பக்கங்கள்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிடம் மனு அளிப்பு



சென்னை ராயப்பேட்டை இந்திய அதிகாரிகள்  சங்கம் அரங்கில் , நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும்  பிற்படுத்தப்பட்டோர் சார்பில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்  வி.அனுமந்தராவ்,  மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம்   கோரிக்கை  மனுக்களை அளித்தனர்.  உடன் அகில இந்திய  பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் கோ.கருணாநி

- விடுதலை நாளேடு, 25 .8 .19

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

பிற்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன தகுதி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி, ஆக. 7- பிற்படுத்தப் பட்டோர் தேசிய ஆணையத் திற்கு அரசியல் சாசன தகுதி அளிக்கும் மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று நிறைவேறி யது. பிற்படுத்தப்பட்டோருக் கான தேசிய ஆணையத்திற்கு அரசியல் சாசன தகுதி அளிக்

கும் மசோதா மக்களவையில் கடந்தாண்டு ஏப்ரல் 10ஆம் தேதி நிறைவேறியது. மாநிலங் களவையில் எதிர்க்கட்சிகள் சில திருத்தங்கள் கூறியதால் அது மீண்டும் மக்களவை விவா தத்துக்கு கடந்த 2ஆம் தேதி வந்தது. எதிர்க்கட்சிகள் கூறிய திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு, புதிய திருத்தங்கள் சேர்க்கப் பட்டன. அதன்பின் மூன்றில் இரு பங்கு ஆதரவுடன் மக்கள வையில் மசோதா  நிறைவேற் றப்பட்டது.

இந்த மசோதா மீது மாநி லங்களவையில் நேற்று விவா தம் நடந்தது. விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ எம்பி பூபேந்தர் யாதவ், ஏற் கெனவே இந்த மசேதா மாநி லங்களவைக்கு வந்தது. சமூக நீதியை அரசியல் தோற்கடித் ததால், இந்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை என்றார். காங்கிரசு எம்.பி சாயா வர்மா பசுகையில், நாடா ளுமன்றங்களிலும், சட்டப்பேர வைகளிலும் ஓபிசி இடஒதுக் கீட்டை கொண்டு வர வேண் டும். உச்ச வரம்பு உடையவர் களை நீக்கப்பட வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையி லான வேலைகளை அரசு ஊக் குவிக்கும்போது, இந்த இட  ஒதுக்கீட்டை அரசு எப்படி அமல்படுத்தும்? என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன் பேசுகையில், மத் திய பல்கலைக்கழகங்களில் சமீபத்தில் நியமனம் செய்யப் பட்ட 100 பேராசிரியர்களில் 7 பேர் மட்டுமே எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினர். அதனால் வெறும் சட்டங்களால் மட்டும் எதுவும் செய்ய முடி யாது. அடித்தட்டு மக்களை முன்னேற்ற நடவடிக்கை தேவை என்றார். காங்கிரசு எம்.பி அரிபிரசாத் பேசுகையில், ஆணையத்தின் தலைவர் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதி மன்றத்தின் முன்னாள் அல்லது தற்போதைய நீதிபதிகளை நிய மிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் கெட்ட வாய்ப்பாக உச்ச நீதிமன்றத்தில் ஓபிசி அல்லது எஸ்.சி நீதிபதிகள் இல்லாத நிலையே உள்ளது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி டி.ராஜா பேசுகையில், ஒவ் வொரு மாநிலத்திலும் பிற் படுத்தப்பட்டோருக்கு தனியான ஆணையம் உள்ளது. தேசிய ஆணையத்தால், மாநில அரசு களின் உரிமை பாதிப்பதுபோல் உள்ளது என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய சமூக நீதித்துறை அமைச்சர் கெலாட், பிற்படுத்தப்பட்ட மக்கள் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடவும், அவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவும் இந்த மசோதா உதவும்.  தேசிய ஆணையத்துக்கும், மாநில அர சுகளின் பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களுக்கு எந்த தொடர்பும் இருக்காது.

தேசிய ஆணையத்தின் பரிந் துரை மத்திய அரசு சம்பந்தப் பட்டதாக இருக்கும். ஓபிசி ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கோரிக்கை கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இருந்து கேட்கப்படுகிறது. இது தொடர்பாக நாடாளுமன் றத்தில் பல முறை விவாதங்கள் நடந்துள்ளன. இதை உறுப்பி னர்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றார். இதை யடுத்து மக்களவையில் செய்த திருத்தங்களுடன் மசோதா ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓட் டெடுப்பில் மூன்றில் இரு பங்கு  எம்.பி.க்களின் ஆதரவு டன் இந்த மசோதா நாடாளு மன்றத்தில் நேற்று நிறைவேறி யது.

- விடுதலை நாளேடு, 7.8.18

கழகக் கோரிக்கை வென்றது! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு சட்ட அதிகாரம் மக்களவையில் மசோதா நிறைவேற்றம்

புதுடில்லி, ஆக.3 தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு சட்ட அதிகாரம் வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் வியாழக்கிழமை  (2.8.2018) ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அரசமைப்பு (123-ஆவது திருத்தம்) மசோதா 2017' மீதான வாக்கெடுப்பின்போது மக்களவை யில் இருந்த 406 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். அந்த மசோதா மீதான விவாதத்தில் 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான தேசிய ஆணையங் களுக்கு நிகராக, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும் அரசமைப்பு சட்ட அதி காரம்  அளிக்கும் வகையிலான இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவைக்கு அனுப்பப்பட்டது.

அங்கு எதிர்க்கட்சிகள் வழங்கிய சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டு அந்த ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட மசோதா, திருத்தங்கள் மீதான ஒப்புதலுக்காக மீண்டும் மக்களவைக்கு அனுப்பப்பட்டது. அந்தத் திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு தற் போது மீண்டும் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக, மசோதா மீதான விவாதத்தின் போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கையை அறிய கணக்கெடுப்பு நடத்த சில உறுப்பினர்களும், 2014-ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட சமூக பொருளாதார கணக் கெடுப்பை பொதுவில் வெளியிட வேறு சில உறுப்பினர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதனிடையே, மசோதாவின் மீது பிஜு ஜனதா தள உறுப்பினர் பரத்ருஹரி மகதாப் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட் டன. திருத்தங்களுக்கு ஆதரவாக 84, எதிராக 302 வாக்குகள் பதிவாகின.

மசோதா மீதான விவாதத்துக்குப் பிறகு, அமைச்சர் தாவர்சந்த் கெலாட் அதற்குப் பதிலளித்துப் பேசியதாவது: சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் மற்றும் பிற்படுத் தப்பட்டோரின் மேம்பாட்டுக்காக பணியாற்ற அரசு உறுதிபூண்டுள்ளது. அவர்களுக்கான உரிமையை மேலும் உறுதி செய்யும் வகை யில் எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை மேலும் பலப்படுத்த அதில் திருத்தம் கொண்டுவர அமைச்சரவை சமீபத்தில் முடிவு செய்தது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில், உள் பிரிவுகளை ஆய்வு செய்யும் வகையில், நீதிபதி ரோகிணி தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று தாவர்சந்த் கெலாட் கூறினார்.

முன்னதாக, அவையில் இருந்த பிரதமர் நரேந்திர மோடி, மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதற்காக சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

 - விடுதலை நாளேடு 3. 8 .18