப்பை உமேஷ் கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார்.

உமேஷ்கிருஷ்ணன் பெற்றோர், மனைவி, குழந் தைகள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்நிகழ்வில் உடனிருந்தார்கள்.
-விடுதலை நாளேடு, 3.11.17

பா.ஜ.க. ஆளும் உ.பி.யில் தாண்டவமாடும் ஜாதி ஆணவம் - செருப்பு மாலை போட்டு சித்திரவதை!

லக்னோ, நவ.2 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில்  வேறு ஜாதி பெண்ணுடன் காதல் கொண்ட இளைஞர், அவர் குடும்பத்தினருக்கு நடுத்தெருவில் அவமரியாதை செய்யப்பட்ட அவலம் அரங்கேற்றப்பட் டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மாவட் டத்தில் இசுலாமாபாத் கிராமத்தில் ஓர் இளைஞர் வேறு ஜாதிப் பெண்ணை விரும்பினார். அதனால், அவ்விளை ஞரின் பெற்றோர், சகோதரர்கள் மூவர், ஒரு சகோதரி ஆகிய அத்துணைப் பேரையும் வீட்டைவிட்டு வெளியே இழுத்துவந்து, அவர்களுக்குச் செருப்பு மாலை அணி வித்து, இழிவுபடுத்தியுள்ளனர்.

அக்குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, வேறு ஜாதிப் பெண்ணை விரும்பி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக அவர் களிருவரும் கிராமத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

அண்மையில் அவ்விளைஞரின் இளைய சகோதரர் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதிப்பெண்ணிடம் காதல்வயப்பட்டார். தகவல் அறிந்த இரு பெண்களின் குடும்பத்தினரும் சேர்ந்து இளைஞர்களின் குடும்பத் தினரைத் தாக்கியுள்ளனர். மேலும் அக்குடும்பத்தினரை வீட்டிலிருந்து வெளியே இழுத்துசென்று செருப்பு மாலைகளைப் போட்டு பொதுமக்கள் மத்தியில் அக் குடும்பத்தினரை இழிவுபடுத்தியுள்ளனர். அக்குடும்பத் தினரை இழிவுபடுத்தும் அவலத்தை காட்சிப்பதிவாக்கி, சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.

உ.பி.யில் நடப்பது ராமராஜ்ஜியம் தானே!

ராமனின் செருப்பு 14 வருடம் ஆண்ட பகுதியில் என்ன தான் நடக்காது?
-விடுதலை நாளேடு, 2.11.17