சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு
சமூக நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக நீதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 மே, 2024

ஆர்.எஸ்.எஸ். சமூக நீதியை ஆதரிக்கும் அமைப்பா?




Published May 27, 2024, விடுதலை நாளேடு

14.5.2024 ‘தினமணி’யில் வினய் சஹஸ்ர புத்தே என்பவரால் எழுதப்பட்ட நடுப்பக்கக் கட்டுரையின் தலைப்பு “சமுதாய நல்லிணக்கமும், ஆர்.எஸ்.எஸும்” என்பதாகும்.

(1) ஆர்.எஸ்.எஸில் ஜாதிக்கு இடமில்லை என்பது ஒரு அம்சம். இதற்கு பதிலடி கொடுத்து 24.5.2024 நாளிட்ட விடுதலையில், ஆதாரத்துடன் பதில் அளிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸின் சமூக நீதியைத் தூக்கிப் பிடிக்கும் இரண்டாவது அம்சத்திற்கான பதிலடியே இக்கட்டுரை.
பி.ஜே.பி.யின் தேசிய தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட சி.பி.தாகூர் பாட்னாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்?

“இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு என்ற நிலையில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி வாக்குகளை வாங்குவதற்காக இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.” என்று பேசவில்லையா? ((IMB Live, 28.4.2014))

ராம் விலாஸ் பஸ்வான் இதனைக் கடுமையாக எதிர்க்கவில்லையா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆர்.எஸ்.எஸ். ஏடான ‘பஞ்சான்யா’விற்கு அளித்த பேட்டி என்ன சொல்லுகிறது?

“இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் சரிசமமாக வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும்போது தான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால் இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடு ஆகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்ற பெயரில் கலாச்சார காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் செயல்படுவது பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்திவிடும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ். இதழுக்குப் பேட்டி அளித்ததற்கு என்ன பொருள் ‘தினமணி’யாரே?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் அதோடு நிற்கவில்லை. ஒருபடி மேலே சென்று பேட்டி அளித்தார்.

“இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். நமது நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரின் பார்வைகளும் விரிவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார்கள். ஆகவே அரசு வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலுடன் இருக்கும் மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக் கூடாது. அப்படி ஈடுபடும்போது தான் இதுபோன்ற இடஒதுக்கீட்டு தேவைக்கான போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை இடஒதுக்கீட்டு முறையை மாற்றி அமைப்பது அத்தியா வசியமான ஒன்றாகும்” என்று பேட்டி கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். தலைவர்தானே!

உண்மை இவ்வாறு இருக்க, ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீட்டுக்கு, சமூகநீதிக்கு எதிரானது அல்ல ‘தினமணி’, நடுங்காமல் எழுதுகிறது. முழுப் பூசணிக்காயை சுண்டு விரலால் மறைக்கப் பார்க்கும் அவாளின் சூட்சுமம் புரிகிறதா இல்லையா?
ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆர்.எஸ்.எஸ் இதழான ‘பஞ்சான்யா’ இதழுக்கு அளித்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்தப் பேட்டியை எதிர்த்தும், கண்டித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உடனடியாக ‘விடுதலை’யில் (22.9.2005) அறிக்கை விட்டதையும் ‘தினமணி’யின் நடுப்பக்க எழுத்தாளருக்குத் தெரிவித்துக் கொள் கிறோம்.
‘

தினமணி’களுக்கு இது ஒன்றும் புதிதல்ல! அண்ணல் அம்பேத்கரே இடஒதுக்கீடுக்கு எதிரானவர் என்று தலையங்கம் தீட்டியதுண்டே! தலையங்கத்தின் தலைப்பு “மவுனப் போராட்டம்”.

அம்பேத்கர் கூறியதாக ‘தினமணி’ தன் தலையங்கத்தில் குறிப்பிட்டது என்ன?

“இந்தியா விடுதலை அடைந்தபோது பட்டியல் இன மக்களுக்கு நூற்றாண்டுகளாய் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரமாக, தற்காலிக ஏற்பாடாக இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அப்போதைய சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர் காலாகாலம் எங்கள் சமூகத்தை ஊன்றுகோலில் நிற்க வைத்துவிடும் இடஒதுக்கீடு தேவையில்லை என்று அதை எதிர்த்தார். ஆனால் பண்டித நேருவும், சர்தார் படேலும் வற்புறுத்தியதற்கிணங்கதான் பத்து ஆண்டு கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பட்டிலினத்தவருக்கான இடஒதுக்கீட்டை அம்பேத்கர் ஏற்றுக் கொண்டார்” என்று தினமணியின் தலையங்கம் அப்பட்டமாக உண்மைக்கு மாறான தகவலை வெளிப்படுத்தியுள்ளது.

‘தினமணி’யின் இந்தத் தலையங்கத்துக்குப் பதிலடியாக உடனே ‘விடுதலை’ தலையங்கம் தீட்டியதே! தலையங்கத்தின் தலைப்பு: ‘தினமணி’யின் அண்டப்புளுகு – ஆகாசப் புளுகு’ (விடுதலை, 4.10.2016). தலையங்கத்தின் முக்கிய பகுதி இதோ:

“நேரு தலைமையில் அரசியல் சட்ட வடிவமைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற போது (27.2.1947) இடஒதுக்கீடு குறித்து அம்பேத்கர் கூறியதாவது, “இந்திய சமூகத்திலும், பொருளா தாரத்திலும் இன்றுவரை சமூகநீதி கிடைக்கவில்லை, இங்கு மக்களிடையே ஜாதியின் காரணமாக வேறுபாடுகள் மிகவும் அதிகமாக உள்ளன. இந்த வேறுபாடுகளைக் களையாவிட்டால், மக்களாட்சியில் அதிகார வர்க்கத்தினரின் மூலம் பெரும் ஆபத்து ஏற்பட்டு விடும், இங்கு பிறர்மீது சகோதரத்துவத்துடன் பழகும் மனப்பான்மை மிகவும் அரிதாக உள்ளது. சமூக நீதியின் மூலம் சமத்துவமான இந்திய சமூகத்தை உருவாக்க முடியும். இடஒதுக்கீட்டின் மூலமே சமூக நீதியை எட்ட முடியும். இல்லாவிட்டால் இடஒதுக்கீடு இல்லையென்றால் சமூக நீதியை எட்டுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்துவிடும். இடஒதுக்கீடு மட்டுமே இதற்கான ஒரே வழி. வேறு மாற்று வழிகள் இந்திய சமூகத்தில் இன்றைய சூழலில் பயனற்றவையாக அமைந்துவிடும் (பயனற்றவை என்பது குறித்து கூறும் போது தலித்துகளுக்குத் தனிக்குளம் போன்ற ஒரு தீர்வை காந்தியார் கூறியதை மேற்கோள் காட்டினார்).
தினமணிக்கு அப்போதே மறுத்து எழுதப்பட்ட விடுதலை தலையங்கத்தின் பகுதி இது!

ஆர்.எஸ்.எஸ். இடஒதுக்கீடுக்கு எதிரானதல்ல என்று கூறுகிறதே – ஆர்.எஸ்.எஸைத் தாயாகக் கொண்ட ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை என்ன கூறுகிறது?
“அரசியல் சட்டத்தின் எல்லாக் குடிமக்களுக்கும் சட்ட உரிமை வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தாலும் சில இடங்களில் ஜாதி, மாநில மொழி அடிப்படையில் விசேஷ சலுகைகள் கேட்கிறார்கள். பிற்படுத்தப் பட்டோர் என்ற போர்வையில் கோரப்படும் இந்த சுயநலக் கொள்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் – ஜனசங்கம் அதற்கொரு முடிவு கட்டும்” இதுதான் ஆர்எஸ்.எஸின் அரசியல் வடிவமான ஜனசங்கத்தின் கொள்கை அறிக்கை.

மண்டல் குழுப் பரிந்துரையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வேலைவாய்ப்பில் சமூக நீதிக் காவலர் மாண்புமிகு பிரதமர் வி.பி.சிங் அவர்கள் நிறைவேற்றிக் கொடுத்த நிலையில் – பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். – எப்படி எல்லாம் நடந்து கொண்டன?

வி.பி.சிங். 27 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்த வுடன் அயோத்தியில் இராமன் கோயில் கட்ட ரதயாத்திரை புறப்பட்டார் – அன்றைய பா.ஜ.க தலைவர் அத்வானி. அதற்கு முன்னோடும் பிள்ளை யாக இருந்தவர்தான் மோடி என்பது நினை விருக்கட்டும். அதற்குப் பிறகு அத்வானியை அஸ்தமனம் செய்தவர்தான் மோடி!
பல இடங்களில் கலவரம் வெடித்தது. ஆர்.எஸ்.எஸ்.தானே முன்னின்று நடத்தியது. ஹிந்து மதவெறியை ஊதி விட்டது. பீகார் மாநிலத்துக்குள் இந்த யாத்திரை நுழைய அன்றைய முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் அனுமதிக்க வில்லை. லல்லு பிரசாத். வி.பி.சிங் அணியில் இருந்தார். உடனே வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியிலிருந்து வழங்கிய ஆதரவைத் திரும்பப் பெற்று, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க வழி வகுத்தது. இவர்கள்தான் மண்டல் பரிந்துரையை ஆதரித்ததாக வெட்கப்படாமல் பொய் பேசுகிறார்கள். வி.பி.சிங் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தியதால்தான் இராமன் கோயில் கட்டும் பிரச்சினையை உடனே கையில் எடுத்ததாக அத்வானியே ஒப்புக் கொண்டிருக் கிறார். அத்வானி அப்போது தந்த பேட்டி இது.

27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிரான வி.பி.சிங் ஆட்சியை எதிர்த்து டெல்லியில் மாணவர்கள் கலவரம் செய்தனர். இராஜீவ் கோஸ்வாமி என்ற உயர்ஜாதி மாணவர் உடலுக்கு தீ வைத்துக் கொண்டார் (இது திட்டமிட்டு நடந்த எரிப்பு என்ற குற்றச் சாட்டும் எழுந்தது). 55 சதவிகித தீப்புண் காயத்துடன் புதுடில்லி சப்தர்ஜங் மருத்துவ மனையில் அவர் அனுமதிக்கப் பட்டார். அந்த நிலையில் அத்வானி, “இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி அத்வானியின் இடஒதுக்கீடு எதிர்ப்பை அப்படியே வெளிச்சப்படுத்துகிறது.   இதோ,

அந்தப் பேட்டி:

“புதுடில்லியில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் தீக்குளித்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் மாணவர்களின் பெற்றோர்கள் என்னை. வீடு தேடி வந்து சந்திக்கிறார்கள். இன்னும் ஏன் இந்த ஆட்சிக்கு ஆதரவு தருகிறீர்கள்? ஆதரவைத் திரும்பப் பெறுங்கள்” என்று வற்புறுத்தி வருகிறார்கள். மண்டல் பிரச்சினையைக் காரணம் காட்டி. ஆதரவைத் திரும்பப் பெற்றால், அது அரசுக்கு பெரும் பயனைத் தேடிக் கொடுத்து விடும் என்றே நான் உணர்ந்தேன்.” என்னைத் தேடி வந்த பெற்றோர்களிடம் நான் கூறினேன்:

“நீங்கள் சொல்லும் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. இந்த அரசு இட ஒதுக்கீடு பிரச்சினையில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது என்பது உண்மை தான். உரிய நேரத்தில் – நாங்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கையை எடுப்போம்.” என்றாரே எல்.கே.அத்வானி.

(New Delhi, where the self immolation had taken place, parents used to come to my place daily. “Why are you supporting the government? Withdraw your support.” I felt that withdrawing our support on the issue of Mandal would be of an enormous benefit to the government. I said ‘I agree with you that the government is behaving very badly but we will take action at the appropriate time. – Advani – Hindustan Times, 21 Sep. 1990)

சொன்னபடியே வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த் தார்களா இல்லையா?

தன் ஆட்சி மீதான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை துணிவோடு எதிர்கொண்டார் வி.பி.சிங் அவரே நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்து, நாடாளுமன்றத்தில் பேசினார்.

27 சதவிகித இடஒதுக்கீட்டை ஆதரிப்போர் யார்? எதிர்ப்போர் யார்? இதை இந்த வாக்கெடுப்பு வழியாக மக்கள் அறிந்து கொள்ளட்டும். என்னுடைய ஆட்சி வீழ்த்தப்பட்டாலும், நான் அமர்ந்திருந்த பிரதமர் இருக்கையில் யார் வந்து அமர்ந்தாலும் 27 சதவிகித “இடஒதுக்கீட்டை ஒழித்துவிட்டு, இந்த நாற்காலியில் ஒரு நிமிடம் கூட உட்கார முடியாது” என்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தில் கம்பீரமாக முழக்கமிட்டார்.

வி.பி.சிங் அறிவிப்பை ஆவேசமாக எதிர்த்தது ஆர்.எஸ்.எஸ். இந்த தேசத்தைப் பிளவுபடுத்துகிறார் என்று கூறிய ஆர்.எஸ்.எஸ். அதன் அதிகாரபூர்வ ஏடான ”ஆர்கனைசர்’ இதழில் முதல் பக்கத்தில் ‘ராஜாவின் (வி.பி.சிங்கின்) ஜாதி யுத்தம்’ என்ற தலைப்பிட்டு கீழ்க்கண்டவாறு எழுதியது;

150 ஆண்டுகால அந்நிய ஆட்சியான பிரிட்டீஷ் ஆட்சி சாதிக்க முடியாத ஒன்றை ஒரே ஆண்டில் சாதித்துக் காட்டுவேன் என்று வி.பி.சிங் மிரட்டுகிறார். இந்து சமூகத்தை ஒற்றுமைப்படுத்த விவேகானந்தரும், தயானந்த சரசுவதியும். மகாத்மா காந்தியும் டாக்டர் ஹெட்கேவரும் மேற்கொண்ட மாபெரும் முயற்சிகளை வி.பி.சிங் சிதைக்கத் துடிக்கிறார்.சமூகத்தை மண்டல் மயமாக்கி, வி.பி.சிங் சாதிக்க விரும்புவதெல்லாம் இந்து சமூகத்தை. முன்னேறியவர்கள். பிற்படுத்தப்பட்டோர், அரிஜன் என்பதாகக் கூறுபோட வேண்டும் என்பது தான் என்று ‘ஆர்கனைசர்’ ஏடு எழுதியது.

(V.P. Singh threatens to achieve in one year what the British could not do in these 150 year long alien rule….. He wants to undo the great task of uniting Hindu society from the days of Vivekananda, Dayananda Saraswathi, Mahathma Gandhi and Dr. Hedgewar…. what V.P.Singh through Mandalisation of the society intends to achieve is a division of Hindus on forward, backward and Harihjan lives… (‘Organiser’ 26, Aug. 1990. Page 1)

வி.பி.சிங் மண்டல்குழு பரிந்துரையை செயல்படுத்தி யதற்காக பா.ஜ.க அவரது ஆட்சியைக் கவிழ்க்க வில்லை என்று குரலை மாற்றிப் பேசுகிறார்களே, அவர்களின் உண்மை நிலை இதுதான்!

மக்களை பிறப்பின் அடிப்படையில் வருணா சிரமத்தைப் புகுத்தி பல்லாயிர ஜாதிகளாகக் கூறு போட்டவர்கள் அவர்கள். ஜாதியால் பிளவுப்படுத்தப் பட்டு, கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் வாய்ப்பினை அளித்தால், அப்படி அளிப்பது சமூகத்தைப் பிளவு படுத்துவதாம்! எப்படி இருக்கிறது? நம் காலத்தில் நம் கண் எதிரேயே நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சமூக அநீதி சக்திகளால் கடுமையாக எதிர்க்கப்பட்ட சமூகநீதிக்கு ஆதர வாளர்கள் என்று கதை புனையும் – ஆர்.எஸ்.எஸ். – அதை ஆதரிக்கும் தினமணி போன்ற ஊடகங்களை எளிதாக இவற்றின் மூலம் அடையாளம் காணலாம் அல்லவா?

------+++++-----+++++-----

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?


Published May 27, 2024, விடுதலை நாளேடு

உயர்ஜாதியினருக்கு இடஒதுக்கீடு (EWS) வழங்குவதில் எத்தனை எத்தனை வேகம்?
103ஆம் சட்ட திருத்தம்.
8.1.2019 – மக்களவையில் நிறைவேற்றம்.
9.1.2019 – மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
12.1.2019 – குடியரசுத் தலைவர் ஒப்புதல்
17.1.2019 – ஒன்றிய சமூக நலத்துறை ஆணை
19.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை செயல்படுத்த ஆணை பிறப்பித்தல்
29.1.2019 – ஒன்றிய சுகாதாரத்துறை ஆணை பிறப்பிப்பு
30.1.2019 – ஒன்றிய பணியாளர் துறை ரோஸ்டர் முறை ஆணை பிறப்பிப்பு.
1.2.2019 – எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
6.2.2019 – ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது.
8.2.2019 – இடைக்காலத்தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
8.9.2022 – உச்சநீதிமன்றத் தலைவமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் அரசியல் சட்ட அமர்வு.
13.9.2022 – உச்சநீதிமன்றத்தில் விவாதம் தொடக்கம்
27.9.2022 – தீர்ப்பு ஒத்திவைப்பு
7.11.2022 – EWS சட்டம் செல்லும் என்று தீர்ப்பு.
சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்னுக்குத் தள்ளப்பட்ட பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத்தான் இடஒதுக்கீடு என்று அரசியல் சட்டம் கூறியுள்ள நிலையில் ஏற்கெனவே ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினருக்கு அவசர கதியில் இடஒதுக்கீட்டைத் திணித்ததுதான் சமூகநீதியா?


இடுகையிட்டது parthasarathy r நேரம் 9:41 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆர் எஸ் எஸ், சமூக நீதி

திங்கள், 24 அக்டோபர், 2022

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு! - கவிஞர் கலி.பூங்குன்றன்

 

தமிழர் தலைவர் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை

டிசம்பர் 1-15,2021
November 30, 2021உண்மை

சமூக நீதியின் ஒரு முக்கிய காலகட்டத்தில் நாடு!

கவிஞர் கலி.பூங்குன்றன்

ஆண்டாண்டு காலமாக வாய்ப்பும், உரிமையும் மறுக்கப்பட்ட மக்களை, கை தூக்கி விடுவதுதான் இடஒதுக்கீடு என்பது.

இடஒதுக்கீடுக்கு என்று ஒரு வரலாறு உண்டு, மகாராட்டிரத்தில் ஜோதிபா பூலே, சாகுமகராஜ் என்று தொடங்குகிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்று கேட்கின்றனர். ஆம், ஜாதி இருக்கும் வரை _ ஜாதி ஒழிக்கப்படும் வரை ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது தவிர்க்கப்பட முடியாததுதான். அந்த ஜாதிதான் கல்வி உரிமையை மறுத்தது _ இதுவும் கூட ஒரு தடுப்பூசி அணுகுமுறைதான்.

ஜாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது என்போர், ஜாதியை ஒழிக்கச் சட்டம் கொண்டு வரட்டுமே!

ஒரே தேசம் _ ஒரே மொழி _ ஒரே கலாச்சாரம் என்பவர்கள், எல்லோரும் ஒரே ஜாதி _ ஒரே நிலை _ சரி சமம் என்று சட்டம் செய்யட்டுமே! அப்படி சட்டம் செய்தால், செயல்பாடுக்கு வந்தால் இழப்புகள் இருந்தாலும் அதனை ஏற்றுக் கொண்டு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூற நாங்கள் தயார்தான் என்கிறார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

ஏதோ இப்போதல்ல _ இதற்கு முன்பே கூட சொல்லித்தான் வருகிறார். ஆனாலும் எதிர்த் தரப்பிலிருந்து பதிலைத்தான் காணோம்!

இன்றைய தினம் அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படைக் கோட்பாடாக இருக்கக்கூடிய சமூக நீதியை, இடஒதுக்கீட்டை, அதன் நோக்கத்தை அதற்கான அடிப்படை வேரினையே வெட்டும் வேலையில் பார்ப்பன _ ஆதிக்கக் கட்சியாக இருக்கக் கூடிய பா.ஜ.க. அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸின் கட்டளைப்படி செய்து கொண்டு இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் இடஒதுக்கீடை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லையா?

இடஒதுக்கீடு குறித்து ஆர்.எஸ்.எஸின் ஏடான ‘பஞ்சான்யா’வுக்கு ‘அவுட்லுக்’ (20.9.2015) ஏட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அளித்த பேட்டியில் கூறியது என்ன?

“இந்தியா போன்ற மக்களாட்சி நாட்டில் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அப்படி வழங்கப்படும் போதுதான் சமூகத்தில் அமைதி நிலவும். ஆனால், இங்கே பலரது வாய்ப்புகளைப் பறித்து சிலருக்கு மட்டுமே கொடுக்கும் சூழ்நிலை இடஒதுக்கீடு என்கிற பெயரில் நடைமுறையில் உள்ளது. இந்த நாடு கலாச்சாரத்தில் முதுமை பெற்ற நாடாகும். கலாச்சாரக் காவலர்கள் இந்த நாட்டை இன்றளவும் புனிதம் கெடாமல் வைத்துள்ளனர். இடஒதுக்கீடு என்கிற பெயரில் கலாச்சாரக் காவலர்களை இழிவுபடுத்தும் விதமாக அவர்களின் தலைமுறைகளுக்குத் துரோகம் இழைக்கும் வகையில் பெரும்பான்மையான மக்களுக்குப் பேரிழப்பை ஏற்படுத்தி விடும்.

இந்த நாட்டில் வாழும் அனைவரின் நன்மைக்காக ஆட்சியாளர்களின் சிந்தனை இருக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்த நாட்டின் வளர்ச்சிக்காகத்தான் பாடுபடுகிறார். ஆகவே, வளர்ச்சிக்காக தியாகம் செய்யத் துணிச்சலும் இருக்கும் மக்களை அரசு வஞ்சிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபடும் போதுதான், இதுபோன்ற இடஒதுக்கீட்டுத் தேவைக்காகப் போராட்டங்கள் வெடிக்கும். ஆகவே இதுவரை உள்ள இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைப்பது அத்தியாவசியமான ஒன்றாகும். அரசு குழு ஒன்றையமைத்து இடஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் கூறிய இந்தக் கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ‘விடுதலை’யில் (22.9.2015) வெளியிட்ட அறிக்கை என்னவோ அதுதான் இப்பொழுது நடந்திருக்கிறது.

ஆசிரியர் சொன்னது என்ன?

“ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து வருகிற ஆபத்திற்கு ஒரு முன்னோட்டமாகும். பின்னாளில் அவர்கள் சிந்திப்பது என்ன வென்றால், இப்பொழுது இருக்கின்ற அடிப்படை அளவுகோலை அகற்றிவிட்டு, பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் _ இவர்களுக்குக் கிடைக்கின்ற இடஒதுக்கீட்டை பொருளாதார அடிப்படை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டை மாற்ற வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு அந்தக் கமிட்டி அமைக்கப்படக் கூடிய நிலையில் இருக்கிறது.

இந்தத் துறையில் மட்டுமல்ல, கல்வித்துறையிலும் கூட தனியாக ஒரு வாரியம் அமைத்து, கல்வித் திட்டத்தையே மாற்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கருத்துகளைச் சொல்லிக்கொண்டு ஆழம் பார்க்கிறார்கள்.

எனவே, இந்தக் காலகட்டத்தில், காலம் காலமாக நம்முடைய நாட்டில் தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், திராவிடர் கழக இயக்கமும் மிகப்பெரிய அளவில் போராடி வெற்றி கண்ட, பாதுகாத்த இடஒதுக்கீடு, சமூக நீதி என்பதற்குப் பெரிய அறைகூவல் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது’’ என்று ஆறு ஆண்டுகளுக்கு முன் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தொலை நோக்கோடு சொன்னதுதானே இப்பொழுது நடந்திருக்கிறது?

இடஒதுக்கீடு – உள் ஒதுக்கீட்டின் பலன் என்ன?

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த போது அருந்ததியர்களுக்கு 3 விழுக்காடு (29.5.2009) உள் ஒதுக்கீடு வழங்கிய அதன் பலன் என்ன தெரியுமா?

இந்த உள்ஒதுக்கீடு வருவதற்கு முன் அருந்ததியர்த் தோழர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் கிடைத்த இடங்கள் வெறும் 13;  2009இல் கிடைத்த இடங்களோ 29. 2009_2010இல் கிடைத்த இடங்களோ 56. நான்கரை மடங்கு அதிகம். அதே போல பொறியியல் கல்லூரிகளில் 2007_2008இல் அவர்களுக்குக் கிடைத்த இடங்கள் 44, இட ஒதுக்கீடு அளிக்கப்பட்ட பின் 2009_2010இல் கிடைத்த இடங்கள் 1165, பார்ப்பனர்கள் ஆத்திரப்படுவதற்கும், இடஒதுக்கீட்டை ஒழிக்கக் கூப்பாடு போடுவதற்கும் இதுதான் காரணம்!

மதரீதியாக இடஒதுக்கீடு வழங்க அரசியல் சாசனத்தில் இடமில்லை. மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுடன் சேர்த்து சலுகை வழங்குவதால் ஏற்கெனவே உள்ள ஹிந்துக்களின் அந்தப் பிரிவினருக்கே பாதிப்பு ஏற்படும். தற்போது சலுகை பெற்ற பிரிவிலும் கூட வறுமையில் உழல்பவர்கள் உள்ளனர். அவர்களுக்கு வருமான அடிப்படையில் சலுகை வழங்குவதன் மூலம் சிறுபான்மை மதத்தினர் உள்பட அனைத்து பிரிவினரும் பயன்பெற வசதி செய்யப்படும் என்பது பிஜேபியின் தேர்தல் அறிக்கை (2016).

வருமானஅடிப்படையில் இடஒதுக்கீடு என்று கூறியுள்ளது சட்டவிரோதமாக ஒன்றைத் தேர்தல் அறிக்கையில் சேர்த்து, ஆட்சிக்கு வந்தபின் அந்த சட்டவிரோதத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. உண்மையைச் சொல்லப் போனால் இது சட்ட விரோத அரசே!

இந்தியாவின்அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் என்பது இடஒதுக்கீட்டுக்காகவே கொண்டு வரப்பட்டது. அதற்குக் காரணம் தமிழ்நாடுதான் _ தந்தை பெரியார்தான்.

1928 முதல் சென்னை மாநிலத்தில் இருந்து வந்த இடஒதுக்கீடு செல்லாது என்று ‘சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைக் காட்டி வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் இடஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்புக் கூறிய காரணத்தால் தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே கொதித்து எழுந்தது.

தமிழ்நாட்டின் போராட்டத்தை எடுத்துக் காட்டித்தான் பிரதமர் ஜவகர்லால் நேரு முதல் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு காட்டினார்.

அந்தத் திருத்தம் என்ன சொல்லுகிறது?

சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுப்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட உறுதி செய்தது. அப்பொழுதே கூட பொருளாதார ரீதியாக என்ற அளவுகோலையும் சேர்க்க வேண்டும் என்று ஜன சங்க நிறுவனரான தீனதயாள் உபாத்தியாயா ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில் பொருளாதாரத்துக்கு ஆதரவாக அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்கிற அளவுகோலின்படிதான் இடஒதுக்கீடு இருந்து வருகிறது.

1951ஆம் ஆண்டில் பொருளாதார அளவு கோலைக் கொண்டு வர முயற்சி செய்தவர்கள் இப்பொழுது ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருக்கும் காரணத்தால், உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஒரு சட்டத்திருத்தம் (திருத்த எண்.103) கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டார்கள்.

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் செல்லாது என்று ஏற்கெனவே பலமுறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததே!

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளாதாரத்தில் பின் தங்கியோர்க்கு என்று 10 விழுக்காடு இடஒதுக்கீடு செய்த போது உச்சநீதிமன்றம் செல்லாது என்று நிராகரித்து விட்டதே!

2016ஆம் ஆண்டில் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குள் உள்ள பொதுப் பிரிவினருக்கு 10 விழுக்காடு வழங்கி அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தது, பா.ஜ.க. ஆளும் குஜராத். இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையிலான அமர்வு குஜராத் சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதே. ராஜஸ்தான் மாநிலம் கொண்டு வந்த பொருளாதார அடிப்படைச் சட்டமும் நீதிமன்றத்தால் செல்லாது என்று கூறப்பட்ட நிலையில் மத்திய அரசே, சட்டத்துக்கு விரோதமாகவும் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியது _ பச்சையான சட்ட விரோதம் _ நீதிமன்ற விரோதம் தானே!

5.5.2021 அன்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு கூறியது என்ன?

மகாராட்டிர மாநிலத்தில் ‘மராத்தா’ பிரிவினருக்கு அளிக்கப்பட்ட 16 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என்று கூறப்பட்டது. அத்தீர்ப்பில் 50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செல்லாது என்றும், பிற்படுத்தப்-பட்டோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் உரிமை மத்திய அரசுக்குத்தான் உண்டே தவிர, மாநில அரசுக்குக் கிடையாது என்றும் கூறப்பட்டது.

இந்தச் சட்டம் கடும் எதிர்ப்புக்கிடையே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. “செலக்ட்’’ கமிட்டிக்கு அனுப்பப்பட்டது.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் பூபேந்திர யாதவ் எம்.பி. ஆவார். அந்தக் கமிட்டியில் மாநிலங்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி (திமுக), டி.கே.ரங்கராஜன் (சிபிஎம்), நவநீதிகிருஷ்ணன் (அஇஅதிமுக) மற்றும் பிற மாநிலத்தினரும் இடம் பெற்றிருந்தனர். அந்தக் கமிட்டியில் கருத்துச் சொல்ல திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைக்கப்பட்டிருந்தார். எழுத்துப்பூர்வமாகவே கழகத்தின் கருத்துகளை எடுத்துக் கூறி நேரிலும் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் யார் என்று தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்குக் கிடையாது. மத்திய அரசுதான் முடிவு செய்யும் என்ற சட்டத்தின் பிரிவு (342A) மாநில உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது என்று முதன்முதலில் ஆணி அடித்ததுபோல் கூறியவர் திராவிடர் கழகத் தலைவர்தான். ஆனாலும் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

மகாராட்டிரத்தில் மராத்தா பிரிவினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு செல்லாது என்ற தீர்ப்பு _ இந்தச் சட்டத்தின் அடிப்படையில் தான் வழங்கப்பட்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் இந்திரா சகானி வழக்கில் கூறப்பட்டதையும் மகாராட்டிரா வழக்கில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

மண்டல் குழு வழக்கை _ ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியபோது, ஜஸ்டிஸ் திரு.இரத்தினவேல் பாண்டியன் தனித்தன்மையாக தனித்த தீர்ப்பை எழுதினார்.

பாலாஜி எதிர் மாநில அரசு வழக்கில் வாதாடிய மூத்த வழக்குரைஞர் ஜெத்மலானி கூறியது என்ன? 50 சதவிகிதத்திற்கு மேல் போகக் கூடாது என்று நீதிமன்றம் சொன்னது தீர்ப்பின் வரிகள் அல்ல, வெறும் கருத்துதான் (Obiter- Dicta); இதற்குச் சட்ட வலிமை கிடையாது என்றாரே! என்று ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் மணடல் குழு வழக்கில் தன் தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜஸ்டிஸ் ஓ.சின்னப்ப ரெட்டி என்ன கூறியுள்ளார்? (வசந்த குமார் வழக்கில்), 50 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீடு போகக் கூடாது என்று உச்சநீதிமன்ற அமர்வு கூறியதற்கு என்ன அளவுகோல்? விஞ்ஞானபூர்வமானதா? புள்ளி விவர தரவுகள் உண்டா? என்று கேட்டாரே!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 12ஆம் பிரிவு என்ன கூறுகிறது? ‘ஸ்டேட்ஸ்’ என்றால் மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அரசு மூன்றையும் தான் குறிக்கும்.

1928ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. பிற்படுத்தப்பட்டோரை முடிவு செய்தது மாநில அரசுதான் _ மாநிலத்துக்கு மாநிலம் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கையும், தன்மையும் மாறுபடுகிறது. இந்த நிலையில் பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசு தானே முடிவு செய்ய முடியும்? மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப் பட்டோருக்கு இடஒதுக்கீடு என்று வருகிற போது அந்தந்த மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் அடிப்படையில்-தானே இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

இங்கே மத்திய அரசு எங்கே இருக்கிறது? இன்னும் சொல்லப் போனால் மாநில அரசுக்குத்தான் மக்கள் உண்டு; மத்திய அரசுக்கு நேரிடையாக மக்கள் கிடையாதே!

மகாராட்டிரத்தில் தானே நடந்திருக்கிறது _ நமக்கு என்ன என்று அலட்சியமாக இருக்க முடியுமா? கடைசி வீட்டில்தானே தீ பிடித்திருக்கிறது _ நம் வீட்டுக்கு ஆபத்தில்லையே என்று கைகட்டி நிற்க முடியுமா? அந்தத் தீ நம் வீட்டுக்கு வர எவ்வளவு நேரம் பிடிக்கும்?

அதுவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்றால் எல்லா மாநிலங்களையும் கட்டுப்படுத்தத்-தானே செய்யும்!

(தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகளுள் ஒருவரான நாகேஸ்வர ராவ் _ அதிமுக அரசு சார்பில் 69 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் ஆவார்).

தமிழ்நாட்டில் முசுலிம்களுக்கும், அருந்ததியர்க்கும், உள் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இந்த நிலையில் யாருக்கோ வந்தது என்று அலட்சியமாக இல்லாமல் சமூக நீதிக் களத்தில் _ பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள் சிறுபான்மையினர் ஒன்றிணைந்து, நாம்தான் வெகு மக்கள் _ ஜனநாயகம் என்பது பெரும்பாலோரால் ஆளப்படுவது என்பதைக் கணக்கில் கொண்டு களத்தில் நிற்க வேண்டும்.

திராவிடர் கழகத்தின் முயற்சியால் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வினைத் திட்பத்தால் 69 சதவிகித இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது அட்டவணையில் வைத்துப் பாதுகாக்கவும் படுகிறது.

கருநாடக மாநிலத்தில் உள்ள 73 விழுக்காடு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா மற்றும் நீதிபதி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் வழங்கிய தீர்ப்பு என்ன கூறுகிறது?

“தமிழ்நாடு அரசின் 69 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது கல்வி மற்றும் அரசுப் பதவிகளுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் (தமிழ்நாடு அரசு) 1993இன்படி வழங்கி வருகிறது. இது அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையின் கீழ் கொண்டு வந்துள்ளதால், இது நீதிமன்ற மறு ஆய்விற்கு அப்பாற்பட்டது ஆகும் (ஜூலை 2010) என்று தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.’’

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடஒதுக்கீடு இத்தனை சதவீதம்தான் _ இத்தனை சதவிகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு என்ன பதில்? (ஒரு முறை ராம் ஜெத்மலானி இடஒதுக்கீட்டுக்காக வாதாடிய-போது நீதிபதி 100 சதவிகிதம் கூட இடஒதுக்கீடு கேட்பீர்களா என்று கேட்டபோது “Why Not?” என்று பதிலடி கொடுத்ததுண்டே!).

அரசமைப்புச் சட்டம் 15(4), 16(4) என்பது அடிப்படை உரிமையாகும். இதில் கை வைக்க எந்த நீதிமன்றத்துக்கும் உரிமை கிடையாது. ஆனால் நீதிமன்றங்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இப்பொழுது எந்த அளவுக்கு நீதிமன்றம் சென்றுள்ளது? நீதிமன்றம் தலையிட முடியாது _ கூடாது என்பதற்காகவே அரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணை உருவாக்கப் பட்டது. இப்போது அதிலும் தலையிடுவோம் என்று உச்சநீதிமன்றம் சொல்லுகிறது என்றால் இதற்கொரு முடிவு காணப்பட வேண்டாமா?

நில உச்சவரம்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது, உச்சநீதிமன்றம் செல்லாது என்று கூறியது. நீதிமன்றத்தின் இத்தகைய தலையீட்டைத் தவிர்க்கவே ஒன்பதாம் அட்டவணை கொண்டு வரப்பட்டது. இந்த அட்டவணையின் கீழ் 284 சட்டங்கள் உண்டு. ஆனால், சமூக நீதியும் இதில் முதன்முதல் இடம் பெற்றுள்ளது என்றால் அதற்குக் காரணம் திராவிடர் கழகமே! இதுவரை இந்தச் சட்டங்களுக்கு எதிர் வினை என்பது வந்ததே கிடையாது.

9ஆம் அட்டவணை நீதிமன்ற அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது. அதிலும் தலையிட முடியும் என்று கூறியுள்ள நிலையில் மற்றொரு அட்டவணை கொண்டு வரப்பட வேண்டும் என்பது திராவிடர் கழகத் தலைவரின் கருத்தாகும்.

80 சதவிகித மக்களுக்கு _ 69 சதவீத இடஒதுக்கீடு என்பதற்கு ஆதாரம் உண்டு. ஆனால் 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு கூடாது என்பதற்கு ஆதாரங்களோ _ தரவுகளோ கிடையாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் 16(4) என்ன கூறுகிறது? மற்ற (முன்னேறியவர்களோடு சமமான நிலை அடையும் அளவுக்கு) (Adequately) இடஒதுக்கீட்டின் அளவு இருக்கலாம் என்று கூறுகிறது. இதனைக் கண்டறியும் உரிமை அரசுகளுக்கு உரியதே தவிர நீதிமன்றங்களுக்கு அறவே கிடையாது. Adequate என்ற இலத்தீன் சொல்லுக்கு Till it is equalised மற்றவர்களோடு சமநிலை அடைகிற அளவுக்கு என்று பொருள். இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்குரிய இடஒதுக்கீடு விகிதாசாரம் அளவுக்கு இடங்கள் இதுவரை பூர்த்தியாகவில்லை என்பது கவனத்துக்கு உரியதாகும்.

இடஒதுக்கீடு குறித்து நீதிபதிகள் தெரிவித்து வரும் கருத்து குறித்து நோபல் அறிஞர் அமர்த்தியா சென் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது.

“இடஒதுக்கீடு அளித்தால் தகுதி, திறமை குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கை-யோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படை-யில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்-பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டுமொத்தப் போக்கினையும் பார்க்க வேண்டும். அதுபோல்தான் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பலன்களை நோக்க வேண்டும். நீதிமன்ற அடிப்படையில் இதற்கு மிக எளிதான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்கவேண்டும்’’ என்று நோபல் அறிஞர் அமர்த்தியா சென் சொன்னார். அதுவும் எங்கு எந்த இடத்தில் சொன்னார் என்பதுதான் கைதட்டிச் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். சென்னை அய்.அய்.டி.யில் (22.12.2009) தான் சொன்னார் என்பது நினைவிருக்கட்டும்!

மக்கள் நலனுக்காக தந்தை பெரியார் நீதிமன்றங்களை விமர்சித்ததுண்டு _ திராவிடர் கழகம் நீதிமன்றத் தீர்ப்புகளைக் கூட எரித்ததுண்டு.

மக்களுக்குத் தேவையானவற்றை முடிவு செய்வது அரசுகளே _ நீதிமன்றங்கள் அல்ல.

இப்பொழுது சமூகநீதிக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்றங்களும், இத்திசையில் தங்கள் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் எழுச்சியை உண்டாக்க வேண்டும்.

குறிப்பு: சமூகநீதி _ இட ஒதுக்கீடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் காணொலியில் (மே 2021) ஆற்றிய உரையைத் தழுவி எழுதப்பட்டது இக்கட்டுரை.

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:13 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: கவிஞர், சமூக நீதி

வியாழன், 27 ஜனவரி, 2022

இந்திய ஒன்றியம் முழுவதும் திராவிடத் தத்துவக் கொடி!



   January 27, 2022 • Viduthalai

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டினை, பிடிவாதமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அளிக்கத் தவறியதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை தந்தை பெரியார் பிறந்த சமூகநீதி மண்ணான தமிழ்நாடு தொடர்ந்து நடத்தி வ ந்திருக்கிறது.  இன்னொரு கட்டத்தில் சட்டப் போராட்டமும் நடத்தப்பட்டது. இதில் முழு மூச்சாக இருந்து சமூகநீதிக்கான சரித்திர நாயகர் - தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று பெரு வெற்றி பெற்று, தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல. இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்களின் வயிற்றில் பால் வார்த்தது.

மாநில அரசுகளின் செலவில் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாக உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால், அதனை வழிப்பறிக் கொள்ளை போல 50 சத இடங்கள் வரைப் பறித்துச் சென்று, அவற்றில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் பின்பற்றும் இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்ற நியாயமான மரியாதையான பண்பாட்டைப் பின்பற்ற வில்லை என்பதையும் தாண்டி, அறவே ஒரு விழுக்காடு இடம் கூடத் தர மாட்டோம் என்ற ஆணவப் போக்கு எந்த வகை ஜனநாயகம்? எந்த வகை சமூகநீதி?

இந்த நிலையில் தான் தி.மு.க. அரசு உச்சநீதிமன்றக் கதவைத் தட்டி, நீதி கேட்டது - போராடியது. இறுதி வெற்றிக் கிடைத்தும் விட்டது.

இந்தியா முழுவதும் உள்ள கோடானு கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் தமிழ்நாட்டை நன்றி உணர்ச்சிக் குலுங்கப் பார்க்கின்றனர்.

இடஒதுக்கீடுப் பிரச்சினையில் முதல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்த தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணை நோக்கித் தங்கள் கரங்களை உயர்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.

குறிப்பாக இப்பொழுது கிடைத்த பெரு வெற்றிக்குக் காரணமான தமிழ்நாடு முதலமைச்சருக்குப் பாராட்டு மழைப் பொழிந்து கொண்டு இருக்கின்றனர்.

நேற்று (26.1.2022) காணொலி மூலம், அனைத்திந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பு (AIBCF), பூலே, அம்பேத்கர் கவுரவ்ஷாலி மற்றும் ஆதர்சலாடி முகிம் (PAGAAM),  அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூக ஊழியர்களின் கூட்டமைப்பு  (BAMCEF), 'குடி மக்களாகிய நாம்' மற்றும் 'முதன்மை இந்தியா' ஆகிய அமைப்புகளின் ஒருங் கிணைப்பில் தேசிய இணைய அரங்கம் நடைபெற்றது.

சமூகநீதியின் இன்றியமையாமை குறித்தும், சமூகநீதிக்கு எதிரான ஒன்றிய அரசின் வருந்தத்தக்க நடவடிக்கைகள் குறித்தும், சமூகநீதி சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியம் குறித்தும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பங்கு கொண்டு சமூகநீதிக் கருத்துக்களைப் போர் முரசாகக் கொட்டினர்.

குறிப்பாக தமிழ்நாடு தி.மு.க. அரசின் முதல் அமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களின் அரும்பெரும் முயற்சியை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தனர். அடுத்து சமூகநீதிப் பிரச்சினையில் ஒருங் கிணைந்து எதிர்காலத்தில் செயல்படுவோம் என்றும் உறுதி யளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாகப் பங்கேற்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி  அவர்கள் தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை.

நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது தலைமை உரையில் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குறிப்பிட்டதை எடுத்துக் காட்டித் தனது உரையைத் தொடங்கினார்.

"திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டது போல திராவிட இயக்கம் பாராட்டை எதிர்பார்த்து நடைபெறுகின்ற இயக்கமல்ல. சமூகநீதியைக் கடமையாகக் கருதி, செயல்படும் இயக்கமாகும்" என்று குறிப்பிட்டது சிறப்பானது.

"சமூகநீதித் திசையில் நாம் பெற வேண்டிய உரிமைகள் ஏராளம் உள்ளன. இந்நிகழ்வு நல்ல தொடக்கம். கூடிய விரைவில் சமூகநீதிக்கான நாடு தழுவிய அளவில் இயக்கத்தினைக் கட்டமைப்போம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் திராவிட இயக்கக் கொள்கை சமூக நீதிக் களத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காண விரும்பியவாறு - வடக்கு, தெற்கு, கிழக்கு,மேற்கு என அனைத்துப் பகுதியிலிருந்தும் சமூகநீதிக்கான உரிமை மீட்புப் பணியினை ஒருங்கிணைத்து இயக்கமாக கட்டமைப்போம்! நாம் அடிக்கடி சந்திக்க வேண்டும். அதுவே நாம் விரும்புகிற சமூகநீதியினை வென்றெடுக்க வழி வகுக்கும். நாடு தழுவிய அளவில் ஒன்றிணைவோம். நன்றி."

முத்தாய்ப்பாக முக்கிய கருத்தினைப் பதிவு செய்துள்ளார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதல் அமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.

இந்தக் காணொலி நிகழ்ச்சியில் வெளிப்பட்ட  பல மாநிலங்களின் தலைவர்களின் உரைகள், ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் முன்னெடுப்புக் கருத்துகள், முதல் அமைச்சரின் அறிவிப்புகள் - சமூகநீதி வரலாற்றில் தொடர்ந்து அலை ஓசையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.

திராவிடத் தத்துவக் கொடி இந்திய ஒன்றியம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. தமிழர் தலைவர் மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தொலைநோக்கோடு கூறிய "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" பட்டத்தின் அருமை இப்பொழுது புரிந்திருக்குமே!

இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:20 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: இணையம், காணொளி, சமூக நீதி

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இன்று உலக சமூக நீதி நாள்- சமூகநீதியின் முன்னோடிகளான மருத்துவர்கள்

 

February 20, 2021 • Viduthalai

சமூக நீதிக்காக தமிழகத்தில் அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் தளகர்த்தாக்களில் இருவர் மருத்துவர். சமூக நீதிக்காக போராடுவதில் மருத்துவர்கள் எப்போதும் முன்னணியில்  களமாற்றி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த நாளில் பதிவிடுவதை பெருமையாக கருதுகிறேன்.

உலகின் சமூகப் புரட்சிக்கு வித்திட்டதில் மருத் துவ இனத்திற்கு வரலாற்றில் பெரும்பங்கு எப்போதும் உண்டு.உலகின் மிகப்பெரும் புரட்சியாளன் சேகு வேரா ஒரு மருத்துவர் என்பது நாமறிந்ததே.

இந்தியாவில் எப்போதும் ஓர் தனித்துவமிக்க மாநிலமாக ,ஏன் மற்ற மாநிலங்களுக்கு மாநில சுயாட் சியை,சுயமரியாதையை, சமூக நீதியை, மொழியுரி மையை,கற்றுக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் எப்போதும் திகழ்ந்திருக்கிறது.

அயோத்திதாச பண்டிதர் ஆரம்பித்து வைத்த இந்த வரலாற்றை நீதிக் கட்சி நிலைநாட்டியது.

நீதிக்கட்சியை உருவாக்கிய மூவரில் இருவர் மருத்துவர்களே.

மருத்துவர் டி..எம்.நாயர் (1868-1919)

மருத்துவர் சி.நடேசனார் (1875-1937)

மருத்துவர் டி.எம்.நாயர்:

பெரியாராலேயே 'திராவிட லெனின்' என்று அழைக்கப்பட்டவர். பிரிட்டன் பிரான்சில் மருத்துவப் படிப்புகளை முடித்த இவர் நீதிக்கட்சியை தொடங்கிய வர்களில் ஒருவர்...  'ஜஸ்டிஸ்' பத்திரிகையின் ஆசிரி யராக இருந்தவர்.

மருத்துவர் சி.நடேசனார்:

பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்டபோது 'திராவிட இல்லம்' விடு தியை தொடங்கினார். சென்னை அய்க்கிய சங்கம், சென்னை 'பப்ளிக் சர்விஸ் கமிஷன்' அமைப்பதில் இவரின் பங்கு அளப்பரியது.

தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், ஆதி திராவிட நலனுக்காக மிகத் தீவிரமாக போராடினார்.

தமிழகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதில் நீதிக்கட்சியின் பங்கு அளப் பரியது. அதன் தள கர்த்தாக்கள் இருவர் மருத்துவர் என்பது மருத்துவ உலகிற்கு வரலாற்றுப் பெருமை.

மருத்துவ உலகம் மருத்ததுவம்  தாண்டி சமுகத் திற்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டிய வரலாற்று கடமையை சேகுவேராக்களும்,  நடேசனார்களும், நாயர்களும், முத்துலெட்சுமிகளும், ரவீந்திரநாத்து களும் நமக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!

ஸ்டெதாஸ்கோப்புகள் சமூக இதயத் துடிப்பு களையும் கேட்கட்டும்!

நம்பிக்கையோடு

மருத்துவர் ச.தட்சிணாமூர்த்தி,

தலைவர் - திசைகள் அமைப்பு,

அறந்தாங்கி, 9159969415

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:25 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சமூக நீதி, முன்னோடி

செவ்வாய், 12 ஜனவரி, 2021

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)

டெல்லியில் சந்திரஜித் யாதவ் தலைமையில் நடந்த சமூகநீதி பேரணி (6.12.,1985)


இந்தியாவின் தலைநகரில் மண்டல்குழு அறிக்கையை அமலாக்கக் கோரி ஒடுக்கப்பட்டோர் உரிமை மாநாடும், சமூகநீதி கோரி எழுச்சிப் பேரணியும் 06.12.1985 அன்று டெல்லியில் பெரிய அளவில் நடைபெற்றன. டாக்டர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான அன்று டில்லியில் பல்லாயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட் சமுதாய மக்களுக்கு சமூகநீதி கேட்டு மாபெரும் பேரணி நடைபெற்றது.

இடஒதுக்கீடு செயல் கமிட்டித் தலைவர் சந்திரஜித் யாதவ் உள்பட பல தாழ்த்தப்பட், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் முன்னணித் தலைவர்கள இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தேசிய ஒன்றிணைந்த தூதுக் குழுவினர் உடன் சென்று குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர். பேரணியின் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உள்ளபடி விளக்கி குடியரசுத் தலைவர் அரசியல் சட்டப்படி உரிமைகளை செயல்படுத்த மத்திய அரசுக்கு ஆணை இடவேண்டும் என்று நாங்கள் குடியரசுத் தலைவரிடம் வற்புறுத்தினோம்.

தூதுக்குழுவினரின் விளக்கங்களை நல்லவண்ணம் கேட்ட குடியரசுத் தலைவர் இப்பிரச்சினையில் கட்சி சார்பின்றி ஒருமித்து நின்று இதனை வற்புறுத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

நான், குடியரசுத் தலைவர் அவர்களை தனிமையில் சந்தித்து டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றிய ஒரு தொகுப்பு நூலினை வழங்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்கள்.


அவர், இடஒதுக்கீட்டுத் துறையில் தமிழ்நாடு போல மற்ற மாநிலங்களும் முன்னேற வேண்டும். இதில் தமிழ்நாடுதான் முன்னேறிய மாநிலம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

மறுநாள் 7.12.1985 அன்று டெல்லி விட்டல்பாய் மண்டபத்தில் பல  மாநில முக்கிய பிரதிநிதிகளைக் கொண்ட சமூகநீதிப் பணியாளர் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று உரையாற்றினேன்.


- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி,

உண்மை இதழ்,1-15.2.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 8:57 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சமூக நீதி, தில்லி, பேரணி

வியாழன், 19 மார்ச், 2020

தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும் - மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் சமூகநீதி உரை

அ.இ. ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்

மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன்  சமூகநீதி உரை

புதுடில்லி, மார்ச் 15 தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும்; அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக் கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.

13.3.2020 அன்று மக்களவையில் நடைபெற்ற சமூக நலத்துறை மான்யம் தொடர்பான விவாதத்தில்,  நாடாளு மன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் (திமுக) தெரிவித்த சிறப்பான கருத்துகள்

1. தந்தை பெரியாரின் சிந்தனை களையும், கருத்துகளையும் பறைசாற்ற மத்திய அரசு தந்தை பெரியார் பெயரில் அறக்கட்டளை நிறுவிட வேண்டும்.

2. ஏனைய சீர்திருத்தக்காரர்கள் சமூக நீதியை வென்றிட பல ஆண்டுகள் போராடிய நிலையில், இருபது ஆண்டு களில் சமூக நீதியை நிலை நாட்டி வெற்றி கண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

3. இந்தியாவில் 1969-ஆம் ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சகம் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

4. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததோடு, அருந்ததியினர்க்கும்  உள் ஒதுக்கீடும் அளித்தவர் டாக்டர் கலைஞர்.

5. கிரிமிலேயர் என்பதை ‘கிருமி'லே யர் என அறிவித்தவர் டாக்டர்கலைஞர்.

6. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட் டோர் குழு 9.3.2019 அன்று அளித்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணித் துள்ளது.

7. பிற்படுத்தப்பட்டோர் தொடர் பான கிரிமிலேயர் குறித்து மத்திய அரசு நியமித்த மூன்று நபர் நிபுணர் குழு தேவையற்றது. அக்குழுவில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையம் இருக்கை யில், இக்குழு தேவையற்றது.

8. சம்பள வருமானத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிரிமிலேயர் என அறிவிப்பது நியாயமற்றது; தகுதி யுள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீடு பெறாமல்  நீக்கும் முயற்சி யாகும்.

9. மூன்று நபர் நிபுணர் குழுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை கிரிமிலேயர் குறித்த பிரச்சி னையை ஆராய்ந்திட அறிவுறுத்த வேண்டும்.

10. மருத்துவ படிப்பில் - மருத்துவர் மற்றும் முதுகலைப்படிப்பு - அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட் டுள்ளது. இது குறித்து, மத்திய நல் வாழ்வுத்துறை கவனத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில் உரிய பதில் அளித்திட வேண்டும்.

இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமி ழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.

- விடுதலை நாளேடு 15 3 20

இடுகையிட்டது parthasarathy r நேரம் 5:02 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சமூக நீதி, பெரியார், மக்களவை

புதன், 23 ஜனவரி, 2019

பெரியார் திடலில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் தலைவர்கள் தெரிவித்த தெள்ளிய கருத்துகள்

பிப்ரவரி 5 இல் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம்


திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அறிவிப்பு




உயர்ஜாதியினரில் ஏழையாக உள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் சட்டத் திருத்தம் (103) மக்களவையில் 8.1.2019 அன்றும், மாநிலங் களவையில் 9.1.2019 அன்றும் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டு விட்டன.

இதுகுறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று (19.1.2019) சனிக்கிழமை முற்பகல் சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் தலை வர்கள், பிரதிநிதிகள் பங்குகொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி அரிபரந்தாமன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கே.எம்.நிஜாமுதின், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.அய். கட்சி சார்பில் அச.உமர்பாரூக், இந்திய சமூகநீதி இயக்கத் தலைவர் எஸ்றா.சற்குணம், விவசாய தொழிலாளர் கட்சியின் தலைவர் குமார், பொது பள்ளிகளுக்கான மேடை என்ற அமைப்பின் சார்பில் பிரின்சு கஜேந்திர பாபு, சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் சிறந்த கருத்துகளை எடுத்து வைத்தனர்.

இவர்கள் தெரிவித்த கருத்துக்களின் திரட்சி பின் வருமாறு:

உயர்ஜாதிக்காரர்களில் ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு என்னும் சட்டம் அவசர அவசரமாக முன்னறிவிப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒரு சட்டத்தை நிறைவேற்றுமுன் இரண்டு நாள் களுக்குமுன் உறுப்பினர்களுக்கு மசோதாவின் நகல் அளிக்கப்படவேண்டும் என்பது விதிமுறை. அது இந்தச் சட்டம் நிறைவேற்றத்தில் பின்பற்றப்படவில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 340 ஆம் பிரிவில் பயன்படுத்தப்பட்டுள்ள சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற அதே வரை யறைச் சொற்கள்தான் வேலை வாய்ப்புக்கு வழி செய்யும் அரசமைப்புச் சட்டம் 16(4) - கல்வி வாய்ப்புக்கு வகை செய்யும் 15(4) - இவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசமைப்புச் சட்டம் இட ஒதுக்கீட்டுக்காக முதன் முதலில் திருத்தப்பட்டபோது, அது குறித்த விவா தங்கள் நாடாளுமன்றத்தில் நடந்த நேரத்தில் பொருளாதார ரீதியாகவும் (Economically) என்ற சொல்லும் பயன் படுத்தப்பட வேண்டும் என்ற திருத்தத்தை ஒரு சிலர் கொண்டு வந்தபோது, வாக்களிப்புக்கு விடப்பட்டது. அதற்கு ஆதரவாக வெறும் அய்ந்தே வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன.

பி.வி.நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளா தார அடிப்படையில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மண்டல் குழு தொடர்பாக இந்த வழக்கில் (இந்திரா சகானி வழக்கில்) உச்சநீதிமன்றம் அது செல்லுபடியற்றது என்று தீர்ப்பு வழங்கி விட்டது (1992).

குஜராத், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கருநாடகம், ஜம்மு காஷ்மீர், அரியானா போன்ற மாநிலங்களில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்து சட்டம் கொண்டு வந்தபோது, அவற்றை சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்கள் செல்லவே செல்லாது என்று ஒருமுகமாகத் தீர்ப்பு அளித்துவிட்டன.

இந்த நிலையில், இப்பொழுது மத்தியில் இருக்கும் பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு (என்.டி.ஏ.) உயர்ஜாதிகளில் ஏழையாக உள்ளவர் களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டப்படியும், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்புகளின்படியும் அறவே செல்லாது என்று திட்டவட்டமாகத் தெரிந்துவிட்டது.

அப்படி தெரிந்திருந்தும் என்.டி.ஏ. அரசு இப்படியொரு சட்டத்தை ஏன் கொண்டு வந்தது என்பது முக்கியமான கேள்வியாகும்.

அண்மையில் 5 மாநிலங்களில் நடை பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் பி.ஜே.பி.க்கு மரண அடி விழுந்துவிட்டது. இதற்கான காரணம் என்னவென்று ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி.க்கு ஓர் அறிக்கையை கொடுத்துள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது - அதனை எதிர்த்து நாடெங்கும் கண்டனங்கள் வெடித் தன. நாடாளுமன்றத்தில் புயல் கிளம்பியது. அதற்குக் கட்டுப்பட்டு மத்திய அரசு நடந்து கொண்டதால், வட மாநிலங்களில் உயர் ஜாதியினர் மத்தியில் பி.ஜே.பி.மீது கடும் அதிருப்தியும், வெறுப்பும் ஏற்பட்டுவிட்டன.

உயர்ஜாதிக்காரர்கள் எப்பொழுதும் பி.ஜே.பி.யின் பின்பலமாக இருந்து வந் திருக்கின்றனர். அந்த உறுதியான வாக்கு வங்கியை இழந்ததுதான் வடமாநில சட்ட மன்றத் தேர்தலில் பி.ஜே.பி. தோல்விக்குக் காரணம் என்று ஆர்.எஸ்.எஸ். தனது அறிக்கையில் கூறியிருந்தது.

இந்த நிலையில்தான் உயர்ஜாதியின ரைத் திருப்திப்படுத்திட இத்தகு ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது மத்திய பி.ஜே.பி. அரசு.

1951 இல் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது பொருளாதார அளவுகோல் சேர்க்கப்படவில்லை. அப் பொழுது ஏழைகளே இல்லையா? இந்த 58 ஆண்டுகளில் அந்த ஏழைகள் எல்லாம் ஏழைகளாகத்தான் இருக்கிறார்களா?

உலகின் பல நாடுகளிலும் இட ஒதுக்கீடு இருக்கத்தான் செய்கிறது. அங்கெல்லாம் கூட பொருளாதார அளவுகோல் கிடை யவே கிடையாது. அப்படி இருக்கும்பொழுது இந்தியாவில் மட்டும் எங்கிருந்து வந்தது - குதித்தது?

மேல்ஜாதி ஏழைபற்றி பேசுகிறார்களே, அந்த மேல்ஜாதி ஏழைகளில் எவர் கட்டட வேலைக்கு வருகின்றனர்? ரிக்ஷா இழுக் கின்றனர்? வயல் வேலைக்கு வருகின்றனர்?

எல்லோருக்கும் இட ஒதுக்கீடு என்று கொண்டு வந்துவிட்டால், இப்பொழுதுள்ள இட ஒதுக்கீடு என்பது காணாமல் போய் விடும் - இதனை பொருளாதார நோபல் அறிஞர் அமர்த்தியா சென் போன்றவர்கள் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.

இந்தப் பொருளாதார அளவுகோல் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே முற்றிலும் தகர்க்கக் கூடியது.

ஜாதியின் காரணமாகவே கல்வி மறுக் கப்பட்டது - ஜாதியின் காரணமாகவே சமூக ரீதியாகக் கீழானவர்களாக ஆக்கப்பட்ட நிலையில், அந்த அடிப்படையில் தானே உரிமை மறுக்கப்பட்ட, வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களை உயர்த்திட வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து அதற் கான அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகே பிற் படுத்தப்பட்டோருக்கு மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது முதல் கட்டமாக வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடும், அதற் குப் பிறகு பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்வியில் இட ஒதுக்கீடு காங்கிரசு ஆட்சிக் காலத்திலும் கொண்டு வரப்பட்டது.

27 சதவிகித இட ஒதுக்கீடு என்று பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப் பட்டதாக சொல்லப்பட்டாலும் இதுவரை 12 சதவிகித இடங்களைக்கூட அவர்கள் பெறாத நிலையில், கிரீமிலேயர் என்று கூறி பிற்படுத்தப்பட்டவர்களை வடிகட்டுவதும், உயர்ஜாதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி, அரசமைப்புச் சட்டத்தில் இல் லாத - நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட பொருளாதார அளவுகோலைத் திணிப்பதும் எந்த வகையில் நியாயம்?

உயர்ஜாதியில் ஏழைகளாக இருக்கக் கூடியவர்கள் கல்வியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கி இருக்கின்றனரா? அதற்கான புள்ளி விவரங்கள் கணக்கெடுப்பில் இருக் கின்றனவா? இவை குறித்து விளக்கம் அளிக்காத நிலையில், காரணங்களைக் கூறாத தன்மையில், அவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?

பி.ஜே.பி. என்பது இந்த நாட்டின் பெரும்பாலான மக்களான தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், இதர பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர்பற்றிக் கவலைப் படாத கட்சியே. அவர்களின் கவனமும், கவலையும், அக்கறையும் எல்லாம் உயர் ஜாதியினர் பக்கமே - அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்கள் பக்கமே!

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் குழுப் பரிந்துரைகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளித்தபோது, அதனை எதிர்த்த இவர்கள், இப்போது உயர்ஜாதி யினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கத் துடிப்பது ஏன்?

நியாயமாக மண்டல் குழுப் பரிந்து ரையை செயல்படுத்தியபோது வடநாட்டில் உயர்ஜாதியினர், பி.ஜே.பி., சங் பரிவார் கூட்டத்தினர் கடுமையாக எதிர்த்ததுபோல, உயர்ஜாதியினருக்காக இட ஒதுக்கீடு கொண்டு வந்துள்ள இந்தக் காலகட்டத்தில், பெரும்பான்மை மக்கள் மத்தியில் மிகப் பெரிய அளவுக்குப் போராட்டம் வெடித்துக் கிளம்பியிருக்கவேண்டும்.

தமிழ்நாடு என்பது தந்தை பெரியாரின் மண் - சமூகநீதி மண் என்கிற காரணத்தால், இங்கே எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது.

இந்த உணர்வு தமிழ்நாட்டிலுள்ள குக் கிராமங்கள்வரை கொண்டு செல்லப்பட வேண்டும்; இந்தியா முழுமையும் கொண்டு செல்ல முயற்சிகளை மேற்கொள்ளவேண் டும் என்று பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து களையும், ஆலோசனைகளையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

வரும் 5.2.2019 அன்று திராவிடர் கழகத் தின் சார்பிலும், Lawyer's Forum சார்பி லும் டில்லியில் சமூகநீதி கருத்தரங்கம் நடை பெறும் என்றும், அதில் இந்திய அளவில் உள்ள சமூகநீதி அறிஞர்கள், அரசியல், சமு தாய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் திராவிடர் கழகத் தலைவர் அறிவித்தார்.

-  விடுதலை நாளேடு, 20.1.19

இடுகையிட்டது parthasarathy r நேரம் 7:02 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: சமூக நீதி, மாநாடு
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (2)
    • ▼  ஜூன் (1)
      • முற்பட்டோர் இட ஒதுக்கீடு - விசாரணை ஆணையம் அமைக்க க...
    • ►  மே (1)
  • ►  2025 (7)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (29)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 50%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்ற பணி
  • உச்சநீதிமன்ற பணி நியமனம்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள் இடஒதுக்கீடு
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கரு நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநலத்துறை
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெருக்கள் சாலைகள்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதித்துறை
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வில்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொது பெயர்
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மாற்றுத்திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முறைகேடு
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிப் பெயர்
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
  • EWS
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.