பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!
இதனை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு எனும் சதி - எச்சரிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் சமூகநீதிக்கான அறிக்கை 

தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

நடந்து முடிந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் அரும் சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த நிலையை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு என்ற சதித் திட்டத்தை திணிக்க உயர் ஜாதி வட்டாரம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் கச்சைக் கட்டி நிற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2016-2017ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2853 இடங்களுக்கு 25,379 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறைந்தது 197.75 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 884 இடங்களைப்  பெறுகின்றனர் .

ஒவ்வொரு பிரிவிலும் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தரவரிசைப் பட்டியலில்  அவர்களது மதிப்பெண்ணும், தரவரிசை எண்ணும் வருமாறு:

நம் மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் உண்டு அல்லது பரப்பப்படுகிறது; தாழ்த்தப்பட்டோர் 35% மதிப்பெண் பெற்றாலே இடம் கிடைத்து விடும் என்பதுதான் அது.  உயர் வகுப்பினர் என்று எண்ணிக் கொள்பவர்கள் 200/200  வாங்கினால் மட்டுமே அனுமதி என்ற தவறான கருத்தும் பரப்பப்படுகிறது. அது தவறானது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.
புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன?

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? திராவிட இயக்க ஆட்சியில் 69 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் செம்மையாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய "அறுவடை" நிகழ்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்திற்கான வெற்றி!

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியல்லவா இது!

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது நீதிக்கட்சி அல்லவா! தந்தை பெரியார் அவர்களின் முயற்சி அல்லவா!
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படைக் காரணமாக கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர இருபால் மாணவர்களும் இந்தச் சாதனையின் வெற்றிச் சிகரத்தை எட்டியுள்ளனர் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

வெற்றியை வீழ்த்த சதி!

இந்த வெற்றியைத் தட்டிப் பறிக்கத்தான் - ஆண்டாண்டு காலமாக கல்விஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தச் சாதனையை ஒழித்துக் கட்டத்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு எனும் கொடுவாளை கொல்லைப்புற வழியில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். உயர் ஜாதி வட்டாரமும், பா.ஜ.க., சங்பரிவார்களும் மும்முரம் காட்டுகின்றன; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின், தலைவர்கள் சமூகநீதியாளர்கள் ஒன்று திரண்டு,  நாம் போராடிப் போராடிப் பெற்ற இந்த நல்வாய்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் இதனை ஒழித்துக் கட்ட துடித்துக் கொண்டு நிற்கும் முயற்சிகளைப் புறந்தள்ளவும்,  நுழைவுத் தேர்வை உள்ளே நுழைய விடாமல் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவுக்கே வழிகாட்டுவோம்!


தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு நிலையை உருவாக்கி, இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும் வழி காட்டுவோம்! வழி காட்டுவோம்!!

வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
-விடுதலை,18.6.16

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள் சேர்ப்பு


புதுடில்லி, டிச.9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிதாக 28 ஜாதிகளை சேர்த்து  திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) பரிந்துரை செய்திருந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை யில் குறிப்பிடப்பட்ட 28 ஜாதிகளில் 15 புதிய ஜாதிகளை மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், பீகாரின் கதேரி/இடாபரோஷ், ஜார்கண்ட்டின் ஜோரா, காஷ்மீரின் லபனா ஆகிய 3 ஜாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஜாதிகள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளின் உட்பிரிவுகளாகும். மீதியுள்ள 3 ஜாதிகள் திருத்தத்தின்மூலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போதுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று பலனடைவார்கள். அத்துடன் மத்திய அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.
-விடுதலை,9.12.16

செவ்வாய், 29 நவம்பர், 2016

தமிழ்நாட்டு மக்களும் வி.பி.சிங்கும் ... சு.குமாரதேவன்.,,,


* எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால்வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.
* பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே "காவிரி நடுவர் மன்றம் " அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.
* ஒரு முறை அவர் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் "யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை" சொன்னார்.
* ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
* 1989ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக M.P. தொகுதிகள் தந்தது
தமிழகமே.
* தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
* மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மத ரீதியான பதட்டத்தைத் தணித்தார்.
* சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
* அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். பாரத ரத்னா என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் Dr.அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த போது தான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
* அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
* கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார்.அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த போது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியான போது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த "Mr.Clean" என்ற பிம்பம் சரிந்தது,
* எந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.
* தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்த போது பிடிவாதமாக மறுத்தார். "நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை"என்றார்.
* ஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதல்ல சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
* தமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும் தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான
"விஸ்வநாத் பிரதாப் சிங் " என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.
* அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு.வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
* வி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் "செயின்ட் கீட்ஸ்" என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர்.ஆவணங்கள்
போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
வி.பி.சிங் அரசியலின் அதிசயம்.
தமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.
வாழ்க வி.பி.சிங் .
-விடுநலை,27.11.16

திங்கள், 28 நவம்பர், 2016

சாரதா சட்டம்

20.07.1930- குடிஅரசிலிருந்து....

சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது.

என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.

இந்தப் பிரேரேணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற் கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.

மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும். 

தந்தை பெரியார் பொன்மொழிகள்

4 இந்தியாவில் ஏழை மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மை யையும் ஒழிக்கச் சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.
-விடுதவை,26.11.16

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பிரேசில் நாட்டில் கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

உலகெங்கும் சமூகநீதிக்கான அங்கீகாரம்!
500 ஆண்டு கால போராட்டத்திற்கான வெற்றி
பிரேசில் நாட்டில் நீதிபதி பதவிகள் உட்பட
கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
ரியோ டி ஜெனிரோ  ஜூன் 11 உலகின் மறு பக்கத்தில் உள்ள பிரேசில் நாடு நீண்ட போராட் டத்திற்குப் பிறகு    சமூக நீதிக்கான சரியான  பாதையை அடைந்துள்ளது. பிரேசிலின் அனைத்துப் பணிகளிலும் 20 விழுக் காடு (ஆஃப்ரோ-_பிரே சிலியன்)கலப்பின பூர்வீக குடிகளுக்காக ஒதுக்கி யுள்ளது.    பிரேசில் நாட்டில் 1600ஆம் ஆண்டில் -ஆப்பிரிக்காவில் இருந்து கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய பெருமளவு கறுப்பின மக்கள் ஸ்பா னிய காலனி ஆதிக்கத்தின ரால் கொண்டு வரப்பட் டனர். ஸ்பானியர்களின் இன அழிப்புக் காரண மாக பிரேசிலின் பூர்வக் குடிகளான செவ்விந்தி யர்கள் 90 விழுக்காடு கொல்லப்பட்டனர். இதனால் (ஆஃப்ரோ-_பிரேசிலியன்) கலப்புக் கறுப்பினம் உருவாகியது. இந்த நிலையில் ஸ்பானியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்த பிரேசிலில் நீண்ட காலமாக ஆஃப்ரோ-_பிரேசிலியன் மக்களுக்கு எந்த ஒரு உரிமையும் வழங்காது அவர்கள் மூன்றாம் தரகுடிமக்கள் போல் நடத்தப்பட்டனர். பிரேசில் பூர்வக்குடியினர் மற்றும் பெரும்பான்மை யான ஆஃப்ரோ-_பிரேசி லியன் மக்களுக்கு இடையே வர்க்கரீதியான பேதங்களை உருவாக்கி, அதன் மூலம் தங்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் வராமல் பார்த்துக்கொண்டது ஸ்பானிய காலனி அரசு.
பிரேசிலில் உள்ள மக்கள் பிரிவு
இந்த நிலையில் இந்த நூற்றாண்டின் தொடக் கத்தில் உலகெங்கும் காலனி ஆதிக்கம் முடி விற்கு வந்தும், தென் ஆப்பிரிக்கா, மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து மறைமுக அடிமை ஆட்சி நடை பெற்று வந்தது. பல்வேறு போராட்டங்களின் மூலம் மக்கள் தங்களது உரிமை களை மீட்டெடுக்கத் துவங்கினர். அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கியமாக நீதித்துறையில் சொற்ப இடமே பதவி வகிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை வழங்க  நடை பெற்ற நீண்ட நெடிய போராட்டம் தற்போது வெற்றியடையத் துவங்கி யுள்ளது.  மொத்தமுள்ள மக்கள் தொகையில் பிரேசில் பூர்வீக குடியினர் 30 விழுக்காடு, ஆஃப்ரோ-பிரேசிலியன் 50 விழுக் காடு - _ ஸ்பானியர்கள் 20 விழுக்காடு என உள் ளனர்.  கலப்பின மக்களுக் கான உரிமைகள் இந்த நூற்றாண்டின் பிற்பகுதி யில் வெடிக்கத் துவங்கின. பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்து வந்த போதும் ஆட்சி அதிகாரத்தை தங்களின் கைகளில் கொண்டுள்ள ஸ்பானியர்கள் தங்களின் நிலையில் சிறிதும் இளக வில்லை. இந்த நிலையில் நீதிமன்றங் களில் கலப் பின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து நடந்தவந்த போராட்டத் தின் காரணமாக கடந்த ஆண்டு பிரேசில் நீதி பதிகள் கவுன்சில் கூடி விவாதித்தது. எடுத்துக் காட்டாக  18,600 நீதி பதிகள் அடங்கிய பிரே சில் நீதித்துறையில் வெறும் 260 எண்ணிக்கையில் கலப்பின நீதிபதிகள் உள்ளனர். இந்த பெரும் சமூக வேறுபாட்டைக் களைய கடந்த ஓராண்டாக
பிரேசில் உச்சநீதிமன்றமும் (சுப்ரீம் ஃபெடரல் கோர்ட்) அதிபர் தில்மா ரூசேஃப் தலைமையில் அமைந்த குழு ஃபெடரல் செனட், சேம்பர் ஆப் டெபுடீஸ் அடங்கிய குழுக்கள் பல் வேறு விவாதங்களையும் கருத்துக் கணிப்புகளையும் நடத்தி, புதிய சட்டத் திருத்ததை உருவாக்கியுள்ளது. இதன் படி கலப்பின ஆஃப்ரோ-_பிரே சிலியன் மக்களுக்காக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.  இந்த புதிய சட்ட திருத்தத்தின் படி பிரேசிலில் உள்ள 26 மாகாண மாநிலங்களில் உறுப்பினர் பதவிகளில் 20 விழுக்காடு ஆஃப்ரோ_-பிரேசிலியன் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலக் கட்டுப்பாட் டில் உள்ள வங்கிகள், அரசு நிறு வனங்கள், அஞ்சல் அலுவலகங்கள், பிரேசில் அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் உள்ள (சென்ட்ரல் பேங்க்) வங்கிகள் போன்றவற்றிலும் கலப்பின மக்களுக்காக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பிரேசிலின் அதி உயர் சக்தி வாய்ந்த நீதித்துறையில் 20 விழுக் காடு இட ஒதுக்கீடு நூற்றாண்டு காலமாக சமூக நீதிக்கான போராட் டத்தில் ஈடுபட்டு வரும் கலப்பினப் பூர்வ குடிகளின் வெற்றியாக கருதப்படுகிறது.
சமூக சமத்துவம்
இது குறித்து பிரேசில் அதிபர் தில்மா ரூசேஃப் கூறியதாவது: இது ஒரு நல்ல துவக்கமாகும் பிரேசிலில் குடிமக்களிடையே சமூக சமத்துவம் உருவாக இந்த இட ஒதுக்கீடு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் சுமார் 80 ஆண்டுகளாக இருந்த வந்த பொரு ளாதார சமூகக் குழப்பங்கள் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்று கூறினார்.    2010-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, பல்கலைக் கழகங்கள், மற்றும் உயர் தொழில் பயிலகங்களில் கலப்பின பூர்வீக மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்க சட்ட திருத்தம் மேற் கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.   முக்கியமாக இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தனியாருக்கும் பொருந்தி வரும், ஆகையால் தனியார் நிறுவனங்களும் இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டு விதியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சமூகநீதிப் போராட்டம் வெற்றிப்படியின் தொடக்க நிலையைத் தொட் டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடு களின் பட்டியலில் உள்ள பிரேசில் நாட்டிலே இப்போது தான் சமூக நீதிக்கு விடிவு பிறந்துள்ளது.  2000 ஆண்டுகளாக மறுக்கப் பட்டு வந்த சமூகநீதிக்காக தந்தை பெரியாரும் அம்பேத்கரும் போராடி நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுத் தந்தை நாம் நன்றியுடன் நினைவு படுத்திப் பார்க்கவேண்டும்.
(தகவல்: டாக்டர் சோம இளங்கோவன், அமெரிக்கா)
-விடுதலை,11.6.15

புதன், 9 நவம்பர், 2016

மனுவாதிகளிடம் மல்லுகட்டிய மெக்காலே

ஒரு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், மெக்காலே கல்வித் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு பார்ப்பனர் தனது அதிபுத்திசாலித்தனமான வாதத்தில் - பானை செய்பவன் மகன் பானை செய்தால் என்ன தவறு என்றும், எல்லா தொழில்களும் தெய்வமே என்றும், குழந்தைத் தொழிலாளர்கள் வீட்டில் செய்யும் தொழிலுக்கு சம்பளம் பெறாததால் அது தொழில் என்றே சொல்லக் கூடாது என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.
சரி, அவர் அப்படித்தான் சொல்வார்! இந்தப் பதிவு அதற்கல்ல. அவர் கடைசியாக மெக்காலே கல்வித் திட்டம் அடிமைகளை உருவாக்கும் ஆங்கில அரசின் ஒரு திட்டம் என்றும், குருவிடம் சென்று எல்லா வித்தைகளையும் பயின்ற குருகுல கல்வி மேலானது என்றும் உளறினார்.
மெக்காலே கல்வித் திட்டம் குறித்து சில தகவல்கள்
மெக்காலே இந்தியக் கல்வி குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை என்று பார்ப்பனீயம் அவிழ்த்துவிட்ட மிகப்பெரிய பொய் இன்றுவரை நிலைத்து நிற்கிறது. அந்தப் பொய்யுரையானது, அவர் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சென்றதாகவும், ஒரு திருடனையோ,
பிச்சைக்காரனையோ எங்கும் காண முடியவில்லை என்றும் இந்த தேசம் அவ்வளவு பண்பாடு நிறைந்ததாகவும், ஆன்மீக வளம் பொருந்தியதாகவும் உள்ளது. எனவே, அதை அடிமைப்படுத்த நாம் அவர்களின் தொன்மையான கல்வி முறையை ஒழித்துவிட்டு ஆங்கில வழிக் கல்வியைப் பயன்படுத்தலாம்.
மெக்காலே மேற்கண்டவாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியதாகக் கூறினார். உண்மை என்னவென்றால் அவர்கள் கூறும் 2-2-1835ஆம் தேதி அவர் இங்கிலாந்தில் இல்லை. இந்தியாவில்தான் இருந்தார். அவர் சொன்னது அவருடைய நாட்குறிப்பில் இருக்கும் என்று தோண்டிப் பார்த்தாலும் எந்தக் குறிப்பும் இல்லை.
உண்மையில் நடந்ததென்ன?
இந்தியாவில் கல்வியை அறிமுகப்படுத்தும் பொறுப்புடன் வந்த ஆங்கிலேயர் மெக்காலே இந்து சனாதன வாதிகளுடன் மூன்றுகட்ட பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அத்தனைக்கும் ஆவணங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் மெக்காலே இந்தியர்கள் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என வாதிடுகிறார்.
ஆனால், சனாதன வாதிகள் அதை மறுத்து கல்வி பார்ப்பனர்களுக்கும் மற்றும் மேல் ஜாதியினருக்கும் மட்டுமே என்று வாதிடுகின்றனர். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு மெக்காலேயின் திட்டப்படி, அனைவருக்கும் கல்வி என்பதை சனாதனவாதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார்.
இரண்டாவது கட்டமாக எத்தகைய கல்வி என்ற பிரச்சினை. மெக்காலே கணக்கும், அறிவியலும் கற்பிக்கப்பட வேண்டுமென்கிறார். சனாதனவாதிகள் வேத, புராண, இதிகாசங்கள்தான் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என வாதிடுகின்றனர்.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப்பின் வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கி ஓட்ட முடியாது என பிடிவாதமாக மெக்காலே சனாதனிகளின் கருத்தினை எதிர்த்து அரசு ஆணை ஒன்றைப் பெற்று வந்து இந்தியாவில் கல்வியைப் புகுத்தினார். பார்ப்பனர்கள் இதை எதிர்த்தும் இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு மனு அனுப்பியும் பயனின்றி போகவே மெக்காலே வெற்றி பெற்றார்.
மூன்றாவதாக பயிற்சிமொழி ஆங்கிலமா, சமஸ்கிருதமா என்ற வாதத்தில் மெக்காலே வென்று ஆங்கிலத்தைப் பயிற்சி மொழி ஆக்கினார். வரலாற்றைச் சற்று திரும்பிப் பார்த்தால் இந்தியாவில் அனைவருக்கும் கல்விக்காக மெக்காலே எவ்வளவு சனாதனிகளிடம் (பார்ப்பனர்களிடம்) போராடியுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
(முக நூலில் : துணைத்தளபதி மார்ஜோஸ், தகவல்: குடந்தை கருணா)
-விடுதலை ஞா.ம.,6.2.16

வியாழன், 3 நவம்பர், 2016

பல்கலைக்கழகங்களில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு


பிற ஏட்டிலிருந்து....

பல்கலைக்கழகங்களில்  பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு

 

பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங் களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ள யுஜிசிக்கு ஜார்க்கண்ட் துணைவேந்தர் நந்தகுமார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு உதவிப் பேராசிரியர்கள் நியமனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் நந்தகுமார் மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யுஜிசியின் அறிவிப்பானது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவதாக உள்ளது. ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவ தற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் விளம்பர அறிவிப்பை வெளியிட தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேசியக் கொள்கையை மாற்றுகின்ற அதிகாரத்தை யுஜிசி பெற்றுள்ளதா? என்று அவருடைய கடிதத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜார்க்கண்ட் துணை வேந்தர் நந்தகுமார் தன்னுடைய கடிதத்தில் குறிப் பிடும்போது, மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணிகள், பதவியிடங்களில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உதவிப் பேராசிரியர்கள் அல்லது கூடுதல் பேராசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள் பதவிகளில் தனித்தனியே ஒதுக்கீடு என்று கிடையாது.

தேசியக் கொள்கையின்படி, காலிப்பணியிடங்களில்  நேரடியாக நியமனங்கள் செய்யப்படல் வேண்டும். காலிப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யுஜிசியின் சார்பில் பணி நியமனம்குறித்து இரண்டு கடிதங்கள் பல் கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 23.3.2016 அன்று ஒரு கடிதமும், 3.6.2016 அன்று மற்றொருகடிதமும்அனுப்பப்பட்டுள்ளது.அக் கடிதங்களில் யுஜிசி குறிப்பிடும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உதவிப் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் அனைத்து நிலை களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, முதல் கட்ட நிலையில்மட்டும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் இதே பிரச்சினையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய முயல்கிறது என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டியிருந்தார். யுஜிசி யின் மூத்த அலுவலர்கள் கூறும்போது, 2007ஆம் ஆண்டு முதல் இதே நிலையைத்தான் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்கள். யுஜிசியின் அறிவிப்பிற்கு துணைவேந்தர் பேராசிரியர் நந்த குமார் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரி வித்துள்ளார்.அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான யுஜிசியின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றும், உடனடியாக இதுகுறித்த வழிகாட்டுதல்களை யுஜிசிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய அரசின் இறுதி முடிவு வரும்வரை பல்கலைக்கழத்தில் கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் துணைவேந்தர் நந்தகுமார், தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

- நன்றி: “தினஇதழ்”, 31.10.2016  தலையங்கம்.
-விடுதலை,2.11.16

செவ்வாய், 1 நவம்பர், 2016

கோயில் பிரவேசம்

20.11.1932 - குடிஅரசிலிருந்து...
நம்மைப் பொறுத்தவரை நாம் கோவில் பிரவேசம் என்பதற்கு அனுகூலமாகத் தான் இருக்கின்றோம். எதற்காக என்றால், உயர்வு தாழ்வு மேல் ஜாதி, கீழ் ஜாதி என்பவற்றை நிலை நிறுத்தவும் மக்களுக்குள் கொள்வினை, கொடுப்பினை, உண்பன, தின்பன ஆகியவை இல்லாமல் பிரித்து வைக்கவும், அவற்றை அனுபவத்தில் நடத்தவும் நிலைநிறுத்தவும், ஏற்பட்ட பல சூழ்ச்சி தாபனங்களில் கோவில் பிரவேசத் தடுப்பும் கோவிலுக்குள் ஏற்படுத்தப்பட்டிருக்குப் பல வித்தியாசங்களும் முக்கியமானவைகளில் ஒன்று என்பதாகத் தான் கருதி இருக்கிறோம்.
ஆதலால் அவற்றை ஒழிக்க கோவில் நுழைவு தடுப்பும் வித்தியாசங்களும் அழிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆனால் அது பக்திக்காக என்றும் கடவுள் தரிசனைக்கா வேவென்றும் சொல்வதையும்  அதன் பேரால் மதம், சாதிரம், புராணம் ஆகியவைகளைப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு மூட நம்பிக்கையை உண்டாக்க முயற்சிப்பதையும் கண்டிக் காமல்  இருப்பதற்கில்லை.
ஒற்றுமை என்னும் விஷயத்திலும் மதம், மத வித்தியாசம் என்பவைகள் உள்ளவரை இரு சமுகத்திற்கு உண்மையான ஒற்றுமை என்பதைக் கண்டு பிடிக்க முடியாது. சுய ராஜ்யம் என்பது கிடைத்து விட்டாலும் உண்மையான ஒற்றுமை என்பது ஏற்பட்டு விடாது.
உதாரணமாக, இன்றைய தினம் துருக்கியும் சுயராஜ்யம் பெற்ற நாடு, கிரீசுதேசமும் சுயராஜ்யம் பெற்ற நாடு. இரு நாடுகளுக்கும் ஏற்பட்ட அபிப்பிராயப் பேதத்தால் கிரீசில் இருந்த இலாமியர்கள் பத்து லட்சக்கணக்காய் துருக்கிக்கு துரத்தப்பட்டு விட்டார்கள்.
துருக்கியிலிருந்து கிறித்தவர்கள் பத்து லட்சக்கணக்காய் கிரீசுக்கு குடியேறி விட்டார்கள். ஆனால், இதற்குக் சமா தானம் அவர்கள் துரத்தப்பட வில்லை.
தானாகவே அவரவர்கள் தேசத்திற்கு ஓடி  விட்டார்கள் என்று சொல்லக் கூடும். எப்படி யிருந்தாலும் அபிப்பிராய பேதமேற்பட்ட காலத்தில் மதம் காரணமாய் சொத்து சுகங்களை விட்டு விட்டு பெண்டு பிள்ளைகளை நாட்டை விட்டு ஓடும் படியாய் ஏற்பட்டு இன்று சாப்பாட்டிற் கில்லாமல் பட்டினியாய் கிடந்து தவிக்க நேரிட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
மற்றும் சில சுயராஜ்ய நாடுகளிலும் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டாஸ்டெண்டு களுக்கும் அபிப்பிராய பேத மேற்பட்டு பல கொடுமைகள் அடைந்து வருகிறார்கள். இவற்றிற் கெல்லாம். அந்நிய ஆட்சி இருந்து கலகங்களையும் அபிப்பிராய பேதங் களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற தென்றே சொல்லி விட முடியாது.
ஆகவே மக்களுக்குள் உண்மையான ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் தீண்டாமை நீங்கி உண்மையான சமத்துவம் ஏற்பட வேண்டுமானால் மதங்கள் ஒழிந்து பொருளாதாரத் துறையில் மக்கள் எல்லோருக்கும் சமத்துவம் இருக்கும் படியான ஏற்பாடுகளுக்கு ஏற்ற காரியங்கள் செய்ய பட்டாலொழிய மற்றெந்த வழியாலும் சாத்தியப் பட கூடியதில்லை என்றே சொல்லுவோம்.
எனவே, அதை விட்டு விட்டு ஒற்றுமை மகாநாடுகளுக்கும் கோவில்  நுழைவு பிரசாரமும் செய்வது மேற்கூறிய படி இந்து மதப் பிரச்சாரமும் சாத்திர புராணப் பிரசாரமும் என்றுதான் சொல்ல வேண்டிருக்கிறது. இம்மாதிரி பிர சாரங்களால் நாட்டிற்கோ, மனித சமுகத்திற்கோ ஒரு நன்மையையும் செய்து விடமுடியாது.
இரு சமூகங்களிலும் மேல் நிலையில் உள்ள அதிகாரம் பதவி பட்டம் செல்வம் ஆகியவற்றில் பற்றுக் கொண்ட சில மக்களைத் திருப்தி செய்யலாம்.
அவர்கள் சிறிது நாளைக்கு பாமர மக்களை ஏமாற்றி அடக்கி வைக்கலாம் இவ்வளவு தானே ஒழிய, சமூக சமத்துவத்தையோ சமுக ஒற்றுமையையோ பொருளாதார சமத்துவத்தையோ நிலை நிறுத்தி விட முடியாது.
-vsodlnr,3.6.16

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

காவல்துறையினர் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்டவர்கள்


திருவண்ணாமலை,அக்.28அர சமைப்புச்சட்டம் வலியுறுத்து கின்றசமத்துவத்தைநடை முறைப்படுத்தும்வகையில் கோயிலுக்குள் தாழ்த்தப்பட் டவர்களை அனுமதிக்கக் கோரி செய்யாறு வட்டம் நமாண்டி கிராமத்தில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள்கிளர்ந் தெழுந்து கோயில் நுழைவுக் கான போராட்டத்தை நடத்தி யுள்ளார்கள்.

நமாண்டிகிராமம்,அரு கமை கிராமமான அரிகரப் பாக்கம் கிராமம் ஆகிய இரண்டுகிராமங்களின்எல் லைப்பகுதியில் அக்கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு களாக உள்ள அக்கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல் வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நமாண்டி கிராமத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர் பி.சுதாகர் மாவட்ட ஆட்சியரிடம்கடந்தஜூலை மாதத்தில் கோயில் நுழைவுக் கான உரிமை கோரியும், கோயிலுக்குள் சென்று வழி படுவதற்கு உதவுமாறும் கோரி இருந்தார்.

 

சமாதானக்கூட்டம்

அவர்கோரிக்கையை அடுத்து, செய்யாறு சார் ஆட் சியர் டி.பிரபுசங்கர் தலை மையில் கிராமப் பிரதிநிதிக ளுடன் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

ஜாதியின்பெயரால்,எவர் ஒருவரின் அடிப்படை உரிமை களையும் யாரும் மறுப்பது கூடாது என்று கூட்டத்தில் தீர்மானம் ஆனது.

1988ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ்உள்ளதுலுக் கானத்தம்மன்கோயில்அந்த கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமானது என்று உரிமை கோரி வந்துள் ளனர்.ஆகவே, அந்தகுறிப் பிட்ட பிரிவினருக்கு உரிமை யான நிலையை மாற்ற முடி யாது  என்று அவர்கள் தரப்பு கூறியதாக அலுவலர்கள் தெரி விக்கின்றனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. ஆகவே, அக்கோயிலுக்குள் சென்று வழிபட விரும்பும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்குவதென அரசுத்துறை அலுவலர்கள் முடிவு செய் தார்கள்.அம்முடிவைஅடுத்து, துலுக்கானத்தம்மன் கோயி லில்சட்டவிரோதமாகபூட்டப் பட்டிருந்தகதவின் பூட்டு உடைக்கப்பட்டது. அதன் பின்னர்காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்துஅறநிலையத்துறை யின்அலுவலர்கள்ஆகியோர்  முன்னிலையில் தாழ்த்தப்பட் டவர்கள்வழிபடுவதற்காகஅக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட் டார்கள்.

 

சுதந்திர உணர்வு பெற்றோம்

என்னுடன் படித்தவர்கள், மற்றவர்கள் வழிபடும்போது, அக்கோயிலுக்குள்சென்றுவழி படுவதற்குநாங்கள்செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரிதும் வேதனைக்குள்ளாகி இருந்தோம் என்று மெக்கானிக் சுதாகர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது,

“கோயில் திருவிழாக் காலங் களில் பல இடங்களிலிருந்தும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தாலும், கோயிலுக்குள் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வந்த நிலை இருந்தது.

25.10.2016 அன்று கோயி லுக்குள்செல்லும்போதுஎங் களின் கண்களில் நீர் பெருக் கெடுத்து ஓடியது. அப்போதுதான் நாங்கள் சுதந்திரம் பெற்றதாக உணர்ந்தோம். அந்த நிலையை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அரசுத்துறை அலு வலர்கள் எங்களுக்கு ஆதரவாக, கோயிலுக்குள் செல்வதற்கு எங்களுக்குபாதுகாப்புஅளித் தார்கள்.அவர்களுக்குஎங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கி றோம்.

ஆனாலும்,26.10.2016பக லிலிருந்துகோயிலைச்சுற்றி யுள்ள பகுதியில் தாழ்த்தப்பட் டவர்கள்கோயிலுக்குள்செல் லக்கூடாது என்கிற கருத்தில் உள்ளவர்கள்பலரும்கூட்டம் கூட்டமாக கூடியிருந்ததால் பதற்றமானநிலைஏற்பட்டது. காவல்துறையினர் அப்பகுதி களில் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம்’’ என்றார்.

 

சார் ஆட்சியர்

சார் ஆட்சியர் பிரபு சங்கர் கூறும்போது,“நமாண்டிகிரா மத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வர்கள்கோயிலுக்குள்செல்வ தற்கான உதவியைக் கோரினார் கள்.ஆரம்பத்திலேயேசமூக நல்லிணக்கத்தைப்பேணிப் பாதுகாப்பதற்காகபிரச்சினையில் சுமுகத்தீர்வுகாணவிரும்பினோம். அதனால்,சமாதானக்கூட்டத்தைக் கூட்டினோம். அரிகரப்பாக்கத்தைச் சேர்ந்த வர்களைஅழைத்து தாழ்த்தப் பட்டவர்களைகோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது ஏன்? என்று பதில் அளிக்கக்கோரினோம். ஆனால், இதுவரையிலும் அவர்கள் அசைந்துகொடுக்க முன்வரவில்லை. ஆகவே, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்கிற அரசமைப்பின் உரிமையை நிறைவேற்றும் வகையில் எங்கள் கட மையை ஆற்றியுள்ளோம். நாங்கள் உரிய ஏற்பாடுகளை செய்யும்வரை தாழ்த்தப்பட்டவர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மிகவும் அமைதியுடன் இருந்தார்கள்’’ என்றார்.

ஏற்கெனவே கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 5ஆம் தேதி கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதால்,சட்டஒழுங்குபிரச்சி னையை தவிர்க்க கோயில் திறக்க வில்லை. இருப்பினும் நமண்டி கிராமத் தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கோயிலை திறக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கோயில் பூட்டப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டது.

மீண்டும் சீல்வைப்பு

கோயில்திறக்கப்பட்டதை எதிர்த்து அரிகரப்பாக்கம் கிராம மக்கள் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களிடம் மாவட்ட காவல்துறை கூடு தல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தைநடத்தினர்.பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாத நிலையில், அரசுத் துறை அதிகாரிகளால் கோயிலுக்கு சீல் வைத்து பூட்ட முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவின்படி அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜா கோயிலை பூட்டி சீல் வைத்தார்.
-விடுதலை,28.10.16

சம்மத வயது கமிட்டி-மதமும் சீர்திருத்தமும்


21-7-1929, குடிஅரசிலிருந்து 
இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும் தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும் வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினுடையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும் குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும் குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்த வரை நமது நாட்டு பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும் பொறுப்பற்றவர் களுமாய் இருக்க வேண்டியவர்களாய் விட்டதால் அவர்கள் இவ்விஷயத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும்படி செய்யாமல் பொறுப் பற்ற தன்மையில் இவ் விஷயங்களில் பொதுஜன அபிப் பிராயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் போல வேடம் போட்டு இதற்காக ஒரு கமிட்டியை நியமித்து அக்கமிட்டியை பொது ஜனங்களை விசாரித்து அறிக்கைச் செய்யும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். அக்கமிட்டியும் மாதக் கணக்காக பல ஆயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து பொதுஜனங்கள் என்பவர்களை விசாரணைச் செய்து ஏகோபித்து ஒரு முடிவுக்கு வந்து கல்யாணம் செய்ய பெண்களுக்கு 14 வயதாக வேண்டு மென்றும், உடல் சேர்க்கை வைத்துக் கொள்ள கலியாணமான பெண்களுக்கு 15 வயதாக வேண்டுமென்றும், கல்யாணமாகாத பெண்கள் விஷயத்தில் உடல்சேர்க்கைக்கு 18 வயதாக வேண்டு மென்றும் அறிக்கைச் செய்திருக்கின்றார்கள். இவ்வறிக்கையில் உடல் சேர்க்கை விஷயமாய் செய்திருக்கும் வயதுக் கிரமமானது கலியாணமான பெண்ணுக்கு ஒருவிதமாகவும், கலியாணமாகாத பெண்ணுக்கு ஒரு விதமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறிது விவாதத்திற்கிடமான தாயிருந்தாலும், கலியாண வயது 14 என்று குறிப்பிட்டி ருப்பதும் அவ்வளவு போதுமானதாக இல்லாததாய் இருந்தாலும், ஒரு அளவுக்கு நாம் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.
முதலாவதாக, கலியாணமான பெண்ணுக்கும் ஆகாத பெண்ணுக்கும் உடல் சேர்க்கை விஷயத்தில் வித்தியாசம் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் கமிட்டி முன் சாட்சியம் கொடுத்ததில் அநேகர் தங்கள் சமுகப் பெண்கள் பக்குவமாய் விட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாதென்றும், அவர் களுக்குக் கலவி உணர்ச்சி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகின்றதென்றும், அவர் களைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமென்றம், ஏதாவது சிறிதள வாவது பேர் கெட்டுவிட்டால் பிறகு அதன் வாழ்க்கை கஷ்டமாகி விடுமென்றும் சொல்லியிருப்பதால் அவர்களின் குறைகளைத் திருப்தி செய்ய வேண்டி கலியாணமாகாத பெண்களை 18 வயதுக்கு முன் யாராவது கூடினால் கூடின ஆண் களுக்குத் தண்டனை விதிப்பதற்காக இம்மாதிரி விதித்திருக் கின்றதாக நாம் கருதுகின்றோம்.
ஆனால் இம்மாதிரி நடவடிக் கைக்குக் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தண்டனை ஒன்றுமில்லை. தவிரவும், பெண்கள் மீது வேறு எவ்வித அபவாதமும் ஏற்படாம லிருக்கவும் இந்த விதி உபயோகப்படலாமென்று கருதியிருக்கக் கூடுமென்றும் நினைக்கின்றோம். தவிர 14-ல் கலியாணம் செய்து கொண்டு 15 வயது வரையில் அதாவது ஒரு வருடம் வரை காத்திருக்க முடியுமா? என்றும், ஏன் கலியாண வயதையே 15-ஆக தீர்மானித்திருக்கக் கூடாதென்றும் சிலர் கேட்கலாம். ஏகோபித்த அபிப் பிராயமாக இந்த அறிக்கை இருக்க வேண்டு மென்பதை உத்தேசித்து ஒரு கட்சியார் இதில் ஒரு வருடம் விட்டு கொடுத்திருக் கின்றார்கள் என்பதாகக் கருதுகின்றோம்.
அதாவது கலியாண வயதை பிரவிடையாவதற்கு முன்னாக வே கலியாணம் செய்யத்தக்கதாய் இருக்கும்படி செய்ய மெஜாரிட்டிகள் விரும்பியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அம்மாதிரி செய்துவிடும் பட்சத்தில் சேர்க்கை வயது இன்னும் குறைந்தாலுங் குறையும். ஆனால் தங்கள் முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒரு ஏகோபித்த அறிக்கை அனுப்ப இடங்கிடைத்தால் தனிக்குறிப்பெழுத வேண்டிய அவசியம் வேண்டி யதில்லை என்பதை உத்தேசித்தே மெஜாரிட்டியாரும் இதற்குச் சம்மதித்திருக்கின்றார்கள் போல் காணப்படுகின்றது. அதாவது நமக்கு முக்கியமானது கலியாண வயதேயொழிய சேர்க்கை வயதல்ல. ஏனெனில் 8 வயதிலும் 10 வயதிலும் கலியாணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டு ஒருவருக் கொருவர் சேரக் கூடாது என்று சட்டம் செய்து ஒருவரை யொருவர் சேராமல் காவல் பார்த்துக் கொண்டிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதும், சாத்தியப்படாதது என்பதும், இயற்கைக்கு விரோதமென்பதுமே நமது அபிப்பிராயம். ஆதலால் நமக்குக் கலியாண வயதே பிரதானம் என்கிறோம்.
அதில் கமிட்டியார் 14 வயது என்று தீர்மானித்தது ஒரு சமயம் சிலர் போதாது என்று கருதினாலும் நாம் அதுவே போதுமென்று சொல்லுவோம், ஏனெனில் கலியாண வயது 10 என்றாலும், 13 என்றாலும் ஒன்றே தான் என்பதுபோல், 14 என்றாலும 18 என்றாலும் ஒன்றுதான் என்பது நமத பிப்பிராயம். எனவே இங்குள்ள முக்கிய விஷயமென்ன வென்றால், பெண்கள் பிரவிடையாகும் முன்புதான் கலியாணம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மதத்திற்கு விரோதம், பாவம், நரகம் சம்பவிக்கும் என்கின்ற பூச்சாண்டிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆதலால் இந்தக் கமிட்டி அறிக்கையில் மதச் சம்பந்தமான நிர்ப்பந்தமும் கட்டுப்பாடும் ஒழிக்கப் பட்டிருப்பது பெருத்த அனுகூலமாகும். பக்குவமான பின் கலியாணம் செய்வதாயிருந்தால் பெண் விஷயத்தில் யாரும் அவசரப்பட்டுக் கொண்டு கலியாணம் செய்துவிட மாட்டார்கள். சௌகரியப்படி எதிர்பார்ப் பார்கள் பெண்களும் தாராளமாய் படிக்கவும், உல கத்தைத் தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்பமேற்படும். பிறகு தகப்பன் சொன்ன புருஷ னைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தமு மிருக்காது. தனக்கும் புருஷனைத் தேர்ந்தெடுக்கத்தக்க யோக் கியதை உண்டாய் விடும். பிறகு நாள் போகப் போக சுயம்வரமும் காதல் மணமும் ஏற்பட இடமேற் பட்டுவிடும். எனவே 14 வயதுக்கு மேற்பட்டுத்தான் கலியாணம் செய்யப்பட வேண்டுமென்று செய்த அறிக்கையைப் பெண்கள் விஷயத்தில் கவலையுள்ளவர் களும், சீர் திருத்தத்தில் கவலையுள்ளவர்களும் வரவேற்பார்கள் என்றே எண்ணு கின்றோம். தவிரவும், இந்த ஒரு விஷயத்தில் மத நிர்ப்பந்தம் நீங்கினால் மற்ற விஷயங்களிலும் மனித சமுகத்தின் இயற்கைக்கும் அறிவிற்கும் விரோதமான காரியங் களிலுமுள்ள மத நிர்ப்பந்தங்கள் விலகவும் சற்று அனுகூல
மாயிருக்குமாதலால் அந்த அளவுக்கு நாம் இதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம்.
-விடுதலை,8.10.16