பக்கங்கள்

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

1000 ஆண்டுப் போராட்டமும் 1000 ஆண்டுச் சாதனையும்!


ப.திருமாவேலன்

"புரட்சி என்பது பெரியதாகத்தான் இருக்கும் என்று நினைக்காதீர்கள். என்னைப் போலக் குள்ளமாகவும் இருக்கும்” என்று பேரறிஞர் அண்ணா ஒரு முறை சொன்னார்!

புரட்சி என்பது பெரும் முழக்கம் கொண்ட தாகவே இதுவரை இருந்திருக்கிறது. முதன் முதலாக அது ‘அமைதி’யாகவே நடந்திருக் கிறது. ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராய் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்துகாட்டி இருக்கும் "அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்ற புரட்சி சத்தமில்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமயச் சான்றோர்களும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களும் ஒரு சேரப் பாராட்டும் புரட்சிகரச் செய்கை இது.  காவியும் கருப்பும் ஒன்று சேர்ந்து பச்சைக்கொடி காட்டி இருக்கும் பார் போற்றும் புரட்சி இது!

‘யாருக்கும் சொல்லக் கூடாது’ என்று சொல்லப்பட்ட மந்திரத்தை கோபுரத்தின் மீதேறிச் சொன்னார் இராமானுசர். ஆயிரம் ஆண்டுக்கு முன்னால். இந்திய வைதிகத் தத்துவ மரபுக்கு மூவராகச் சொல்லப்பட்ட ஆதிசங்கரர் - மத்வர் - வரிசையில் மூன்றாமவர் இராமானுசர். ‘யாருக்கும் சொல்லக்கூடாத மந்திரத்தை இப்படி கோபுரத்தின் மீதேறிச் சொன்னால் நரகத்துக்குப் போவாய்’ என்று சபித்தார் திருக்கோட்டியூர் நம்பி. ‘எல்லோரும் முக்தி அடைய நான் நரகம் போவது பாக்கியமே’ என்று சொன்னதால் இராமானுசர், ‘புரட்சித் துறவி’யாக இன்று வரை அடையாளம் காட்டப்படுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பேரும் ஆயிரம் ஆண்டுகள் நின்று நிலைக்கத்தான் போகிறது; பெரிய கோவில் இருக்கும் வரை இராசராசன் பேர் இருக்கும் என்பதைப் போல!

எல்லா இடங்களிலும் விரட்ட முயற்சிக்கப்படும் ஜாதி ( சாதி என்று எழுதி அதனை தமிழ்ப்படுத்தக் கூடாது என்கிறார் பெரியார்!) கடைசியாக கர்ப்பக்கிரகத்துக்குள் போய் ஒளிந்து கொண்டது. அங்கும் விரட்ட எடுத்த அஸ்திரம்தான், அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் என்பதாகும். சுயமரியாதை இயக்க காலத்தின் முதல் போராட்டமே அதுதான்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஜே.என். இராமநாதனும், திருவண்ணாமலைக் கோவிலில் ஜே.எஸ்.கண்ணப்பரும், திருச்சி - மயிலாடுதுறை - திருவானைக்காவல் கோவில்களில் கி.ஆ.பெ.விசுவநாதமும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் என்.தண்டபாணியும், ஈரோடு ஈஸ்வரன் கோவிலில் குத்தூசி குருசாமி ஏற்பாட்டில் மூவரும் நுழைந்தது என்பது 1927-30 ஆகிய ஆண்டுகளில் ஆகும். சுயமரியாதை இயக்கத்தவர் கூட்டம் நடந்தால் கோவிலுக்குள் நுழைந்துவிடுவார்களோ எனப் பயந்து கோவில்களைப் பூட்டிய காலம் அது. இது தொடர்பான பல்வேறு வழக்குகள் பல ஊர்களில் நடந்தன. இது தான் பின்னர் ஆலய நுழைவு மசோதா ஆனது.

1970 ஜனவரி மாதம் தந்தை பெரியார் அவர்கள் ஒரு கிளர்ச்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்தார்கள். ஆலயங் களில் ஜாதிபேதம் இருக்கக் கூடாது, அனைவரும் கர்ப்பக்கிரகம் வரை செல்ல வேண்டும், கர்ப்பக்கிரகம் வரை சென்று வழிபாடு செய்வதற்கு ஜாதி ஒரு காரண மாக இருக்கக் கூடாது. அந்த அடிப்படை யில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்தப் போராட்டம் நடத்த வேண்டாம் என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ஒரு வேண்டுகோள் அறிக்கையை வெளியிட்டார். "அப்படி ஒரு கிளர்ச்சி நடத்தாமலேயே அவரது எண்ணத்தை நடை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும்” என்று அறிவித்தார். ‘அர்ச்சகர் களுக்கென சில சிறப்புத் தகுதிகள் வேண்டும், பயிற்சிகள் வேண்டும், அப்படி பயிற்சி பெறுகிறவர்கள் எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் அதில் தேர்வு பெற்று அர்ச்சகர் ஆகலாம்' என்று முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார். முதலமைச்சர் கலைஞரின் அறிவிப்பை ஏற்ற தந்தை பெரியார் தனது போராட்டத்தைத் தள்ளி வைத்தார்.

2.12.1970 அன்று தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அர்ச்சகர் சட்டம் நிறை வேற்றப்பட்டது. "இந்து சமய அறக்கட் டளை திருத்த மசோதா” என்று இதற்குப் பெயர். இந்தச் சட்டத்தை ஆதரித்து தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் சட்டமேலவையில் பேசினார். ஆனால் இந்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் 14.3.1972 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. "சட்டம் செல்லுபடியானதே!’’ என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். ஆனாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்திருத் தத்துக்காக அன்றைய ஒன்றிய அரசிடம் பலமுறை முதல்வர் கலைஞர் வலியுறுத்தினார்.

1973 டிசம்பர் 8,9 ஆகிய நாள்களில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக தந்தை பெரியார் அறிவித்தார். இதற்கிடையே டிசம்பர் 24 ஆம் தேதி அன்று தந்தை பெரியார் மறைந்தார்கள். "பெரியாரின் எவ்வளவோ ஆசைகளை நிறைவேற்றினோம். ஆனால் இந்த அர்ச்சகர் சட்டத்தை எழுந்து நடமாட வைக்க முடியவில்லை. பெரியார் அவர்களது நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்காமலேயே புதைத்திருக்கிறோம்’’ என்று முதல்வர் கலைஞர் அவர்கள் அப்போது பேசினார்கள். "அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும்’’ என்ற தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறை வேற்றினார் முதல்வர் கலைஞர்.

2006 இல் மீண்டும் தி.மு.க. ஆட்சி. 16.5.2006 - அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "உரிய பயிற்சியும் தகுதியும் உள்ள அனைத்துச் ஜாதியின ரும் இந்து சமய திருக்கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையைப் பிறப்பிப்பது என அமைச்சரவைக் கூட்டம் தீர்மானிக்கிறது. இது தந்தை பெரியாரின் நெஞ்சில் உள்ள முள்ளை அகற்றும் அரும்பணி என அமைச்சரவை கருதுகிறது.’’ என்று அறிவிக்கப் பட்டது. மீண்டும் நீதிமன்றத்தில் தடை. இறுதித் தீர்ப்பு - 16.12.2015 உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி சட்டத்துக் குத் தடை இல்லை. சடங்கு முறையில் மாற்றம் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டது.

சடங்கு, சம்பிரதாயம் எதையும் மாற்ற வில்லை. உரிய பயிற்சி பெற்ற வர்கள் சடங்கு, சம்பிரதாயம் செய்யலாம் என்பதுதான் இதன் உள்ளடக்கமே. அத்தகைய தகுதியும், திறமையும் பெற்றவர்களைத்தான் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜாதியால் மூடப்பட்ட கதவை, சட்டத்தால் திறந்திருக்கிறார் முதலமைச்சர். அதுவும் சத்தமில்லாமல்!

புரட்சி சில நேரங்களில் இப்படித் தான் அமைதியாகவும் வரும். இந்த அமைதிப் புரட்சி ஆயிரம் ஆண்டு களுக்குப் பேசப்படும். ‘அன்றொரு நாள் கோபுரத்தின் மீதேறி’ என்று சொல் வதைப் போல... ‘கோட்டையின் மீதேறி மு.க.ஸ்டாலின் சட்டம் போட்டார்' என்று சொல்லப்படும்.

அரசியலில் முதலமைச்சர்கள் வரலாம். போகலாம். சமூகத்தில் மாற்றம் செய்பவர்களே, தனித்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்தப்படு வார்கள். அந்த வரிசையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேர், போய்ச் சேர்ந்துவிட்டது. என்றும் அழியாப் பேர் இது! ஆயிரமாண்டுப் பேர் இது!

நன்றி: 'முரசொலி', 17.8.2021 

சனி, 21 ஆகஸ்ட், 2021

இதர பிற்படுத்தப்பட்டோரை மாநில அரசுகளே அடையாளம் காணும் மசோதா: குடியரசுத்தலைவர் ஒப்புதல்


புதுடில்லி ஆக.21 நடந்து முடிந்த நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான  இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்னும் கோரிக்கை வெகு நாட்களாக அனைத்துக் கட்சிகளும் எழுப்பி வருகின்றன.  இது குறித்து சட்டத் திருத்தம் அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.  இதையொட்டி நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்த 127 ஆம், சட்ட திருத்த மசோதாவில் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியான இதர பின் தங்கிய வகுப்பினரை மாநில அரசுகளே அடையாளம் கண்டு அறிவிக்கலாம் என ஒரு பிரிவு அமைக்கப்பட்டிருந்தது.   நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஏற்கெனவே இந்த மசோதா ஒன்றிய அமைச்சரவையால் ஏற்றுக்  கொள்ளப்பட்ட நிலையில் இதை சட்டமாக்கக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.  எனவே குடியரசுத் தலைவர் ஒப்புதலின் அடிப்படையில் அரசிதழில் 127 ஆம் சட்டத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மருத்துவப் படிப்பில் 27 சதவிகித இடஒதுக்கீடு கிடைக்க உழைத்த தமிழர் தலைவருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்


சென்னை,ஆக.21- அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் நல சங்க கூட்ட மைப்பின் நிர்வாகிகள் நேற்று (20.8.2021) சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித் தனர்மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில்இப்பிரச் சினையை முதன் முதல் 8.5.2020 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தி மக்கள் மன்றத்திலும்அரசியல் தலை வர்கள் மத்தியிலும் எடுத்துச் சென்றுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கிடைத்திட வழிவகை செய்தமைக்குநன்றி யினையும் மகிழ்வையும்  தெரிவித்துக் கொண்டனர்.

அத்துடன்அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகராகலாம் மற்றும் மாநில அரசுக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் ஆகிய முக்கிய பிரச் சினைகளில் தொடர்ந்து வலியுறுத்தி  வெற்றி கண்டதற்கும் நன்றி தெரிவித்தனர்.

ஒன்றிய அரசில் பிற்படுத்தப்பட்டோருக் கான முக்கிய கோரிக்கைகளை நிறை வேற்றிட ஒன்றிய அரசை வலி யுறுத்த வேண்டும் என கூட்டமைப்பின் சார்பில் நிர் வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

1.       2021இல் ஜாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த வேண்டும்

2.இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரிமிலேயர் பிரிவினர் குறித்து ஒன்றிய அரசு மறுபரி சீலனை செய்து முற்றிலுமாக நீக்க வேண்டும்

3.அரசுடைமையாக்கப்பட்ட ஒன்றிய அரசு வங்கிகளில் தமிழ்நாடு இளைஞர்களுக்கு பறிபோகும் வேலை வாய்ப்புகள்.

4.       அப்ரண்டிஸ் பயிற்சிக்கான நியமனத் தில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையாக நிறைவேற்றப்படாமை.

5.  நாகையில் சிபிசிஎல் நிறுவனம் 50 சத வீதம் தனியார் முதலீட்டில் துவக்கப்பட்டா லும்இட ஒதுக்கீடும்உள்ளூர் பட்டதாரி களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி செய்யப்பட வேண்டும்.

6.       பொதுத்துறை வங்கிகள்காப்பீட்டுக் கழகம்அய்.சி.எப்., கனரகத் தொழிற்சாலை தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு.

கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதிபொருளாளர் எம்.இளங்கோவன் (அய்.அய்.டி.), செயலா ளர்கள்எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), எஸ்.பிர பாகரன் (நியூ இந்தியா காப்பீடு), .ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), மற்றும் டி.துரைராஜ் (சென்னை பெட்ரோலி யம் கார்ப்பரேசன்), சுரேஷ் (எச்.வி.எப்., ஆவடி), ராஜ்குமார்லோகநாதன் (சென்சஸ் துறை), டி.ரவிகுமார்எஸ்.நடராசன்எஸ்.சேகரன்ஞா.மலர்க்கொடிகே.சந்திரன்எஸ்.சத்தியமூர்த்திலோகேஷ் பிரபுவேலாயுதம் (யூனியன் பாங்க் ஆப் இந்தியா), ஆகியோர் பங்கேற்றனர்.

அம்ச கோரிக்கைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கிவீரமணி,  திராவிடர் கழகத் துணைத் தலைவர்  கவிஞர் கலி.பூங்குன்றன்  ஆகியோரிடம் வழங்கினர்.

தமிழர் தலைவர் அவர்கள் கோரிக்கைகள் குறித்து கூட்டமைப்பின் நிர்வாகிகளிடம் விரிவாக உரையாடினார்அரசிடம் உரிய முறையில் தெரிவித்திடவும்மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும்  ஆவன செய்வதாக தெரிவித்தார்.  

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2021

தமிழ்நாடு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல்கல்


தமிழ்நாடு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல் - ஈராயிரம் ஆண்டுகளாக நீடித்த கருவறைத் தீண்டாமை இருள் அகற்றப்பட்டது!

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பணி நியமனம்! அரசமைப்புச் சட்ட ரீதியான சமத்துவத்தை நிலைநாட்டி, தனி மனித மாண்பை மீட்டெடுத்து, தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு நன்றி!

- - - - -

தந்தை பெரியார் அவர்கள் 1969இல் கருவறை நுழைவுப் போராட்டம் அறிவிக்க, அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித் தார். உச்சநீதிமன்றத்தில் தடை பெற்ற பழைய அர்ச்சகப் பார்ப்பனர்கள் சட்டத்தை அமல்படுத்த விடாமல் தடுத்தனர்.

மீண்டும் 2006இல் அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டத்தை கலைஞர் அவர்கள் இயற்றியதுடன், அதை அமல்படுத்த தமிழ்நாட்டில் சைவ-வைணவ பயிற்சிப் பள்ளிகளை திறந்து,  இட ஒதுக்கீடு அடிப்படையில் 207 மாணவர்களை அதில் சேர்த்து இளநிலை அர்ச்சகராகப் பயிற்சி கொடுத்து அதற் கான தீட்சையும், சான்றிதழும் மாணவர்கள் பெற்றனர்.

உடனே, மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசைவ சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றம் சென்று அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் சட்டத்திற்கு தடை உத்தரவு பெற்றனர். மாணவர்கள் சான்றிதழ் கூடப் பெற முடியவில்லை. அப் போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் தேவாரம்-திருவாசகம் பாட பல்வேறு போராட்டங்களை முன் எடுத்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்ய வழக்குரைஞர்கள் விருத் தாசலம் ராஜீ, மதுரை வாஞ்சிநாதன், சென்னை ஜிம்ராஜ் மில்டன் உள்ளிட்டோர் வீடு வீடாகச் சென்று  மாணவர்களை அணுகி அனைத்து ஜாதியினர்  அர்ச்சக மாணவர் சங் கத்தை உருவாக்கி மதுரை, சென்னை, திருச்சி, விருத்தாச் சலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில்  பலரை இணைத்து ஆகமம் பெரிதா? அரசமைப்புச் சட்டம் பெரிதா? எனப் போராட்டம் நடத்தினர்.மீனாட்சி அம்மன் கோவில் கருவறை நுழைவுப் போராட்டம் நடத்தினோம். தந்தை பெரியார் சிலை முன்பு நடத்திய போராட்டத்திற்காக மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி விடுதலை பெற்றோம். போராட்டத்தின் உச்சமாக வா.ரங்கநாதன் தீட்சையைத் துறந்து எதிர்ப்பைப் பதிவு செய்தார். இதனால் ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்து முன்னணியினர் ரங்கநாதனைத் தாக்கினர். இன்றுவரை மிரட்டுகின்றனர். எல்லாவற்றையும் தாண்டி உச்சநீதிமன்ற வழக்கில் அர்ச்சக மாணவர்கள் சார்பில் இணைந்தோம். வழக்கை மூத்த வழக்குரைஞர்களை வைத்து நடத்தினோம்.

இதற்கான சட்டரீதியான உழைப்பை மக்கள்  உரிமைப் பாதுகாப்பு மய்யத்தினரும், பல லட்ச ரூபாய் நிதி மற்றும் மக்கள் பிரச்சாரம், நூல் வெளியீடு, போராட்டம், கருத்தரங் கம் உள்ளிட்ட ஆதரவை தோழர்மருதையன், காளியப்பன், மக்கள் பாடகர் கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கிய கழகத்தினர்(ம.க.இ.க.) செய்தனர். இதற்கு முழு ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் அமைச்சர் வி.வி.சுவாமி நாதன், சத்தியவேல் முருகனார், கிருபானந்த சாமி ஆகியோர் இருந்தனர்.

இவ்வாறான தொடர்  சட்டப் போராட்டங்கள், மக்கள் போராட்டங்களைக் கடந்து அர்ச்சகர் மாணவர்கள் ஆகமக் கோயில்கள், பாடல் பெற்ற தலங்கள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முதல் கட்டமாக அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியார் சமூக நீதிப் போராட்டம் அறிவித்த நாளான ஆகஸ்ட், 14, 2021இல் மயிலை கபாலீஸ்வரர்கோவில் மண்டபத்தில் குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற, பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உள்ளிட்டோரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங் கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த வரலாற்று நிகழ்வை சாத்தியமாக்க, கருவறைத் தீண்டாமையை ஒழிக்க, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மய்யம்  தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டம், மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.                  

உச்சநீதிமன்றத்தின் சேசம்மாள் வழக்கு,ஆதித்தன் வழக்கு, மதுரை ஆதிசைவ சிவாச்சாரியார்கள் வழக்கு, சபரிமலை வழக்கு எனப் பல தீர்ப்புகள் அர்ச்சகர் நிய மனத்தோடு தொடர்புடையன. மீண்டும் சில தீர்ப்புகளைக் காட்டி ஆகமங்கள், பழக்க,வழக்க,மரபுகள் மீறப்பட்டுள்ளன என்று ஆதிக்கவெறி பிடித்த சிலர் நீதிமன்றத்தை அணு கலாம்.எங்கள் மாணவர்கள் சிலருக்கு எதிர்ப்பு என நாடகம் நடத்தலாம். இவற்றையெல்லாம் தமிழ்நாடு மக்கள் முறி யடிக்க வேண்டும் எனக் கோருகிறோம். கடந்த காலத்தில் நாமெல்லாம் கோயில் சென்று சாமி கும்பிட்டாலே தீட்டு என்று தடுத்தவர்கள் இவர்கள் என்பதை தமிழ்நாடு மக்கள் கவனத்தில் கொள்ளக் கோருகிறோம்.

மேலும்  அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல மாணவர்கள் வயது தடை காரணமாக பணிக்கு விண்ணப்பிக்க முடியா மல் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் வயது வரம்பைத் தளர்த்தி பணி நியமனம் தமிழ்நாடு அரசு படிப்படியாக வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அது போல் மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், அடுத்த நியமனங்கள் மதுரை மீனாட்சி யம்மன், திருச்செந்தூர் முருகன், திருவரங்கம் ரங்கநாதன் உள்ளிட்ட பெருங் கோயில்களில் அமைய வேண்டும்  என்ற கோரிக்கையை இந்த நேரத்தில் தமிழ்நாடு முதல் அமைச்சரிடம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் சார் பில் வைக்கின்றோம்.

- வா.ரங்கநாதன், தலைவர். 90474 00485

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு.

வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன்,

மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமை

பாதுகாப்பு மய்யம். தொடர்புக்கு : 98653 48163. 

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு- ஒன்றிய அரசுக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை


புதுடில்லி,ஆக.16- மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி வாரியாக நடத்தப்பட மாட்டாது என ஒன்றிய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், பீகாரின் எதிர்க்கட்சியான ஆர்ஜேடி தலைவர் லாலுபிரசாத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “2021 மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு ஜாதிவாரியாக நடத்த வேண்டும். இதன்மூலம், பிற்படுத்தப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் சிறுபான்மையினர் எண்ணிக்கை அறியப்படும். ஜாதிவாரியாக நடத்தவில்லை எனில் மக்கள் தொகை கணக்கெடுப்பை அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கும் நிலை உருவாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை  லாலுவின் மகனும் எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி பிரசாத் சந்தித்து, ஒன்றிய அரசு செய்யவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தினார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் - ஏன்?


 கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர்,

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்

நலச் சங்கங்களின் கூட்டமைப்பு

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1871, 1881, 1891, 1901, 1911, 1921 மற்றும் 1931 ஆகிய அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலும் ஜாதி தரவு வெற்றி கரமாக சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு பரப்பப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1941 இல் கூட, அது நடந்து முடிந்துவிட்டது ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த உலகப் போர் காரண மாக நிதி தேவைக்காக அட்டவணைப்படுத்தப்பட வில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என அப்போது எந்த ஆணையரும் கூறவில்லை. ஏனெனில், இந்திய சமுதாயத்தின் முக்கியமான கூறுகளில்ஜாதி ஒன்றாகும், மேலும்   ஜாதி விவரம் இல்லாமல் இந்தியா வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையடையாது என அவர்கள் கருதினர்.

ஆனால் சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினர் தவிர்த்து ஏனைய ஜாதிகள் குறித்த தரவுகள் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

தற்போது எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், ஜாதித் தரவு இல்லாத நிலையில், அரசுகள், மீண்டும் மீண்டும், ஜாதித் தரவுகளுக்காக 1931 மக்கள் தொகை கணக் கெடுப்பு அறிக்கைக்குச் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.

ஒன்றியஅரசு முழுமையாக ‘டிஜிட்டல் இந்தியாவை' நோக்கி முன்னேறும் போது, ஜாதி மற்றும் துணை-ஜாதிப் பெயர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிவியல் தரவு சேகரிப்பு சாத்தியமற்றது என அதிகார வர்க்கம் கூறுவது ஒரு நொண்டிச் சாக்காகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்கள் தொகை கணக் கெடுப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தரவைச் சேகரித்து வருகிறது, ஏனையஜாதித் தரவுகள் கணக் கெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தாழ்த்தப் பட்ட, பழங்குடியின பிரிவினரின் எண்ணிக்கை உயர்த் தப்பட்டதாக அல்லது அவர்களின் மக்கள் தொகை சிதைக்கப்பட்டதாக எந்த சான்றும் இல்லை. அதிகாரி களின் அச்சம் ஆதாரமற்றது என்பதை மேலும் நிரூ பிக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுடில்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, 'மொபைல் ஆப்' மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சேகரிக்கப்படும். இது முதல் முறை. 'மொபைல்' பயன்பாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். இந்தியா பேனா மற்றும் காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் தரவுக்கு நகரும், இது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் பெரிய புரட்சியாக இருக்கும் என பெருமையோடு குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்கங்களிடம் நம்பகமான தரவு இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர்களுக்கான இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் சட்டபூர்வத் தன்மை மாண்புமிகு நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் உட்பட அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலும் கிரீமிலேயரை அடையாளம் கண்டு அவர்களை அகற்றவும், இடஒதுக்கீடு குழுக்களுக்குள் துணை வகைப்படுத்தல் மற்றும் உயர் ஜாதியினரிடையே பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பு  மிகவும் அவசிய மாகிறது.

மகாராட்டிரா, பீகார் மற்றும் ஒடிசா அரசுகள் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளன.

மூன்று மாநில அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இதனை வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் பற்றிய விவரங்கள் சேகரிப்பு:

உலக வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இனம் (ஸிகிசிணி) பற்றிய குறிப்பு கோரப்படுகிறது.  கறுப்பின மக்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள், அலாஸ்கா என அனைத்து  இன மக்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அந்த நாட்டு இட ஒதுக்கீடு முறைக்கு இத்தகைய தரவுகள் அரசுக்கு உதவுகின்றன. இன அடிப்படையில் கணக்கெடுப்பு நடப்பதால், அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அங்கே யாரும் ஒப்பாரி வைக்கவில்லை.

ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட் டோர் ஆணையம், காக்கா காலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான இரண்டாவது ஆணையம், ஜாதிவாரி யான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பரிந்துரைத் தது. ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தொடரில் மீண்டும் மீண்டும் எழுப்பினர்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப்படுத்தும் ஆணையத்திற்கு தரவு தேவை:

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப் படுத்தலுக்கான நீதிபதி ரோஹிணி (ஓய்வு) தலைமை யிலான ஆணையம், இதர பிற்படுத்தப்பட்ட பற்றிய தரவுகள் எதுவும் தங்களிடம் இல்லாததை சுட்டிக் காட்டியுள்ளது.

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வருகிறது (இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்ட வணையின் கீழ் பிரிவு 69).ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயத்தின் நோக்கத்துக்கான விசாரணைகள், சர்வேக்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பட்டியல்94 இன் படி ஒன்றிய அரசின் பொறுப்பாகும்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தல்கள் போன்று மக்கள்தொகை கணக் கெடுப்பும் ஒன்றிய அரசின் தனித்த பொறுப்பாகும். இது குறித்த உரிய பயிற்சிக்கான பணிக்குழு இல்லாத மாநில அரசுகளுக்கு இந்த விஷயத்தை ஒப்படைக்க தேவை யில்லை.

1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 5 (1) பிரிவு "மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவ ரங்களை தொகுத்து வெளியிடும் செயல்பாடு", அத் துறையின் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

ஒன்றிய அரசால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அதிகாரம் அளித்துள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றிய தரவுகளும் அவசியமாகிறது.

வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு செய்யும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் ஜாதிபற்றி நெடுவரிசை சேர்க்கப்பட்டால், எந்த கூடுதல் முயற்சியும் அல்லது செலவும் இல்லாமல் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும். வீட்டு அட்ட வணையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், 'மதம்' என்ற ஒரு பத்தியும், 'ஜாதி / துணை ஜாதி இருந்தால்' என்ற பத்தியும், பின்னர் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் மக்கள்தொகை பற்றிய பல்வேறு பத்திகளும் இருக்க வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவுகளை, எழுத்தறிவு, கல்வி, தொழில், வேலை பண்புகள் மற்றும் பிற குறியீடுகள் போன்ற அனைத்து சமூகப் பொரு ளாதாரத் தரவுகளையும் சேர்த்து, இரண்டு வருடங் களுக்குள் காலவரையறை திட்டத்தில் எளிதாகக் கண்டறிந்து, தொகுக்கலாம், அட்டவணைப்படுத்தலாம் மற்றும் வெளியிடலாம். அரசாங்கத்திற்கு கூடுதல் செலவுகள் இல்லாமல் இதனை செய்திட முடியும்.

காகா கலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையில் "ஜாதிகள், வகுப்புகள் அல்லது குழுக்கள் மூலம் சமூக நலத் திட்டங்கள் நிர்வகிக்கப்படும் வரை, இந்த குழுக்கள் பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட வேண்டும்; "மக்கள்தொகை கணக்கெடுப் பில் ‘ஜாதி’ பற்றிய பத்தியும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமூக-கல்வி ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கவும், பாதிக்கப் பட்ட சமூகத்தினரை சேர்த்திடவும் அர சுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தரவுகள் தேவைப்படுகிறது.

மண்டல் அறிக்கைக்கு பிந்தைய நிலை:

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவினர்க்கான இடஒதுக்கீடு 1993-லும், பின்னர் உயர் கல்வி நிறுவனங்களில் 2008-லும் அறிமுகப்படுத்தப்பட்டது. மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரி சீலனை செய்யப்பட வேண்டும் என்று மண்டல் அறிக் கையில்கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை துணை வகைப்படுத்த லுக்கான ஆணையம் அக்டோபர் 2017 இல் நியமிக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் செயல்பட மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பிரிவினர் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்பது பற்றி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரி களுடன் 31.8.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில், அன்றைய உள்துறை அமைச்சரும் தற்போது பாது காப்புத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜ் நாத் சிங், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவித்தார்.

கருநாடக அரசு ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திட வேண்டும் என தெரிவிக்கிறார்."(எகனாமிக் டைம்ஸ் 12.7.2021).

தி.மு.க நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, "மகாராட்டிரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரங்களைச் சேகரிக்க கோரி யுள்ளன. இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளைத் தவிர மற்ற ஜாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளது என உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் 20.7.2021 அன்று பதிலளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் மாறுபட்ட

முடிவுக்கு என்ன காரணம்?

1. 1951 முதல் ஜாதி குறித்த விவரங்களை சேகரிக்காதது இந்தியாவை ஜாதியற்ற சமூகமாக மாற்றவில்லை.

2. தரவுகளுக்கு யார் பயப்படுகிறார்கள்? அதன் சேகரிப்பை முதலில் நிறுத்தியது யார்? கண்டிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இல்லை.

2. சமூக குறைபாடுகள், வேறுபாடுகள் மற்றும் அநீதி களின் நிலைப்பாட்டைக் காப்பாற்ற விரும்புவோர், அந்த விவரங்களை வெளிப்படுத்துவது, பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை 'அவர்களின் பின்தங்கிய தன்மை யையும்' அவர்கள் அனுபவிக்கும் சமத்துவமின்மை யையும் உணரவைக்கும் என்று பயப்படுகிறார்கள்.

முடிவுரை:

1. சமகால இந்திய சமுதாயத்தில் ஜாதி ஒரு மிக முக்கியமான கூறாக உள்ளது, எனவே அது குறித்த தரவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2. ஜாதிகள் குறித்த தரவுகள், அமைப்பு மற்றும் தனிப்பட்ட ஜாதிகளின் புற அமைப்பில் நீண்ட கால மாற்றங்களைக் கண்காணிக்க உதவும்.

3. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடுகள் குறித்து சட்டங்கள் இயற்றுவதற்கு (ஓபிசி பிரிவினரை புதிய பட்டியல்களை சேர்ப்பதற்கும், நீக்கு வதற்கும், கிரீமிலேயர் அளவுகோல்களை அடையா ளம்   காண்பது/திருத்துதல், ஒதுக்கீடுகளுக்குள் ஒதுக் கீடுகள் போன்றவை) ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை.

4. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதித் தரவைச் சேர்ப்பது ஜாதி அமைப்பை நிலைநிறுத்தும் மற்றும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் என்று ஒரு போலி யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உண்மையில், ஜாதித் தரவைச் சேர்க்காதது ஜாதிய அமைப்பின் அநீதியை நிலைநிறுத்துகிறது, ஏனெனில் தரவின் பற் றாக்குறை சமூகத்தில் மிகவும் பலவீனமான பிரிவி னர்க்கு உதவி செய்வதற்கான உரிய வாய்ப்பை தடுக்கிறது.

5. சமூகத்தில் ஜாதி பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை - ஆரோக்கியம், கல்வி மற்றும் நீதிக்கான அணுகலில் கூட - அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வ தற்கான வழிகளை வகுப்பதற்காக அது மக்களை எவ் வாறு பாதிக்கிறது என்பதை கண்காணிப்பது முக்கியம். ஜாதிவாரியான தரவுகளை தவிர்ப்பது ஜாதிவெறியை அழிக்காது, மாறாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு "ஜாதியின் முடிவின் தொடக்கமாக இருக்கும்".

6. சான்றுகள் அடிப்படையிலான சமூகக் கொள் கைகளை வளர்ப்பதற்கும், நேர்த்தியமைப்பதற்கும் இந்தத் தகவல் நீண்ட தூரம் செல்லலாம். இது எந்த ஜாதி இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும் அல்லது பெறக் கூடாது என்பதற்கான தவிர்க்கக்கூடிய சச்சரவு களையும் குறைக்கும், நீதித்துறை கோரும் நம்பகமான ஆதாரங்களையும் வழங்கும்.

அதிகாரம் பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோர்களின் துணை வகைப்பாட்டை ஆராயும் குழு மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு  (EWS) சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இன் றைய சூழலில் இந்த வாதங்கள் மிகவும் பொருத்தமானவை.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி குறித்த கேள்வியை சேர்க்க மறுப்பது அர்த்தமற்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியை ஒதுக்கிவைப்பது என்பது நாம் அதை விரும்பலாம் என்று அர்த்தமல்ல. மிக முக்கியமாக, வரலாற்று காரணங்களுக்காக பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினர்க்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை வழங்கும் வரை, அவர் களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதாவது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக் கையை மட்டும் எண்ணுவது அல்ல. எந்தக் குழுக்கள் பின்தங்கியுள்ளன, எந்த அளவிற்கு உள்ளன என்பதை துல்லியமாக அடையாளம் காண கொள்கை வகுப்பாளர் களுக்கு இது உதவும். இது இன்றியமை யாதது, ஏனென் றால் கருத்துப் பதிவுகளைக் காட்டிலும் உண்மையான தரவுகளைக் கொண்டு அரசு சரியான திட்டங்களைக் கையாளமுடியும், ஆனால் தற்போது எந்த அதிகாரப் பூர்வ தரவும் இல்லாத நிலையில் உள்ளது.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கூறியபடி, இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னமும் துவங்கப் படவில்லை என்பதால், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பரிசீலிக்குமாறு ஒன்றிய உள் துறை அமைச்சரிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்தே நடத்திட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கு மோடி அஞ்சுவது ஏன்?


ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி

புதுடில்லி,ஆக.14- மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதி வாரியாக நடத்தப்பட மாட்டாது என அண்மையில் ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. எனினும், ஜாதிவாரிக் கணக் கெடுப்புக்கான கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

இந்நிலையில், பீகார் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவருமான தேஜஸ்வியும், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.

இதுதொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டிருக்கும் தேஜஸ்வி, “தன்னை பரோபகாரி என்றழைக்கும் பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரியான கணக்கெடுப்பிற்கு அஞ்சுவது ஏன்?” என கேள்விஎழுப்பியுள்ளார்.

மேலும், ‘‘இந்த கணக்கெடுப்பை நடத்தினால் பிற்படுத்தப் பட்டவர்கள் எண்ணிக்கை வெளியாகும். அதன் மூலம், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரே எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பது வெளியாகி விடும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாரை நேரில் சந்தித்த தேஜஸ்வி, “ஒன்றிய அரசு ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவில்லை எனில் மாநில அரசு தனது செலவில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜெய்சிறீராம் என்று கத்தச்சொல்லி இஸ்லாமியரை அடித்து இழுத்துச்சென்ற ஹிந்துத்துவ அமைப்பினர்


கான்பூர், ஆக. 13 இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை 'ஜெய் சிறீ ராம்' என்று கத்தச் சொல்லி ஹிந்து அமைப்பினர் அவரது 10 வயது மகளோடு சேர்த்து அடித்து இழுத்துச்சென்ற நிகழ்வு காணொலியாக வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கான் பூர் நகரில் வசிக்கும் இஸ்லாமியர் ஒருவரை, ஒரு கும்பல் தடுத்து நிறுத்தி, 'ஜெய் சிறீராம்' என கத்தச் சொல்லி கட்டாயப்படுத்தியது. அப்போது உடன் இருக்கும் அவரது மகள் தன் தந்தையை விட்டு விடும்படி கெஞ்சுகிறாள். ஆனால் அந்தக் கும்பல் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் அந்த 10 வயது சிறுமியையும், அவரது தந்தையையும் தாக்கிக்கொண்டு ஊர்வலமாகச் சென்றது.

இந்தக் கொடூர நிகழ்வு பொது மக்களுக்கு முன்பாக நீண்ட நேரம் நடந்துகொண்டு இருந்த போது கான்பூர் காவல்துறையினர் தாமதமாக அங்கு வந்து சேர்ந்தனர்.

கும்பலிடமிருந்து அந்த நபரை அவரது மகளோடு மீட்டு அழைத்துச்செல்லும் போது பின்னாலேயே வந்து பஜ்ரங்க தள அமைப்பைச்சேர்ந்தவன் செங் கல்லால் அந்த இஸ்லாமியரின் தலையில் தாக்கினார். அப்போதும் காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது,

காவல்நிலையம் சென்ற அவர் தன்னை தாக்கிய பஜ்ரங்தள் அமைப்பினர் மீது புகார் மனு கொடுத் தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமியர் வாழும் பகுதியில் பஜ்ரங் தள் அமைப்பினரின் கூட்டம் நடந்ததாகவும், அந்த கூட்டத்தை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள அனைவரையும் ஜெய் சிறீராம் என்று கத்தவற்புறுத்தினர். ஆனால் அந்த இஸ்லாமியரும், அவரது மகளும் அப்பக்கமாகச்செல்லும் போது அவர்கள் ஒன்றுமே சொல் லாமல் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரையும்  அவரது 10 வயது மகளையும் அடித்து ஊர்வலமாக இழுத்துச்சென்றனர்.

 இதை ஹிந்து அமைப்பினர் சமூகவலைதளங்களில் ஜெய்சிறீராம் சொல்லாத அனைவருக்கும் இந்த நிலைதான் என்று தலைப்பிட்டு ஒளிபரப்பினர். இது தொடர்பாக ஹிந்து அமைப்பினர் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர் மீது  பொய் புகார் கொடுத்துள்ளனர்

 அதில் இஸ்லாமியர்  தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெண் ஒருவரை மதம் மாற்ற முயர்சித்தார் என்று கூறியுள்ளனர் இது தொடர் பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

 சமூகவலைதளங்களில் வந்த அந்தக் காணொலியில் அவரைத் தாக்கியவர்கள் முகம் தெளிவாக தெரிந்த போதும் காவல்துறை யார் மீதும் வழக்குப் பதிவு செய்யாமல் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாக மெத்தனமாக கூறியுள்ளது. இப்படி காவல்துறையும் குற்றவாளிக்கு சாதகமாக நடந்துகொண்டிருப்பது தெரியவருகிறது என்று நிகழ்வை நேரில் கண்டவர்கள் கூறினர்.

ஆகஸ்டு 14: வகுப்புரிமை நாள்


 இந்த நாளில் 1950இல், தந்தை பெரியார், தமிழ்நாட்டில் மக்களைத் திரட்டி, வகுப்புரிமை நாள் என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட வகுப்புவாரி உரிமை இட ஒதுக்கீடு, 1950இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என அறிவிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் நடைமுறைக்கு வந்த அரசியல் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக வகுப்புவாரி உரிமை ஆணை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்திய வரலாற்றில், தமிழ்நாட்டில் நீதிக்கட்சி ஆட்சியில் தான், அனைத்து பிரிவு மக்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் சேர்த்து, நூறு விழுக்காடு இட ஒதுக்கீடு 1928 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்திய அரசமைப்புச் சட்டம் 1950இல் நடைமுறைக்கு வந்ததும், அடிப்படை உரிமைகளைச் சுட்டிக்காட்டி, வகுப்புவாரி உரிமைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் பார்ப்பனர்கள் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம், வகுப்புவாரி உரிமைஆணையை ரத்து செய்தது. தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும், உச்சநீதிமன்றமும், இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

சுதந்திர இந்தியாவில், சமூக நீதிக்குத்தான் முதல் அடி விழுந்தது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, தந்தை பெரியார் கண்டனம் செய்ததோடு நில்லாமல், மக்களைத் திரட்டினார். அனைத்து மக்களும், 1950இல் ஆகஸ்டு 14ஆம் நாளை வகுப்புரிமை நாளாக அறிவித்து போராட அழைத்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், என அனைத்து மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

போராட்டத்தின் வலிமையை உணர்ந்த ஒன்றிய அரசின் அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவும், சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கரும், இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், வகுப்புரிமையை நிலை நாட்டவும், அரசமைப்பு சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்து, அரசமைப்பு விதி 15 (4) உருவாக்கப்பட்டது. இந்த பிரிவின்படிதான், இன்றளவும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினருக்கு, நாடு முழுவதும், கல்வியில் இட ஒதுக்கீடு ஒன்றிய மாநில அரசுகளால் அளிக்கப்படுகிறது.

1950இல் அரசமைப்புச் சட்டம் வந்த போது, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கும் பிரிவு 16(4) மட்டும்தான் இருந்தது. கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு இல்லை. சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியாரின் வகுப்புரிமைக்கான போராட்டத்தின் காரணமாகத்தான், கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கும் பிரிவு சேர்ந்திட வாய்ப்பு கிட்டியது. இது தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு கிடைத்தது. அறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் உறுதுணையாக இருந்தார்கள்.

தற்போது சமூக நீதிக்கு ஏற்பட்டிருக்கும் சவாலைச் சந்திக்கும் நிலையில், ஆகஸ்டு 14, 1950இல் பெரியார் நடத்திய வகுப்புரிமை நாள் போராட்டத்தையும், அதன் விளைவாக, இன்றளவும், கல்வியில் இட ஒதுக்கீடு பெறும் இளைய சமுதாயம், இந்த வரலாற்றையும், இதற்குக் காரணமான தந்தை பெரியாரையும் இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

-கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர், அ.இ.பிற்படுத்தப்பட்டோர்

கூட்டமைப்பு 14.8.2021


ராமராஜ்யத்தில்...


உத்தரப்பிரதேசம் மதுராவில் உள்ள ஒரு பகுதியில் அஷாத் அம்மாவாசை(ஆடி அம்மாவாசை) கொண்டாடிய உயர்ஜாதியினர் பூஜையில் பயன்படுத்தப்பட்ட பழங்களை பசுமாட்டிற்கு கொடுக்க வைத்திருந்தனர். அருகில் உள்ள தாழ்த்தப்பட்ட குடியிருப்பைச் சேர்ந்த சிறுவர்கள் மாட்டிற்கு வைத்திருந்த பழங்களை சாப்பிட்டுவிட்டனர். இதை அறிந்த உயர்ஜாதியினர் அந்தச்சிறுவர்களை விரட்டிப் பிடித்தனர். இதில் இரண்டு சிறுவர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை பழங்களைத் திருடித்தின்ற குற்றத்திற்காக கை கால்களை கட்டிவைத்து கம்பால் அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறை சிறுவர்களை விடுவித்து அவர்களை அடித்தவர்களில் இருவரை கைதுசெய்தனர். ஆனால் இந்த கொடூர நிகழ்வு தொடர்பாக யாரும் புகார் கொடுக்க முன்வராததால் பின்னர் குற்றவாளிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் விட்டுவிட்டனர்.

இதுதான் ராமராஜ்யம்


உத்தரப்பிரதேசம் கன்பூர் கொத்வால் பகுதியில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த மனீஷ் மகுவா, இவர் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு ரயில்வே தேர்வு எழுத விண்ணப்பித் திருந்தார், இந்த நிலையில் இவருக்கு ஜான்சி நகரில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் தேர்வெழுத அழைப்பு வந்தது. தேர்வு எழுதும் முதல் நாள் அவ்வூரில் உள்ள உயர்ஜாதிவகுப்பினர், தங்களது வயலில் கரும்பு வெட்ட அழைத் திருந்தனர். ஆனால் இவர் எனக்கு உடல் நிலைசரியில்லை ஆகையால் நாளை வரமுடியாது என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் மறுநாள் ரயில்வே தேர்வு எழுத சென்றவரை வேலைக்கு வராமல் பொய் சொல்லி தேர்வெழுத செல்கிறாயா என்று கூறி உயர்ஜாதியினர் ஒரு நாள் முழுவதும் கரும்புத்தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டிவைத்தனர்.

இது தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற மகுவாவின் உறவினர்களிடம், கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் சிக்கிக் கொண்டார். ஆகையால் அவர்கள் பிடித்து வைத்தனர். பின்னர் விட்டு விட்டனர். சிலர் அதைப் படம்பிடித்து பரபரப்பிற்காக இதை சமூகவலை தளத்தில் பரப்பி விட்டனர், ஆகவே இனிமேல் இது குறித்து புகார் கொண்டு வரவேண்டாம், அப்படி வந்தால் உங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்துவிடுவோம் என்று கூறி காவல்துறையினர் அவரது உறவினர்களை மிரட்டி விரட்டிவிட்டனர்.

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

யார் வயிற்றில் அறுத்துக்கட்ட? (பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கோரி பார்ப்பனர்களின் பொதுக் கூட்டமாம்)

 

கலிபூங்குன்றன்

சென்னையில் நாளை (7.3.2021) பார்ப்பனர்களின் பொதுக் கூட்டமாம்எதற்காகவாம்பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கோரியாம்!

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி இந்த பொதுக் கூட்டமாம்

யார் யாரெல்லாம் பங்கு ஏற்கிறார்களாம்பா..முன்னாள் தேசிய செயலாளர் எச்ராஜா,  நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பா..., ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் - அதாவது பார்ப்பனர்கள்.

இராமாயணம் என்றால் வீடணர்கள் இல்லாமலாஇந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பங்கேற்பு.

முஸ்லிம்களிலும் கோடாரிகள் உண்டேஎனவே அதிலும் சிலராம்.

இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தந்திரம் என்பது.

எல்லாருமே பார்ப்பனர்கள் என்றால் விடயம் வெளிச் சத்துக்கு வந்துவிடுமேஅதனால் அவர்கள் மொழியில் “திருஷ்டிப் பரிகாரத்துக்கு”  இந்தியாதி.. இத்தியாதி ஆட்கள்!

பிரதமர் நரேந்திரமோடி கூட பிற்படுத்தப்பட்டவர் தான் இவரை ஏன் முன்னிறுத்துகிறார்கள்பச்சையாகப் பார்ப்பன ஆதிக்கம் பார்ப்பனர் அல்லாதாரின் கண்க ளுக்குப் பட்ட வர்த்தனமாகத் தெரிந்து விடக் கூடாதே - அந்த ஏமாற்றுத்தனத்துக்குத்தான்.

நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்!” என்பார் தந்தை பெரியார்அந்த வகையில் தான் பிரதமர் மோடி.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பத்து விழுக்காடு இடங்கள் கல்வியிலும்வேலையிலும்  இவர்களுக்கு வேண்டுமாம்.

இது சட்டப்படி சரியானதுதானாசென்னை மாநில இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மும்உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லி விட்டபிறகுதந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு கொதித் தெழுந்த நிலையில் வேறு வழியின்றிநாடாளுமன்றத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு  வரப்பட்டபோதே - சமூக ரீதியாகவும்கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்ற அளவுகோலில் பொருளாதாரத்தையும் இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவந்தபோது நடை பெற்ற வாக்கெடுப்பில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்குகளும் எதிராக 263 வாக்குகளும் பதிவாகின. (1951)

ஆக தொடக்கத்திலேயே அடி வாங்கி விட்டது இந்தப் பொருளாதார அளவுகோல்ஆனாலும் பார்ப்பனர்கள் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

கல்லை எறிந்து பார்ப்போமே - ஏதாவது விழுந்தால் இலாபம் தானே என்பது அவர்களின் அணுகுமுறை.

பி.விநரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1992களில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொண்டு வந்தபோது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இன்றைய பிரதமர் - அன்றைய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி மாநில அளவில் பொருளா தாரத்தில் நலிந்தோர் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக் கீடுக்கு வழி செய்யும் ஆணையைப் பிறப்பித்தார்மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் அதே ரீதியில் 15 விழுக் காடுக்கான ஆணை ஒன்றை கொண்டு வந்தார்.

இரண்டு ஆணைகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டனஇந்தச் சூழலில் அதே நரேந்திர மோடி பிரதமரான நிலையில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு என்று (10 விழுக்காடுஒரு சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து ஒரு சில நாட்களிலேயே நிறைவேற்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டாரே!

இவ்வளவுக்கும் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே செயல்பாட்டுக்கு வந்து விட்டதே!

சட்டம்நீதிமன்றம் - இவை எவற்றையுமே பொருட் படுத்தாதுதான் தோன்றித்தனமாகக் கொம்பைத் தீட்டிக் கொண்டு துள்ளிப் பாய்வதுதான் பா..ஆட்சி.

இடஒதுக்கீடு காரணமாக ‘தகுதி’ ‘திறமை’ அழிந்தே போய் விடும் என்று அண்டம் குலுங்க அலறியவர்கள் இதே பார்ப்பனர்கள்தான்.

மண்டல் குழுப் பரிந்துரைக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்தபோது - அதனை எதிர்த்து பட்டினிப் போராட்டம் நடத்தினவர்கள் இதே பார்ப்பனர்தான்!

குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கூப்பாடு போட்டவர்களும் இவர்களேஇந்த நிலையில் இவர்கள் இடஒதுக்கீடு கேட்டு கூட்டம் போடுகிறார்களே - மாநாடு கூட்டி மார்தட்டுகிறார்களே - இப்பொழுது மட்டும் தகுதி - திறமை நாசமாகப் போய் விடாதா?

இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.

1928ஆம் ஆண்டில் வகுப்புரிமை ஆணை நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில்அமைச்சர் எஸ்முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டு வரப்பட்டதே (G.O. MS No.744  நாள் 13.9.1928) அதன் விவரம் என்ன?

பார்ப்பனருக்கு - 2,

கிறிஸ்தவருக்கு - 1,

முஸ்லிமுக்கு - 1.

ஆதி திராவிடருக்கு - 2

பிற்பட்டவருக்கு - 2

மற்ற பார்ப்பனர் அல்லாதாருக்கு - 6 

அந்த வகையில் பார்த்தால் 14-இல் 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கு விழுக்காட்டு அளவில் நூற்றுக்கு 14 இடங்கள் கிடைத்த னவே - அதனை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய கூட்டம்தான் இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்டு காவடி தூக்குகிறது.

நாளை நடக்க இருக்கும் பார்ப்பனர் களின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் திருவாளர் எஸ்.விசேகரைப் பற்றி ஒரு தகவல்.

பார்ப்பனர்களுக்கு 10 சதவீத இடஒதுக் கீடு கேட்டுமுதல் அமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்திக்கச் சென்றார்கலைஞர் என்ன செய்தார்?

நேராகப் பெரியார் திடலுக்குச் சென்று தி.தலைவர் வீரமணியைச் சந்தியுங்கள்?” என்று வழிகாட்டி விட்டார்அந்த நடிகரும் அவ்வாறே சென்னை - பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகத் தலைவரையும் சந்தித்தார்விவரத்தைச் சொன்னார்அப் பொழுது ஆசிரியர் வீரமணி அவர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்று உட்கார வைத்து கேள்வி ஒன்றை நாக்கைப் பிடுங்குமாறு நாசூக்காகத் தான் கேட்டார்.

ஜஸ்டிஸ் ஆட்சிக் காலத்தில் 16 சதவீத இடங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்டதே - மரியாதையாக அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காதல்லவா?’ என்று சொன்னபோது அசடு வழிந்தது நடிகர் எஸ்.விசேகருக்கு.

இடஒதுக்கீட்டின் தத்துவம் என்பது - கல்வியிலும் சமூகரீதியிலும் ஆண்டாண் டுக் காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக் களுக்குத்தானே.

பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கலாம்ஆனால் கல்லாதவர்கள் கிடையாதேஏன் இந்த நிலைசூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற மனுதர்ம நிலை சமுதாயம்தானே.

பொருளாதார அளவுகோல் என்றால் பிச்சை எடுப்பதுதான் எங்கள் தருமம் என்று கூறி எளிதாகப் பார்ப்பனர் உள்ளே புகுந்து ஆக்ரமித்துக் கொள்ள மாட்டார் களா?

பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு”  - என்று இன்றும் கும்பகோணத்தில் இருக்கிறதே!

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான (EWS  Economically Weaker Sectionசான்றுகள் மும்பையில் விலைக்கு விற்கப்பட்ட விவரம் ஏடுகளில் பட்டவர்த்தனமாக சிரிப்பாய்ச் சிரித்தனவே!

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடம் அளித்ததால் ஏற்பட்ட விளைவு என்ன?

இதோ ஒரு எடுத்துக்காட்டு.

ஸ்டேட் வங்கிக்கான எழுத்தர் தேர்வில் பணி கிடைக்கப் பெற்றவர்கள் யார் யார்வாங்கிய மதிப்பெண்கள் எத்தனை எத் தனை?

பழங்குடியினருக்கான தகுதி மதிப் பெண் (கட்ஆஃப்) - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி மதிப் பெண் - 61.25

பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் - 61.25

உயர் ஜாதி பார்ப்பனருக்கான தகுதி மதிப்பெண் - 28.5

எளிதாகப் புரியும்படிச் சொன்னால் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால்  அவர் பெற வேண்டிய மதிப்பெண் (Mark) 53.75. அதே நேரத்தில் உயர்ஜாதி ஏழைப் பார்ப்பான் வெறும் 28 மதிப்பெண் பெற்றால் உடனே வேலை.

இதுதான் பொருளாதார அடிப்படை என்பதில் உள்ள சூட்சமம்அதற்கான பொதுக் கூட்டத்தைத்தான் நாளைய தினம் பார்ப்பனர்கள் சென்னையில்  நடத்து கிறார்கள்பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது - பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான்பாரதிய ஜனதா ஆட்சி என்பது பார்ப்பன ஜனதா ஆட்சியேபுரிந்து கொள்வீர்!