பக்கங்கள்

வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வழக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது



புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு


'கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற் படுத்தப்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில், நாடாளுமன்றத்தில் நிறை வேறியது. இதை எதிர்த்து, வங்கலா ஈஸ்வரய்யா என்பவர் உள்ளிட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'இடஒதுக்கீடு அளிப்பதற்கு, பொருளாதார சூழ்நிலையை வரையறையாகக் கருத முடியாது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

- விடுதலை நாளேடு, 12.2.19

புதன், 23 ஜனவரி, 2019

உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு

சென்னை, ஜன.23 பொருளாதார ரீதியாக உயர்ஜாதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அவசர அவசரமாக மத்திய பா.ஜ.க. அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு, உடனடியாக அமல் படுத்தவும் ஆணை பிறப்பித்து விட்டது.


இதனை எதிர்த்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும், கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.


மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து திராவி டர் கழகத்தின் சார்பில், துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக் கினை நேற்று (22.1.2019) தாக்கல் செய்துள்ளார்.


நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள் ளார். அந்த வழக்குடன் திராவிடர் கழகத்தின் சார்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்'' என்று நீதிபதிகள் கூறினர்.


இந்த வழக்குக்குப் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் தாக்கீது பிறப்பித்துள்ளனர்.


உச்சநீதிமன்றத்தில்


இதேபோன்றதொரு வழக்கை உச்சநீதிமன்றத்திலும் வர்த்தகப் பிரமுகர் தெஹ்சீன் பூனாவல்லா என்பவரும் தொடுத்துள்ளார்.


- விடுதலை நாளேடு, 23.1.18

செவ்வாய், 22 ஜனவரி, 2019

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தி.மு.க. தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு தாக்கீது

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு




சென்னை, ஜன.22- பொருளா தாரத்தில் பின்தங்கிய, முன் னேறிய வகுப்பினருக்கு  10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசின்சட்டத்தை ரத்து செய்யக் கோரி தி.மு.கழகம் தொடர்ந்த வழக்கைசென்னை உயர்நீதிமன்றம் நேற்று விசா ரித்து, வரும் பிப்.18ஆம்தேதிக்குள் பதிலளிக்கும்படிமத்திய அரசுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட் டது.

இதுபற்றிய விபரம் வரு மாறு: -பொருளாதார ரீதியாக பின் தங்கிய முன்னேறிய வகுப்பின ருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம்கொண்டு வந்தது. இதை எதிர்த்து தி.மு.க. சார்பில் சென் னை உயர்நீதிமன்றத்தில் கழக அமைப்புச் செயலாளர் நாடாளு மன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணி யம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (21.1.2019) காலை விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார். அது விவரம் வருமாறு -இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசியல மைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப் படுகிறது. இந்த இட ஒதுக்கீடு என்பது சாதி ரீதியாகத் தான் வழங்க முடியுமே தவிர, பொரு ளாதார வசதிகளின் அடிப் படையில் வழங்க முடியாது என்று அரசியல் அமைப்புச் சட் டத்தில் தெளிவாகக் கூறியுள்ளது.

இதுமட்டுமல்ல; உச்சநீதிமன் றத்தின் பல்வேறு வழக்குகளில், பொருளாதார ரீதியான இடஒதுக் கீடு வழங்க முடியாது என்று தீர்ப்புகள் அளித்துள்ளன. இவை தெரிந்து இருந்தும், பொருளாதார ரீதியாகபின் தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது. இந்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மையையே மாற்றுகிறது. அதுமட்டுமல்ல; பொருளாதாரத்தின் அடிப்படை யில் மனிதர்களைப் பிரிக்க முடியாது. இன்று ஏழையாக இருப்ப வர்கள் நாளைபணக்காரராக மாறி விடலாம். ஆனால், சமூக ரீதியாக பல நூற்றாண்டு களாக பாதிக்கப் பட்டவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் போதிய பிரதி நிதித்துவம் இல்லை என்ப தால், அப்படிப்பட்ட சாதியின ருக்கு இடஒதுக்கீடு வழங்கப் படுகிறது. எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்குத் தான் இடஒதுக் கீடு வழங்க முடியுமே தவிர, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு என்று கூறி பொதுப்பிரிவினருக்கு அதை வழங்க முடியாது. அதுவும், ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று கூறுகின்றனர் என்று பி.வில்சன் வாதிட்டார்.

ரூ.8 லட்சத்துக்குக் குறைவான வருமானமா? நீதிபதி கேள்வி!


அப்போது நீதிபதிகள் குறுக் கிட்டு, அந்த சட்ட மசோதாவில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு குறைவான வருமானம் பெறுப வர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் என்று குறிப் பிடப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர்.அதற்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், சட்டமசோதாவில் குறிப்பிட வில்லை. ஆனால், கடந்த 7ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு அவ்வாறுகொள்கை ரீதியாக முடிவு எடுத்துள்ளது என்றார்.

அரசியல் அமைப்புச் சட்டத்தில், பின் தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கலாம் என்று கூறியுள்ளதே? என்று நீதிபதிகள் மற்றொரு கேள்வியை எழுப்பினர். அதற்கு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், பின்தங்கியவர்கள் என்று குறிப் பிடப் படுபவர்கள் ஜாதிரீதியாகப் பின்தங்கியவர்களே தவிர, பொருளாதார ரீதியாக பின்தங்கி யவர்கள் கிடையாது. எனவே, இந்தசட்ட மசோதாவே அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரா னது என்பதால், இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று வாதிட்டார். மத்திய அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் ஜி.ராஜகோபால் வாதிட்டார். அவரது வாதத்தின் போது, மனுதாரர் தி.மு.க.வைச் சேர்ந்தவர் என்றும் உயர்நீதிமன்றத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று கூறியதற்கு, மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது நீதிபதிகள், `உயர் நீதிமன்றத்தைத் தவறாக பயன் படுத்துகிறார் என்று தலைமை வழக்குரைஞர் கூறியதை ஏற்க முடியாது. அவரது இந்த வாதத்தை ஏற்க முடியாது என்றனர். பின்னர், `இந்த 10 சதவீத இடஒதுக்கீடு யாருக்கு? என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப் பினர். அதற்கு, இட ஒதுக்கீடு பெறாதவர்கள், பொருளாதாரரீதியாக பின்தங்கியிருப்பவர் களுக்கு  என்று கூடுதல் தலை மை வழக்குரைஞர் கூறினார். அவர்கள் யார்? இடஒதுக்கீடு பெறாதவர்கள் என்றால், முற் பட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தானே?என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்பினர். பின்னர், இந்த வழக்கிற்கு மாநிலஅரசுக்கும், மத்திய அரசுக் கும் விரிவான பதில் மனுவை 18ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தாக்கீது அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வருகிற பிப்ரவரி 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

-  விடுதலை நாளேடு, 22.1.19

ஞாயிறு, 20 ஜனவரி, 2019

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?- திமுக வழக்கு

யர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு


சென்னை, ஜன.19 பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கு பொரு ளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு தற்போது புதிதாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக் கல் செய்து குடியரசுத்தலைவரிடம் ஒப்புதல் பெற்று சட்டமாக அமல்படுத்தியுள்ளது.

மாநிலங்கவையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் இதை எதிர்த்து வாக்களித்தாலும் கூட்ட ணியின் பிரதான கட்சியான காங் கிரஸ், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்து வாக்களித்தன. பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இந்நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்து திமுக சார்பில் அக் கட்சியின் அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ். பாரதி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அவர் தொடர்ந்த வழக்கில் கூறியிருப்பதாவது:அரசியல் அமைப்புச் சட் டத்தை உருவாக்கி பட்டியல் இனத்தவருக்கும் பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தமிழகத் தில் 69 சதவீத இட ஒதுக் கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் முன்னேறிய வகுப்பி னர்களுக்கு பொருளாதார அடிப் படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் பாதிப்பு ஏற்படும்.

இதை வறுமை ஒழிப்பு திட் டமாக கருதக்கூடாது. ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் திமுக சார்பில் கொண்டுவந்த சட்ட மசோதாவை கடுமையாக எதிர்த் துள்ளோம், மேலும், மசோதா விற்கு எதிராகவும் வாக்களித்துள் ளோம். எனவே, இந்த இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிராக உள்ளது. இந்த மசோ தாவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கு  நீதிபதிகள் மணிக் குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை 21.1.2019 அன்று வைக்கப்பட்டுள்ளது.

-  விடுதலை நாளேடு, 19.1.19

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி, ஜன.11 பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக் கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில்பின்தங் கிய பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப் புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, இதற்கான அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நேற்று முன் தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, சட்ட மாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த சட் டத்தை எதிர்த்து சமத்துவ இளைஞர்கள்சங்கம்சார்பில் உச்சநீதிமன்றத்தில்நேற்று பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது. அதில்,முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, இந்திய அரசியல் சாசன சட் டத்துக்குஎதிரானது.இது,இட ஒதுக்கீடுசட்ட அடிப்படையை மாற்றும் விதமாக உள்ளது. இந்த  மசோதா நிறை வேற்றப் பட்டதைரத்துசெய்துஉத்தர விட வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரும் என தெரிகிறது.

-  விடுதலை நாளேடு, 11.1.19

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அரசு சார்பில் கருத்து



புதுடில்லி, ஆக. 17 அரசு பணி களில்எஸ்.சி., எஸ்.டி.வகுப் பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

2006 ஆ-ம் ஆண்டு வழங்கிய இந்தத் தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலே யர்) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதி பதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

2006- ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 11- ஆம் தேதி மறுத்து விட்டது.

இந்நிலையில்அந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜ ரானார். அவர், இட ஒதுக்கீட்டின் பலனைஎஸ்.சி.,எஸ்.டி.வகுப் பினரில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அந்த இனத்தினரில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்கலாமா? என்ற கேள்விக் குப் பதில் அளித்து வாதாடினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பி னரில் வசதி படைத்தவர்கள் என்பதால் இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது.

அப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுத்து, எந்தத் தீர்ப்பும் வழங் கப்பட்டது இல்லை.

அந்த வகுப்பினரில் குறிப் பிட்ட சிலர் வசதி படைத்த வர்களாக இருக்கலாம். ஆனால், ஜாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்குறிப் பிட்ட பிரிவினரை விலக்கி வைக்கலாமாஎன்றகேள்விக் கானபதிலைகுடியரசுத் தலைவரும், நாடாளுமன்றமும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதித்துறையினருக்கு வேலை இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வகுப்பினரில் நல்ல நிலையில் இருப்பவர்கள்கூட உயர் ஜாதியில் திருமணம் செய்ய முடியாது. இதில் உண்மை நிலை என்னவென்றால், ஒரு சிலர் வசதியான நிலைக்கு வந்து விட்டாலும்கூட, அவர்களது ஜாதியும், பின்தங்கிய நிலையும் அவர்களிடம் இருந்து நீங்கி விடுவது இல்லை. பாகுபாடு பார்க்கும் ஜாதி அமைப்பு நமது தேசத்தின் வாய்ப்புக்கேடானது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

- விடுதலை நாளேடு 17.8 .18