பக்கங்கள்

புதன், 21 பிப்ரவரி, 2018

தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு - ஒரு பார்வைகி.வீரமணி,  திராவிடர் கழகத் தலைவர்

 


‘சமூகநீதி’ என்பது நமது (இந்திய) அரசமைப்புச் சட்டத்தின் “பீடிகையில்” இடம்பெற்றுள்ள முக்கிய கோட்பாடு ஆகும்.

மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கச் செய்யும் நீதி வழங்கவேண்டும் என்று குறிப்பிட்டிருப்பதில் முதலில் சமூகநீதி, அடுத்துதான் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்று முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ஏன் சமூகநீதி கோரிக்கை ஏற்பட்டது? தேவை என்ன? சமூக அநீதி காலங்காலமாக நிலவி வந்தது. உலகில் எங்குமில்லாத ஜாதி முறை - வர்ணாசிரமத்தால் படிப்பு உயர்ஜாதியினருக்கே; உழைப்பு கீழ்ஜாதியின ருக்கே என்ற மனுநீதிதான் அரசர்கள் காலம்முதல் கடைப்பிடிக்கப்பட்டதாக இருந்தது. இதை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூகநீதி - கல்வி - வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கை முழக்கமாகி, அது 1916 முதல் பழைய சென்னை மாகாணத்தில் இயக்கமாகியது!

அவ்வியக்கத் தலைவர்கள் நீதிக்கட்சி டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றவர்களின் முயற்சியால் அது அரசியல் கட்சியாகி, ஆளும் அரசாகவும் ஆன நிலையில், பல்வேறு காலகட்டங்களில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

அப்போது தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்த தந்தை பெரியார், காங்கிரசு மாநாடுகளில் இதனைத் தீர்மானமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிட செய்த முயற்சி செல்வாக்குள்ள உயர்ஜாதியினரால், 1920 முதல் 1925 வரை தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டது. அதன் காரணமாக, 1925 இல் தந்தை பெரியார் காஞ்சிபுரம் காங்கிரசு மாநாட்டில் கட்சியை விட்டு வெளியேறினார்.

தனியே சமூகநீதியை நிலைநாட்ட 1925 ஆம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடிநாதமாக்கினார்.

நீதிக்கட்சியில் சேராத காலத்திலும்கூட, அதே கொள்கையை வற்புறுத்தி “சென்னை மாகாண சங்கத்தில்” பொறுப்பேற்று வலியுறுத்தியே வந்தார்.

1928 இல் வகுப்பு வாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் அவர்கள்மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார்.

அதன்படி, அரசு ஆணை (எண் 1129, நாள்:15.12.1928) அமலில் அன்றிருந்த சமூகநீதி அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டது.

1950 இல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை ‘சமத்து வத்திற்கு’ எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்ஜாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச் சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951இல் நிறை வேற்றினர்.

அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது.

இதில் சென்னை மாகாணத்தில் அவ்வப்போது வகுப்புவாரி உரிமை ஆணையில் பற்பல மாற்றங்கள் பரிமாண வளர்ச்சியாக உருவெடுத்தன.

எடுத்துக்காட்டாக, ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி ரெட்டியார் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதற்குமுன் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட (ஙிணீநீளீஷ்ணீக்ஷீபீ) என்ற சொல் அவ்வாணையில் இடம் பெற்றது - சட்டத் தேவையை ஒட்டி, அது கல்வி வள்ளல் காமராசர் முதல்வர் ஆன காலத்தில், ‘‘தாழ்த்தப்பட்டவர்’’ இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஆணை செயற்பாட்டிற்கு வந்தது.

1967 இல் அறிஞர் அண்ணா ஆட்சி அமைத்து, பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு - தந்தை பெரியார் வற்புறுத்தலால், போடப்பட்டு, அந்தக் குழு தன் பரிந்துரையை கலைஞர் (மு.கருணாநிதி) அவர்கள் முதல்வராக  இருந்த காலத்தில் அளித்தது. அதனை ஏற்று, கலைஞர் அரசு, அவ்வாணையை, தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோ ருக்கு இருந்த 16 சதவிகிதத்தை 18 ஆக உயர்த்தியது.

பிற்படுத்தப்பட்டோருக்கு 25 சதவிகிதமாக இருந்ததை 31 சதவிகிதமாக உயர்த்தியது.

எஞ்சிய 51 சதவிகிதம் முன்னேறிய வகுப்பினர் உள்பட அனைவரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கானது.

1979 இல் அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் இருந்தால் அவர்கள் பிற்படுத்தப் பட்டவர்களாக இருக்க முடியாது என்ற “வருமான வரம்பு ஆணை”யைப் போட்டார்.

இது அரசமைப்புச் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானது என்று திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  ஜனதாவில் சில தலைவர்கள் குறிப்பாக ரமணிபாய், காங்கிரசில் டி.என்.அனந்தநாயகி, திண்டிவனம் இராமமூர்த்தி, மணிவர்மா போன்றோர் எதிர்த்தனர். அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. 39 இடங்களில் 2 இடங்களில் தான் வெற்றி பெற்றது.

இத்தோல்வி, திராவிடர் கழகத்தின் தலைமையில் நடந்த பிரச்சாரம், கிளர்ச்சி எல்லாம் எம்.ஜி.ஆர். அவர்களை மறுசிந்தனைக்கு உள்ளாக்கியது.

அதனால் அவர், ரூ.9,000 வருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்கிய 31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது. மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தி.மு.க. ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 சதவிகிதமாக உயர்ந்தது.

இதற்கிடையில், மத்திய அரசு கல்வி, உத்தி யோகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றி ருந்த நிலையில், அரசமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட காகாகலேல்கர் முதல் குழுவின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமலேயே முடக்கப்பட்டது.

இரண்டாவது குழு பி.பி.மண்டல் தலைமையில் அமைக்கப்பட்டு (1980), அந்தக் கமிஷன் பரிந்துரை அளித்தது. திராவிடர் கழகம், தி.மு.க. மற்ற சமூகநீதி அமைப்புகள் எல்லாம் சேர்ந்து கிளர்ச்சியை நடத்தின. திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தியது. பிறகு சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக வந்த நிலையில், வேலை வாய்ப்பில் மட்டும் 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளித்து 1990 இல் ஆணை பிறப்பித்தார்.

இதனை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வு 1992 இல் தீர்ப்பளித்தது. மத்திய அரசில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (அய்.ஏ.எஸ்.முதல் பல நிலைகள்) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்களின்படி, 50 விழுக்காட்டிற்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பது போன்ற ஒரு நிலைப்பாடு(பாலாஜி வழக்கினைக் காட்டி) கூறப்பட்டது.

தமிழ்நாட்டில் அமலில் இருந்த 69 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, அப்போது ஜெயலலிதா அவர்கள் முதல்வரான நிலையில் (1992), திராவிடர் கழகம் அதனைக் காப்பாற்ற இதுவரை வெறும் ஆணையாக  இருந்ததை, இனி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கி (கிநீt), பின்னோக்கி (ஸிமீtக்ஷீஷீsஜீமீநீtவீஸ்மீ மீயீயீமீநீt) சென்று அரசமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் வைக்கலாம் என்று கூறிய யோசனையை முதல்வர் ஜெயலலிதா ஏற்று  அனைத்துக் கட்சி கூட்டத்தையும், சட்டமன்றத்தையும் தனியே கூட்டி, சட்டத்தை நிறைவேற்றச் செய்தார். 76ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வேண்டி, அன்றைய பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவுடன் பல சந்திப்புகள், பிறகு அது நாடாளுமன்றத்தில் எதிர்ப்பின்றி நிறைவேறி, குடியரசுத் தலைவராக இருந்த சங்கர்தயாள் சர்மா அவர்களின் ஒப்புதல் பெற்று, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் அதுவும் அரசு ஆணையாக  இல்லாமல், சட்டமாக (கிநீt ஆக) உள்ளது.

இதைச் செய்த செல்வி ஜெயலலிதா அவர் களுக்கு, திராவிடர் கழகம் ‘‘சமூகநீதி காத்த வீராங் கனை’’ என்று பட்டம் கொடுத்துப் பாராட்டியது.

ஏற்கெனவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவிகிதமானது, மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற பிரிவுக்கு 20 சதவிகிதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 சதவிகிதம் என்று பிரிக்கப்பட்டு, சமூகநீதி பரவலாக ஏற்பட 1990 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சர் கலைஞர்  செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம் களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பரவலாக சமூகநீதி கிடைத்தது!

2005ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த 93ஆவது அரசமைப்பு திருத்த சட்டத்தின்படி மத்திய கல்வி நிறுவனங்களில் (தனியார் நிறு வனங்கள் உட்பட)  ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.

திராவிடர் இயக்கம்,  காமராசர் ஆட்சியிலும் சமூகநீதி!

தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை எக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சமூகநீதியில் கைவைக்கும் துணிவு இல்லா சூழ்நிலை நிரந்தரமாக பாதுகாக்கப்பட்டது, கலங்கரை வெளிச்சம்போல மற்ற மாநிலங்களுக்கு இன்றும் அது வழிகாட்டியாக அமைந்துள்ளது. ‘இதனால் இது பெரியார் மண்’ என்ற பீடுநடை போடுகிறது!

அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் (15(4)), அடுத்து 76 ஆவது திருத்தம், 93 ஆவது திருத்தம் என்று மூன்று அரசமைப்பு சட்டத் திருத்தங்கள் திராவிடர் இயக்கத்தின் முப்பெரும் சாதனைகளாகும்!

தேர்தலில் ஈடுபடாத, சட்டமன்றம், நாடாளு மன்றத்திற்குச் செல்லாத ஒரு இயக்கம் சமூகநீதியில், இத்தகைய சாதனைகளைப் படைத்தது என்பது ஒரு அதிசயமே!

திராவிடர் கழகம் நியாயமாகப் பெருமைப் படுகிறது.

நன்றி:  'தினத்தந்தி', 20.2.2018

- விடுதலை நாளேடு, 21.2.18

திங்கள், 12 பிப்ரவரி, 2018

நீதித்துறையில் சமூக அநீதி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு பெரும் அளவு வாய்ப்பு மறுப்புபுதுடில்லி, பிப்.1 கீழமை நீதிமன்றங்களில் தாழ்த்தப்பட்ட,பழங்குடியினர்,பிற் படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுப் புப் பெரும் அளவில் உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:

கீழமை நீதிமன்றங்களில் இடஒதுக் கீட்டின்படி நியமிக்கப்பட்டு பணி யாற்றிவரும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியி னர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு களைச் சேர்ந்த நீதிபதிகள்குறித்த தக வல்களை அளித்த மாநிலங்களும், விவ ரங்களும் வருமாறு:

மத்தியப்பிரதேசமாநிலத்தில் பணியாற்றி வரும் 1,328 நீதிபதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள்(183), பழங்குடி யினர் (192), பிற்படுத்தப்பட்டவர்கள் (186) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக் காட்டளவில் உள்ளனர்.

டில்லியூனியன்பிரதேசத்தில்பணி யாற்றிவரும்482நீதிபதிகளில்8 விழுக் காட்டளவில் தாழ்த்தப்பட்ட வர்கள்(37), 1.24 விழுக்காட்டளவில் பழங்குடியினர் (6) உள்ளனர்.   பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஒடிசா மாநிலத்தில் பணியாற்றிவரும் 441 நீதிபதிகளில் 15 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(65),20விழுக் காட்டளவில்பழங்குடியினர்(90),10 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (45) மூன்று பிரிவினரும் தலா 14 விழுக்காட்டளவில் உள்ளனர்.

பஞ்சாப்மாநிலத்தில்பணியாற்றி வரும்398நீதிபதிகளில்23விழுக்காட் டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(91), 14 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(56) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர்கூட இல்லை.

சத்தீஸ்கர்மாநிலத்தில்பணியாற்றி வரும்395நீதிபதிகளில்15விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(59),25 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (97), 18 விழுக்காட்டளவில் பிற்படுத் தப்பட்டவர்கள்(72) உள்ளனர்.

அரியானாமாநிலத்தில்பணியாற்றி வரும்348நீதிபதிகளில் 20விழுக்காட் டளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(70),15 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள்(52) உள்ளனர். பழங்குடியினத்தவர் ஒருவர் கூட இல்லை.

அசாம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 174 நீதிபதிகளில் 7 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(13),12 விழுக்காட் டளவில் பழங்குடியினத்தவர் (20) உள் ளனர்.  பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஜார்க்கண்ட்மாநிலத்தில்பணியாற்றி வரும்153நீதிபதிகளில்11 விழுக்காட்ட ளவில்தாழ்த்தப்பட்டவர்கள்(17),31 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர் (47), 17 விழுக்காட்டளவில் பிற்படுத்தப் பட்டவர்கள்(26) உள்ளனர்.

திரிபுரா மாநிலத்தில் பணியாற்றிவரும் 83 நீதிபதிகளில் 10 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(8),17விழுக் காட்டளவில் பழங்குடியினத்தவர் (14) உள்ளனர்.பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் பணியாற்றிவரும் 23 நீதிபதிகளில் 26 விழுக்காட்டளவில் பழங்குடியினத்தவர்(6),52 விழுக்காட் டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள்(12)   உள்ளனர்.   தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு வர் கூட இல்லை.

மத்திய சட்ட அமைச்சகம்கேட்டுக் கொண்டதன்பேரில் நீதித்துறையில் இட ஒதுக்கீட்டின்படி நியமிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட,பழங்குடியின,பிற்படுத் தப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த நீதிபதி களின் விவரங்களை 11 மாநிலங்கள் அளித்தன.  அதன்படி, அம்மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பணியாற்றிவரும் 3,973 நீதிபதிகளில்  14 விழுக்காட்டளவில் தாழ்த்தப்பட்டவர்கள்(563), 12 விழுக்காட் டளவில்பழங்குடியினத்தவர்(478), 12விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்ட வர்கள் (457) நீதிபதிகள் பணியாற்றி வருகிறார்கள்.

மக்கள் தொகையில் பெரும்பான்மை யராக உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள் வெறும 12 விழுக்காட்டளவில் மட் டுமே உள்ளனர். நீதித்துறையில் நீதிபதி கள்பணியிடங்களில்முறையாகஇட ஒதுக்கீடுபின்பற்றப்பட்டால்ஒழிய அவரவர் விகிதாச்சாரப்படி பயன்பெற முடியாத நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

- விடுதலை நாளேடு, 1.2.18

வியாழன், 8 பிப்ரவரி, 2018

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்தை தோற்கடித்த பிஜேபி, அதிமுக

தமிழர் தலைவர் கண்டனம்

நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துத் தோற்கடித்த கட்சிகளுக்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிக்கை வருமாறு:

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற கோரிக்கை 1996ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

குடியரசுத் தலைவர் உரைமீது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பற்றிய திருத்தம் ஒன்றை மாநிலங்களவை உறுப்பினர் திரு. டி.கே. ரெங்கராஜன் (சிபிஎம்) நேற்று கொண்டு வந்துள்ளார். அதன் மீதான வாக்கெடுப்பில் திருத்தத்துக்கு எதிராக பிஜேபியும், அ.இ.அ.தி.மு.க.வும் வாக்களித்துள்ளன.

இந்தியா முழுவதும் சட்டப் பேரவைகளில் 9 விழுக்காடு அளவுக்குத்தான் பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.

நாடாளுமன்ற மக்களவையில் உள்ள 542 பேர்களில் 64 பேர்கள் மட்டுமே பெண்கள். மாநிலங்களவையில் 245 பேர்களில் 27 பேர் மட்டுமே பெண்கள் உள்ளனர். இதில் உலக அளவில் இந்தியா 148ஆம் இடத்தில் உள்ளது என்பது வெட்கக் கேடானதாகும்.

இந்த நிலையில் பிஜேபி, அஇஅதிமுக, சிவசேனா, தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் திருத்தத்துக்கு எதிராக வாக்களித்திருப்பது பெண்கள் உரிமைக்கான அவர்களின் நிலைப்பாட்டைத் தான் அம்பலப்படுத்தும். இக்கட்சிகளுக்கு பெண்களின் வாக்குகள் மட்டும் வேண்டும். ஆனால் அவர்களின் உரிமைகள் என்றால் எதிர் நிலையா? கசப்பா? மகா வெட்கக் கேடு.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்கள் தொகையில் சரி பகுதி எண்ணிக்கை உள்ள பெண்கள் இவர்களை அடையாளங் கண்டு உரிய நேரத்தில் தக்க பாடம் புகட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்

சென்னை 
8.2.2018

 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

ஆந்திர மாநிலம் முக்தீஸ்வரத்தில் தமிழர் தலைவர் தலைமையில் சமூகநீதி விழா!

நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமியின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள்
ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் சமூகநீதி நடைமுறைக்கு அரும்பாடுபட்ட போராளிகளுள் ஒருவரான ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதியான ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி (1942-2008) அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

11.7.2017 அன்று ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், முக்தீஸ்வரத்தில் சிறீ ஒய்.வி.எஸ். & பி.ஆர்.எம். கல்விச் சங்கம் மற்றும் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளை ஏற்பாடு செய்த விழா - சமூகநீதிப் பெருவிழாவாக விமரிசையாக நடைபெற்றது.

மண்டல் குழு பரிந்துரையின் நடைமுறைக்கு தமிழர் தலைவர் மற்றும் பல்வேறு சமூகநீதித் தலைவர்களோடு ஆந்திர மாநிலத்தில் களப் போராளியாக செயல்பட்டு சமூகநீதி உணர்வுகள் தழைத்திடப் பாடுபட்ட நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் பிறந்த நாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அறக்கட்டளை சார்பாக நடத்தப் படுகிறது. அதில் சமூகநீதி உணர்வுகளுக்கு உரமேற்றும் வகையில் பல்வேறு அரசியல், சமூக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்பது நடைமுறை வழக்கம். அந்த விழாக்களில் தமிழர் தலைவர் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு பேருரை ஆற்றி சமூகநீதிபற்றி அவ்வப்போதைய நிலைமைகளை எடுத்து வைத்து  ஆவன செய்வதற்கு அறைகூவல் விடுவதும் வழக்கம்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற 75 ஆம் ஆண்டு பிறந்த நாள் முக்தீஸ்வரத்தில் கல்விச் சேவை ஆற்றிவரும் சிறீ ஒய்.வி.எஸ். & பி.ஆர்.எம். பல் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்புடன் வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது.

கல்வி வளாகத்தில் அமைந்துள்ள நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமியின் சிலைக்கு தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் பலர் சிலைக்கு மலர்மாலை அணிவித்தனர். கல்வி வளாகத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது.

பின்னர் கல்வி வளாக மைதானத்தில் அமைக்கப்பட்ட துணிப் பந்தல் கூடாரத்தில் பிறந்த நாள் ஆண்டு விழா தொடங்கியது. நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி நினைவு அறக்கட்டளையின் பொறுப்பாளர் பொறியாளர் சுதாகர் மற்றும் குடும்பத்தின் இதர உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினர்.
தமிழர் தலைவரின் தலைமையும், உரையும்!

விழாவிற்குத் தலைமை வகித்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே தமிழர் தலைவர் உரையாற்றினார். ஆங்கிலத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் தமிழில் வருமாறு:மண்டல் குழுப் பரிந்துரை நடைமுறைக்கு நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடந்து வந்த 1980-களில் வழக்குரைஞராகப் பணியாற்றிய பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள் எமக்கு அறிமுகமானார். அந்நாளில் ஆந்திர மாநில சமூகநீதித் தலைவர்களுள் ஒருவராக விளங்கிய சர்தார் லச்சண்ணா அவர்கள் நடத்திய பல்வேறு களப் போராட்டங்களில் பங்கேற்ற சமூகநீதிப் போராளியாக பி.எஸ்.ஏ.சுவாமி விளங்கினார். பின்னர் ஆந்திர பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தாம் எந்த நிலையிலும் - எந்தப் பதவியில் இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்கிட பாடுபடும் உணர்வுடனே விளங்கினார். ஆளும் அதிகாரம், அடக்கியாளும் ஒரு பிரிவினரிடமிருந்து மற்றொரு அடக்கியாளும் பிரிவினருக்குச் செல்லும் அதிகார மாற்றத்தினைத் (Transfer of Power) தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களும் கையாளும் அதிகார முறை மாற்றம் (Transformation of Power)  பற்றிய அக்கறையுடன் செயல்பட்டு வந்தார்.

வழக்குரைஞர் வட்டத்தில் அவர் உருவாக்கிய சமூகநீதி உணர்வுகள், பின்னாளில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடமும் நிலவிவரும் நிலைமைகளை உருவாக்கியது. சுவாமி அவர்கள் மறைந்து 9 ஆண்டுகள் கடந்தும்,  அரசியல் துறையில் ஆளும் தலைவர்கள் - ஆந்திர மாநில துணை முதல்வர், சட்டமன்ற மேலவை, பேரவை உறுப்பினர்கள், நீதித் துறையில் அளப்பரிய பங்காற்றிய உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள், அதிகார வர்க்கத்தினைச் சார்ந்த இந்நாள், மேனாள் அதிகாரிகள் பலர் இந்த விழாவில் பங்கேற்றிருப்பது சுவாமி பேணிய சமூகநீதி உணர்வுகளுக்குச் சான்றாக விளங்குகிறது.

சமூகநீதிப் போராட்டத்தில் களப் பணியோடு மட்டும் நிறைவடைந்திடாமல், ஆக்க ரீதியாக ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சார்ந்த பிள்ளைகள் கல்வி பயில - தொழிற்கல்வி பயில - பல்வேறு உயர் கல்வி நிலையங்களை - அவர்கள் வாழ்விடத்திற்கு அருகியிலேயே முக்தீஸ்வரம் பகுதியில் அமைத்தார். அந்தக் கல்வி நிலையங்கள் இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த சமூகநீதி பயன்பாட்டை பறைசாற்றுவதாக உள்ளன. இன்றளவும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய வாய்ப்புகள், சமூகநீதி வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை நிலை. அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளபடி உரிய நிலைகள் ஆண்டாண்டு காலமாக அடக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை. உரிய உரிமைகளைப் பெற்றிடும் விழிப்புணர்வு வேண்டும். இது ஒருபுறம்; மற்றொரு புறத்திலே இருக்கும் சமூகநீதி உரிமைகளைத் தட்டிப் பறிக்கின்ற வகையில் ஆளும் நிலையில் உள்ள ஆதிக்கவாதிகளின் செயல்கள் உள்ளன. இவைகளையும் மீறி ‘அனைவருக்கும் அனைத்தும்' எனும் சமூகநீதித் தத்துவம் பரவலாக்கப்படவேண்டும். அதற்குரிய பணிகளில் இங்கு வருகை தந்துள்ள அனைத்து அரசியல், சமூக, கல்வி அமைப்புகளும் முன்வரவேண்டும்; முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்களின் நினைவுகளுக்கு உரிய மரியாதை அளிப்பவையாக இருக்கும்; அவரைப் போற்றுவதற்கு ஒப்பானதாக இருக்கும்; அப்படிப்பட்ட சமூகநீதியினை முழுமையாகப் பெற்றிட நடவடிக்கைகளை தொடருவோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.
ஆந்திர மாநில துணை முதல்வர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆந்திர மாநில துணை முதல்வர் கே.இ.கிருஷ்ணமூர்த்தி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

ஆந்திர மாநிலத்தில் சமூகநீதி பரவலுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர் நீதிபதி பி.எஸ்.ஏ.சுவாமி அவர்கள். வழக்கு ரைஞராகப் பணியாற்றிய பொழுதும், உயர்நீதிமன்ற நீதி பதியாக பணியாற்றிய காலத்திலும், பணி நிறைவு பெற்று முழுமையான பொது வாழ்க்கைக்கு வந்த பொழுதும் நேர்மையாளராக, ‘தவறு’ என்பதை துணிச்சலாகச் சொல்லி, ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்குப் பாடுபட்டவர். சமூக நீதிக்கு சுவாமி அவர்கள் ஆற்றிய பங்கிற்கு, சமூக நீதி தத்துவத்தின் பிறப்பிடமாக விளங்கிடும் தமிழ்நாட்டிலிருந்து அவருக்கு சமூகநீதி விருது அவரது வாழ்நாள் காலத்திலேயே வழங்கப்பட்டிருப்பது சரியான அளவீடு ஆகும்.

இன்றைய விழாவின் தலைவர் மதிப்பிற்குரிய கி.வீரமணி காரு பெயராலேயே அமைந்தது சுவாமி அவர்களுக்கு வழங்கப்பட்ட விருது என்பது கூடுதல் சிறப்பானதாகும். முக்தீஸ்வரம் போன்ற ஒடுக்கப்பட்ட பகுதிகளில் கல்வி நிலையங்களை அமைத்து அப்பகுதி மக்களின் கல்வித் தரம், வாழ்க்கைத் தரம் மேம்பட சுவாமி பாடுபட்டு வந்தார். அந்தப் பணிகள் தொடர்ந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும். சுவாமி அவர்கள் போற்றி பாதுகாத்த சமூகநீதிக் கொள்கைகளை இந்த மாநிலத்தை ஆளுகின்ற அரசும் நடைமுறைப்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு துணை முதல்வர் குறிப்பிட்டார்.

உயர்நீதிமன்ற  மேனாள் நீதிபதிகள் உரை

பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் நினைவு பேருரையினை ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஜி.யதிராஜுலு வழங்கினார். மேலும் விழாவில் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் முனைவர் ஜி.பவானி பிரசாத் (தலைவர், ஆந்திர பிரதேச மின் ஒழுங்கற்று ஆணையம்), கே.சி.பானு, ஜி.சந்திரய்யா ஆகியோர் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களது நினைவுகளைப் போற்றி உரையாற்றினர்.

மேலும் ஆந்திர பிரதேச சட்டமன்ற மேலவையின் துணைத் தலைவர் ரெட்டி சுப்பிரமணியம் (எம்.எல்.சி.) சட்டப்பேரவை உறுப்பினர் பி.நாராயணமூர்த்தி (எம்.எல்.ஏ.) பணிநிறைவு பெற்ற இந்திய ரயில்வேப் பணி உயர் அதிகாரி பாரத் பூஷன், அயினவல்லி மண்டலத் தலைவர் சலாடி புல்லையா நாயுடு, ஜில்லா பரிஷத் தலைவர் கங்கு முல்லா காசி அன்னபூர்ணா ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில், கல்வி நிலையங்களில் பயின்று முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவியர்க்கு தமிழர் தலைவரும், இதர சிறப்பு விருந்தினர்களும் பரிசளித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து நடத்தி தமிழர் தலைவருக்கும், இதர விருந்தினர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்து நினைவு பரிசு வழங்கினர்.

சுவாமி குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் பாராட்டு

ஒவ்வொரு ஆண்டும் சுவாமி அவர்களுக்கு விழா எடுக்கும் சுவாமி குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகி களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு தெரிவித்தார். நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களது வாழ்விணையர் திருமதி ஜெயலட்சுமி, மகள் சவீதா குமார், மருமகன் சுதாகர் ஆகியோருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

விழா இனிதே நிறைவு பெற்றது, வருகை தந்த அனைவ ருக்கும் நண்பகல் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசியல், சமூக, கல்வி அமைப்புகளைச் சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள்
-விடுதலை, 13.7.17