சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாஜக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

மண்டல் குழுவை உருவாக்க பா.ஜ.க.வின் பங்களிப்பு என்ன?


அனைத்திந்திய தலைவர்களே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டுகின்றபொழுது பா.ஜ.க.வினருக்கு வயிற்றெரிச்சல் ஏன்?
January 28, 2022 • Viduthalai

மண்டல் குழுவை உருவாக்க பா.ஜ.க.வின் பங்களிப்பு என்ன?

42 மாநாடுகள்; 16 போராட்டங்களை அகில இந்திய அளவில் நடத்துவதற்குக் காரணமாக இருந்தது திராவிடர் கழகமே!

மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்திய வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தது பா.ஜ.க.!

உண்மை வரலாற்றைத் திரிக்கவேண்டாம்!

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை

சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி, பா.ஜ.க. கூறும் பொய்யான தகவல்களைத் தோலுரித்து, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

26.1.2022 அன்று அனைத்திந்திய மாநிலங்கள் பல வற்றின் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்கள் பலரும் திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியில், 'சமூகநீதிக் கான சரித்திர நாயகர்' தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், அவரது சட்டப் போராட்டத்தால் வென்று,  மருத்துவக் கல்வித் துறையிலும் 27 சதவிகித இட ஒதுக்கீடு - இதற்குமுன் மறுத்து வந்ததைப் பெற்றுத் தந்து, ஒரு சமூகநீதிப் போராளியாக களத்தில் நின்று - பெரியார், அண்ணா, கலைஞர் பாரம்பரியத்தை இன்றும் அரசியலில் கட்டிக் காத்து வருவதற்காகவும், அவரே நம்பிக்கை நட்சத்திரமாக ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு இயக்கத்திற்கு அகில இந்திய நிலையில், ஒரு பாதுகாப்பு இயக்கத்தைக் கட்டிக் காக்கும் தகுதியும், ஆற்றலும் படைத்தவர் என்று பலரும் - ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகளும், நாடாளுமன்ற உறுப்பினர் களும், பிற மாநில அமைச்சர்களும் மனந்திறந்த பாராட்டினைக் குவித்தது கண்டு, தமிழ்நாடு பூரிப்பும், பெருமகிழ்ச்சியும் அடைகிறது.

'திராவிட மாடல்' ஆட்சியின் தத்துவத்தைப் பின்பற்றித் தீருவது காலத்தின் கட்டாயம்!

டில்லியிலிருந்து உ.பி.,க்கு அறிவுரை கூறும் முதிர்ந்த எழுத்தாளர்கள்கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் - 'திராவிட மாடல்' ஆட்சியின் தத்துவத்தைப் பின்பற்றித் தீருவது காலத்தின் கட்டாயம் என்ற கருத்துப்பட, 'ஹிந்து' போன்ற ஆங்கில நாளேடுகளில் கட்டுரை தீட்டுகின்றனர்!

ஆனால், இங்குள்ள பூணூல் திருமேனிகளுக்கு, காவிக் கட்சியினருக்கு ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், எரிச்சலை, பொய் மூட்டையை அவிழ்த்துக் கொட்டி, சமூகநீதி வரலாறுபற்றி மறைத்தும், திரித்தும் புளுகி அறிக்கைவிடும் அறியாமை கண்டு நாடே எள்ளி நகையாடும் நிலைதான் உள்ளது!

பா.ஜ.க. செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப் பதி என்பவர் விடுத்துள்ள அறிக்கை - கோயபெல்சின் குருநாதர்கள் இவர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

வரலாற்றை எப்படி திரிபுவாதம் செய்கிறார் காவி கயிறு திரிப்பாளர்!

'இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதிப் போராட்டத்தில் தி.மு.க. துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லை' என்கிறார் இந்த காவி கயிறு திரிப்பாளர்!

அதுமட்டுமா - வரலாற்றை எப்படி திரிபுவாதம் செய்கிறார் தெரியுமா?

1977-1979 இல் ஜனதா கட்சியின் ஆட்சியில்தான் மண்டல் ஆணையம் அமைந்தது என்று கூறி, உண் மையை வளைக்கிறார்!

ஜனதா கட்சி என்று, மூன்று, நான்கு கட்சிகள் இணைந்த கூட்டு ஆட்சி. அதில் இடம்பெற்ற சவுத்திரி சரண்சிங்தான் தனியே பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் உரிமைக்கான ஓர் ஆணையம் (அரசமைப்புச் சட்டப் பிரிவு 340-இன்படி) அமைக்கவேண்டும் என்று கூறி, மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஆட்சியை ஏற்கச் செய்தார்.

பிந்தேஸ்வரி பி.மண்டல் அவர்கள் தலைமையில்...

ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் முதல் ஆணையமான காகாகலேல்கர் கமிட்டியின் பரிந்துரை களைச் செயல்படுத்துவோம் என்று கூறியிருந்தாலும், அது பிற்படுத்தப்பட்டோர் நலனுக்குக் கூறிய  பரிந்துரை - உண்மையில் அதற்கு மாறானது; குழப்பங்கள் நிறைந்தது - என்று குறிப்பிட்டு, தனியே ஒரு புது ஆணையம் அமைக்கவேண்டும் என்று கூறி, பிறகு அதையும், சரண்சிங் கருத்தை ஏற்று, பீகார் மேனாள் முதலமைச்சர், வழக்குரைஞர் பிந்தேஸ்வரி பி.மண்டல் அவர்கள் தலைமையில், 20.12.1978 நாடாளுமன்றத்தில் அறிவித்தார் - நான்கு உறுப்பினர்களைக் கொண்டு, மொத்தம் அய்ந்து பேர்.

அக்குழு பொறுப்பேற்ற அடுத்த ஆண்டு 12.12.1980 இல் பிரதமர் இந்திரா காந்தியிடம் அறிக்கை அளிக்கும் - நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. (பிரதமர் மொரார்ஜி தொடக்க உரை - மண்டல் அறிக்கைக்காக  21.3.1979).

பிரதமர் இந்திரா காந்தி இக்கமிஷன், மண்டல் கமிஷனுக்கு, இரண்டு முறை கால நீடிப்புகள் தந்து, ஆதரவைக் கொடுத்தார் என்று மண்டல் அறிக்கையில் கூறுகிறார் (31.12.1980 இல் சமர்ப்பித்தார்).

திராவிடர் கழகத்தால் - 16 போராட்டங்கள், 42 மாநாடுகள்!

இதில் ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஒன்றிய அரசு இதனை வெளியிடாத நிலையில், ஏற்று செயல்படுத்த வற்புறுத்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பல அமைப்புகளையும் ஒன்று திரட்டி, பல மாநிலங்களில் - தமிழ்நாட்டிலும் 16 போராட்டங்கள், 42 மாநாடுகள் - 10 ஆண்டுகளில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் தி.மு.க., தலைவர் கலைஞரும், அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் கலந்துகொண்டு, மண்டல் கமிஷன் செயல்பாட்டிற்கு முழு ஆதரவு தந்தார். 1969 இல் முதலமைச்சரான கலைஞர் அவர்கள், பிற்படுத்தப் பட்ட துறைக்கென தனியே அமைச்சரையும், தனித் துறையையும் இந்தியாவிலேயே முதன் முதலில் உருவாக்கிய முதலமைச்சர்.

நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ வாய் திறந்தது உண்டா?

நாங்கள்தான் மண்டல் வருவதற்குக் காரணம் என்னும் நாராயணன்களே, இதில் உங்கள் கட்சி (1980 இல்தான் பா.ஜ.க. பிறந்தது - அதற்குமுன் அது பாரதீய ஜனசங்கம்) கிள்ளிப் போட்ட துரும்பு ஏதாவது உண்டா? வாஜ்பேயி அவர்களோ, அத்வானியோ இதனை அமல்படுத்த நாடாளுமன்றத்திலோ, வெளியிலோ வாய் திறந்தது உண்டா?

சமூகநீதிக் காவலரான வி.பி.சிங் பிரதமர் ஆன பிறகு (அவரது ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது பா.ஜ.க.) அதன் ஒரு பகுதியை நிறைவேற்றிய (16(4) ஆவது வேலைவாய்ப்புக்கானது) அவரது ஆட்சிக்கு, பா.ஜ.க. கொடுத்த ஆதரவை 'வாபஸ் பெற்று' அதனைக் கவிழ்த்ததோடு, அத்வானிகள் ரதயாத்திரை என்று கமண்டலைத் தூக்கிக் கிளம்பியதால், மண்ட லுக்கும், கமண்டலுக்கும் ஏற்பட்ட போராட்டத்தில் உங்கள் பா.ஜ.க. மண்டல் பக்கம் நிற்காவிட்டாலும், ஆட்சியைக் கவிழ்க்காமல் இருந்ததா?

தேர்தல் அறிக்கையில் நாங்கள் 1978-லேயே (ஜனதா கட்சி) கூறினோம் என்பதில் இவர்களுக்கு உண்மையும், உறுதியும் இருக்குமானால், இவர்கள் வி.பி.சிங் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முனையலாமா?

27 சதவிகித வேலை வாய்ப்பு, பிறகு கல்வியில் வேலை வாய்ப்பு, 93 ஆவது திருத்தம், தி.மு.க. பங்கேற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி (யு.பி.ஏ.)  அரசின் மூலமாக மத்திய கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கிடைத்ததில் உங்கள் கட்சியின் பங்கு பூஜ்யம்தானே!

தமிழ்நாடு முதலமைச்சரைப் பாராட்டினால் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்?

மருத்துவக் கல்லூரி வழக்கு - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றதே அதை தி.மு.க.தான் முதலில் முன்னெடுத்து, நீதிமன்ற அவ மதிப்பு வழக்கு உள்பட போட்டு, அடிமேல் அடி சட்டப் படி அடித்ததால், நகராத 'அம்மி'யும் ஒன்றிய அரசும் வேறு வழியின்றி அசைந்தது; இசைந்தது. அதற்குரியவர் தமிழ்நாடு முதலமைச்சர்தானே - அவரைப் பாராட்டி னால் உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல்? வக்கணைப் பேச்சு?

நீங்கள் கூறுவது அப்பட்டமான புரட்டு என்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போட்ட வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் நடந்த தையே மறுக்கப் போகிறீர்களா?

முதலில் பா.ஜ.க. அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித ஒதுக்கீடு தர பலவித 'சால்ஜாப்புகளை' கூறி, மறைமுகமான தங்களது விருப்பில்லாமல்தானே தந்தது!

ஆர்.எஸ்.எஸ். கொள்கை  -இன்றுள்ள சமூக ரீதியாக வும், கல்வி ரீதியாகவும் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்று அரசமைப்புச் சட்டத்தில் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தம் பெரியார் - திராவிடர் இயக்கத்தால் வந்ததே, அதனை எப்போதாவது ஆதரித்தோ, வரவேற்றோ உள்ளார்களா?

எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் உள்ளன. பலூன் போன்ற உங்கள் பொய்ப் பிரச்சாரம் எங்களின் உண்மை என்ற ஊசியால் ஒரு நொடிப்பொழுதில் உடையவே செய்யும்.

69 சதவிகிதத்தின் வரலாற்றில் உங்கள் பங்கு துளியும் உண்டா?

இட ஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்று தொடர்ந்து கூறி வருபவர்தானே ஆர்.எஸ்.எஸின் தலைவர் திருவாளர் மோகன் பாகவத்.

உண்மைகள் ஒருபோதும் உறங்காது

எம்.ஜி.ஆரின் 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பு ஆணையை எதிர்த்தது திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லீம் லீக் - இவைதானே கட்சி ரீதியாகப் போராடி யவை. அதன் பரிணாம வளர்ச்சிதானே 69 சதவிகிதமாக மலர்ந்து,  திராவிடர் கழகம் தந்த வரைவுப்படிதானே அன்றைய ஜெயலலிதா ஆட்சி செய்தது - பா.ஜ.க.வுக்கு உரிமை கொண்டாடிட வெட்கமாக இல்லையா?

உண்மைகள் ஒருபோதும் உறங்காது - மறவாதீர்!

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.1.2022


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:48 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: ஆசிரியர் அறிக்கை, பாஜக, மண்டல் குழு

வியாழன், 27 டிசம்பர், 2018

உ.பி. சாமியார் ஆட்சி இதுதான்! தாழ்த்தப்பட்ட மாணவிமீது பெட்ரோல் வீச்சு

ஆக்ரா, டிச.21 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகோலா ஒன்றியப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்திலிருந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கின்ற மாணவி வீட்டிலிருந்து சைக்கிளில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.  அம்மாணவி பள்ளிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டுக்குத் திரும்புகையில், அவருடைய சைக்கிளை  பைக்கில்  பின்தொடர்ந்த சிலர் திடீரென அவள் மீது  பெட்ரோலை வீசி தீவைத்துள்ளனர்.

கடுமையான தீக்காயம் அடைந்த அம்மாணவி நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து துடித்தாள்.

அப்பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியால் காவல்துறையினருக்கு 100 எண்ணை அழைத்து தகவல் தெரிவிக்கப் பட்டபின்னர் மாணவி மீட்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டார். தற்பொழுது சப்தர்ஜங் மருத் துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மால்புரா காவல்நிலையத்தில் வழக் குப் பதிவு செய்யப்பட்டது. அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால், தாக்குதலுக்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பட்நாயக் கூறியதாவது:

“பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற் றோரிடம் விசாரணை செய்தபோதிலும் வழக்கில் முன்னேறிச் செல்ல முடிய வில்லை. தாக்குதலின் பின்னணியில் உள்ள  நோக்கத்தை தெளிவாக அறிய முடியவில்லை. தனிப்பட்ட வகையில் இங்கிவருகின்ற பல்வேறு குழுக்கள் பல்வேறு கோணங்களில் இப்பிரச்சி னையில் விசாரணை செய்து வருகின் றனர்’’ என்றார்.

பதேபுர்சிக்ரி தொகுதியின் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்  பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சீமா உபாத் யாயா, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கலிச்சரம் சுமன் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினரும் பாதிக்கப்பட்ட மாண வியின் கிராமத்துக்குச் சென்று அவள் உறவினர்களை நேரில் சந்தித்து விசா ரணை செய்து வருகின்றனர்.  பீம் ஆர்மி அமைப்பினர் காவல்துறையினரி டமும், இப்பிரச்சினைகுறித்து விசாரித் துள்ளனர்.

ஆக்ரா பகுதியின் பிம் ஆர்மி அமைப்பின் தலைவர் அனில் கர்தம் கூறியதாவது:

“குற்றமிழைத்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்தி வரு கிறோம். இல்லையென்றால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித் துள்ளோம்.  அந்த பெண்ணுக்கோ, அவள் குடும்பத்தினருக்கோ எதிரிகள் என்று எவரும் கிடையாது. இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என் கிற நோக்கத்திலேயே இதுபோன்ற சதிகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது’’ என்றார்.

உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதல்வர் அகிலேஷ் டிவிட்டர் சமூக வலைத்தளப்பக்கத்தில் இப்பிரச்சினை குறித்து தம்முடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் டிவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது:

“முதலாவது ஒரு பெண்மீதான பாலியல் வன்முறை முயற்சி, இரண் டாவது மாணவிமீது பெட்ரோல் ஊற்றி தீவைப்பு ஆகிய இந்த இரண்டு நிகழ் வுகள் வாயிலாக எந்த அளவுக்கு சமூக விரோதிகள் துணிச்சல் பெற்றுள்ளனர் என்பதை காட்டுகிறது. சமூக விரோதி களே இதைச் செய்கிறார்கள். அவர் களுக்கு அரசின்மீது அச்சமில்லை அல்லது அரசிடமிருந்து பாதுகாப்பை அவர்கள் பெறுகிறார்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் தாக்கப்படுவது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்படுவது, அவற்றுக்கெல்லாம் ஆளும் பாஜக அரசு துணைநிற்பது, குற்றமிழைத்தவர்களை காப்பது போன்ற செயல்களால் இதுபோன்ற வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
- விடுதலை நாளேடு, 21.12.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:25 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தீண்டாமை, பாஜக

"மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம்!"

டில்லியில் பேரணி




புதுடில்லி,டிச.21தலித்உரிமைகளைப் பாதுகாத்திடுவோம், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடுவோம், மனுவாதி பாஜகவை அப்புறப்படுத்துவோம் என்ற முழக்கங்களுடன் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வியாழக்கிழமையன்று தலைநகர் டில்லியில் நாடாளுமன்றம் நோக்கி, பேரணி- ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்பேரணி-ஆர்ப்பாட்டம் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி சார்பில் நடைபெற்றது.பேரணியில் வந்த வர்கள் நாடாளுமன்ற வீதிக்கு வந்தபின் அங்கே தலைவர்கள் உரையாற்றினார்கள்.

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன் னணியின் தலைவரும் கேரள சட்டமன்ற முன்னாள் சபாநாயகருமான ராதாகிருஷ் ணன் உரையாற்றுகையில்,

மோடி அரசாங்கம், தலித்துகளுக்கு விரோதமான அரசாங்கம் என்று கூறி னார். கடந்த நான்கரை ஆண்டு கால மோடி ஆட்சியில் தலித்துகளுக்கு நீதி வழங்கக்கூடிய விதத்தில் ஒரு நடவ டிக்கையைக்கூட எடுத்திடவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மனுதர்மத்தின் அடிப்படையில் ஆட்சி செய்யும் மோடி அரசாங்கத்தைத் தூக்கி எறிந்திட தொழிலாளர்கள் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தலித் ஒடுக்குமுறைவிடுதலைமுன்னணி யின்துணைத்தலைவரானசுபாஷினி அலி, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தலித்துகளுக்கு அளிக்கப்பட்ட உரிமை களைப் பறித்திடும் சூழ்ச்சிகளுக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசி யத்தை விளக்கினார்.

அரசமைப்புச் சட்டத்துக்கு அறைகூவல்!


தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ராமச்சந்திர டோம் பேசுகையில், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் தலித்துகள் மீது பல முனைகளில் தாக்குதல் தொடுக்கப்படுகிறது என்றும், டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் ஜாதிய, மதவெறி சக்திகளின் வன்முறை வெறியாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன என்றும், இவற்றுக்கு முடிவு காண் பதற்காகத்தான் இந்தப் பேரணி என் றும், அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்போம், தலித் உரிமைகளைப் பாது காப்போம் என்றும் கூறினார். பேரணி-ஆர்ப்பாட்டத்தில் பழங்குடிமக்கள் தேசிய அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிதேந் திர சவுத்ரி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.கே.பிஜு, ஜர்னதாஸ் முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

9 ஆவது அட்டவணையில் இணைத்திடுக!


ஜாதியம், மதவெறியை எதிர்த்துப் போராட வேண்டும், தலித்,- பழங்குடியி னர் மீதான ஒடுக்குமுறையை நிறுத்த வேண்டும், தலித்,- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டத்தை அமல்படுத்து, தலித்- பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச்சட்டத்தை அரசமைப்புச்சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் இணைத்திடுக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தலித்துகள்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துக, காலியிடங் களை உடனடியாக நிரப்பிடுக, தலித்,- பழங்குடியினர்பதவிஉயர்வுக்குகிரி மிலேயர்ஷரத்துக்களைஅமல்படுத் தாதே, நிலமற்ற தலித்,- பழங்குடியினருக் குப் போதுமான அளவிற்கு நிலப்பட்டா வழங்கிடு.

துணைத் திட்ட ஒதுக்கீட்டை குறைக்காதே!


தலித்,பழங்குடியினர்துணைத்திட் டத்தின்ஒதுக்கீட்டைக்குறைக்காதே, மக்கள் தொகை சதவீதத்தின் அடிப்படை யில் துணைத் திட்டத்திற்கான தொகையைஒதுக்கிடு,அனைத்துஉயர் கல்வி நிலையங்களிலும் ரோகித் சட் டத்தை அமல்படுத்திடு, சிறையில் வைக்கப்பட்டுள்ள தலித் ஆதரவு செயற்பாட்டாளர்களை விடுதலை செய், தலித்துகளுக்கு எதிராகப் புனையப் பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெறு, மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 200 நாட்களுக்கு வேலை கொடு, குறைந்த பட்சக் கூலியை 350 ரூபாயாக உயர்த்திடு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்து, அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் வீடுகள் வழங்கிடு முதலான கோரிக்கைகளின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

- விடுதலை நாளேடு, 21.12.18

இடுகையிட்டது parthasarathy r நேரம் 4:22 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: தாழ்த்தப்பட்டோர், பாஜக
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (2)
    • ▼  ஜூன் (1)
      • முற்பட்டோர் இட ஒதுக்கீடு - விசாரணை ஆணையம் அமைக்க க...
    • ►  மே (1)
  • ►  2025 (7)
    • ►  டிசம்பர் (1)
    • ►  ஜூலை (5)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2022 (29)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 50%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்ற பணி
  • உச்சநீதிமன்ற பணி நியமனம்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள் இடஒதுக்கீடு
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கரு நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநலத்துறை
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெருக்கள் சாலைகள்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதித்துறை
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வில்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொது பெயர்
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மாற்றுத்திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முறைகேடு
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிப் பெயர்
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
  • EWS
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.