பக்கங்கள்

செவ்வாய், 31 ஜூலை, 2018

பார்ப்பனர் அல்லாத முதல் அர்ச்சகர்!

கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 36 ஆயிரம் கோயில்களில் தகுதியும் பயிற்சியும் பெற்ற இந்து மதத்தைச் சேர்ந்த எந்த சாதியினர் வேண்டுமானாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற நிலை உருவானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். இதில் பயிற்ச்சி முடித்த மதுரை எஸ்.ஆலங்குலத்தை சேர்ந்த மாரிச்சாமி கடந்த 2017ல் தமிழ்நாடு இந்து அறநிலை துறையால் தேர்வு அறிவிக்கபட்டு அதில் தேர்வாகி தமிழகத்தின் பார்பணரல்லாத பிற்படுத்தபட்ட தேவர் சேர்வை சமுதாயத்தை சேர்ந்தவர் முதன் முதலாக மதுரை அழகர் கோவிலுக்கு கட்டுபட்ட ஐயப்பன் கோவிலில் அர்ச்சராக பணியாற்றிவருகிறார்.

அவரை சந்தித்தோம்.  மாரிச்சாமி நம்மிடம்,   நான் மதுரையை சேர்ந்தவன். தந்தையார் ஒரு விவசாசி. நான் சிறுவயதிலிருந்தே சிவபக்தன். மிகுந்த ஈடுபாடுவுள்ளவன். தமிழ் பற்றின் காரணமாக கல்லூரியில் பி.ஏ.தமிழ் படித்தேன். பின்னர் மதுரை மத்திய நூலகத்தில் திருவாசகம் போன்ற பக்தி நூல்களை படிக்க ஆரம்பித்தேன். அதில் ஆர்வமாகி இந்து வேதங்களை படிக்கவேண்டும் என்று எவ்வளவோ முயன்றும் யாரும் சொல்லி கொடுக்க முன்வராததால் மிகுந்த ஏக்கத்தில் இருந்த காலகட்டத்தில் 2006ல் கலைஞர் அய்யா அனைத்து சாதினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றபட்டு முதல் பயிற்சி மாணவர்களாக 207 பேர் தேர்வு செய்யபட்டு வேதங்கள் அனைத்து படித்து முழுவதும் தேர்ச்சியாகி வெளியில் வந்தேன்.

         ஆனால் சைவ சிவாச்சாரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு போய் அரசானைக்கு இடைகால தடை வாங்கியது. ஆனாலும் தொடர்ந்து புத்தகங்களை தேடி தேடி படித்து வந்த நிலையில் 2017ல் அரசு இந்து அறநிலை துறையால் கோயிலில் அரச்சகராவதுக்கான தேர்வு அறிவிக்கபட்டு அதில் பிராமணரல்லாத தேவர் சமூகத்தை எனக்கு அர்ச்சகராகும் வாய்ப்பு 2018 பிப்ரவரி1ம்தேதி  அளிக்கபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன்.  கலைஞர் அய்யாவுக்கு கோடி நன்றி. என் கனவு நினைவாகியது. தற்போதுள்ள எடப்பாடி அய்யாவுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இறைவனுக்கு செய்யும் இத்திருப்பணியை கொஞ்சமும் குறைவில்லாமல் செவ்வனே செய்வேன்.  மேலும் என் கூட வேதம் பயின்ற அனைத்து சாதினரும் இப்பணியை செய்ய அரசு ஆவனம் செய்யவேண்டும்’’என்று முடித்து கொண்டார் மாரிச்சாமி.

நக்கீரன்
அன்பன் நீதிதேவன்

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்பட்டது


தேசிய செய்திகள்

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் சுத்தப்படுத்தப்பட்டது     


உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்றதை தொடர்ந்து கோவில் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டது. இது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


பதிவு: ஜூலை 30,  2018 17:52 PM


லக்னோ

உத்தரபிரதேசத்தில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தில்  உள்ள முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு ராத் தொகுதியை சேர்ந்த பெண் பாரதீய ஜனதா மனிஷா அனுராகி  கடந்த ஜூலை 12 ந்தேதி  ஒரு விழாவுக்கு சென்று இருந்தார்.

பெண் எம்.எல்.ஏ போய் வந்த பிரபல  ரிஷி த்ரோம் கோவிலில் பெண்கள் வழிபட தடை உள்ளது.  இது தெரியாமல் கட்சி  தொண்டர்களின் வலியுறுத்தலின் பேரில் எம்.எல் ஏ அங்கு சென்று உள்ளார். மகாபாரத காலத்தில் இருந்து இந்த கோயில் இருப்பதாக  நம்பப்படுகிறது. இந்த கோவிலில் பெண் பக்தர்கள் நுழைவதற்கு பல நூற்றாண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர்கொள்ளவேண்டி இருக்கும் என மக்கள் நம்புகின்றனர்.

கோவிலுக்குள் வந்தபோது, தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மட்டுமே பிரார்த்தனை செய்தார். ஆனால் ரிஷி த்ரோம் அவரது பிரார்த்தனைகளை நடத்தியதாக நம்பப்படுகிறது ஒரு புனிதமான தளம் மீது ஏறி நின்று உள்ளார். யாரும் மேடையில் ஏறி நின்றது கிடையாது.    இது ஒரு புனிதமான இடம் மற்றும் மக்கள் மேடையில் குனிந்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

தொண்டர்களின் நிர்பந்தததால் அங்கிருந்த பூசாரி  சுவாமி தயானந்த் மகந்த் ஒன்றும் கூறவில்லை. பென் எம்.எல் ஏ வந்து சென்றதில் இருந்து சுத்தம் செய்வதற்காக அந்த கோவில் மூடப்பட்டது.  கோயிலுக்குள் நுழைந்த பெண் எம்.எல்.ஏ., குறைந்த சாதியினரே என்று பூசாரி கோபமடைந்தார். எம்.எல் ஏ வருகைக்கு பின் அவளுடைய வருகைக்கு வருத்தம்,சுவாமி தயானந்த மகந்த் , கிராம மக்களும் பஞ்சாயத்து  ஒன்றை கூட்டினர். கோயிலுக்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் கடவுளின்  கோபத்தை எதிர்கொண்டதாக அவர்கள் கூறினர்.

அவரின் விஜயத்தின் பின்னர் ஒரு துளி நீர் மழை பெய்யவில்லை என்று அவர்கள் கூறினர். பின்னர் பஞ்சாயத்து தெய்வங்களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற ஆலயத்தை சுத்தப்படுத்த கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை   கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகளின் சங்கமம் ஆகும்   பிரயாக் (அலகாபாத்) கொண்டு சென்று சுத்தபடுத்துவது  என முடிவுசெய்தனர்.

அதன் படி கங்கை நீரால் கோவில் வளாகம் சுத்தப்படுத்தப்பட்டது. தெய்வங்களின் சிலைகள் பிரயாக்கில் சுத்தம் செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது .பக்தர்கள் 'தரிசனம்' செய்வதற்காக இந்த ஆலயம் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. மனிஷா அனுராகி   கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது  என்று கூறி உள்ளார்.

-தினத்தந்தி

திங்கள், 30 ஜூலை, 2018

4,064 இடங்களில் 69 இடங்கள் மட்டுமே அளிக்கப்படும் அவலம்

சமூகநீதிக்குச் சவக்குழி


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் நிலை?
நாக்பூர், ஜூலை 28 நாடுமுழுவதும் உள்ள அனைத்து (193 கல்லூரிகள்) அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய 15 விழுக்காடு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட வேண்டிய 27 விழுக்காடு அளிக்கப்படாமல், வெறும் 1.7விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்ட அதிர்ச்சிகரத் தகவல் தி டைம்ஸ் ஆப் இந்தியா (27.7.2018) ஏட்டில்  வெளியாகியுள்ளது.

2 வழக்குகள்


மும்பை உயர்நீதிமன்றம் மராட்டிய மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு அளிப்பதற்கு ஜூலை 16 வரை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.  இஎஸ்அய்சியில் இளநிலை மருத்துவம், இளநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையையும் ஜூலை20வரை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அகில பாரதிய பிற்படுத்தப்பட்டவர்கள் மகாசங்கம் சார்பில் அதன் வழக்குரைஞர் புருஷோத்தம் பாடீல் தொடுத்த வழக்கில் இளநிலை மருத்துவம், இளநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடங்களை அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

மருத்துவக் கல்வியில் அனுமதி மறுக்கப்பட்ட மாணவி சமிக்ஷா கெய்க்வாட் இஎஸ்அய்சி ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்வியில் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் துஷார் மண்டேல்கர், ரோகன் மால்வியா ஆகியோர் மூலமாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த நீதிபதிகள் பூஷண் தர்மாதிகாரி, சாகா ஹக் ஆகியோரைக்கொண்ட அமர்வு இரண்டு வழக்குகளையும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

மேலும், மத்திய அரசு, மராட்டிய மாநில அரசு மற்றும் டில்லி பொது சுகாதார சேவை இயக்குநர் ஆகியோர் பதில் அளிப்பதற்கான கடைசி வாய்ப்பு அளிப்பதற்காக திங்கள்கிழமை வரை வழக்குகளை ஒத்திவைப்பதாக நீதிமன்ற அமர்வின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஎஸ்அய்சி மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான ஒதுக்கீட்டில் வெற்றிடம்

மாணவி சமிக்ஷா கெய்க்வாட் தொடர்ந்த வழக்கில் இ.எஸ்.அய்.சி. (இ.எஸ்.அய். மருத்துவ கல்லூரி)  சார்பில் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சேர்க்கை முறையை எந்த வகையில் தளர்த்தினாலும்,  தகுதியானவர்களாக உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும். சட்டப்படி ஒதுக்கீட்டில் உறுதிப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நபருக்கு சேர்க்கை அனுமதி அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அதைவிட, இஎஸ்அய்சி தகுதிநிலைகளைப் பொறுத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தகுதி நிலையை அம் மாணவி பெறத் தவறிவிட்டார். கடந்த ஆண்டிலேயே இதே நீதிமன்ற அமர்வால் அம்மாணவியின் கோரிக்கை நிராகரிக் கப்பட்டு விட்டது. 2017-2018 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் இஎஸ் அய்சியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சேர்க்கை இடங்களை வெற்றிடமாக விடுவதால் இழப்பு ஏற் படுவதாக அம்மாணவி குற்றச்சாற்று கூறியதையும் நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டில் ஏற்கவில்லை என்று கூறியுள்ளது.

அரசு மருத்துக் கல்லூரிகள் 193


நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் 193. அனைத்திந்திய அளவிலான இடஒதுக்கீட்டுக்குரிய ஒதுக்கீடு 15 விழுக்காடு 4,064 இடங்கள். பொதுப்போட்டிக்குரிய இடங்கள் 3,083 (76 விழுக்காடு),  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 இடங்கள் (1.7 விழுக்காடு), தாழ்த்தப்பட்டவர்களுக்கு 609 இடங்கள் (1.5 விழுக்காடு), பழங்குடியினத்தவர்களுக்கு 303 இடங்கள் (7.5 விழுக்காடு) அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி மத்திய அரசால் அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டுக்கொள்கையின்படி, இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 விழுக் காடு, பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடு, பொதுப் போட்டியாளர்களுக்கு 50 விழுக்காடு என்கிற முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய  ஒதுக் கீடான 15 விழுக்காட்டில்  பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய 27விழுக்காட்டுக்கு பதிலாக வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

அகில பாரதிய பிற்படுத்தப்பட்டவர்கள் மகாசங்கத்தின் தலைவர் பாபன் தாய்டே மற்றும் ராதிகா ராட் ஆகியோர் முத லாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஒதுக்கீடு 15 விழுக்காடு போக, சில மாநிலங்களில் மாநில அரசுகளால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 4,064 இடங்கள் (15 விழுக்காடு) அளிக்கப்பட வேண்டிய நிலையில், வெறும் 69 இடங்களே (1.7 விழுக்காடு) அளிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் மத்திய ஒதுக்கீட்டில் ஓரிடம்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லை


சட்டப்படி  இடஒதுக்கீட்டுக்கொள்கையின்படி அளிக்கப்பட வேண்டிய 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மராட்டிய மாநிலத்தில்  அளிக்கப்படவில்லை. மத்திய ஒதுக்கீட்டில் 464 இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு இடம்கூட அளிக் கப்படவில்லை. தமிழ்நாடு, கருநாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தபோதிலும், திருப்திகரமான எண்ணிக்கையில் இல்லாத நிலை உள்ளது.

அனைத்திந்திய ஒதுக்கீட்டின்படி, அளிக்கப்படுகின்ற 15 விழுக்காடு இடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே வழக்கு தொடர்ந்துள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.

- விடுதலை நாளேடு 28. 7 .18

வெள்ளி, 27 ஜூலை, 2018

தாழ்த்தப்பட்ட பெண்ணை தண்ணீர் எடுக்க விடாத ஆறு பேருக்கு சிறைத் தண்டனை

ராஜ்கோட், ஜூலை 26 தலித் பெண்ணை கிணற் றிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து ராஜ்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் கொடிநார் தாலுகாவுக்கு உட்பட்ட சுகாலா என்ற கிராமத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதை, அங்குள்ள ஜாதி ஆதிக்கவெறியர்கள் 6 பேர் தடுத்தனர். அத்துடன் அந்தப் பெண்ணை 6 பேரும் அடித்து துன்புறுத்தினர்.

இதுதொடர்பான வழக்கு ராஜ்கோட் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், தலித் பெண்ணைத் தாக்கிய 6 பேரில் ஒரு பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைதண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஓராண்டு சிறைதண்டனையும் வழங்கப் பட்டுள்ளது. மேலும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதன்முறை குற்றம் இழைப்பவர்களுக்கு நீதிபதி மன்னிப்பு வழங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளித்துள்ள நீதிபதி எஸ்.எல். தாகூர், முதன்முறை குற்றவாளிகள் என்ற சலுகையை இவர்களுக்கு அளிக்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

- விடுதலை நாளேடு, 26.7.18

செவ்வாய், 24 ஜூலை, 2018

இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போராட்டம்

மும்பை, ஜூலை 22 இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் மீண்டும் போ ராட்டத்தில் ஈடுபட்டனர். சோலாப்பூரில் அரசு பேருந்து ஒன்று தீ வைத்து எரிக்கப் பட்டது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வந்தனர். அரசுடன் நடந்த பேச்சு வார்த் தையை அடுத்து அவர்கள் போராட்டத்தை நிறுத்தி வைத் திருந்தனர்.

இந்தநிலையில் மராத்தா சமூகத்தினர் நேற்று மீண்டும் இடஒதுக்கீடு கேட்டு மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சோலாப்பூரில் சம்பாஜி சவுக் பகுதியில் நடந்த போ ராட்டத்தால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல சோலாப்பூர் வடக்கு பகுதியில் போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் அந்த வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றை வழிமறித்து நிறுத்தி தீ வைத்து எரித்தனர்.

மராத்தா சமூகத்தினரின் இந்தப் போராட்டம் லாத்தூர், பீட் போன்ற இடங்களிலும் நடந்தது. அங்கு நடந்த போராட்டத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக் கப்பட்டன.

ஒரு சில இடங்களில் போராட்டக்காரர்கள் முதல்- அமைச்சர் தேவேந்திர பட்னா விசின் உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர்.

பீட் மாவட்டத்தில் மராத்தா சமூகத்தினர் தங்கள் தலையை மொட்டையடித்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.

- விடுதலை நாளேடு, 22.7.19

திங்கள், 23 ஜூலை, 2018

தாழ்த்தப்பட்டவர்'' என்பதால் சத்துணவுப் பணியாளரை மாற்றுவதா?

தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன அறிக்கை


திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த பாப்பாள் என்ற பெண் கடந்த திங்கள் கிழமையன்று சத்துணவுத் திட்டத்தின்கீழ் சமையல் பணியில் அமர்த்தப்பட்டார். அந்த ஊரைச் சேர்ந்த ஜாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட பெண் சமையல் செய்யக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்துப் பள்ளியை முற்றுகை யிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊராட்சி ஒன்றிய வட் டார வளர்ச்சி அலுவலர் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணை வேறு பள்ளிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இது, அப்பட்டமான தீண்டாமையை கடைப்பிடிக்கும் சட்ட விரோத, சமுதாய விரோத நடவடிக்கையாகும்.

தீண்டாமை ஒழிப்பு என்னும் வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சம்பந் தப்பட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சம்பந்தப்பட்ட அருந்ததியர் ஜாதி பெண்மணி அதே பள்ளியில், அதே பணி யைத் தொடரவேண்டும்.

சில ஆண்டுகளுக்குமுன் கிருஷ்ணகிரி மாவட்டம் A-மோட்டூரில் சத்துணவுப் பணியாளராகப் பணியாற்றிய மகேசுவரி என்ற தாழ்த்தப்பட்ட பெண்ணை இட மாற்றம் செய்தபோது திராவிடர் கழகம் தலையிட்டது - விடுதலை'யில் கண்டித் தும் எழுதப்பட்ட காரணத்தால், அந்த இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், சமீ பத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் காரணமாக பெரும் சர்ச்சைகள் வெடித்துக் கிளம்பியுள்ள நிலையில், இப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும்.

முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு, தீண்டாமையைக் கடைபிடித்தவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதோடு,  பணி மாற்றம் செய்யப்பட்ட அந்த அருந் ததியர் ஜாதிப் பெண்ணை அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தவறும் பட்சத்தில் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

19.7.2018

புதன், 18 ஜூலை, 2018

ஜாதித் தடைகளை உடைத்து மாப்பிள்ளை ஊர்வலம்!

80 ஆண்டுகளுக்குப் பின் உரிமையை மீட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஜாதித் தடைகளை உடைத்து மாப்பிள்ளை ஊர்வலம்!காஸ்கஞ்ச், ஜூலை 18- உத்தரப்பிரதேசத் தில் ஜாதி ஆதிக்க சக்திகளின் எதிர்ப் பையும் மீறி, தாழ்த்தப்பட்ட மணமகன் ஒருவர் சாரட் வண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் சென்றுள்ளார்.

இந்நிகழ்ச்சியின் மூலம், 80 ஆண்டு களுக்குப் பின் தாழ்த்தப்பட்ட மக்கள், மாப்பிள்ளை ஊர்வலம் செல்வதற்கான தங்களின் உரிமையை மீட்டெடுத்து உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் ஜாதவ். இவர், அருகிலுள்ள காஸ்கஞ்ச் மாவட்டம், நிஜாம்பூரிலுள்ள ஷீத்தல் குமாரி என்ற பெண்ணைத் திருமணம் செய்ய முடிவு செய்தார். கடந்த மார்ச் மாதமே, இவர்களது திருமணம் நடப்ப தாக இருந்தது.
அப்போது, மாப்பிள்ளை ஊர்வலத் தில் சஞ்சய் கலந்துகொள்வதற்காக குதிரை வண்டி ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. ஆனால், சஞ்சய் ஜாதவ்-, ஷீத் தல் இருவரும் தாழ்த்தப்பட்ட சமூகத் தவர் என்பதால், நிஜாம்பூரில் உள்ள தாக்கூர் பிரிவைச் சேர்ந்த ஜாதி ஆதிக் கக்கும்பலைச் சேர்ந்தவர்கள், மாப் பிள்ளை ஊர்வலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் நடத்தக் கூடாது என்று ஊர்ப்பஞ்சாயத்து என்ற பெயரில் மிரட்டலும் விடுத்தனர்.
ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவரான மணமகன் சஞ்சய் ஜாதவ், மாவட்ட நிர்வாகத்தை நாடினார். எதிர்பார்த்ததைப் போலவே அவரின் புகார் கண்டுகொள்ளப்படவில்லை.
பின்னர் மாவட்ட நீதிபதிமற்றும் முதலமைச்சர் அலுவலகத்தை சஞ்சய் ஜாதவ் தொடர்பு கொண்டார். அலகா பாத் உயர் நீதிமன்றத்திலும் இதுகுறித்து முறையீடு செய்தார். இதனால், பிரச் சினை பெரிதாவதை அறிந்த தாக்கூர் பிரிவினர், திடீரென சஞ்சய் அவரது விரும்பும் பாதையிலேயே மாப்பிள்ளை ஊர்வலத்தை நடத்திக் கொள்ளலாம் என்று இறங்கி வந்தனர். சஞ்சய் - ஷீத்தலின் 5 மாதப் போராட்டத்திற்கு வெற்றியும் கிடைத்தது.
இதையடுத்து தாக்கூர் பிரிவினர் வசிக்கும் தெரு வழியாக, சஞ்சய் தனது மனைவி ஷீத்தலுடன் குதிரை வண்டி யில் ஊர்வலம் சென்றார். இதுதொடர் பான செய்தி மாவட்டம் முழுவதும் பரவிய நிலையில், இந்த ஊர்வலத்தை உள்ளூர் தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்தன. நிஜாம்பூரில் 10 ஆய்வாளர்கள், 22 உதவி ஆய்வாளர்கள் உட்பட சுமார் 300 காவல்துறையினரின் பாதுகாப்புடன்தான் ஊர்வலம் நடை பெற்றது என்றாலும், தங்களின் போராட் டம் முக்கியமான ஒரு வெற்றியைப் பெற்றிருப்பதாக மணமகன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

- விடுதலை நாளேடு, 18.7.18

ஞாயிறு, 15 ஜூலை, 2018

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


புதுடில்லி, ஜூலை 15 அரசுப் பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) சமூகம் - பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு (கிரீமி லேயர்) கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
இதேபோல், எஸ்சி, எஸ்டி பிரிவிலும் கிரீமிலேயர் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, நீதிபதி எம். நாகராஜ் கடந்த 2006-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். அவர், எஸ்சி, எஸ்டி பிரிவினரை கிரீமிலேயர் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், எஸ்.சி., எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குபோது, அவர்களின் பொரு ளாதார நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளால், ரயில்வே துறையில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர்; எனவே, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும்‘’ என்று வாதிட்டார்.
அப்போது, “இந்த விவகாரம் தொடர் பாக நீதிபதி எம்.நாகராஜ் பிறப்பித்த உத்த ரவுக்கு தடை விதிக்க முடியாது. ஏற்கெனவே ஒரு அரசியல் சாசன அமர்வு பல்வேறு வழக்குகளை விசாரித்து வருவதால், இந்த மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்தான் விசாரிக்க முடியும்‘’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்தும், ஆதரித்தும் வெவ்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மும்பை - பஞ்சாப், அரியாணா உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. ஒருபுறம் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறைக்கு ஆதரவாகவும், மறுபுறம் எதிராகவும் உத்தரவுகள் வெளியாகின.
இதற்கு நடுவே டில்லி உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக் கீடு அளிக்கும் முறையை ரத்து செய்தது.
இத்தகைய முரண்பட்ட தீர்ப்புகளால் அந்த வகுப்பினருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 5-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில், சட்ட விதி களுக்குட்பட்டு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
- விடுதலை நாளேடு, 15.07.18

செவ்வாய், 3 ஜூலை, 2018

இதுதான் பிஜேபி ஆட்சி! மீசை வைத்திருந்தால் உதைகுஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரை உயர்சாதியினர் சிலர் அடித்து உதைத்து மீசை எடுக்க வைத்து உள்ளனர்.

குஜராத் மாநிலம் பலான்பூரைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ரஞ்சித் தாகூர். தாழ்த்தப்பட்ட இளைஞரான இவர் ஜூன் 4ஆம் தேதி தனது கிராமத்தில் நடைபெற உள்ள முடி இறக்கும் விழாவுக்கான அழைப்பிதழை வழங்க கடந்த மே 27ஆம் தேதி காட் கிராமத்திற்குச் சென்றுள்ளார். அழைப்பிதழில் அந்த இளைஞரின் பெயர் ரஞ்சித் சின்ஹ் என்று இருந்துள்ளது. இதை கவனித்த அந்த ஊர் உயர்சாதியினர் சிலர் சின்ஹ் என்ற பெயரை எப்படி பயன்படுத் தலாம் என்று கூறி இளைஞரிடம் சண்டைக்கு வந்துள்ளனர்.

பின் ரஞ்சித்தை அருகில் உள்ள காட் டுப் பகுதிக்கு இழுத்துச்சென்ற அவர்கள் அவரை அடித்து உதைத்து வலுக்கட்டாய மாக மீசையை எடுக்க வைத்திருக்கின்றனர். இது தொடர்பாக ரஞ்சித் பலான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் ரஞ்சித் 15 பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையி னர் மதூர்சின்ஹ் பாபி என் பவரை மட்டும் கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மற்றவர்களும் விரை வில் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள ரஞ்சித்தின் தந்தை, தனது மகனுடைய பள்ளி மாற்றுச்சான்றிதழில்கூட ரஞ்சித் சின்ஹ் என்ற பெயர்தான் குறிப்பிடப்பட்டி ருந்தது என்று கூறுகியுள்ளார்.

தொடர்ந்து தாழ்த்தப்பட்டமக்களின் மீது நடக்கும் தாக்குதல்கள்

குஜராத்தில் கடந்த மார்ச் மாதம் தாழ்த் தப்பட்ட இளைஞர் ஒருவர் குதிரைமீது ஏறி வந்தது தொடர்பாக அந்த இளைஞரையும், குதிரையையும் கொலைசெய்தனர். இதே போல் கடந்த ஜனவரி மாதம் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள் என் பதற்காக கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டனர். இதில் அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் தீவைத்து எரிக்கப் பட்டது. 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோலாட்ட நிகழ்ச்சியை வேடிக்கைப் பார்த்த தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப் பட்டார். கடந்த ஆண்டும் இதோ போல் சில தாழ்த்தப்பட்ட இளைஞர் கள் மீசை வைத்த காரணத்தால் கடுமையாக தாக்கப்பட்டனர்.

 

-  விடுதலை ஞாயிறு மலர், 16.6.18