பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

மலையாளத்தில் பார்ப்பனீயம்

(1929 -குடி அரசிலிருந்து)
தென் திருவிதாங்கூரில் மிகவும் பிரசித்தி பெற்ற புண்ணிய சிவசேத்திரமாகக் கருதப்படுவது சுசீந்திரமாகும். இங்கு கோயில் கொண்டிருக்கும் சுவாமியின் பெயர் தானுமாலயன் (மும்மூர்த்திகளும் ஓர் காலத்தில் ஒன்று சேர்ந்து ஒரே மூர்த்தியாய் அமைந்தது) என்று ஸ்தல புராணங்கூறுகின்றது. ஊரின் பெயரை நோக்கினால் இந்திரன் சுசி அடைந்த புரமென விளங்குகின்றது.
ஓர் காலத்தில் இந்திரன் செய்த அடாத காரியத்திற்காக அவனது உடம்பு முற்றும் ஆயிரம் யோனிகள் தோன்றிவிட்டன வென்றும், பின்னர் பன் னூறாண்டுகள் தவஞ்செய்ததின் பலனாய் அவ்யோனிகள் கண்களாய் மாறின வென்றும் பண்டைப் புராணங்கள் கூறு கின்றன.
சாபத்தை நீக்குவதற்காக இந்திரன் தவஞ்செய்த வனிடம் சுசீந்திர (புர) மென்றும் தனது வெள்ளை யானை அய்ராவதத்தை ஏன் அது மகேந்திரகிரியிலிருந்து தன்கோடு கொம்புகளால்  பூமியைக் கீறிக்கொண்டேவர அவ்வழியாகப் புறப்பட்ட நதியே கோட்டாறு எனப் பெற்றதென்றும் இதனால் இது மிக பழமையான நதியாகையால் பழையாறு என்று இப்பொழுது வழங்கப்படுகிறதென்றும் சுசீந்திரத்திற்கு சுமார் இரண்டு மைலுக்கு வடமேற்காயிருக்கும் ஊருக்கு கோட்டாறு என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது என்று அப்புராணங்கள் கூறுகின்றன.
மேற்சொன்னபடி புறப்பட்ட ஆறு, இந்திரன் யாகம் முதலிய இயற்றிய விடத்தில் வந்து நின்றது என்றும் இவ் விடத்திலேயே இப்பொழுது பொற்றாமரைத்தடாகம் அமைந் திருக்கிறதென்றும் இவ்விடத்தில் பல யாகம் செய்து தூய்மை அடைந்தான் என்றும் இத்தகைய புண்ணிய ஸ்தலத்தை எவ்விதக் குற்றஞ்செய்தவர் தரிசித்தாலும் தூய்மையடை வரென்பதும் மும்மூர்த்திகளை  ஒரே சமயத்தில் ஒரே வடிவில் தரிசிக்கிற பலனும் கிட்டும் என்பதும் இப்பக்கத்து மக்களின் நம்பிக்கை.
இவ்விடத்தில் வசிப்பவர்கள் யார்யாரெனின் பெருஞ் செல்வத்தையுடைய இக்கோவிலிலிருந்து கிடைக்கும் வருமா னத்தைக் கொண்டு காலங்கழிப்பவரே.
இவ்வூரிலிருந்து சிறிது தூரத்திற்கப்பாலிருக்கும் கக்காடு என்ற சேரியிலுள்ள சாம்போர் முதலிய தீண்டா திருக் குலத்தினரின் வண்டி முதலியவை ஆற்றிலிறங்கியே போக வேண்டுமாயின் அதற்கு உயர்குலத்தாருடைய அனுமதி வேண்டும்.
இன்றேல் வண்டியைக் கொண்டு போக முடியாது. கோயிலைச் சுற்றியுள்ள அக்கிராகாரத்தினரும் அவருக்கு அடுத்தபடியாயுள்ள வேளாளரும் சுசீந்திரம் சத்தியாக் கிரகத்தின் போது தீண்டாக் குலத்தினருக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்ட விஷயம் யாருமறிந்த தொன்றாகும். பொதுப்பணத்தைக் கொண்டு போடப்பட்டிருக்கிற வருடந் தோறும் செப்பனிடப்படுகிற சுசீந்திரப்பாதைகளில் ஒரு குலத்தார் செல்லலாகாது எனத் தடுக்கப்பட்டு வந்ததை யொட்டியே சத்தியாகிரகம் ஆரம்பிக்கப்பட்டது.
முதலாவதாக இத்தகைய புண்ணிய ஷேத்திரத்தின் புராணப்படி பார்த்தாலும் அங்கு ஜாதி வித்தியாசமில்லை யென்பதும், இந்திரனைப் போன்ற பெரும் பாவங்களைச் செய்தவரும் அங்குள்ள கடவுளை வணங்கித் தூய்மை பெறலாமென்பதும் வெள்ளிடை மலைபோல் விளங்குகின்றது. எனவே சிறிதும் குற்றமின்றி .. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை அனுமதிக்காது தடுப்பது பெரும் அறியாமையும், ஆண வமுமாகும்.
உற்றுநோக்கின் இங்கோர் உண்மைப்புலப்படும். அதாவது எந்தப் போராட்டத்திலும், கோடாரிக்காம்புகளாய்ப் பிறந்தி ருக்கும் பிராமணரல்லாதாரே தம் இனத்தவரைத் தாழ்த்துவ தற்குத் துணைபுரிகிறார்களென்பது, கடந்த சுசீந்திரம் சத்தியாக் கிரகத்திலும் யார் யார் முன்வந்தார்கள் பார்ப்பனர் யாரேனும் உண்டா?
இல்லவே இல்லை எனலாம் சோற்றுத் தடியர்களான பார்ப்பனரல்லாதாரே, அதாவது பார்ப்பனர் ... தூண்டி விட்டுப் பின் நிற்பதே பார்ப்பனர் வேலை ஏதாவது குரோதத்தைக் கிளப்பிவிட்டால் பார்ப்பனரல்லாத கோடாரிக் காம்புகள் தலைவிரித்தாடும். நம் இனத்தவரை துன்புறுத்துகின்றோமே எனச் சிறிதும் நினைக்கமாட்டார்கள்.
கோவில்  சோற்றுக்கு வழியில்லாமற் போய்விடுமோ என்ற பயம் அவர்களுக்கதிகம், சுசீந்தரம் கோவிலைப் பற்றிய வருவாயே அங்குள்ள பார்ப்பனருக்கும் பிற உயர்ந்த இனத்தவர்க்கும்.
எனவே தாழ்த்தப்பட்டவரை அனுமதித்து விட்டால், தம்பிழைப்புக் கெட்டுப்போய்விடும் என்ற பயம் ஒரு புறம் இதற்காக எதிர் சக்தியாகிரகஞ்செய்தனரேயன்றி வேறல்ல. வேறு காரணமுமில்லை. தாழ்த்தப்பட்டவர் வீதிகளில் வராத தால் வண்டிக்கூலி விறகு வெட்டுக்கூலி முதலிய பலவும் அவர்கட்கே பார்ப்பனருக்கு கோவிலினின்றும் பொருள் ஏராளமாக கிடைப்பதால், எவ்வளவு கொடுத்தாலும் அதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
எனவே பார்ப்பனீயத்தின் ஆட்சிக்குத் தோள் கொடுப் பவர் பிராமணரல்லாத கோடரிக் காம்புகளேயாகும். பிராம ணரல்லாதார் யாவரும் ஒரு முகப்பட்டு நின்றால் தாழ்த்தப் பட்டவருடைய உரிமைகள் விரைவில் பாதுகாக்கப்படும். இந்திரனைத் தூய்மைபடுத்திய தானுமாலய மூர்த்திக்கு இவர்களுடைய மாசற்றநெஞ்சைத் தூய்மைப்படுத்த மனம் வரவில்லைபோலும்.
திருவாங்கூர் அரசாங்கத்தார் தேவஸ் தான விஷயத்தில் செய்திருக்கும் சில சீர்திருத்தங்கள் ஓரளவுக்கு போற்றற் குரியனவாகும். தேவஸ்தான இலாகாவை ஏற்படுத்தியதிலிருந்து கோவில் காரியங்களெல்லாம் சிறிது கவனமாகப் பார்க்கப்படுகின்றன. பெருச்சாளிகளுடைய மனம் போல் நடக்கத்தடை ஏற்பட்டுவிட்டது.
இன்னுஞ்சிறிது முற்போக்கைக் கொண்டு கோவிலுட் சென்று கும்பிடவும் தெருவீதிவழி செல்லவும் மனிதராய்ப் பிறந்த எவருக்கும் உரிமையுண்டென உண்மையை நிலை நிறுத்தினால் மிகவும் நலமெனக் கூறுகிறோம். மிருகபலியை நிறுத்திய கவர்மெண்டார் மனித உரிமைகளின் பலியையும் நிறுத்த முன்வர வேண்டியது அவசியமாகும். ஒருகுலத்திற் கொருநீதி வழங்கல் நியாயமன்று. யாவரையும் அனுமதிப்ப தால் சுவாமி ஓடிவிட மாட்டார்! அதனால் யாதொருவிதக் கெடுதியும் நேரிடாது நன்மையே உண்டாகும்.
பார்ப்பனீயம் ஒழிக! சமத்துவம் ஓங்குக! மூடத்தனம் மூழ்குக!
-விடுதலை,4.3.16

ஜாதி வித்தியாசம் (நாகை கே.முருகேசன்)

18.5.1935, புதுவை முரசிலிருந்து
மக்களில் ஜாதி மத்தியாக கற்பிக்கப்பட்டதே ஒழிய, தானாக ஏற்படவில்லை யென்று இன்னமாகச் சொல்லலாம். சாஸ்திரத் தைச் சற்று உற்று நோக்குவோமானால் பிராமண, கூத்திரிய வைசிய, சூத்திர என நான்கு வகையாக  அக்காலத்திற்கேற்றபடி, அக்கால மக்கள் பிளவுபட்டு ஒவ்வொருபிரிவும் தங்கள் தங்கள் கடமையைச் செவ்வனே நடத்தி வந்ததாக காணக்கிடக்கிறது.
நாம் மேலே குறிப்பிட்ட காலம் வேறு, இக்காலம் வேறு என்பது வாசகர் களுக்குத் தெரிந்த விஷயம் இக்காலத்திலே பொதுவாக மூன்று ஜாதியார் (பிராமணர், குத்திரர், தீண்டாதார்)கள் தான் இருக் கிறார்களென பிராமணர்கள்சொல்லுகிறார்கள் மேற்குறிப் பிட்ட மூவகை ஜாதி உட்பிரிவில் எண்ணிலடங்காததும் எட்டிலடங்காததுமான பல ஆயிரக்கணக்கான ஜாதிகள் இருக்கின்றன.
வலுத்தவன் இளைத்தவனை அடக்கிவைப்பது என்பதற்கு ருஜூ இந்த ஜாதி வித்தியாசமே ஆகும். பிறர் சொத்தை ஏமாற்றி விலாப்புடைக்க உண்ட, உண்ணும் ஒரு சாரார் (பிராமணர்) தன் இனத்தாரைத் தவிர்த்த மற்றவர்களைக் சூத்திரரெனவும், தீண்டாதார் களெனவும் கூறுவது நமக்கு மட்டிலடங்காகோபம் வருகிறது.
குத்திரர்களை விட மிகக் கேவலமாய் நடத்தப் படுகின்றவர்கள் தீண்டாதார்களான நமது ஆதிதிராவிட சகோதரர்கள். அந்தணரென்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் எனப்பொய்யா மொழி புகலுகிறது. ஆனால் தற்கால பிராமணர்கள் எனப்படுவோர் அதற்கு முற்றிலும் முரணாக நடப்பதால், இக்காலத்தில் அம்மொழி பொய்த்து விட்டதென்னலாம்.
மேலும் மனுவில் கப்பல் பிரயாணம் செய்கிறவர்களும், வ ட் டி. வாங்குபவர்களும், குருக்கள் வேலை பார்ப்பவர்களும், ஒருவன் கீழிருந்து உக்தியோகம் பார்ப்பவர்களும், காப்பி கிளப் முதலியன வைத்து வயிறு வளர்ப்பவர்களான பார்ப்பனர் களையும் சண்டாளர்களென கூறியிருப்பதை உற்று நோக்குங்கள்.
தற்கால பார்ப்பனர் எல்லோரும் மேற்குறித்தபடி நடப்பதால், அவர்களைத்தான் சண்டாளர்களெனப் புகல இடமிருக்கிறது. சூத்திரிடத்தில் தானம் வாங்கி பிராமணர் உண்ணலாகாதென மனுவில் இருந்தும், பிராமணர்கள் அதிகார தோரணையில் சூத்திரர்களென அவர்கள் சொல்லும் தம் மக்களிடத்தில் தானம் வாங்கி உண்பது அநியாயமல்லவா? நாம் அவர்களுக்கு தானம் கொடுப்பது நம் முடைய மடமைத் தன்மையைக் காண்பிப்பதால், சாஸ்திரத்தில் சொன்னபடி கற்கால ஒழுங்கற்ற ஒருஜாதிக்குத் தானம் கொடுக்காமலிருப்பதே நலம்.
தானம்வாங்குவதற்கு உத்தம பிராமணர்கள் அகப்படுவது கஷ்டம்.   மேலும் சாஸ்திரத்தில் சொல்லியபடி ஒரு பார்ப்பனரையாவது தற்காலத்தில் பார்ப்பது குதிரை  கொம்பாக இருக்கிறது. ஆதலால் பிராமணர்களே தற்காலத்தில் இல்லை யெனலாம்.
தற்காலத்தில் சூத்திரரென்போரைப் பார்ப்பதே துர்லபமாய் இருக்கிறது. ஆகையால் சூத்திரரென்னும் வார்த்தையைப் பிராமணர்களென்று ஒரு சாரார் ரிஜிஸ்டேர்டு பார்சல் செய்து நாரத முனிவருக்கு அனுப்பட்டும்.
பெருவியாதிக்காரரையும், மற்றும் தொத்து வியாதிக்கார்களையும் தான் நாம் தொடக் கூடாதாகையால், தீண்டாதார்களெனக் கூற வேண்டுமே தவிர மற்ற நமது ஆதிதிராவிட சகோதரர்களை தீண்டாதார் களெனப் புகலுவது நம்முடைய ஆணவத்தைக் காண்பிக்கிறது. பெரும் பாலோர் தங்கள் மடமைத் தனத்தால் ஆதிதிராவிட சகோதரர்களைக் தீண்டாதார்களென நினைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரும் சற்றுநிதான புத்தியுடன் ஆழ்ந்து சிறிது நேரம் யோசித்தால் உண்மை விளங்காது போகாது.
ஆதிதிராவிடர்களும் ஒருவருக்கும் அஞ்சாமல் கோழைத் தனத்தை விலக்கிவிட்டு, தைரியத்துடன் எல்லோருடனும் நெருங்கிப் படிக்கவேண்டு மல்லாமல், பிற மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை அவர்களும் அனுபவிப்பார்களாக. அதனால் என்ன ஆபத்து நேரிடினும் அஞ்சா நெஞ்சுடன் அதைத் தவிர்த்துப் பிற மக்களுடன் கூடி வாழவேண்டும்.
ஆதிதிராவிட மக்களுக்கும் பிற மக்களுக்கும் ஆயிரக்கணக்கான கலப்பு மணம் நடைபெறவேண்டும். அப்பொழுது தான் ஜாதி வித்தி யாசம் என்னும் பேய் வந்தவிடம் தெரியாமல் பறக்கழியாகும்.
எதற்காக ஒரு மனிதன் உயர்ந்த ஜாதியாகவும், மற்றொரு மனிதன் தாழ்ந்த மனிதனாகவும் கருதப்படுகிறான் என்பதற்கு ஏதாவது காரணங்கள் உண்டா? ஆண் ஜாதி பெண் ஜாதி யாகுமிரு ஜாதி வீண் ஜாதி மற்ற தெல்லாம் குதம்பாய் என பாம்பாட்டிச் சித்தர்பாடலை எல்லோரும் கவனியுங்கள். ஆங்கிலப் புலவாகிய டென்னிசனும் அதே கருத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டி இருக்கிறார்.
சகோதரர்களே! இந்த ஜாதி வித்தியாசக் கொடுமையை ஒப்புக் கொள்ளாதார் யார்? இதை  ஒழிக்க வேண்டுமென்று சொல்லாதார் யார்? ஜாதி வித்தியாசம், உயர்வு தாழ்வு கூடா து அகற்கு ஆதாம் இல்லை யென்று சொல்லாத பெரியார் யார்? ஆனால் நாகரீக முன்னேற்றமடையும் கற்காலத்தில், ஜாதி வித்தியாசத்தைப் பாராமல் எல்லோரும் சகோதர்களென்று கருதும் இன்னாளில், ஜாதிவித்தியாசம் என்னும் பேய் மறைய இடமிருக்கிறது.
எல்லாமதங்களும் எவ்வுயிர்க்கும் அன்பா இரு எல்லோரும் சமம் அன்பே கடவுள் எனப்புகலுகின்றன. இவைகளை உணர்த்தும் உணராதுபோல் பலர், அர்த்தமில்லாமல் ஒரு பெரிய பாலைவனத்தில் போடும் வீண் சத்தத்தைப்போல ஓலமிடுவதை நோக்க நமக்கு வியப்பாக இருக்கிறது.
முக்கியமாக எல்லோரும், தங்கள் பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கும் வாலையும், நெற்றிக் குறியையும் முக்கியமாக தகர்த்தெறிய வேண்டிய விஷயங்களில் முதன்மையான தென்று சொல்லலாம்.
ஜாதி வித்தியாசம் என்னும் சாக்கடை துர்நாற்றமெடுக்கையில், சுயராஜ்யம் வேண்டுமென்று ஓலமிடுவது பழிப்பிற்கிடமாயிருக்கிறது. ஜாதி வித்தியாசத்தை அறவே ஒழிக்க ஒவ்வொரு வரும் அளவு கடந்து உழைக்க வேண்டும்.
ஜாதிகள், பல ஆயிரக் கணக்கானவை எனப் பிறர் சொல்ல தாம் கேட்கும் பொழுது, மயிர்க் கூச்சலுண்டாகிறது, மனம் நெக்குருகிறது, கண் ரத்தமாகிறது.
ஜாதி வித்தியாசம் இருக்கவேண்டு மென்போர், பெரிதும் குறுகிய நோக்கமும் தன்னலமும் கொண்டவர்களாகக் தான் இருக்கவேண்டும். ஆகவே நாம் அவர்கட்கு வேண்டிய நல் லிணக்கம் கூறி, ஜாதியின் உயர்வு தாழ்வுகளினால் உண்டாகும் தீமைகளை எடுத்துக் காட்டி மக்கள் தோற்றத்தில் பேதமில்லை என்பதை உணரச்செய்து, அதற்காக நாம் உடல்உள்ளன பலவும் தியாகஞ்செய்தும் அவசியம் நேரின் தூக்கு மேடையை ஏறவும் ஏனைய வாலிபர் முன்னணியில் வர வேண்டும்.
-விடுதலை,19.2.16

மராட்டிய மாநிலம் புனே நகரில் தமிழர் தலைவர்

புரட்சியாளர் ஜோதிபா பூலே நினைவகம் - சாவித்திரிபாய் பூலே நடத்திய பெண்களுக்கான பள்ளி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்
புரட்சியாளர் ஜோதிபாபூலே, சாவித்திரி பாய் பூலே சிலைகளுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூலே நினைவகத்தில் தமிழர் தலைவரை பூலே அறக்கட்டளையினர் மலர்க் கொத்து அளித்து வரவேற்றனர்.
புனே, மே 30- மும்பை மாநகரில் இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரி யர் பூனே நகரில் மராட்டிய சமூகப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலே தொடர்பான பல்வேறு இடங்களைப் பார்வை யிட்டார். புரட்சியாளர் ஜோதிபா பூலே - சாவித்திரிபாய் பூலே ஆகியோரது அய்ந்தாம் தலைமுறை குடும்பத்தினர் விடுத்த அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் மே திங்கள் 29 ஆம் நாள் பூனே நகருக்குச் சென்றார்.
பழைய பூனே பகுதியில் லோகியா நகர் பகுதியில் அமைந்துள்ள  ஜோதிபா பூலே அவர்கள் வாழ்ந்த இடத் திற்கு தமிழர் தலைவர் வருகை புரிந்தார். தமிழர் தலைவரை பூலே குடும்பத்தினர் சார்பாக நீட்டாடாய் இராமகந்த் ஹோலே பூலே (அய்ந்தாம் தலைமுறைப் பெயர்த்தி) மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பூலே அவர்களது சமூக சீர்திருத்தப்பணிகளுக்காக தமது தந்தையாரால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தமது மனைவி சாவித்திரிபாய் பூலேவுடன் வாழ்ந்த வீடு இன்று வரலாற்று முக்கியத்துவ இடமாகச் சிறப்பு பெற்று வருகிறது.
‘பூலே வாடி’ என்று அழைக்கப்படும் அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜோதிபா பூலே - சாவித்திரி பாய் ஆகிய இருவரது மார்பளவுச் சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பூலே குடும்ப அறக்கட்டளையினர் மராட்டிய  மாநில பண்பாட்டு வழக்கப்படி தலைப்பாகை அணிவித்து சால்வை போர்த்தி மரியாதை செய்தனர்.
பூலே நினைவகம் சீர்திருத்தம் பெற்று, சிதைந்து போன நிலையிலிருந்து மீட்டுருவாக்கப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தமிழர் தலைவருக்கு அறக்கட்டளையினர் விளக்கிக் கூறினர். பூலே எழுதிய உயில், விதவையர் வாழ்ந்த குடியிருப்புகள், ஜாதி வேறுபாடு இன்றி பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு ஆகிய பகுதிகள் சுற்றிக் காண்பிக்கப்பட்டன.
பொதுக்கிணற்றைப் பார்வையிட்ட தமிழர் தலைவர், பூலே  அறக்கட்டளையினரிடம் குறிப்பிட்டதாவது:
ஜோதிபா பூலே - தந்தை பெரியார் இருவரும் சமூகப் புரட்சிப் பணியில் ஒத்த அணுகுமுறை உள்ளவர்களாக இருந்துள்ளனர். பூலே (1827-1890) அவர்கள் வாழ்ந்த காலம் சற்று முன்பு; தந்தை பெரியார் (1879-1973) பூலேவின் சமூகப் பணிகளை பற்றி தெரிந்திராத நிலையிலும், ஒத்த சமூகப் புரட்சி செய்தவர்கள் என்ற நிலையில் ஒத்த அணுகுமுறையினைக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக குடிநீர் பொதுப் பயன்பாட்டைப் பொறுத்த அளவில் அனைவரும் பயன்படுத்தும் கிணறு ஒன்றை வெட்டி அமைத்து அதன் பயன்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை பூலே செய்திருந்தார். மகாத்மா காந்தியைப் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக குடிநீர் பயன்பாட்டினை உருவாக்கிடும் அணுகு முறையினை பூலே கைக்கொள்ளவில்லை. தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனிக் குடியிருப்பு, தனிப்பட்ட பயன்பாட்டு கட்டமைப்புகளை வலியுறுத்தவில்லை.
அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் ஜோதிபாபூலே அமைத்த குடிநீர் கிணற்றை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
உயர்ஜாதி மக்களுடன் சேர்ந்து சமத்துவமாக வாழ்ந்திடும் நிலையினை தாழ்த்தப் பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வலியுறுத்தும் பணியினை செய்து வந்தார். இந்த நாட்டு சமூகச் சூழலில் நிலவிய ஒடுக்கு முறை சமுதாயத்தை சமத்துவ சமுதாயமாக மாற்றிட தந்தை பெரியாரும்,  ஜோதிபா பூலே ஆகிய இரு மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் வாழ்ந்த கால வேறுபாட்டிலும், ஒத்த சிந்தனையாளர்களாக, ஒத்த புரட்சி அணுகுமுறையினைக் கடைப்பிடித்தவர்களாக இருந்தது தனித்துவ சிறப்பிற்கு உரியதாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் பூலே நினைவகத்தில் கூடியிருந்த பூலே அறக்கட்டளையினர் மற்றும் குழுமி யிருந்தோரிடம் விளக்கிக் கூறினார்.
பின்னர் நாட்டிலேயே பெண்களுக்கான முதல் கல்வியகமான சாவித்திரி பாய் பூலே நடத்திய பள்ளிக் கூடத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார்.
சிவாஜி நகர், புதுவார் பேட்டில் செயல்பட்ட மகளிர் பள்ளி முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பூலே அறக் கட்டளையினால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது சீர்திருத்தம் என்ற நிலையில் மகளிருக்கான கல்வி நிலையம் அமைத்து, தமது மனைவியான சாவித்திரி பாய் பூலேவிற்கு கல்வி யறிவு புகட்டி அவரையே ஆசிரியையாக அமர்த்தி பெண்களுக்கான பள்ளியினை முதன் முதலாக நடத்திய புரட்சியினை மராட்டிய மண்ணில் நடத்தியவர் மகாத்மா ஜோதிபா பூலே என்பதை நினைக்கும் பொழுது புரட்சிக்கு புது இலக்கணம் வகுத்த நிலை விளங்குகிறது'' என்று சாவித்திரி பாய் பூலே நடத்திய பெண்கள் பள்ளியினை பார்வையிட்ட தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.
பூலே வாடி, சாவித்திரி பாய் பூலே நடத்திய பெண்கள் பள்ளி ஆகிய நினைவிடங்களைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் பூலே அறக்கட்டளையினரிடம் விடை பெற்றார். பூலே அறக்கட்டளையினைச் சார்ந்த நீட்டாடாய் ஹோலே பூலே, திருச்சி - பெரியார் உலகில் நடைபெற்ற திராவிடர் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு - சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,30.5.16

தீண்டாமைக்கு காரணமே கடவுளும், மதமும்தான்!

(17.2.1929 குடிஅரசிலிருந்து)

நம் நாட்டில் தீண்டாமைக்கு இடங்கொடுத்துக் கொண்டி ருப்பது ஒரு வகையில் சாமியும் மதமுந்தான் என்று சொல்ல வேண்டும்/ சொல்லுவதெல்லாம் நியாயந்தான், கடவுள் அல்லவா அப்படி படைத்து விட்டார். அதற்கு என்ன செய்வது என்று சிலர் கடவுள் மீது பழியைச் சுமத்துகின்றனர். மற்றும் சிலர் என்ன செய்வது மதம் இதற்கு இடங்கொடுக்கவில்லையே என்று மதத்தின் மீது பழி போடுகின்றார்கள். ஆதலால் இத்தீண்டாமை தைரியமான போராட்டத்தினால் தான் ஒழிக்கக்கூடியதாயிருக்கின்றது. கடவுள் எங்கும் நிறைந்த சர்வ சக்தியுள்ளவர், பட்சபாதகமற்றவர்” என்று சொல்லிக் கொண்டு “கடவுள் தான் தீண்டாதவர்கள் என்ற கொடுமைக்குட்படும் மக்களுக்கு ஆதார”மென்பது எவ்வளவு கேவலமானது. அநேகமாக அவர் தான் இந்த தீண்டாமையைப் படைத்தவர் என்றும் சொல்லப்படுகின்றது. அது உண்மையாயின் அத்த கைய கடவுளை எப்படியாவது ஒழித்துவிட்டுத்தான் மறு வேலை பார்க்கவேண்டும்.  இந்த அநியாயமான சங்கதி அவருக்குத் தெரியாதென்றால் அதற்காக அவரை இன்னும் சீக்கிரமாய ஒழிக்க வேண்டும்.  அவரால் இத்தகைய அநீதியை விலக்கவோ அல்லது அக்கிரமம் செய்பவர்களை அடக்கவோ முடியாதென்றால் அவருக்கு
எந்த உலகத்திலும் இருக்க வேண்டிய வேலையே இல்லை. ஒழிக்க வேண்டியதுதான் நியாயம்.
கடவுளும் மதமும் இத்தீண்டாமை விலக்கப்படுவதற்கு இடங்கொடுக்கவில்லை என்று சொல்லப்படுவதற்கு எதாவது ஆதாரமிருந்தால் அவை யார் சொன்னதாக எப்படிப்பட்ட தானாலும் அவற்றை நெருப்பைப் போட்டு பொசுக்க வேண்டும்.  காரியத்தில் உறுதியாக நிற்காமல் பேசுவதான அயோக்கியத்தனத்தினால் ஒரு போதும் நாடு முன்னேற்ற மடைய முடியாது. புண் கண்ணில் பட்டால் அதை உடனே தொலைக்க மருந்து முதலியன போட்டு சிகிச்சை செய்ய வில்லையா? ஆனால் அது வலிக்கக்கூடாது எரியக் கூடாது என்று மூடிவைத்துக் கொண்டு வாய்ச்சமாதான்ம சொல்வது புழுக்குச் சாவதற்கு வழிதான்.
-விடுதலை,13.2.16

இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்க மகாநாடு

இரண்டாவது சென்னை மாகாண தீண்டாமை விலக்க மகாநாடு(17.2.1929 குடிஅரசிலிருந்து)
விஜயம் செய்த பிரமுகர்கள் சென்னை மாகாண இரண்டாவது தீண்டாமை விலக்கு மாநாடு பிப்ரவரி 9ஆம் தேதி மாலை பச்சையப்பன் கலாசாலை மண்டபத்தில் கல்கத்தாவைச் சேர்ந்த சீமதி ஜோதிர் மாயி கங்குலி அவர்கள் தலைமையில் கூடியது. மகாநாட்டுத் திரளான பொது ஜனங்களும் அநேக மாதர்களும் வந்திருந் தனர். மகாநாட்டுக்கு வந்திருந்தவர்களுள் முக்கியமாக முதல் மந்திரி டாக்டர் சுப்பராயன் அவரது மனைவியார் , சா.எ.பி. பாத்ரோ, திவான் பகதூர்கள், ...ராங்குசம் நாயுடு, டி.வரதராஜூலு நாயுடு, ராசபகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே, .. சாகிப்கள் பி.ரங்க நாதம் செட்டி, எம்.மதுரைபிள்ளை, சிறீமான்கள் டி.நல்லசிவம் பிள்ளை, ஏ.ராமசாமி முதலியார்,  ஈ.வெ.ராமசாமி நாயக்கர், வி.சக்கரை செட்டியார், கெத்தா ரங்கய்யா நாயுடு, ஆர்.சீனிவாசன், ஜே.எஸ்.கண்ணப்பர், எஸ்.ராமனாதன், ஸி.ஜெயராம் நாயுடு, பசுதேவ், சுந்தரராவ் நாயுடு, பி.எஸ்.குருசாமி நாயுடு, ஜனார்த்தனம் நாயுடு, சிறீதாதன் நாயுடு, தண்டபாணி பிள்ளை, எர்னஸ்ட் கர்கக், ரௌண்ட்பிட்மென், ராமச்சந்திரம் பிள்ளை, டி.வி.நாதன், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மதிஜீனராஜ் தாஸா, சிறீமதி நாயகம் முதலியவர்களும் மற்றும் பலரும் வந்திருந்த கூட்டம் மண்டபம் நிறையவும் வெளியிலும் நிறைந்திருந்தது.
மகாநாட்டு நடவடிக்கை
எ.ராமசாமி முதலியார் பெருத்த கோஷத்தினிடையே மகாநாட்டுக் கொடியேற்று விழாவை ஆற்றினார்.
பின்னர் வரவேற்புக் கழகத் தலைவர் ராவ்பகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே கேட்டுக்கொண்டதற்கிணங்கி மாநாட்டை தொடங்கி வைத்து சர்.எ.பி.பாத்ரோ அவர்கள் மிக ஊக்கமான சொற்பொழிவு நிகழ்த்தினார். ராவ்பகதூர் ஆர்.கிருஷ்ணராவ் பான்ஸ்லே அவர்கள் பிறகு பெருத்த கரகோஷத்தினிடையே மாநாட்டுப் பிரதிநிதிகளையும் மற்றை யோரையும் வரவேற்று அரியதோருரை செய்தார்.
தலைவர் தேர்தல்
பின்னர் வரவேற்புக் கழகத் தலைவர் சொல்லுக்கிணங்கி ஈ.வெ.ராமசாமி நாயக்கர் அவர்கள் அம்மாநாட்டுக்கு கல்கத் தாவைச் சேர்ந்த சிறீமதி ஜோதிர்மாயி கங்குலி  அம்மையாரைத் தலைமை வகிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதாகப் பிரேபித்தார். பின்னர் சிறீமதி நாயகம் அம்மையார்,  அப்பிரே ரணையை ஆமோதித்துப் பேசியபின், சிறீ மான்கள் பி.ராமனாதன், ரெவரெண்ட்பிட்மன், கிருஷ்ணமாச் சாரியார், ராமாஞ்சலு நாயுடு, கெத்தா ரெங்கய்யா நாயுடு, இரட்டைமலை சீனிவாசன், ஜே.எஸ்.கண்ணப்பர், எஸ்.ராமநாதன் முதலி யவர்கள் ஆதரித்தார்கள். பின்னும் சிறீமான்கள் எஸ்.எம்.ஏ. சமத்சாயபுவும், எஸ்.ராமநாதனும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியபின் தீர்மானம் பெருத்த கரகோஷத்தினிடையே ஏகமனதாக நிறைவேறியது. மாநாட்டுத் தலைவி சிறீமதி ஜோதிர்மாயி கங்குலி மகாநாட்டுத் தலைமைப்பதவி வகித்தார். இந்நிலையில் மாநாட் டுத் தலைவிக்கும் வரவேற்புக்கழகத் தலைவர் பான்ஸ் லேயுக்கும் ஈ.வெ.ராமசாமி நாயக்கரவர் களுக்கும் நீண்ட கரகோஷத்தினி டையே அழகிய சரிகை மாலைகள் போடப்பட்டன.  
-விடுதலை,13.2.16

(17.2.1929 குடிஅரசிலிருந்து)
தீண்டாமை விலக்கு தீர்மானம்
ஈ.வெ.ராமசாமி நாயக்கர் “மனித வாழ்கையின் நன்மை களை உத்தேசித்தும் ஜீவகாருண்யத்தை முன்னிட்டும் தேச முன்னேற்றத்தைப் பொருத்தும் நம்நாட்டில் பெரும் பகுதியினர் மீது சுமத்தப்பட்டுள்ள தீண்டாமை என்னும் கொடிய தடையை உடனே விலக்க பொது ஜனங்களிடை இடைவிடாத பிரச்சாரம் செய்து அவர்களைக் கண் விழிக்கச் செய்ய வேண்டும்“ என்னும் தீர்மானத்தைப் பிரேரேபித்துப் பேச சிறீமான் கெத்தா ரெங்கய்யா நாயுடு தெலுங்கில் தீர்மானத்தை ஆமோதித்துப் பேசினார். பிறகு ஏகமனதாய் நிறைவேறியது.
சமத்துவமான நகரவாசி உரிமை
அடுத்தப்படியாக சரேந்திரநாத் ஆரியா அவர்கள் தீண்டாமை என்னும் காரணத்தால் யாருக்கும் நகரவாசிகளின் பொதுவான உரிமைகள் மறுக்கப்படக் கூடாதென்று இம் மாநாடு அபிப்பிராயப்படுவதுடன் இந்நாட்டு மக்களுள் சகல வகுப்பாரும்  ரஸ்தாக்கள், ஆபிஸ்கள், குளங்கள், கிணறுகள், ஆஸ்பத்திரிகள், சத்திரங்கள் முதலான பொது ஸ்தாபனங்களில் தாராளமாய் விடப்பட்டு உபயோகித்துக் கொள்ளும் உரிமையளிக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கிறது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க சிறீமான் எர்னஸ்ட்ராக் அவர்கள் அத்தீர்மானத்தின் கடைசியில் “செல்வச் சிக்கன விஷயங்களில் வயது, ஆண், பெண், என்ற வித்தியாசமின்றி சமமான வேலைக்குச் சமமான கூலி கொடுக்கப்பட வேண்டும்“ என்பதையும் சேர்க்க வேண்டுமென்ற திருத்தப் பிரேரணையன்று கொண்டுவந்து திருத்தம் சிறீமான் ஆரியா அவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டு முடிவில் திருத்தப்பட்டபடியே ஏகமனதாக நிறைவேறியது.
வந்தனத் தீர்மானம்
பிறகு “தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு கலா சாலை முதலியவற்றிலும் பரீட்சைகளிலும் சேர்த்துக் கொள் ளப்படுவதன் சம்பந்தமாக பல சாதககங்கள் செய்ப்பட்டிருப் பதன் சம்பந்தமாகச் சர்க்காருக்கு மாநாடு தன் வந்தனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்ற தீர்மானம் சிறீமான் டி.ராமச்சந்திரன் அவர்களால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் ராமாஞ்சலு நாயுடு அவர்களால் ஆமோதிக்கப்பட்டு ஏகமன தாக நிறைவேற்றப்பட்டது.
ஆலயப்பிரவேச உரிமை
பின்னர் சிறீமான் என்.தண்டபாணிப்பிள்ளை “தீண்டப் படாதார் என்பவர்களும் இந்துக்களாதலால் எந்த இந்து ஆலயத்திற்குள்ளும் சென்று கடவுளை வழிபடுவதில் தடுக்கப் படக் கூடாதென்றும் இம்மாநாடு வற்புறுத்துவதுடன், இந்து ஆலயங்களனைத்திலும் தீண்டாதாருக்கு ஆலயப் பிரவேச உரிமையளிக்கும் விஷயத்தில் உடனே தக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென்று மதஸ்தாபனங்களின் நிர்வாகி களை இம்மாநாடு வற்புறுத்துகின்றது” என்னும் தீர்மானத்தைப் பிரேரேபிக்க ராஜகோபால், வி.ஜி.வாசுதேவ பிள்ளை ஆகிய வர்கள் தீர்மானத்தை ஆதரிக்க ஏகமனதாக நிறைவேறியது.
ஆஷோபிக்கத் தக்க விளம்பரங்கள்
பின்னர் சிறீமான் கோலப்பன் அவர்களால் “காப்பி ஹோட்டல்கள், க்ஷவரக் கடைகள், தண்ணீர்ப் பந்தல்கள் முதலிய வற்றில் தீண்டாதாருக்கு இடமில்லையென்று கேவலப் படுத்தும் விளம்பரங்கள் போடப்படுவதைக் குறித்து இம்மாநாடு வருந்துவதுடன், அத்தகைய விடங்களிலெல்லாம் அவர்களை தாராளமாக விடப்படவேண்டுமென்று
வற்புறுத்துவதுடன், தீண்டாத வகுப்பினரின் நண்பர்களென்று சொல்லிக் கொள்பவர்கள் அத்தகைய ஆ«க்ஷபிக்கத்தக்க விளம்பரங்களுள்ள விடங்களுக்கு செல்லாமல் நின்று விடவேண்டு மென்றும் கேட்டுக்கொள்ளுகின்றது” என்ற தீர்மானம் பிரேரேபிக்கப்பட்டு குப்புசாமி பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறியது.
கிறிஸ்தவ ஆலயத்திலும் தீண்டாமை
அடுத்தபடியாக ரெவ்ரெண்ட் பிட்மன் அவர்கள் “சில கிறிஸ்தவ (சர்ச்சுகள்) ஆலயங்களிலும் தீண்டாமை என்னும் வழக்கம் அனுசரிக்கப்பட்டு வருவதற்காகவும், தீண்டப்படா தோர் வகுப்பைச் சேர்ந்தவர்களை ஆலயங்களில் மற்றவர் களுடன் சமமாக அனுமதிக்காது தனிப்படுத்தி  வைப்பதுடன் ஆலயச் சடங்குகள்  சிலவற்றில் பேதாபேதங்காட்டி வருவதற் காகவும் இம்மாநாடு வருந்துவதுடன், இத்தகைய வித்தியாசங் களையும் தடைகளையும் ஒழித்துவிடும்படி ஆலய நிர்வாகி களைக் கேட்டுக் கொள்ளுகின்றது” என்னும் தீர்மானத்தை பிரேரேபிக்க சிறீமான் எஸ்.எம்.ஏ.சமத் தீர்மானத்தை ஆமோ தித்துப் பேச தீர்மானம் ஆகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மோட்டார் பஸ் தடைகள்
பின்னர் “சில பஸ் சொந்தகாரர்கள் தீண்டாதாரை மோட்டார்காரில் ஏற்றிக்கொள்ள மறுத்து வண்டிச்சட்ட விதிக்கு விரோதமாய் நடந்து கொள்வதைக் குறித்து இம்மாநாடு அதிகாரிகளுக்கு கவனமூட்டுவதுடன், அவ்வாறு மீறி நடப்பவர்களைக் கடுமையாகத் தண்டித்து அத் தொல்லையை ஒழிக்கும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளப்படுகின்றது” என்னும் தீர்மானம் முடிவில் சிறீமான் நடேசமுதலியாரால் பிரேரேபிக்கப்பட்டு சிறீமான் பாலகுரு சிவத்தால் ஆமோதித்துப் பேசப்பட்டபின் ஏகமனதாக நிறைவேறியது.
-விடுதலை,13.2.16

தந்தை பெரியார் பொன்மொழி
சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமுகங்களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக்கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது. ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான் மையை உண்டாக்கி யிருக்கிறது.

ஞாயிறு, 29 மே, 2016

பாரதமாதாவின் புத்திரிகள் நம் சகோதரிகளல்லரா?

: திரு.பி.குப்புசாமி
(1929 - குடிஅரசிலிருந்து) 

எனக்குப் பெஜவாடாவில் பார்ப்பனரல்லாதார் திருமண ஊர்வலத்தைக் கண்டதும் பரிதாபமும் ஒருபக்கமும் எங்கள் மதம்போச்சு, எங்கள் சாஸ்திரம்போச்சு, வருணாசிரம தர்மத் துக்கு அழிவுவரலாச்சு, எங்கள் பணவரும்படி போச்சுது, எங்கள் தலைவிதி குடிஅரசு வந்து இப்படியாச்சுது என்று கூக்குரலிடும் சில வைதீகர்களிடம் வெறுப்பு ஒருபக்கமும் உண்டாயிற்று.
மணமகனும், மணமகளும் பல வர்ணமான, பாசிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் பல்லக்கில் ஏறி பாண்டு, நாதசுரவாத்தியங்களுடன் ஊர்வலம் வந்தனர். பல்லக்கிற்கு முன்னால் பத்து முதல் பதினெட்டு வயதிற் குட்பட்ட சுமார் பத்து  அழகிய வாலிப தாசிச் சகோதரிகள் பாட்டுகள் பாடிக்கொண்டும் நடனம் புரிந்துகொண்டும் வந்தனர்,
அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பணத்திற்காக தங்கள்  மானத்தை துறந்து தாங்கள் தொழில் புரிய உதவியாகயிருக்கும் பலருடைய மனது குதூகலமடையும் விண்ணம் பலவிதமான அபிநயங்கள் செய்யுங்காலையில் அது நோக்கும் விசாலபுத்தி படைத்த எவரும் வெட்கத்துடன் துக்கப்படாமலிருக்க முடியாது.
இவ்வித இழிதொழிலும் இதுபோன்ற இன்னும் பல  அட்டூழியங்களும் நடக்கவிடாமலும், நம் சொந்த சகோதரிகள் பாரத சேய்கள் இக் தொழிலைவிட்டு நன்மார்க்கத்தையடையும் படியான புத்தினய அவர்களுக்கு கொடுக்கும்படியும், இந்தத் தொழில்செய்வதற்குக் உதவியாக இருக்கும் சிலருக்கு நல்ல உணர்ச்சி உண்டாகும்படி செய்யவும் தீவிரபிரச்சாரம் செய்யவேண்டும்.
அச்சகோதரிகளைச் சுற்றிலும் பல வாலிப மாணவர்கள் நின்று கொண்டு கேலியும் பரிகாசமும் செய்து கொண்டே வந்தனர். அப்பெண்கள் நமது சொந்த சகோதரிகளாயிற்றே ஓர் தாயான பாரத மாதாவின் அரும்புதல்விகளாயிற்றே அவர்கள் இத்தகைய இழிதொழில்புரிந்து வாழ்க்கை நடத்துவது நம்முடைய பாரத நாட்டுக்குத்தானே அவமானம் என்று உணர்ச்சி இல்லாத இந்த வாலிப மாணவர்களின் அறியாமைகுறித்து எனக்குத் துக்கம் ஏற்பட்டது.
அந்த ஊர்வலம் பிரதான வீதிகளின் வழியே சென்றது. ஆனால் நான் பார்க்கும்படி நேரிட்டது  ஒரு பார்ப்பன அக்கிரஹாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொழுதேயாகும். அந்தரஸ்தாவின் இருபுறமுமுள்ள வீடு களில் வசிக்கும் பார்ப்பனப் பெண்கள் எல்லோரும் வாசலில் நின்றுகொண்டு மேற்படி தாசி சகோதரிகள் பாடும் பாட்டுக் களைக் கேட்டும் அவர்கள் நடனம்புரிவதையும் அபிநயங்கள் செய்வதையும், பார்த்தும் சந்தோஷமடைந்தனர்.
தங்களைப் போன்ற பெண்மணிகள் இவ்வித இழி தொழிலைவிட்டுச் சீர்திருந்தும்படியான வழியை தேட கவலைப்பட வேண்டிய அவர்கள் அக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததைப் பார்க்க நான் பெரிதும் வருந்தினேன். அவ்வூர்வலத்தை முதன்மையாக இருந்து நடத்துபவர் அந்தச் சகோதரிகளை எந்தெந்த வீட்டுவாசலில் பெண்கள் கும்பலாக இருந்தனரோ அந்தந்த இடங்களில் நிறுத்திப்பாடும்படியும் நடனம் புரியும்படியும் செய்துவந்தனர்.
இதில் இன்னும் ஓர் சம்பவம் குறிப்பிடற்பாலது. மண மகனின் சிநேகிதர்களில் சிலர் அத்தாசி சகோதரிகளில் ஒரு அழகிய மாதை அழைத்து அன்னார் கையில் ஏதோ கொஞ்சம் பணங்கொடுத்து பல்லக்கில் வந்து கொண்டிருக்கும் மணமகனுக்கும் பன்னீர்தெளிக்கும்படி கேட்டு அச்சகோதரி அவ்விதம் செய்யவே எல்லோரும் அதைப்பார்த்து மகிழ்ந்தனர்.
ஊர்வலங்களில் இந்தவிதமான வாலிப சகோதரி களை நடனம் புரியும்படி செய்ய எந்தச்சாத்திரம் இடங் கொடுக்கிறதோ அறியேன். இப்படிச் செய்வதில் அவர்கள் நோக்கம்தான் என்னவோ? இப்படிப்பட்ட சம்பவங்கள் நமது வாலிப மாணவர்கள் கெடுவதற்கும் நம்முடைய இந்திய சமூகத்தை மிஸ்மேயோ போன்ற அன்னியர் இழிவு படுத்துவதற்கும் சந்தர்ப்பங்களாக இருப்பதுமல்லாமல் இந்த தாசித் தொழிலுக்கு ஊக்கம் அளித்ததுமாகும். இது மாதிரியாக இவ்வூரில் சாதாரணமாக அநேக ஊர்வலங்களில் நடந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன்.
இனியாகிலும் நம் சகோதரர்கள் விழித்துக் கொண்டு சீர்திருத்துவதோடு பார்ப்பனர்களில் வைதீகர் ஓர் சாரார் தாசித் தொழில் செய்வதற்கு தங்கள் சாஸ்திரக்குப்பைகளை கிளப்பி ஆதாரம் காட்டினாலும் அப்படிப்பட்ட சாஸ் திரங்களை தீயில் இட்டுக் கொளுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
-விடுதலை,5.2.16

ஆழ்வார் திருநகரியும் அய்யங்கார்களின் அக்கிரமமும்

(1929 - குடிஅரசிலிருந்து)
ஆழ்வார் திரு நகரியென்பது திருநெல்வேலிக்கு சுமார் இருபது மைலிலிருக்கும் ஊர். இவ்விடத்தில் ஆழ்வார் அவ தரித்ததினால் இதற்கு ஆழ்வார் திருநகரியெனும் பெயருண் டாயிற்று எனப்படுகிறது. ஆழ்வார் பிறப்பில் பார்ப்பனால் லாதார்.
அப்படிப்பிறந்த இவரை ஆராதிக்கவும் இவர் விக்கிரத்துக்கு அபிஷேகம் பண்ணிக்கழுவவும் ஆடை அணி முதலியவற்றைக் கொண்டு அலங்கரிக்கவும் அவ்விக்கிரகத் திற்கு அமுது செய்வித்த அன்னப்பட்சனம் முதலியவை களையும் அபிஷேகமுறையால் கழுவின நீரையும் புசிக்கவும் உள்ள பாத்யதைகளை இந்த அய்யங்கார்களாகிய பார்ப் பனர்களே உரிமை செய்து கொண்டதோடு நில்லாமல் ஆழ்வார் திரு வீதிகளில் உத்சவம் கொண்டாடுகிற சமயத்தில் ஆழ்வார் விக்ரகத்தை நான்கு வீதிகளிலும் ப்ரதசட்ணமாக தூக்கிக்கொண்டு வருகிறசமயத்தில் கூட பார்ப்பனல்லாதாரை ஆழ்வார் பக்கத்தில் சென்று தரிசிக்கவிடாமல் ஜீயர்களென் போரும் ஆச்சாரிகள் என்போரும் சுற்றிக்கொள்கிறார்கள்.
இத்தோடு தங்கள் சாதியாரைத் தவிர வேளாளர்களோ, நாயக்கர்களோ, கோனார்களோ, நாயக்கர்களோ தரிசிக்கவோ கும்பிடவோ ஆழ்வார் விக்ரகத்திற்கு பக்கத்தில் சென்றால் அவர்களை உற்றுப்பார்க்கிறதுமல்லாமல் உனக்குக்கண் ணில்லயா?  தூரவிருந்தால் தெரியாதா? பெரியவாள் சின்ன வாள் மேல் சாதி கூட தெரிகிறதில்லையா? என்று மரியாதிக்குப் பங்கமுண்டாகும். சொற்களால் நிந்திக்கிறார்கள்.
சுயமரியாதையுள்ளவர்கள் யாராவது இதற்கு ஏதாவது சமாதானமாக கோவிலுக்குள் தான் இம்மாதிரி அநீதி நடத்துகின்றீர்கள். வீதிகளில் கூட நாங்கள் ஆழ்வாரை அணுகக்கூடாது என்பது எவ்வளவு அகம்பாவமான காரியம்! என்று கேட்டால் ஓ ஓஹோ நீ பிராமணாள்,
புடை சூழ்ந்து வருகிறபோது அவாளை மதியாமல் ஆழ்வார் பக்கத்தில் வந்து பிராமணாள்வந்து இருக்கிறார்களே என்று கூட மதியாமல் பிரதட்சணம் செய்வதாகச் சொல்லுகிறாயே நீ என்ன ஜாதிமனிதன் என்று நிந்தித்து துரத்தியடித்துத் துன் புறுத்துகிறார்கள்.
இக்கொடுமையைச் சகியாதவர்களாகிய தன் மதிப்பு கொண்டவர்களில் ஒருவரான திருவைகுண்ட தாசர் என்பவர் ஆழ்வார் வீதிகளில் பிரதட்சணமாக வரும்போது நீங்கள் வீதிகளில் மேய்த்து திரியும் நாய், பன்றி, கழுதை முதலிய இழி ஜந்துக்களைப் பார்ப்பதும் பக்கத்தில் போவதும் அவைகளை பிரதட்சணம் செய்வதால் வந்த தீங்கென்ன என்று கேட்டார்.
இந்த கேள்வி கேட்டதும் பார்ப் பனர் மனம் புண்ணானதாக கேட்டவரை உருட்டிப் பார்த்து அடே சூத்திரப்பயலே இனி இங்கு நில்லாதே ஓடிப்போ என்று பாதகப் பார்ப்பனர் கடிந்து பேசத்துவக்கினார்கள். உடனே இந்த சுயமரியாதை வீரர் ஓய்! நீ யார் தெரியுமா, நீர் ஓர் வடநாட்டு ஆரியன், இந்த ஆழ்வார் யார் தெரியுமா, தென்னாட்டவர், நானும் தென்னாட்டவன், ஆக நானும் ஆழ்வாரும் ஓர் நாட்டவர்கள்.
ஒரே பார்ப்பனரல்லாத இனத்தவர்கள், இந்த ஆழ்வாருக்கு கோவில், குளம், கட்டுவித்தவர்களும் எங்களினத்தார்களாகிய பார்ப்பனரல் லாதாரேயாவார்கள். பூசை, திருவிழா முதலியசெலவுகளுக்கும் மானியம் விட்டவர்களும் நாங்களே, இவைகளை நடத்தி வைக்கக்கூலி பேசி கூலிக்கு உழைக்க வந்த ஆட்களாகிய உங்களை விசாரிப்பவர்களும் நாங்களே யாவோம். நீங்கள் செய்யும் அக்கிரமங்களை அறிந்து கண்டிக்கவும், விலக்கவும்,
புதிதாகச் சேர்க்கவும் உரிமையுள்ளவர்களும் நாங்களாகவே இருக்க இம்மாதிரியான அநீதிகள் இனி நிலைக்காது என்று சொன்னார்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இச்சுயநலப் பார்ப்பனருக்குக் கோபாவேசம் பிறந்து  அப்பெரியாரான நியாயவாதியை அடித்து துன்புறுத்தினார்கள் என்றால் இவர்களின் அக்கிரமத்துக்கு யார் பொறுப்பாளிகள்? தேவஸ்தான பரிபாலன கர்த்தர்களா? ஊர் பொதுமக்களா? சர்க்கார்தானா? என்று பார்க்கும்போது ஒவ்வொரு சுயமரி யாதை வாய்ந்தவர்களுக்கு இதை சீர்படுத்தும் பொறுப்பு உண்டு என்பதும் சுயமரியாதை ரத்த ஓட்டமில்லாத எந்த அதிகார அமைப்போ ஆளுகையோ நாட்டில் இருந்தாலும் மக்களை அடிமைப்படுகுழியிலும் அறியாமையிலும் மூழ்கத் தான் செய்யுமென்பதும் திண்ணம்.
ஆகையால் சுயமரியாதை கொழுந்து விட்டு படர்ந்து வரும் இக்காலத்திலாவது, இத்தகைய அநீதிகளையும் அக்கிரமங்களையும் ஒழித்து நாட்டின் நலனை நிறுவ முன்வர பொதுமக்களை வற்புறுத்தி அழைக்கிறேன் என்று ஓர் அனுதாபி எழுதுகிறார்.
-விடுதலை,5.2.16

தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை வெறும் இரண்டு விழுக்காடு

டில்லி, பிப்.4_ அய்த ராபாத் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் ரோஹித்வெமுலா தற் கொலையை அடுத்து பல்கலைக் கழகங்களில் தலித்துக்களின் நிலைமை குறித்து திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு உள்ளன.
இந்தியா முழுவது முள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் வெறும் இரண்டுவிழுக்காடு மட் டுமே  தலித் ஆசிரியர்கள் பணிபுரிவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன.
இந்தியாவில் உள்ள எந்த ஒரு மாநிலத்திலும் ஆசிரியர் பணி நியமனத் தில் இட ஒதுக்கீடு பின் பற்றப்படுவதில்லை என்ற பச்சையான உண்மை ரோஹித்வெமுலாவின் மரணத்திற்குப் பின்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தலித் மாணவர்கள் உயர்வகுப்பு ஆசிரியர்களால் தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டு வருகின் றனர்.
உயர்கல்வி நிலையங் களிலும் ஜாதிய தீண் டாமை இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு நிகழ்வுகள் அன்றாட நாளிதழ்களில் வந்துகொண்டு இருக் கின்றன. இந்நிலையில் அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் தீண்டாமை மற்றும் உயர்ஜாதி வெறியர்களின் அழுத் தம் காரணமாக பல் கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட ரோஹித்வெமுலா தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலையின் மூலம் இந்த நூற்றாண்டிலும் ஜாதிதீண்டாமை உயர்கல்வி நிலையங்களில் தொடர்கிறது என்பதைக் காட்டுகிறது, தலித் மாணவர்களுக்கு அவர் களுக்கான பிரதிநிதிகள் உயர்கல்வி நிலையங்களில் இல்லாதது மிகப்பெரும் பாதிப்பாக உள்ளது.

தேசிய உயர்கல்வி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியா முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் 2 விழுக்காடு தலித் ஆசிரியர்களும் பழங்குடியின ஆசிரியர்கள், வெறும் 0.93 விழுக்காடும் உள்ளனர் என்று அந்த அந்த அறிக்கை கூறுகிறது.
இவ்வளவு குறைவான எண்ணிக்கையில் தலித் ஆசிரியர்கள் உள்ளதால் அவர்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்கி தங்களின் பிரச்சினைகளை எடுத்துச் செல்ல இய லாமல் தவிக்கின்றனர்.
உயர் கல்வி துறை அறிக்கை
2016 ஜனவரி 22-ஆம் தேதி வெளியான உயர்கல்வித்துறை அறிக்கையில் இந்தியா முழுவதிலுமுள்ள 716- பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் வரும் 38,056 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் 14-லட்சம் ஆசிரியர்களில் வெறும் 1.02 1லட்சம் தலித் ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இதில் பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை 30,000 மட்டுமே  மேற்குவங்க மாநிலத்தில் மட்டுமே தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை 16.6 விழுக் காடாக உள்ளது. இங்கு பழங்குடியின ஆசிரியர்கள் 8.6 விழுக்காடாக உள் ளது. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுரேந்திர பாபு என்கிற தலித் பேராசிரியர் இதுபற்றிப் பேசும் போது, தலித் ஆசிரியர்களோ அல்லது பழங்குடியின ஆசிரியர்களோ அவர்களின் மீது உயர்ஜாதி நிர்வாகத்தினர் நடத்தும் மறைமுகத் தீண்டாமை குறித்து வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தலித் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பது, அங்கு பயிலும் தலித் மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும், தலித் மற்றும் பழங்குடியினர் பெரும்பாலும் முதல் தலைமுறை ஆசிரியர்கள், மேலும் அவர்களுக்கு ஆதரவாக எந்த ஓர் அமைப்பும் இல்லாத நிலையில் தங்களின் உள் ளக்குமுறலை வெளியில் சொல்லாமல் தங்களின் மீதான தீண்டாமைக் கொடுமையை மவுனமாக ஏற்றுக் கொள்கின்றனர். ரோஹித் வெமுலாவிற்கு நீதிகேட்டு நாங்கள் போராடிவந்தாலும் நிர்வாகம் எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை. இதற்கு எண்ணிக்கையில் நாங்கள் மிகவும் குறைவாக இருப்பதும் எங்களுக்கு கல்லூரியில் உள்ள எந்த ஓர் ஆசிரியர் அமைப்பின் ஆதரவும் இல்லாத நிலையும்தான் காரணம்.  
தலித் உரிமைக்களுக் காகப் போராடும் குரீந்தர் ஆசாத் என்பவர் கூறும்போது தலித் பிரிவில் இருந்து வரும் ஆசிரியர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் இருப் பதால் அவர்கள், உயர் ஜாதியினரின் தீண் டாமைக் கொடுமைக்கு ஆளாகின்றனர்.  உயர் கல்வி நிறுவனங்களில் நவீன தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின் றன. ரோஹித் வெமுலா வின் மரணம் இதற்கு சான்றாக உள்ளது.
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்களை வகுப்பறைகளில் சரியாக நடத்தாதது, அவர்களை தேர்வுகளில் தேர்ச்சி அடைய விடாமல் செய்வது, கல்லூரியில் சேரும்போதே அவர்களுக் கென தனியான சில விதிகளை மறைமுகமாக உருவாக்கி அவர்களை அதன் படி நடக்கச் செய்வது போன்ற பல்வேறு தீண்டாமைக் கொடுமைகள் நடைபெறு கின்றன. இதனால் அந்த மாணவர்கள் தங்களின் கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் தாழ்வு மனப்பான்மையிலேயே கல்லூரியை விட்டுவெளியே வருகின் றனர். இது அவர்களின் எதிர்காலத்தையே பாதித்து விடுகிறது, என்று கூறினார்.
டில்லி பல்கலைக்கழக செயற்குழு உறுப்பினர்  பேராசிரியர் அபு ஹபீப் கூறியதாவது, டில்லி  பல்கலைக்கழக செயற் குழுவில் மொத்தம் 813 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் 60 பேர், பழங்குடியினர் 19 பேர் மட்டுமே உள்ளனர்.

இது குறித்து நாங்கள் மனிதவளத்துறை அமைச் சகத்திடம் கடிதம் மூல மும், நேரிலும் தெரிவித்து பல்கலைக் கழக செயற்குழுவில் தலித் உறுப்பினர்களின் எண் ணிக்கையை உயர்த்துங்கள் என்று கோரிக்கை விடுத்தோம் ஆனால் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அரசு எடுக்கவேயில்லை.
நாடு முழுவதிலுமுள்ள கல்லூரிகளில் இவ்வளவு குறைவான அளவு, தலித் மற்றும் பழங்குடியின ஆசிரியர்கள் இருப்பது குறித்து நாடாளுமன்றத்தில் எடுத்துவைக்கப்பட்டது, இதற்கு மனிதவளத்துறை அமைச்சர், தகுதியான நபர்கள் கிடைக்கவில்லை என்று திரும்பத் திரும்ப ஒரே பதிலையே கூறி வருகிறார்.
ஆனால் பெரும்பா லான கல்லூரி நிர்வகங்கள், தகுதியானவர்களாக இருந் தாலும் நேர்காணலிலேயே அவர்களை தகுதியற்ற வர்கள் என்று முத்திரை குத்தி அறிக்கை அனுப்பி விடுகின்றார். கல்லூரிகளில் ஆசிரியர் பணிகளில் இட ஒதுக்கீடு என்பது கேள் விக்குறியாகவே உள்ளது.
மத்திய அரசின் கீழ்வரும்  42 பல்கலைக் கழகங்களில் ஒரு தலித் துணைவேந்தர்கூட இல்லை, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசின் இட ஒதுக்கீடு சரிவரப் பின்பற்றப்படுவதில்லை, இதனால் நாடு முழுவதும் தலித் மற்றும் பழங்குடியின ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது, தலித் மாணவர்களுக்கான பிரதிநிதிகள் இல்லாத பட்சத்தில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் மோசமாகிவிடும்.
-விடுதலை,4.2.16

ஆந்திராவில் இடஒதுக்கீடு போராட்டம்

விஜயவாடா, பிப். 1- ஆந்திர மாநிலத்தில் காபு, பலிகா, தெலகா ஆகிய ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் கணிசமா னோர் உள்ளனர். தான் ஆட்சிக்கு வந்தால், அந்த ஜாதியினருக்கு இட ஒதுக் கீடு அளிப்பதாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு வாக்கு றுதி அளித்தார். ஆனால், சந்திரபாபு நாயுடு ஆட் சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆன பிறகும், இட ஒதுக்கீடே வழங்கப் படவில்லை.
இதனை தொடர்ந்து, நாயுடு பிரிவில் ஒன்றான காபு சமுதாயத்தினரை பிற் படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி ஆந்திர மாநிலம், கிழக்கு கோதா வரி மாவட்டம், துனி பகு தியில் நேற்று காபு கர் ஜனை எனும் பெயரில் பிரம் மாண்ட மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பத்மநாபன் தலைமையில் நடந்த இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து நடைபெற்ற சாலை மறி யல், ரயில் மறியல் போராட் டத்தின்போது வன்முறை வெடித்தது. அவ்வழியாகச் சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ் பிரஸ் ரயிலுக்கு தீ வைக் கப்பட்டது. இதில் 8 பெட் டிகள் எரிந்து நாசமாகின. அங்குள்ள காவல் நிலை யமும் தீ வைத்து கொளுத் தப்பட்டது. இதனால் ஆந் திராவில் பதற்றமான சூழ் நிலை நிலவுகிறது.
மேலும், கிழக்கு கோதா வரி மாவட்டம் வழியாகச் செல்லும் கொல்கத்தா _- சென்னை இடையிலான தேசிய நெடுஞ்சாலையை யும் அவர்கள் முடக்கிய தால், அந்த வழியாக போக் குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த கலவரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் உள்துறை உயரதிகாரிகளு டன் விஜயவாடாவில் நேற்று மாலை அவசர ஆலோ சனை நடத்தினார். ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டவர் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதாரண மக்கள் இதில் பாதிப்படையக் கூடாது எனவும் முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் செய் தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு காபு இன மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். மேலும் இந்தப் போராட்டத்தால் காபு மக்களுக்குத் தான் இழப்பு என்றும் கூறினார்.
இந்நிலையில், இட ஒதுக்கீடு கோரிக்கைக்கான தங்களது போராட்டத்தை காபு சமுதாயத்தினர் நேற்று இரவு விலக்கிக் கொண்ட னர். முதல்வர் சந்திரபாபு நாயுடு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறு தியளித்ததன் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள தாகவும், இது அரசுக்கு விடுக்கப்படும் இறுதி எச் சரிக்கை என்றும் காபு சமு தாயத் தலைவர் பத்மனா பன் தெரிவித்தார்.
மேலும் இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் காபு சமுதா யத்தினரை பிற்படுத்தப்பட் டோர் பட்டியலில் சேர்ப் பதற்கான ஆணையை ஆந் திர மாநில அரசு வெளியிட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இல்லையெனில் சாகும் வரை பட்டினிப் போராட் டம் மேற்கொள்ளப்படும் என்று பத்மனாபன் எச்ச ரிக்கை விடுத்தார்.
-விடுதலை,1.2.16

நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு முடிவு தேவை

உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராமசுப்பிரமணியம் அவர்களின்  ஒன்பது கட்டளைகள் வரவேற்கத்தக்கவை - செயல்படுத்தப்படவேண்டியவை!
கூலிப்படைகள் உஷார் - உடனடியாக ஒடுக்கப்படவேண்டும்
அம்பேத்கர்மீது ஆர்.எஸ்.எஸ். வீசும் தூண்டில் - எச்சரிக்கை  அவர் கொள்கையைப் பரப்புவதைவிட பாதுகாப்பதே மிகவும் அவசியம்!
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்களை - படுகொலை செய்யும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் இது குறித்து பிறப்பித்த ஒன்பது வகை வழிமுறை ஆணைகள் வரவேற்கத்தக்கவை - செயல் படுத்தப்பட வேண்டியவை - குறிப்பாக கூலிப் படைகள் ஒடுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளுவோரைப் பாது காத்து, அவர்களுக்கு உரிய உரிமையைக் காக்க, காவல் துறைக்குத் தந்துள்ள உத்தரவு மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

இதுவரை தமிழ்நாட்டில் - அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் - அண்மைக்காலமாக விசிறி விடப்பட்ட ஜாதி வெறி காரணமாகவும், மிக மலிவான தொகைக்கே கொலை செய்யும் கூலிப் படைகள் மலிந்துள்ளதாலும் இதுவரை 82 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்பது வெட்கத்தால் தலைகுனிய வைக்கக் கூடியதாகும்.
நீதிபதியின் 9 ஆணைகள்

இதனை - ஒரு வழக்கில் - கணக்கில் எடுத்துக்கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்.
இதுமாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை - குறிப்பாக ஆதிதிராவிடர்களுடன் தொடர்பு கொண்ட மணத் தம்பதிகள் பலரைக் கொலைகள் செய்வதும், அதற்கு “கவுரவக் கொலை‘‘ என்று பெயர் சூட்டுவதும் அநாகரிகமானது. பஞ்சாப்,  அரியானா மாநிலங்களில் ‘‘ஜாதிப் பஞ்சாயத்துக்களை‘‘ நடத்தி, தண்டனை அளித்து வந்த நிலையில், பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றங்கள் இதேபோன்ற ஆணைகளை காவல்துறைக்குத் தந்துள்ளன.

அவற்றை யொட்டியே சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் இப்படி 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார் என்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது.

1. ஒவ்வொரு மாவட்டத்தில் இம்மாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர்பற்றிய பாதுகாப்பு முதலியன தருவதற்கு ஒரு தனிப் பிரிவு (Special Cell) உருவாக்கப்படல் வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வோர் புகார் கொடுத்தால், அதன்மீது உடனடியாக விரைந்து செயல்படவேண்டும்.
மூன்று மாதங்களுக்குள்...
2. இதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெறவேண்டும்.

3. கொலை மிரட்டலுக்குப் பயந்து தப்பி வருவோரைப் பாதுகாப்பதற்கென ஒரு தனி நிதியே (Fund) ஒதுக்கப் படவேண்டும். இந்த நிதியை அப்படி தனியே வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களை காப்பதற்கென தனிக்காப்பகம் - குடில் அமைப்பதற்கும், அவர்களது புதுவாழ்வு, புனர்வாழ்வு அமைவதற்கும் செலவிடப்படல் வேண்டும்.

4. 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக் கூடிய உதவிக்கரம் (Help line) ஒன்றை உருவாக்கி, வரும் புகார்களைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும், அறிவுரை, ஆலோசனை வழங்குதல் வேண்டும்.

5. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய அதிகாரி (S.H.O.) அந்த ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதி களுக்கு பாதுகாப்புத் தருதல் வேண்டும்.

6. தனிப் பிரிவுக்குத் தரப்பட்ட புகார்கள் உடனே சம்பந்தப் பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்!

7. எல்லாக் காவல் நிலையங்களிலும் மின்தொடர்பு Electronically through the crime and criminal Tracking Network and systems (CCTNS)
முதலியவற்றை தானே இயங்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8. சம்பந்தப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை தேடி அலைவோரையும் கண்டறிந்து, தடுத்தல், பெற் றோர்களுக்கு உரிய அறிவுரை (கவுன்சிலிங்) அளிப்பது.

காவல்துறை அதிகாரிகளைப்
பொறுப்பேற்க செய்யவேண்டும்

9. எந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் அதற்குக் காவல் துறை அதிகாரிகளையே பொறுப்பாக்குவதோடு, அவர்கள் இக்கடமைகளிலிருந்து தவறினால், அதை மிகப்பெரிய ஒழுக்கத் தவறான நடத்தை (Major Misconduct)  என்று அறிவித்து அவ்வதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இப்படி பல்வேறு முக்கிய அம்சங்கள் உயர்நீதிமன்றத்தால் தரப்பட்டுள்ளன. இதற்காக நீதிபதி அவர்களை வெகுவாகப் பாராட்டுவதுடன், இவற்றை உடனடியாக செயலுக்குக் கொணர்தல் அவசியம், அவசரம் ஆகும்!

இவைகளை தயவு தாட்சயண்மின்றி செயல்படுத்துவதோடு, மற்றொன்றும் முக்கியம்.
கூலிப்படைகள் உஷார்!

கூலிப்படைகளை முற்றாகக் கண்டறிந்து அவர்களைக் கண்டுகொண்டு அவர்களின் நடமாட்டம் இல்லாமல் செய்தால், இப்படிப்பட்ட கூலிக்கான கொலைகள் - உயிர்க் கொலைகள் நடைபெறாமல் இருக்குமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
15.4.2016 

சனி, 28 மே, 2016

டாக்டர் டி.எம். நாயர்

டாக்டர் நாயர் அவர்கள் தானே ஆசிரியர் பொறுப்பை மட்டும் ஏற்றுக்கொண்டு, தன் வீட்டில் இருந்து கொண்டு, தொலைப்பேசி மூலம் தலையங்கத்தை தினமும் தந்திட்டார்.
டாக்டர் நாயர், தான் மாணவனாக இருந்த காலத்திலேயே பத்திரிகை அனுபவம் பெற்றவர். பல நாடுகள் சுற்றுப்பயணம் செய்து, ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டவர். நல்ல பேச்சாளர் - எழுத்தாளர். உலகமறிந்த ஆங்கில அறிஞர். அவருடைய கடுமையான பணிகள் பல. அவற்றோடு ஜஸ்டிஸ் ஏட்டின் பொறுப்பை அவரே ஏற்றது மிகமிக பொருத்தம் என்றே கூற வேண்டும்.
காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஆங்கில ஏடுகள், குறிப்பாக இந்து ஏடு திக்கு முக்காடும் அளவிற்கு ஜஸ்டிஸ் ஏடு ஓகோ என்று விரைவாகவும், வளமாகவும் வளர்ந்தது.
டாக்டர் நாயரின் மறைவுக்குப் பிறகு டி.ஏ.வி.நாதன், டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் போன்ற ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் ஜஸ்டிஸ் ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயரையே ஜஸ்டிஸ் கட்சி - நீதிக்கட்சி என்று மக்கள் மாற்றி அழைக்கும் நிலையை உண்டாக்கினர்.
சுருக்கமாகக் கூற வேண்டுமானால் S.I.L.F. என்று தான் கட்சியின் பெயரை அழைத்திருக்க வேண்டும். ஜஸ்டிஸ் கட்சி என்று தீர்மானம் போட்டு மாற்றப்படவில்லை.
ஒரு பத்திரிகையின் பெயரே கட்சிக்குப் பெயராயிற்று.
நீதிக்கட்சியின் சிற்பி டாக்டர் டி.எம்.நாயர்,
ஏ.எஸ்.வேணு ப: 17
-விடுதலை

புரட்சிக்கு வித்திட்ட பூலே - மஞ்சை வசந்தன்ஆரியப் பார்ப்பனர்கள் ஆட்சி செய்த மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கும், அனுபவித்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. வீதிகளில் நடக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும். கழுத்தில் ஒரு சட்டியைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். அச்சட்டியில்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக் கொள்ள வேண்டும், தரையில் துப்பக்கூடாது.
அவ்வாறு வீதியில் செல்லக்கூட காலையிலும் மாலையிலும் அனுமதியில்லை. காரணம் அவ்வாறு சென்றால் அவர்கள் நிழல் உயர்ஜாதிக்காரர்கள்மீது பட்டுவிடும் என்பதால். தாழ்த்தப்பட்டவன் நிழல் தன்மீது பட்டாலே, தாம் தீட்டாகி விடுவோம் என்று எண்ணும் அளவிற்கு ஆரியப் பார்ப்பனர்களின் ஜாதி வெறி, ஜாதி ஆதிக்கம் தலைதூக்கி நின்றது.
அன்றிரவு ஜோதிராவ் உறங்காமல் வேதனைப்பட்டார். மனிதர்களுக்குள் இத்தனை இழிவா? இதைப் போக்க என்ன வழி? என்பன போன்ற சிந்தனைகளுடனே அன்றைய இரவு கழிந்தது. தமக்கு அவமானம் நேர்ந்தது என்று அவர் பெரிதும் கவலை கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஒட்டுமொத்த சமூக இழிவு நீடிக்கலாமா? நீடிக்க விடலாமா? என்பதைப் பற்றியே அவர் அதிகம் கவலை கொண்டார்.
இந்தச் சமூக அவலங்களுக்கு எதிராக உறுதியுடன் போராட வேண்டும் என்றும், ஜாதி முறையும், அடிமைத்தனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்றும், ஆரியப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்து, சாத்திர அநீதிகளை முற்றாக ஒழித்து, மூட நம்பிக்கைகளை முழுவதும் அகற்றி, பகுத் தறிவும், தன் மதிப்பும் கொண்ட, சமத்துவ, சம உரிமைச் சமுதாயத்தைச் சமைக்க வேண்டும் என்றும் உறுதி கொண்டார்.
ஆரிய சாஸ்திரக் கொடுமைகளை அம்பலப்படுத்துதல்
அனைத்து ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களையும் கடுமையாகச் சாடினார். தன் நாட்டில் பிறந்தவனாயினும்,  தன்னை இழிவுபடுத்துகின்றவனை ஏற்க முடியாது என்றும், தன்னைச் சமமாக மதிக்கும் அந்நியரைக்கூட நான் சகோதரனாக ஏற்பேன் என்றும் ஜோதிராவ் அறிவித்தார். இவை அவரிடம் இருந்த கொள்கைத் தெளிவைச் சரியாகத் தெரிவித்தன.
ஜோதிராவின் புரட்சிச் சிந்தனைகளை வெளியிட எந்தப் பத்திரிகையும் முன்வராதபோது, கோலாப்பூரிலிருந்து வெளிவந்த சுபவர்த்தமானா என்ற கிறித்துவ பத்திரிகை இவரது கருத்துகளையும், அறிக்கைகளையும் வெளியிட்டது.
இந்தியப் பேரரசில் ஆரியப் பார்ப்பனப் போர்வையின் கீழ் அடிமைத்தனம் என்ற தமது நூலில் அவர் பல அறிக்கைகளை எழுதியிருந்தார். இந்நூல் 1873 ஜூனில் வெளியிடப்பட்டது.
விடுதலை பெறாத ஒவ்வொரு மனித னுக்கும் விடுதலை அளிப்பதே மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை அவ்வாறு மீட்டளிப்பதே மிகப் பெரிய வெற்றியாகும்! தன்மானத்தை விரும்பும் எவரும் இதைச் செய்யவே விரும்புவர். ஒவ்வொருவரின் மகிழ்ச்சிக்கும் அவர்களுக்கு அளிக்கப்படும் உரிமைகளே முதன்மையானவை. தங்கள் உயிரைக் கொடுத்தாவது மற்றவர்களுக்கு உரிமையை மீட்டுத் தர உழைப்பவர்களே உண்மையான மக்கள் தொண்டர்கள்... என்றார் ஜோதிராவ் பூலே.
ஆரியப் பார்ப்பன சாஸ்திரங்களில் ஆரியர் அல்லாதாருக்கு இழைக்கப்பட்டுள்ள இழிவுகளையும், கொடுமைகளையும், அதே நேரத்தில் ஆரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகளையும், மேன்மைகளையும் தெள்ளத் தெளிவாக மக்களுக்கு விளக்கினார்.
சூத்திரன், ஒழுக்கங்கெட்ட பார்ப்பனப் பெண்ணுடன் தொடர்பு கொண்டால் அவனுக்கு மரண தண்டனை. ஆனால், பார்ப்பான் சூத்திரன் மனைவியுடன் உடலுறவு கொண்டால் அவனுக்கு எந்தத் தண்டனையும் இல்லை.
ஆரியர் அல்லாதார் கொலை செய்தால் மரண தண்டனை. ஆனால் ஆரியர் கொலை செய்தால் அவன் தலைமயிரில் ஒன்றைச் சிரைத்தால் போதும்.
என்பன போன்ற ஆரிய சாஸ்திரங்களின் அநீதிகளை, அயோக்கியத்தனங்களைப் பிட்டுப் பிட்டு வைத்துப் பிரச்சாரம் செய்தார்.
பெண் கல்வியும், பெண் உரிமையும்
இந்திய அளவில் பெண் கல்விக்கும், பெண் உரிமைக்கும் முறையான இயக்கம் கண்டு கல்விக்கூடங்கள் அமைத்து பெண் கல்வியை ஊக்குவித்தவர் பூலே ஆவார். விதவை மணம், விடுதலை பெற்ற வாழ்வு, ஆணுக்கு நிகரான உரிமைகள் என்று பெண்ணியம் சார்ந்த அனைத்து பிரச்சினைகளையும் 150 ஆண்டுகளுக்கு முன்பே பேசி இதற்கான முன் முயற்சிகளிலும் இறங்கி வெற்றியும் பெற்றவர் பூலே ஆவார். பெண் கல்வி என்னும்போதும், பெண் உரிமை என்னும்போதும் பூலேவே முன்னோடியாகத் திகழ்கிறார்.
இடஒதுக்கீட்டு ஏற்பாடு
அரசு நிர்வாகங்களில் ஆரியப் பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்தை அகற்றுவதற்கு மற்ற ஜாதிகளிலிருந்து, அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைச் சேர்க்க வேண்டும் என்று அரசாங்கத்தை ஜோதிராவ் வற்புறுத்தினார். இன்றைய இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு அன்றைக்கே அவர் குரல் கொடுத்தார் என்பதுதான் வியப்பளிக்கும் செய்தியாகும்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியில் சேர்வதை இவர் எதிர்க்கவில்லை. அந்தந்த ஜாதி மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பங்கு வேண்டும் என்றார். தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு உரிய பயிற்சி அளித்து அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் என்றார்.
1881-1882ஆம் ஆண்டு வரை மகாராட்டிரத்தில் எந்தவொரு பள்ளியிலும் அல்லது கல்லூரியிலும் ஒரு ஆதிசூத்திர (ஆதிதிராவிட) மாணவன் கூட சேரவில்லையென்ற சமுதாயக் கொடு நிலையே ஜோதிராவின் கடுமையான போராட்டத்திற்குக் காரணமாயிற்று.
ஆரியப் பார்ப்பன ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளைத் தொடங்க வேண்டும் என்று இவர் வற்புறுத்தினார். அப்போதுதான் மற்ற சமூகத்தினர், குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்கள் படிக்க இயலும். காரணம் பார்ப்பனர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் சேர அனுமதிக்க மாட் டார்கள் என்று உளவியல் ரீதியில் உரைத்தார். ஆங்கிலேயர் ஆட்சி இந்நாட்டில் இருக்கும் காலத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் கல்வி பயின்று விட வேண்டும் என்றார். காரணம் விடுதலைக்குப்பின் ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் நிலவி கல்வி மறுக்கப்படலாம் என்று அஞ்சினார்.
இந்த நாட்டின் உயிரும் உடலும் சூத்திரர் களே. அனைத்துமே அவர்களுடையதே. ஆரியப் பார்ப்பனர்களுக்கு உரியதல்ல. எனவே, சூத்திரர்களுக்குள்ள அனைத்து வகை இடர்ப்பாடுகளையும் களைந்து அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்றார்.
உண்மை நாடுவோர் சங்கம்
தன்னுடைய இத்தனை போராட்டங் களையும், எதிர்ப்புகளையும், முயற்சிகளையும் ஓர் அமைப்பு ரீதியாகச் செயற்படுத்தினால் தான் ஆரிய ஆதிக்கத்தை வீழ்த்த முடியும் என்ற முடிவு செய்த ஜோதிராவ், அத்தகு அமைப்பு ஒன்றை ஏற்படுத்த முனைந்தார்.
1873ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் தன் ஆதரவாளர்கள் அனைவரையும் பூனாவிற்கு அழைத்தார். மகாராட்டிரத்தின் முதன்மைப் பகுதிகளிலிருந்து அறுபது பேர் கூடினர். அப்போது அவர்கள் மத்தியில் பேசிய ஜோதிராவ் சத்திய சோதக் சமாஜ் (உண்மை நாடுவோர் சங்கம்) என்ற அமைப்பின் மூலம் தங்களது செயல் திட்டங்களை இனி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதில் குறிப்பிடத்தக்க செய்தி ஒன்றும் உண்டு. இச்சங்கத்தை உருவாக்குவதில் மூன்று பார்ப்பன நண்பர்கள் (1.வினாயக் பாபுஜி பண்டார்கர், 2 வினாயக் பாபுஜி டெங்கில், 3. சீத்தாராம் சக்காராம் டாடர்) உதவியாக நின்றனர்.
தாய்மொழி வழிபாடு
கடவுளை அவரவர் மொழியில் வேண்டலாம் என்று ஜோதிராவ் கூறினார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆரியப் பார்ப்பனர்கள் வேறு மொழியில் வேண்டினால் அது கடவுளைச் சென்றடையாது என்றனர். ஆனால் ஜோதிராவோ, அவரவர் மொழியில் வேண்டுதல் நடத்தினால் அது கடவுளைக் கட்டாயம் சென்று சேரும். கடவுள் மனித அறிவை அறிவார். எந்த மனிதனின் வேண்டுகோளையும் புரிந்து கொள்பவர்தானே கடவுளாக இருக்க முடியும்? இலத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வேண்டுகின்றவர்களின் வேண்டுகோள் கடவுளை அடைகிற தல்லவா? அப்படியிருக்க தாய்மொழியில் வேண்டல் கடவுளை எப்படி அடையாமல் போகும்? என்றார்.
உண்மை நாடுவோர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டாம் என்று ஆரிய பார்ப்பனர்கள் மக்களை தடுத்தனர். அவ்வாறு சேருவோரைத் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பதவி நீக்கம் செய்தனர். பலரை இடம் மாற்றினர்.
சுயமரியாதைத் திருமணம்
ஜோதிராவின் கடையில் பணியாற்றிய அவரது உறவினருக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டது. உண்மை நாடுவோர் சங்கவிதிமுறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்தார். வைதீக மந்திரம், ஆரியப் பார்ப்பன ஆதிக்கம் இல்லா திருமணமாக அதை நடத்த ஏற்பாடு செய்தார். இத்திருமணம் பற்றிய செய்தி பல கிராமங்களுக்கும் பரவியது. ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரத்துடன் எதிர்த்தனர். இது சமூக அவமதிப்பாகும். இதனால் கேடு உண்டாகும். கடவுளுக்கு அடுக்காது என்று பொதுமக்களைத் தூண்டிவிட்டதோடு, பெண்ணின் தந்தையையும் அச்சுறுத்தி ஓடத்தூண்டினர். ஆனால் மணப்பெண்ணின் தாயார், சாவித்திரி பூலேயின் தோழி என்பதால் உறுதியுடன் இருந்தார். 1873 டிசம்பர் 5ஆம் நாள் அத்திருமணம் நடந்தேறியது. மணமக்கள் ஜோதிராவின் உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டனர். வந்திருந்தோர் மணமக்களை வாழ்த்தினர். ஆரியப் பார்ப்பனப் புரோகிதர் ஒருவர்கூட இல்லாமல் இத்திருமணம் நடந்தேறியது வரலாற்றில் முதன்மையான இடத்தைப் பெற்றது.
ஆரியப் பார்ப்பனப் புரோகிதர் இன்றி ஒரு இந்துத் திருமணம் என்ற தலைப்பில் பத்திரிகைகள் இத்திருமணச் செய்தியை வெளியிட்டிருந்தன. இச்செய்தி எல்லா மாவட்டங்களுக்கும் பரவ, ஆரியப் பார்ப்பனர்கள் ஆத்திரமும், அச்சமும் அடைந்தனர். தங்கள் ஆதிக்கம் வெகு சீக்கிரத்தில் வீழ்ந்து விடுமோ என்று கலங்கினர். ஆனால் ஆரியர் அல்லாதாருக்கு இத்திருமணம் ஒரு புதிய உற்சாகத்தை அளித்தது.
உண்மை நாடுவோர் சங்கத்தின் கிளைகள் பல இடங்களிலும் அமைக்கப் பட்டன. பம்பாயில் தொடங்கப்பட்ட சங்கத்தின் தொடக்க விழாவிற்கு ஜோதிராவே சென்றார். செல்வாக்கும், உயர்படிப்பும் உள்ள உயர்ந்த மனிதர்கள் பலர் இச்சங்கத்தில் உறுப்பினர் ஆயினர்.
தொழிற்சங்கவாதியாகத் துவளாப் பணி
ஜோதிராவ் சமூகப் பணிக்காக அடிக்கடி பம்பாய் சென்று வந்ததால், ஆலைத் தொழிலாளர்களின் துயரங்களைப் பற்றி அவர் அதிகம் அறிந்தார்.
உணவு நேரம் போக தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுவதையும், குறைந்த கூலி கொடுத்து அதிகம் வேலை வாங்கப்படுவதையும் அறிந்தார். தொழிலாளிக்குப் போதிய உணவு வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி இல்லாத நிலை பற்றியும் கேள்விப்பட்டார்.
ஆனால் இந்த வேதனைகளை வெளிப்படுத்த உரிய அமைப்பு இல்லாமைதான் இதற்கெல்லாம் காரணம் என்று கருதினர். சமூகப் பிரச்சினையில் பல்வேறு இடர்ப்பாடுகளைத் தாங்கி, வெற்றி கொண்ட ஜோதிராவிற்கு, இது மிகப்பெரிய பணியாகத் தோன்றவில்லை.
1857-இல் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு முழுக்க முழுக்க ஆலை அதிபர்களை உறுப்பினராகக் கொண்டது. எனவே, இக்குழு தொழிலாளர்களின் இன்னல் தீர்க்கப் பயன்படவில்லை.
இந்நிலையில் ஜோதிராவால் உருவாக்கப்பட்ட போராளியான லோகந்தி என்பவர் தினபந்து ஏட்டின் ஆசிரியர் பொறுப்பை ஏற்று ஆலைத் தொழிலாளர்களின் அவலங்களை வெளியிட்டார். அதே போல, விவசாயிகளின் நலன் காக்க ஜோதிராவின் தோழர் கிருஷ்ணராவ் பேல்கர் பாடுபட்டார்.
குறிப்பிட்ட வேலை நேரம், நியாயமான ஊதியம், குழந்தைத் தொழிலாளர்களை வதைக்கக்கூடாது என்ற கோரிக்கை, பெண் தொழிலாளர்களுக்குரிய பாதுகாப்பு போன்ற பல்வேறு வேண்டுகோள்கள் தொழிலாளர்கள் சார்பில் முன் வைக்கப்பட்டன.
நாதியற்றுக் கிடந்தத் தொழிலாளர்களுக்கு ஜோதிராவ் மற்றும் அவர்களது தோழர்கள் மூலம், தங்கள் குறைகளைக் கூறி நிவாரணம் பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
மது எதிர்ப்பு
மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு செய்தபோது, மது மக்களின் எதிரி. அது அவர்களை வெகுவாகப் பாதிக்கும் என்று சொல்லி அம்முடிவை எதிர்த்தார். மதுக்கடைகள் திறக்கப்பட்டதனாலேதான் மக்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளானார்கள். அதற்கு முன் மக்களை இப்பழக்கம் அதிகம் பாதிக்கவில்லை என்பதை நடைமுறை உண்மையோடு விளக்கினார்.
நகராட்சி நிர்வாகத்தில் ஊழல் செய்யும் அதிகாரிகளைத் தட்டிக் கேட்கவும், சுட்டிச் சொல்லவும் ஜோதிராவ் தயங்கவில்லை.
கல்விச் சீர்திருத்த கருத்துக்கள்
தொடக்கப் பள்ளியையும், உயர்நிலைப் பள்ளியையும் அடித்தட்டு மக்கள் பயனடையும் வகையில் அமைக்க வேண்டும். அடித்தட்டு மக்களைப் பற்றி கவலைப்படாது, அறிவார்ந்த மக்களின் கல்விக்கு வழிவகுக்கும் கல்வித் திட்டம் மாற்றப்படவேண்டும். மேல்தட்டு மக்களின் கல்விக்கே அதிகம் முனைப்பு காட்டும் அரசின் கொள்கை மாற்றப்பட வேண்டும். உயர்தட்டு மக்கள் மட்டுமே தொடர்ந்து கல்வி பெறும் போக்குதான், கல்வியாலும், வேலை வாய்ப்பாலும் முழுக்க முழுக்க அவர்களே ஆதிக்கம் செலுத்துவதற்கும், அடித்தட்டு மக்கள் புறக்கணிக்கப்படுவதற்கும் காரணம் என்றார்.
விவசாயிகளும், ஏழைகளும் தங்கள் தொடக்கக் கல்வியைத் தாங்களே ஏற்பாடு செய்து பெறும் தகுதியற்றவர்கள். தங்களின் சூழலால் தங்களின் குழந்தைகளைத் தங்களுடனே வேலைக்கு வைத்துக் கொள்கின்றனர். எனவே, அக்குழந்தைகள் பயில போதிய கல்வி உதவி வழங்கப்பட வேண்டும். 12ஆம் வயது வரை கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூனா நகரில் ஒரேயொரு பள்ளி மட்டும்தான் உள்ளது. அதில் 30 சிறுவர்கள்தான் படிக்க முடிகிறது. எனவே பள்ளிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிக அளவில் தனியாகப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.
வேலைக்குச் சென்று ஊதிய பெறும் நோக்குடையதாக இப்போதைய கல்வி முறையிருப்பதால், அது ஏழைகளின், ஒடுக்கப்பட்டோரின் விழிப்பிற்கும், விடிவிற்கும் பயன்படவில்லை. எனவே அதற்கேற்ப கல்வி முறை மாற்றப்பட வேண்டும்.
கணக்கு, வரலாறு, அடிப்படையறிவு, நல்லொழுக்கக் கல்வி, சுகாதாரம் போன்றவை கல்வித்திட்டத்தில் இடம் பெற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்குப் பாடச்சுமை குறைவாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறைக் கல்வியை குறைக்கக்கூடாது.
ஆய்வாளர்கள் அடிக்கடிச் சென்று கல்வி நிறுவனங்களைப் பார்வையிட்டு, அவ்வப்போது குறைகளைச் சரி செய்ய வேண்டும். ஒடுக்கப்பட்டோர் உள்ளத்தில் உள்ளதைத் துணிவாகச் சொல்ல அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
உள்ளூர் வரித்தொகையில் பாதியைக் கல்விக்குப் பயன்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கல்வி மானியம் அளிப்பதன் மூலம் நகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். பள்ளி நிர்வாகத்தை நகராட்சிகளிடம் ஒப்படைக்கக்கூடாது. அரசாங்கம் கல்வித் துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
அரசு வேலைகளையே எதிர்நோக்காமல் சுயதொழில் தொடங்கும் அளவிற்கு கல்வி திட்டம் அமைய வேண்டும். பெண் கல்வி பெரிதும் தூக்கி நிறுத்தப்பட வேண்டும்.
கல்வி வளர்ச்சியில்லாத ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கென்று சில சிறப்பான கல்வி உதவித் தொகையை அரசு தர வேண்டும். போட்டியின் மூலம் தேர்வு செய்து, அவர்களுக்கு உதவுவது மேலோட்டமாக பார்க்கும் போது நியாயமாகப்படலாம். ஆனால், அது அடித்தட்டு மக்களுக்கு பயன்படாமல் போகும்.
விவசாயிகளின் விடியலுக்கு வித்திடல்
விவசாயிகளின் சாட்டை என்ற நூலை 1883ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எழுதி, கையெழுத்துப் படியாக இருக்கும்போதே பலரிடமும் படித்துக் காட்டினார். இந்நூலை முழுமையாக எழுதி முடித்த பின்பு 1883 ஏப்ரல் மாதம் பம்பாயில் ஒரு கட்டத்தில் இந்நூலைப் படித்துக் காட்டினார். இதன் படிகளை மன்னருக்கும், ஆளுநருக்கும் அனுப்பி வைத்தார்.
ஆரியச் சடங்குகளால் சூத்திர விவசாயிகள் சுரண்டப்படுவது பற்றியும், பள்ளிப் படிப்பிற்குக் கூடப் பிள்ளைகளுக்குச் செலவழிக்க முடியாமல் விவசாயி படும்பாடு, நிலச்சிதைவு, வேளாண் கடன் கிடைக்காமல், அதிக வட்டிக்குக் கடன் பெற்று கவலையுறும் அவலம், வரிச்சுமை மற்றும் இடைத்தரகர் சுரண்டல் ஆகிய இன்னல்களை பற்றி  விரிவாக எடுத்துரைத்தார்.
விவசாயிகளின் மீதான நெறுக்குதலைத் தவிர்க்க கண்காணிப்புக்குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் பணத்தை யாரும் மோசடி செய்யாமல் தடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
அளவுகளில் மோசடி, எடையில் மோசடி, விலையில் மோசடி என்று விவசாயிகள் சுரண்டப்படுவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்றும், வேளாண் சம்பந்தப்பட்ட விவரக் கையேடுகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், பருவமழையை நம்பியே வாழும் விவசாயிகளுக்கு, நீர்ப்பாசன வசதி செய்துதர வேண்டும். அணைகள், கால்வாய்கள் மூலம் மழைநீரைச் சேர்த்துப் பகிர்ந்தளிக்க வேண்டும்... என்று அரிய பல கருத்துக்களை விவசாயிகள் மேம்பாட்டிற்குள், விவசாய மேம்பாட்டிற்கும் வழங்கினார்.
இன்றையச் சூழலுக்குக்கூட இவரது சிந்தனைகள், பரிந்துரைகள் எந்த அளவிற்குப் பொருத்தமுடையவையாக இருக்கின்றன என்பதே இவரது அறிவுநுட்பத்தையும், ஆய்வு நுட்பத்தையும் காட்டுகின்றன. மேலும் வேளாண்மையை நம்பி வாழும் நலிந்த மக்களின் மேம்பாட்டில் அவர் கொண்டிருந்த அக்கறையும், அனுதாபமும், ஆர்வமும் இவை மூலம் வெளிப்படுகின்றன.
இன்று மகாத்மா ஜோதிராவ் புலே பிறந்த நாள் (1827)
தரவு : Mahatma Jyotirao Phooley Dhananjay Keer)

- மஞ்சை வசந்தன்

ஆரியப் பார்ப்பனர்கள் ஆட்சி செய்த மகாராட்டிரத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடைந்த இன்னல்களுக்கும், அனுபவித்த கொடுமைகளுக்கும் அளவே இல்லை. வீதிகளில் நடக்கும் தாழ்த்தப் பட்டவர்கள் தங்கள் இடுப்பில் இலைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும். கழுத்தில் ஒரு சட்டியைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். அச்சட்டியில்தான் அவர்கள் தங்கள் எச்சிலைத் துப்பிக் கொள்ள வேண்டும், தரையில் துப்பக்கூடாது.

-விடுதலை,11,12.4.16