பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

எஸ்.அய்.ஆர்.இல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

பாராட்டுகிறோம்


இன்றைய அரசியல் கிளர்ச்சியானது "சுயராஜ்ஜியம் சம்பாதிக்க" என்று சொல் லிக் கொண்டு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையை ஒழிக்கவே பாடுபடுகின்றது என்பதை, நாம் எவ்வளவோ தடவை எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை வேண்டுமென்பதற்கு ஆகவே ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது. அதி தீவிர காங்கிரஸ் வாதியாகவும், அதி தீவிர தேசிய வாதியா கவும் இருந்த டாக்டர் நாயர், சர்.பி. தியாக ராயர் ஆகியவர்களின் முயற்சியே ஜஸ் டிஸ் கட்சி தோன்றலுக்குக் காரணமாகும்.

அக்கட்சி கல்வியில், அறிவில், உத்தி யோகங்களில் பிரதிநிதித்துவத்தில் பிற் பட்டும், ஒதுக்கப்பட்டும், தாழ்த்தப்பட்டும் கிடந்த மக்களுக்குப் பாடுபடுவதை முக்கிய கொள்கையாய்க் கொண்டதால், அதற்குப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

இந்தக் கட்சியின் முன்னேற்றமும், இம் முயற்சியின் வெற்றியும் வெகுகாலமாய்க் கல்வியிலும், உத்தியோகத்திலும், பிரதிநிதித் துவத்திலும் முன் அணியில் இருந்த பார்ப் பனர்களுக்கும், அவர்களது ஆதிக்கத் துக்கும் சிறிது தடையும், ஏமாற்றமும் செய் வதாக இருந்ததால், ஜஸ்டிஸ் கட்சி பார்ப் பனர்களுடைய எதிர்ப்புக்கும், துவேஷத் துக்கும், விஷமப் பிரச்சாரத்துக்கும் ஆளாக வேண்டி இருந்ததோடு, பார்ப்பனர்களின் சூழ்ச்சியானது, பார்ப்பனரல்லாதாருக் குள்ளும் பிரிவினையையும், கட்சி பேதங் களையும் உண்டாக்கித் தொல்லைப்படுத்த வேண்டியதாகிவிட்டது.

எது எப்படி இருந்த போதிலும், பல காரணங்களால் வகுப்புவாரிப் பிரதிநிதித் துவ முறை இன்று சென்னை அரசாங்கத் தில் ஒரு அளவுக்காவது நிலைநிறுத்தப் பட்டு விட்டதுடன், அது இந்திய அரசாங் கத்தையும் எட்டிப் பார்க்கும்படி செய்து விட்டது. இந்த நிலையானது, இனி எப் போதாவது ஒரு சமயம் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கம் (ஒழியாது) ஒழிந்து விட்டாலும் கூட, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அவசியம் என்பதை அரசாங்கத்தார் உணர்ந்து விட்டார்கள். ஆனதால், அக் கொள்கை இனி மாற்றப்படுவது என்பது சுலபத்தில் சிந்திக்க முடியாத காரியமாகி விட்டது.

பிரதிநிதித்துவங்களிலும், உத்தியோ கங்களிலும் இன்று இருந்து வரும் விகி தாச்சார எண்ணிக்கை பிற்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்புகளுக்கு மிகவும் போதாத தாய் இருக்கின்றது என்றாலும், அந்தக் கொள்கை பார்லிமெண்ட் வரை ஒப்புக் கொள்ளப்பட்டாய்விட்டது என்பது எவரும் மகிழ்ச்சியடையக் கூடிய செய்தியேயாகும்.

அந்த முறை இந்திய கவர்ன்மெண் டிலும் அய்.சி.எஸ் முதலிய பெரிய இந்திய உத்தியோகத்திலும் கையாளப்பட வேண் டும் என்கின்ற கிளர்ச்சியும், இப்பொழுது வலுவடைந்து அது அரசாங்கத்தாரால் கவனிக்கப்படப் போகின்றது என்கின்ற சேதியும் மகிழ்ச்சியைத் தரத்தக்கதாகும். ஆனால் நமது மாகாணத்துக்குள்ளாகவே இருந்து வரும் ஜூடிசியல் இலாக்கா அதாவது முனிசீப்பு, ஜட்ஜூ முதலிய உத்தியோகங்களில் இந்த முறையானது சரியாய்க் கவனிக்கப்படாமலும் நமது மாகாணத்தில் உள்ள ரயில்வே இலாக்காக் களில் இதுவரை சிறிதும் கவனிக்கப்படா மலும் இருந்து வந்தது ஒரு பெருங்குறையா கவும், மிகுதியும் வருந்தத்தக்க விஷயமா கவும் இருந்து வந்தது.

ஹைகோர்ட்டு ஆட்சிக்குள்பட்ட இலாக் காக்களில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அனுஷ்டிக்கப்படாததற்குக் காரணம் ஜஸ்டிஸ் கட்சியின் பலமற்ற தன்மையே யாகும்.

ஜஸ்டிஸ் கட்சி பலமுள்ளதாக இருந்து, அக்கட்சித் தலைவர்கள் பொது நலத்தை விட, சுயநலத்தைப் பெரிதாக எண்ணாதவர் களாய் இருந்து, தங்களது சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்திருப்பார்களேயானால் 4, 5 வருஷங்களுக்கு முன்பாகவே, ஹைகோர்ட் இலாக்காவிலும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை அமுலுக்கு வந்திருக் கும்.

கட்சிக்குப் பலமும், ஒற்றுமையும் இல்லாதிருந்ததால், ஹைகோர்ட்டாரை வகுப்புவாரி முறையைக் கையாளும்படி கட்டாயப்படுத்தத் தைரியமில்லாமல் போய்விட்டது.

என்றாலும் இப்போது பொது ஜனங் களுடைய உணர்ச்சியானது அது விஷயத் தில் பலப்பட்டுவிட்டதாலும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறை இனி யாராலும் தடுக்க முடியாத மாதிரியில் செல்வாக்குப் பெற்று விட்டதாலும், இனி அது யாராலும் அசைக்க முடியாது என்கின்ற நிலைபெற்று விட்ட தாலும், இப்போது ஹைகோர்ட்டாரையும் இந்த முறையைக் கைப்பற்றித் தீரவேண்டும் என்கின்ற நிலையில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

இவ்வளவோடு நின்றுவிடாமல், இப் போது தென்னிந்திய ரயில்வே கம்பெனி யாரையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ முறையைக் கையாண்டு தீரும்படியான நிலைமைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. இந்தக் காரியத்துக்கு ஜஸ்டிஸ் கட்சி உட்பட சுயமரியாதை இயக்கமும் அதன் தலைவர் சர்.ஆர்.கே. சண்முகம், (ளிசிமிணி) ஓ.சி.அய்.இ, போன்றவர்களும் எவ்வளவு தூரம் பொறுப்பாளிகள் என்பதை பொது ஜனங்களில் அனேகர் உணர்ந் திருக்க மாட்டார்கள்.

தென் இந்தியப் பார்ப்பனர்கள் தோழர் சி. ராஜகோபாலாச்சாரியார் உள்பட ஒவ் வொருவருக்கும் சர். ஷண்முகத்தின் மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும், ஜஸ்டிஸ் கட்சி மீதும் இவ்வளவு ஆத்திரமும், துவே ஷமும் வரக் காரணம் என்ன என்பதைக் கூர்மையாகப் பார்த்தால், அவை செய் துள்ள காரியம் எவ்வளவு என்பது விளங் காமல் போகாது.

ஆகவே இன்று எஸ்.அய்.ஆர். (ஷி.மி.ஸி.) ரயில்வே கம்பெனியார், தங்கள் கம்பெனி உத்தியோகத்துக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித் துவ உரிமை முறையை அனுஷ்டித்து, அந்தப்படி உத்தியோகம் வழங்க ஆரம் பித்து விட்டார்கள். இரண்டொரு மாதத் துக்கு முன் எஸ்.அய்.ஆர். கம்பெனிக்குச் சுமார் 250 உத்தியோகம் தேவை இருந்ததில், சுமார் 150 உத்தியோகம் வரை பார்ப்பன ரல்லாத இந்துக்களுக்கும், மற்றவை பெரி தும் முகமதியர், கிறிஸ்தவர், ஆங்கிலோ இந்தியர் ஆகியவர்களுக்கும் வழங்கி விட்டு சுமார் 20 உத்தியோகங்களுக்கும் குறைவாகவே பார்ப்பனர்களுக்கும் வழங்கி இருக்கிறார்கள்.

இதன் பயனாய் பார்ப்பனர் பெரியதொரு கிளர்ச்சியையும், ஆட்சியையும் செய்து, இந்த முறையை ஒழிக்கும்படியும், இதற்கு ஆக அதாவது உத்தியோகம் தெரிந்தெடுப் பதற்கு ஆக, ரயில்வே கம்பெனி டைரக் டர்களால் ஏற்படுத்தி இருக்கும் ஸ்டாப் செலக்ஷன் போர்ட் என்பதை கலைத்து விடும் படிக்கும் பெரியதொரு முயற்சி செய்தார்கள். பெரிய அதிகாரிகளை பல வழிகளில் சுவாதீனப்படுத்தி வெற்றி பெறப் பார்த்தார்கள். அதற்கு எதிர்ப்பாக திருச்சி தோழர்கள் டி. எம். நாராயணசாமி பிள்ளை, கலிப்புல்லா சாயபு, பள்ளத்தூர் அருணா சலம், டி.பி. வேதாசலம் முதலியவர்கள் அம்முயற்சியைக் கண்டித்து கண்டனக் கூட்டம் போட்டு தீர்மானங்கள் அனுப்பி கிளர்ச்சி செய்ததும் பத்திரிகைகளில் பார்த் திருக்கலாம். இதன் பயனாய் பார்ப்பனர் முயற்சி வெற்றி பெறாமல் போய், கடை சியாக ஒன்றும் முடியாமல் நாம் விரும்பும் வகுப்புவாரி முறை நிலைத்துவிட்டதோடு மாத்திரமல்லாமல், இனவாரியாக இன்ன இன்ன வகுப்பில், இவ்வளவு இவ்வளவு எண்ணிக்கை வேண்டும் என்பதாக, ரயில்வே மேல் அதிகாரிகள் விளம்பரமும் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

அதாவது "தென் இந்திய ரயில்வே நிர் வாகத்திற்கு 84 கிளார்க்குகள் வேண்டி யிருக்கிறது.

அவற்றுள்

பார்ப்பனரல்லாதார்                     42

முகமதியர்                                   17

இந்திய கிறிஸ்தவர்கள்,

ஆங்கிலோ இந்தியர்,

அய்ரோப்பியர் ஆகியவர்கள்     17

தீண்டப்படாத வகுப்பார் உள்பட

மற்ற வகுப்பார்                            8

மொத்தம்                                     84

ஆக 84 பேர்களுக்கு விண்ணப்பங்கள் வேண்டியிருக்கிறது" என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள். இது 11.06.35ஆம் தேதி ஜஸ்டிஸ் பத்திரிகையில் இருக்கிறது)

"ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது? சுயம யரியாதை இயக்கம் என்ன செய்தது?” என்று கேட்பவர்கள், இதைச் சிறிது கவனித் துப் பார்த்துவிட்டு அப்புறம் கேட்கட்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

இந்த நாட்டில் வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி தங்களது சகல சவுகரியத் தையும் தியாகம் செய்து, தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித் தும் படிக்கவைத்த பிள்ளைகள், பார்ப்பன ரல்லாதார், முகமதியர், கிறிஸ்தவர் முதலிய வகுப்புகளில் எத்தனை பிள்ளைகள் இன்று வேலை இல்லாமல், குடும்பத்தோடு சோற் றுக்குத் திண்டாடும் நிலையில் இருந்து வரு கிறார்கள் என்பதும், அவர்கள் வாசல்படிகள் தோறும் வீடு தவறாமல் நுழைந்து தங்கள் கால - க்ஷேபத்துக்கு வேலை வேண்டு மென்று எந்தெந்த மாதிரியில் யார் யாரை, எப்படி எப்படிப் பல்லைக் கெஞ்சுகிறார்கள் என்பதும், யாராவது உணர்ந்தால், அவர்கள் அத்தனை பேர்களையும் இந்த மாதிரியான ஏற்பாடுகளை நன்றி அறிதலோடு வர வேற்கச் சொல்லுமே தவிர, நன்றி விசுவாசம் யோக்கியப் பொறுப்பு இல்லாமல், அதற்கு ஆக வேலை செய்யும் தலைவர்களை இழித்தன்மையாய்க் கருதாமலும், பேசா மலும் இருக்கும்படியும் செய்யும்.

அதில்லாமல், தேசத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அயோக்கியத்தனமான தேசாபிமானப் பட்டம் பெற்று மானத்தை யும், தங்கள் சமூகத்தையும் விற்று, சமூக இளைஞர்களை பலி கொடுத்து வயிறு வளர்க்கும் சோம்பேறிக் கூட்டங்களுக்கு, இதன் அருமை தெரியாது என்பதோடு, தெரிந்திருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத் திற்குப் பயந்து அவர்களோடு சேர்ந்து கொண்டே "தேசம் பெரிதா, உத்தியோகம் பெரிதா?" என்று அர்த்தமற்றதும், முட்டாள் தனமானதும், சூட்சியும், விஷமமும் நிறைந்ததுமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு திரியத்தான் முடியும் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆகவே எஸ்.அய்.ஆர். ரயில்வே உத்தி யோகத்தில், இவ்வித வகுப்புவாரிப் பிரதி நிதித்துவ மேற்பட்டதை நாம் மகிழ்ச்சி யோடு பாராட்டுவதோடு, அதற்கு ஆதர வாய் இருந்த பிரமுகர்களையும் ரயில்வே இலாக்காவிலேயே இருந்து கொண்டு இதற்காகப் பெரிதும் பாடுபட்டு எவ்வளவோ தொல்லைகளைச் சமாளித்துக் கொண்டு இந்த வெற்றியை உண்டாக்கிய பெரியார் களையும், சிறப்பாகவும், குறிப்பாகவும் ஸ்டாப் செலக்ஷன் போர்டு செக்ரட்டரி தோழர் பி.கோவிந்தராஜ் அவர்களையும், ரயில்வே கம்பெனி ஏஜென்டையும், டைரக் டர்களையும், மனமார - வாயார - கையார ஏற்றிப் போற்றி வாழ்த்துகின்றோம்.

‘குடி அரசு’ தலையங்கம் (23.6.1935

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

முதல் அரசியல் சட்டத் திருத்தம்: நாடாளுமன்றத்தில் சட்ட அமைச்சர் அண்ணல் அம்பேத்கர் உரை


அரசமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவில் புதிய இணைப்பு (திருத்தம்) தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. இந்த விரும்பத்தகாத சூழலுக்கு மூலகாரணம் நீதிமன்றம் வழங்கி யுள்ள இரண்டு தீர்ப்புகள்தான். இந்தத் தீர்ப்பை வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். 1. சென்னை (எதிர்) திருமதி செண்பகம் துரைராஜன் 2. வெங்கட்ராமன் (எதிர்) சென் னை அரசு, இந்த இருவரின் வழக்குகளால், அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற நிலை உருவாகி யுள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அரசுப் பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது என்ற கருத்தை மய்யமாகக் கொண்டு - நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை வழங்கியுள்ளது. இதன் விளைவாக, ஜாதி ரீதியான அரசாணை உருவானது, இந்த அரசாணை செல்லாது என்று சட்ட வல்லுநர்களும். நமது மேதகு நாடாளுமன்ற அங்கத்தினர்களும் கூக்குரலிடுகின்றனர். அரசியல் அமைப்புச் சட்டம் 16(4) பிரிவு, மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி அல்லது எழுந்துள்ள தேவைகளின் அடிப்படையில் - பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு ஒதுக்கீடு வழங்கும் அதிகாரத்தை முழுவதுமாக வழங்குகிறது.


இந்த 16 (4) பிரிவு. அரசமைப்புச் சட்டத்தின் 29ஆம் பிரிவுடன் முரண் படுவதால், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கருதுகிறது. மேலும், ஜாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது கூடாது; அது முற்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களிடையே பாரபட்சத்தைத்  தோற்றுவித்து விடும்' என்று உச்சநீதி மன்றம் தன்னுடைய தீர்ப்பில் தெரிவித்துள்ளது. நான், உச்சநீதிமன்றத்தின் இரண்டு தீர்ப்புகளையும் கூர்ந்து படித்தேன். இந்த இரண்டு தீர்ப்புகளும் மிகுந்த அதிருப் தியைத் தருகிறது.

இந்தத் தீர்ப்புகள், நமது அரசியல் சாசனத்தின் பிரிவுகளோடு ஒத்துப் போகவில்லை. இது, என்னுடைய  வாதம். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு களுக்காக நான் வருந்துகிறேன். (நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம்.

சபாநாயகர் இடைமறித்து, அம் பேத்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறார். ஆனால், அம்பேத்கர் அதைப் பொருட் படுத்தவில்லை)

அரசியல் சட்டப்பிரிவு 29(2)இல், 'மட்டும் என்ற வார்த்தையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழங்கப்பட்ட தீர்ப் பாகவே இவற்றை நான் கருதுகிறேன். மதம், இனம் அல்லது ஆண், பெண் பேதம் ஆகியவற்றை 'மட்டும் அடிப்படையாகக் கொள்ளக் கூடாது. இது 29(2) இன் பொருள். இங்கு 'மட்டும்' என்ற வார்த்தை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கவனிக்கவில்லை என்பது என்னுடைய வாதம்.

'ஜாதியற்ற இந்துக்கள்' என்று இந் நாட்டில் எவரும் இல்லை. ஒவ்வொரு இந்துவுக்கும் ஜாதி உண்டு. பார்ப்பனர், மகராட்டா, குன்பி, கும்பார் அல்லது ஒரு தச்சன் இவர்களில் யாரும் ஜாதியை விட்டு வாழும் இந்துவாக இல்லை.

இந்த நாட்டில், பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினராக இந்து மதத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்து மதத்தின் பன்னெடுங்கால கொடுமைக்கு ஓர் இடைக்காலத் தீர்வாக, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இட ஒதுக்கீடு மூலம் சில உரிமைகள் வழங்குவது மிகவும் அவசிய மாகிறது. இதைக் கருத்தில் கொள்ளும் போது. நமது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஓர் அதிருப்தியான தீர்ப்பாகும். நான், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை, இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்த மான முடிவாகும். மேலும், அரசமைப்புச் சட்டத்தின் 46-ஆவது பிரிவு, பிற்படுத்தப் பட்ட - ஒடுக் கப்பட்ட மக்களுக்குத் தேவை யான அனைத்துவகையான நலன்களை உறுதிப்படுத்தவும் மேம்படுத்தவும் மாநில அரசுகளுக்கு போதிய அதிகாரத்தை நிர்ணயித்துள்ளது.

இந்த அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய தேவை, நாடாளுமன்றத்திற்கு எழுந்துள்ளது. நாடாளுமன்றம் 16(4) மற்றும் 29 ஆகிய பிரிவுகளை விரிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் பிரிவு 15- போதிய விளக்க இணைப்பு சட்டத்திருத்தம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒடுக்கப்பட்ட மக்களின் உண்மையான உயர்வை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க உதவும்.

- 'பாபாசாகேப்

டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்

தொகுப்பு: 15 பக்கம்: 331

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

முசுலிம்களுக்கு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் கூறுவதென்ன?

முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்துச் சிறுபான்மையினர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டும், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும், அவர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் குறிப்பிட்ட அளவு ஒதுக்கீட்டை அளிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் இந்த கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் தன்னுடைய அறிக்கையை 2007இல் பிரதமரிடம் சமர்ப்பித்தது. இவ்வளவு நாள் வரை கிடப்பில் போடப்பட்ட அந்த அறிக்கையை, மக்களவையின் கடைசி நாளான கடந்த 18.12.2009இல் சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தாக்கல் செய்துள்ளார். இந்திய முஸ்லிம்கள் இ வ் வ றி க் கையை வரவேற்கும் அதேவேளையில், ஆளும் வர்க்கத்தினர் முஸ்லிம்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உடனே இவ்வறிக்கையில் கூறப்பட்டவாறு சிறுபான் மையினருக்கு என்று தனி இடஒதுக்கீட்டை உடனே வழங்க வேண்டும்.


அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

மக்கள்தொகை (பக்கம் 13)

முஸ் லி ம் க ள் - 13 . 4 % (2001ஆம் ஆண்டு கணக்கெடுப்புப்படி)

முஸ்லிம்களின் கல்வி அறிவு (பக்கம் 16,17)

1) முஸ்லிம்களில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் - 59.1% (அதாவது 40.9% முஸ்லிம்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது)

2) முஸ்லிம்களில் 5ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் - 65.31% பேர்

3) முஸ்லிம்களில் 8ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் -15.14% (அதாவது 100-க்கு 85 பேர் 8ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

4) 10ஆம் வகுப்பு வரை - 10.96% (அதாவது 100-க்கு 90 பேர் 10ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்)

5) 12ஆம் வகுப்பு வரை - 4.53% (அதாவது 100-க்கு 95 பேர் 12ஆம் வகுப்புகூடப் படிக்காதவர்கள்) 6) பட்டம் (டிகிரி) படித்தவர்கள் - 3.6% பேர்

குடியிருப்புகள்: (பக்கம் 23)

1) முஸ்லிம்களில் 34.63% பேர் குடிதண்ணீர், கழிப்பிட வசதி இல்லாத குடிசைகளில் வாழ்கின்றனர்.

2) முஸ்லிம்களில் 41.2% பேர் அடிப்படைக் கட்டமைப்பு இல்லாத வீடுகளில் வாழ் கின்றனர்.

3) மீதமுள்ள 23.76% முஸ்லிம்கள் மட்டுமே வசிக்கத்தகுந்த வீடுகளில் வாழ்கின்றனர்!

நன்றி: தடம் (ஏப்ரல் 2018)
-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

பிற்படுத்தப்பட்டோர் நிலை இதுதான்!

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவலின்படி, மத்திய அமைச்சக அலுவலகங்கள் 35இல் 24லும், மத்திய அரசுத் துறைகள் 37இல் 25இலும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த வேண்டிய அமைப்புகளாக உள்ள பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் அலுவலகம், தேர்தல் ஆணை யம் உள்ளிட்டவற்றில் மண்டல் பரிந்துரைகளை கடந்த 24 ஆண்டு களாக நடைமுறைப் படுத்தப்படவில்லை.


நாடுமுழுவதும் உள்ள மத்திய அரசுத் துறை களில் உள்ள பணிவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் பெரிதும் பயன் பெறாதநிலையே இருந்து வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் நலத் துறையின் சார்பில் கடந்த 8.9.1993 அன்று பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியா ளர் மற்றும் பயிற்சித் துறை யின் அலுவலகம் 1.1.2017 அன்று வெளி யிட்ட தகவலின்படி, மத்திய அரசின் 24 அமைச்சக அலுவலகங் களில் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில் 17 விழுக்காடு பிற்படுத்தப் பட்டவர்கள் உள்ளனர். குரூப் பி பிரிவில் 14 விழுக்காட்டுக்கும் கீழ் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர். குரூப் சி பிரிவில் 11 விழுக்காட்டள விலும், குரூப் டி பிரிவில் 10 விழுக்காட்டளவிலும் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளனர்.

மத்திய பணியாளர் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திரா சிங் மக்களவையில் கூறியதன்படி, மண்டல் குழு பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசுப்பணிகளில் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று 1993ஆம் ஆண்டில் உத்தரவானது. 1.1.2014  அன்றுவரை மத்திய அரசின் 71 அமைச்ச கங்கள் மற்றும் மத்திய அரசின் துறைகளில் 19.24 விழுக்காட்ட ளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். பணி யிடங்களில் காலிப்பணியிடங்களை அடையாளம் காண்பது மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை நியமிப்பதற் கான நடை முறைகளில் கால இடைவெளி முக்கிய காரணமாக உள்ளது.

மத்திய அரசின் 24 அமைச்சகங்கள், 25 துறை களில்  குரூப் ஏ பிரிவில் 14 விழுக்காடு, குரூப் பி,சி,டி ஆகிய பிரிவுகளில் முறையே 15, 17, 18 விழுக்காட்டளவில்தான் பிற்படுத்தப்பட்ட வர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பிற்படுத்தப்பட்ட வர்களுக்குரிய இடங்களை விட குறைவானதாகவே இருக்கிறது.

அமைச்சக செயலகத்தில் குரூப் ஏ அலுவலர் களுக்கான பிரிவில் 64 பணியிடங்களில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. திறந்த போட்டியில் 60 பேரும், தாழ்த் தப்பட்ட வகுப்பினருக்கான பணியிடத்தில் நால்வரும் இடம் பெற்றுள்ளனர். மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தில் குரூப் ஏ பிரிவு அலுவலர்கள் 503 பேரில் 25பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர்.

2015ஆம் ஆண்டில், மத்திய அரசின் 12 அமைச்சக அலுவல கங்களிலும் 10 துறைகளுக்கான அலுவலகங்களிலும் குரூப் ஏ பிரிவு அலுவலர் களில்  10.71 விழுக்காட்டளவில் மட்டுமே பிற் படுத்தப்பட் டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குரூப் பி பிரிவில் அலுவலர்களில் 7.18 விழுக்காட்டளவில் பிற்படுத்தப்பட்டவர்கள் நியமிக்கப்பட்டனர். 2013ஆம் ஆண்டில் 55 மத்திய அரசு அலு வலகங்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் 9.43 விழுக்காட்டளவில் நியமிக்கப்பட்டனர். மத்திய அரசு அலுவலகங்களில் மண்டல் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான பணியிடங்கள் குறித்து விவரங்களைக் கோரி தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஈ.முரளிதரன் என்பவர் விண்ணப் பித்தார். அவர் கூறுவதாவது:

விவரம் தராத இரயில்வே துறை


இந்த விவரங்கள் மட்டுமே முழுமையான தகவல்களை அளித்துள்ளதாக ஆகிவிடாது. ஏனென்றால், அதிகமான அளவில் பணியாளர்களை நியமித்துவருகின்ற துறைகளான ரயில்வே துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் நிதித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் 11 அமைச்சகங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் பணியாளர்கள்குறித்த தகவலை அளிக்கவே மறுத்துள்ளன. மத்திய அமைச்சகங்களில் அதிக அளவிலான பணியிடங்களைக் கொண்டுள்ள அமைச்சகங்கள்தான் 91.25 விழுக் காட்டளவில் மத்திய அரசின் பணிவாய்ப்புகளைக் கொண்டுள்ளனவாக உள்ளன. 24 அமைச்சகங்களின் ஒட்டு மொத்த பணியாளர்களில் 8.75 விழுக்காட்டளவில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வர்கள் உள்ளனர்.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின்படி மத்திய அரசின் துறைகளில், ரயில்வே துறையில் 13 லட்சத்து 28ஆயிரத்து 199 பணியிடங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் வகுப்புகள் ரீதியிலான புள்ளிவிவரத்தகவல்கள் கிடையாது. மத்திய அரசின் பணிகள் 31 லட்சம் இருப்பதற்கு மாறாகவே புள்ளிவிவரத் தகவல் 2லட்சத்து 71 ஆயிரத்து 375 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

2015ஆம் ஆண்டில் மத்திய அரசின் 40 அமைச்சகங்கள் மற்றும் 48 துறைகளில், பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர்கள் எண் ணிக்கை பற்றிய தகவல் அளிக்குமாறு கோரி விண்ணப் பித்த நிலை யில், பல அமைச்சகங்கள், துறைகள் பதில் அளிக்க மறுத்துள்ளன.

அய்.அய்.டி. மேனாள் மாணவர் குமுறல்!


19.12.2003 அன்று மத்திய பணியாளர்துறை வெளியிட்ட விரிவான அறிக்கையின்படி, மத்திய அமைச்சகங்கள, மத்திய அரசுத் துறைகள் அனைத்திலும் உள்ள  பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட வர்கள், பழங்குடியினத்தவர்கள் பணியாளர்கள் குறித்த தகவல்களை கட்டாயம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், அது மீறப்பட்டுள்ளது என்று சென்னை அய்.அய்.டி. மேனாள் மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டப்படி பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்க வேண்டிய 27 சதவீத இடங்களை அளிக்க முன்வராத - மனம் இல்லாத மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுதான் அவசர அவசரமாக உயர்ஜாதி யினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க இறக்கை கட்டி பறக்கிறது.

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

இதுதான் தாழ்த்தப்பட்டோர் நிலை

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பணியாளர் நலத்துறை விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளி விவரம் இதோ:


ஃ 149 உயர் அரசு செயலர் அலுவலர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை.

ஃ கூடுதல் செயலாளர் பதவிகள் 108இல் 2 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர்.

ஃ 477 இணைச் செயலாளர்களில் 31 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (6.5 விழுக்காடு) - கிடைக்க வேண்டியது 15%). 15 பேர் பழங்குடியினர் (3.1 விழுக்காடு) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

ஃ 500 இயக்குநர் பதவிகளில் 17 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (2.9%) - கிடைக்க வேண்டியதோ 15%. பழங்குடியினர் 7 பேர் மட்டுமே (1.2%) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

நேரடியாக நிமிக்கப்பட்ட 3251 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 13.9 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், 7.3 விழுக்காடு பழங்குடியினர். (இரு பிரிவினருக்கும் சட்டப்படி கிடைக்க வேண்டியதோ 22.5%).

சட்டப்படி கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கக் கூடாதவர்களுக்கோ சட்ட விரோதமாக 10 விழுக்காடு இடஒதுக்கீடாம்!

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

உயர் ஜாதி ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு - ஒரு மோசடி

கலி.பூங்குன்றன்




உயர் ஜாதியில் ஏழைகள் இல்லையா? அவர்களும் மனிதர்கள்தானே. அவர்களைக் கைதூக்கி விட வேண்டாமா? எதற்கெடுத் தாலும் இந்த வீரமணிக்கும், தி.க.காரர்களுக் கும் பார்ப்பனப் பார்வைதானா? இது மட்டும் தோஷமில்லையா? என்று பார்ப்பனர்கள் மட்டுமல்ல; பார்ப்பனீயத்துக்குப் பலியான பார்ப்பனர் அல்லாதாரும் கூட படப்பட எனப் பேசுவதுண்டு.

அவர்கள் மீது சீறிப் பாய்வதைவிட, அவர்களின் சிந்தனை என்பது பார்ப்பனீயத்தால் சீழ் பிடித்துப் போனதால்  ஏற்பட்ட கெட்ட நாற்றமே, இது.

1946 நவம்பர் 9ஆம் தேதியிட்ட குடி அரசு இதழில் பார்ப்பான் பணக்காரனா னால்? என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் தந்தை பெரியார்.

இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்து வரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதீக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு, பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல் வந்தர்களாகவும்,  இலட்சாதிபதிகளாகவும், ஆகிவிட்டார்கள்.

இதுதான் துவேஷப் பிரச்சாரத்தால் ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற் றம் சொல்லுகிறார்கள். இது உண்மையா னால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியேயாகும்.

எனக்கு, எனது சுயமரியாதை, திரா விடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான் கூட மேல் ஜாதியான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர, பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல. ஒவ்வொரு பார்ப்பானும் இராஜா சர். அண்ணாமலை செட்டியார், பொப்ளி ராஜா, சர்.ஷண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார் போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதி பதியா கவும் ஆகிவிட்டாலும் சரியே, எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதி பதிகள் உள்பட எவரும் சிறிது கூட நமக்கு மேல் ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.

பணக்காரத் தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல, அந்த முறை தொல்லையா னது, சாந்தியற்றது என்று சொல்லலாம். என்றாலும் அது பணக்காரனுக்கும் தொல் லையை கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும், இயற்கையில் மாறக் கூடியதும், எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித்தன்மை என்பது இந்த நாட்டுக்கு, பெரும்பாலான மனித சமுதாயத்துக்கு மிக மிகக் கேடான தும், மகா குற்றமுடையதாகும். அது முன் னேற்றத்தையும், மனிதத் தன்மையையும், சம உரிமையையும் தடுப்பதுமாகும். பெரிய மோசடியும் கிரிமினலுமாகும். ஆதலால், என்ன விலை கொடுத்தாவது மேல் ஜாதித் தன்மையை ஒழித்தாக  வேண்டும் என்பது பதிலாகும்.

(குடிஅரசு, 9.11.1946)

- என்று எவ்வளவுத் தெளிவாக தந்தை பெரியார் தனது பார்ப்பன எதிர்ப்பை நேர்த்தியுடன் தெரிவித்துள்ளார்.

பார்ப்பான் பணக்காரனாக இருப்பது பற்றி நமக்குக் கவலையில்லை; அவன் மேல் ஜாதிக்காரன் மற்றவன் தாழ் ஜாதிக்காரன் என்கிற சமூக அமைப்பும் - அதனைக் கட்டிக் காக்கும் ஆதாரங்களும் நிறுவனங்களும்தான் நமக்குப் பிரச்சினை. நமக்கு என்பதைவிட சுயமரியாதையும் சமத்துவ நோக்கும் உடைய ஒவ்வொரு வருடைய பிரச்சினையாகும்.

பிறப்பின் அடிப்படையில் கடவுளை சாட்சிக்கு வைத்த பார்ப்பான் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் என்றும், சூத்திரன் அவன் காலில் பிறந்தவன் என்றும், சூத் திரன் படிக்கக் கூடாது என்றும், படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்றும், படிப்பதை சூத்திரன் கேட்கக் கூடாது என்றும், கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதில் ஊற்ற வேண்டும் என்ற மனுதர்ம சட்ட அமைப்பு சமூக முறை உள்ள ஒரு நாட்டில் -

சூத்திரன் கண் விழித்தது எப்பொழுது? கல்வி உரிமை பெற்றது எப்பொழுது? என்ற உளவியல் ரீதியான வரலாற்று உண்மைகள் தான் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, உத்தியோகப் பிரச்சினையாகும். நம் நாட்டு அரசர்களும் கல்வியை யாருக்கு அளித்தார்கள்? போர் நடத்தி உயிரைப் பலி கொடுக்க பார்ப்பனர் அல்லா தார், பள்ளி வைத்துக் கல்வி கற்க பார்ப்பனர் என்ற நிலைதான் சமூக நீதியாகவும் அரசு நீதியாகவும் உள்ள ஏற்றத்தாழ்வின் கடையாணியும் ஆணி வேருமாகும்.

சோழ வேந்தர்கள் பத்தாம் நூற்றாண் டிலேயே தேர்தல் முறையைக் கைக்கொண் டிருக்கிறார்களே, கிராம சபைக்கு உறுப்பி னர்களைத் தேர்ந்தெடுக்க - அது அவர் களுடைய அறிவுத் திறனைக் காட்டுகிறது. கிராமசபை உறுப்பினர் ஆதற்குரிய தகு தியை அவர்கள் தீர்மானித்தது இருக்கிறதே அது, அவர்களுடைய அறிவு ஆரியத் திடம் அடகு வைக்கப்பட்டது என்பதை விளக்குகிறது. கிராம சபை உறுப்பினராக ஒருவன் 35 வயது நிரம்ப இருக்க வேண் டும் - சரி, 70 வயதுக்குள் இருக்க வேண்டும் - சரி. கால் வேலிக்குக் குறையாத நிலம் இருக்க வேண்டும் - அதுவும் சரி. இவை மட்டுமா? வேத மந்திரங்களையும் உப நிஷத்துகளையும் தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஒரு வேதமும் ஒரு வேத பாஷ்யமும் தெரிந்திருக்க வேண்டும்!

(ஆர்.சத்யநாதய்யரின் இந்திய வரலாறு)

பதினோராம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக்கழகம் கண்டனர். அங்கே 140 மாண வர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும் மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப்பட்டது. உபகாரச் சம்பளம் வேறு தரப்பட்டது. 45 வேலி நிலம் அக்கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. வேதங்களும் சமஸ்கிருத இலக்கணமும், (ஆரியருடைய) மீமாம்ச வேதாந்த தத்துவங்களுமே அங்கு சொல்லித் தரப்பட்டன! ... பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்திலும் சோழ அரசர்கள் ஒரு கல்லூரி ஏற்படுத்தினர். 72 வேலி நிலம் அதற்கு அளிக்கப்பட்டது 260 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் அங்கு இருந்தனர். இதிகாசங்களும் மனுதர்ம சாஸ்திரமும் அங்குக் கற்பிக்கப்பட்டன... பன்னிரண்டாம் நூற்றாண்டுச் சோழ அரசர்கள் திருவா வடுதுறையில் ஒரு கலைமன்றம் கண்டனர். அங்கு (வடமொழியில் உள்ள) சாரகசமிதை, அஷ்டாங்க இருதய சமிதை இரண்டும் பாடங்கள்.

(உத்திரமேரூர் கல்வெட்டு, பராந்தக சோழன் தீட்டியது)

தமிழ்வேந்தர் ஆரியத்துக்கு அடி பணிந்ததற்கு இன்னும் என்ன சான்று தேவை?

வெள்ளைக்காரன் கையில் ஆட்சி அதிகாரம் வரும் வரை இந்த நிலை

தானே!

வகுப்புரிமை வரலாறு எனும் நூலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களால் எழு தப்பட்ட நூல் பல அரிய உண்மைகளை, தரவுகளை ஆதாரப்பூர்வமாக தருகிறது. இதோ:

பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங் குவதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்பே வெள்ளைக்கார அரசு இந்தச் சமூக நீதித் தத்துவத்தை ஓரளவு அமல்படுத்த ஆரம் பித்தது என்பது வியப்பிற்குரிய ஒன்றாகும்.

“The Government are unable to regard this increasing share of the administration in the hands of a single class with entire approval in certain departments the proportion of the brahmins must be considered excessive”

"அதிகரிக்கப்பட்ட பங்கு முழுவதும் தனிப்பட்ட ஒரு சாதியினருக்கே செல்வது அரசினரால் ஏற்றுக்கொள்ளப்பட முடிய வில்லை. ஒரு சில இலாகாக்களில் பார்ப் பனர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத் திற்கு மேல் மிகவும் அதிகமாக இருப்பதாகக் கருதப்பட்டது.

இவ்வாறு சொல்லப்பட்ட அதேநேரத் தில், பார்ப்பனர்கள் அரசுத் துறையில் நுழை வதற்கு அரசினர் மிகவும் விரோதமான மனப்பான்மை உடையவர்களாக இருக் கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்த அரசு விரும்பவில்லை . அரசினர் அதில் மிகவும் கவலையோடு செயல்பட்டனர். சாதிவாரியாக எத்தனைபேர் அரசுப் பணிகளில் உள்ளனர் என்று ஒரு கணக்கு எடுத்தது. பொதுவாக எந்தெந்தச் சாதியினர் எந்தெந்த அளவிற்கு முன்னேறியுள்ளனர் என்பதையும், எந்த ஒரு குறிப்பிட்ட சாதி யினருக்கும் தனிச் சலுகை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவுமேயாகும்.

1908-க்கும் 1915-க்கும் இடையே பார்ப்பனரல்லாத் தலைவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது. அரசியலில் ஒருங்கி ணைந்து முன்னேற்றம் காணுவதற்குத் தடையாக இருந்த சமூகப் பிரிவுக் கேடு களை ஒழிக்க முன்வர வேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. ஜஸ்டிஸ் சங்கரன் நாயர் அவர்கள் 1908-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்ட மளிப்பு விழாப் பேருரை நிகழ்த்துகையில், ஜாதி, வருணம் என்ற தடைகள் அகற்றப் பட்டாலொழிய, அரசியல் முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பே என்று மிகவும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார்.

அந்நாளில் பொது வாழ்வில் பார்ப்பனர் ஆதிக்கம் மிகுந்து இருந்த காரணத்தால், பார்ப்பனீயம் ஆழமாக வேரூன்றிச் சமூக சமத்துவக் கோட்பாட்டுக்கு ஆபத்து விளை வதோடு, ஜனநாயகத்தின் அடிப்படையான சமத்துவத்திற்கும் அது கேடு செய்வதாக அமையும் என்று அப்போது பல பார்ப் பனரல்லாத தலைவர்களால் மிகவும் தீவிர மாக உணரப்பட்டது.

1892ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த வெள்ளைக்கார கவர்னர் வென் லாக் பிரபுவுக்கு ஃபேர் ப்லே (Fair Play) என்ற புனைபெயரில் அரசியல் அறிஞர் ஒருவர் எழுதிய பகிரங்கக் கடிதம் ஒன்று பார்ப்பனர் களுக்கு அக்காலத்தில் இருந்த உயர்ந்த வாய்ப்புகளைத் தெளிவாக்கும் அரிய ஆதாரமாகும். அம்மடலாவது:

"மேதகு கவர்னர் பெருமான் அவர்களே, கீழ்வரும் வரிகள் தங்கள் ஆட்சியிலுள்ள பல லட்சக்கணக்கான மக்களின் இன்ப துன்பங்களைப் பாதிக்கின்றதொரு செய்தி யின் முக்கியத்துவத்தைப் புலப்படுத்தத் தவறமாட்டா எனும் நம்பிக்கையில் அதைப் படைக்கின்றேன்.

மேலும், ஒரு குறிப்பிட்ட இனத்தார் (பார்ப்பனர்) அதிகாரத்திலும் செல்வத்திலும் பெற்றுள்ள ஏற்றம்பற்றி வாய்திறக்கத் தெரியாப் பல லட்சம் மக்களின் உள்ளங்களில் மலைப்பையும், பரபரப்பு - அச்சத்தையும் உருவாக் கியுள்ள தங்களது கடந்த கால விழிப்பற்ற கொள்கையின் தீய விளைவுகளை மட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுவீர் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இந்தியத் தேசியக் காங்கிரசின் இறுதி இலட்சியம், பிரிட்டிஷ்காரர் களிடமிருந்து பார்ப்பனர்களிடம் சேர வேண்டிய ஆட்சி மாற்றமே, ஆங்கிலேய அரசியல்வாதிக ளில் பெரும்பாலோர் இந்தியக்காரியங் களில் அறியாமையுள்ளவர்களாகவே இருக்கின் றனர். இங்கிலாந்தும், இந்தியாவும் வேறுபட்டவை எனும் உண்மையை உண ராதவர்களாகவே அவர்கள் காணப்படு கின்றனர். வேறு வேறு சூழ்நிலைகளுக்கு வேறு வேறு அணுகு முறைகள்தாம் தேவை.

காங்கிரசின் கோரிக்கைகளில் வரு வாய்த்துறை அதிகாரிகளிடமிருந்து நீதி வழங்கும் அதிகாரத்தை எடுத்துவிட வேண்டும் என்பது ஒன்று. இயல்பாக இது வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்தவே செய்யும். அதற்கு F.A.-க்களும் (பழைய இண்டர் மீடியட்) B.A.-க்களும் தேர்ந் தெடுக்கப்பட வேண்டுமென்றும், நிருவாகத் தினுள் லஞ்சமுறை புகுந்து விடாமலிருக்கக் குற்றவியல் நீதிபதிகளின் ஊதியத்தை உயர்த்த வேண்டுமெனவும் எல்லாப் பக்கங் களிலும் கூக்குரல் கேட்கிறது. இந்தக் கோரிக் கையின் மூலமாகப் பார்ப்பனர்களின் ஏற்றமே நாடப்படுகிறது என்பதை எவரும் எளிதில் கண்டுவிடலாம். ஏனென்றால், பார்ப்பனர்கள்தாம் பதவிகளில் விரிந்த வாய்ப்பெல்லை கொண்டவர்கள். புதிய மாஜிஸ்ட்ரேட் பதவிகள் அத்தனையும் அவர்களுக்கே கிட்டுகின்றன.

ஒரு நூற்றாண்டுக் காலமாய் இந்தியாவை ஆண்டு வரும் கருணையுள்ள பிரிட்டிஷ் ஆட்சியின் நற்பலன்கள் கேடுசூழும் பார்ப் பனச் செல்வாக்கின் பெரும் வளர்ச்சியால் எல்லோருக்கும் கிட்டாமல் தடுக்கப்படு கின்றன. பெயரளவில் ஆங்கிலேயர் இந் தியாவை ஆளுவதாகச் சொல்லப்பட்ட போதிலும், நடப்பில் பார்ப்பன இனம்தான் ஆளுகிறது! காலப்போக்கில் பார்ப்பனர் களிடமே யாவற்றையும் விட்டுவிட்டுத் தங்கள் சொந்த மண்ணுக்குப் பிரிட்டிஷ்காரர் கள் திரும்பவேண்டி நேரிடும். கடந்த நூறு ஆண்டுகளாக வெள்ளைக்காரச் சிவில் அதிகாரி ஒவ்வொருவருடைய நட்பாதர வுக்கும் சலுகைக்கும் பார்ப்பனரே பாத்தி ரராயினர். இதில் இயக்குநர்கள் மன்றம் (Court of Directors) முந்தைய நடவடிக்கைக் குறிப்புகளில் பதவிகள் எல்லாச் சாதி மக்களிடையேயும் வழங்கப்பட வேண்டுமே யொழிய பார்ப்பனர்க்குள்ளாக மட்டுமே பங்கு வைக்கப் பெறக்கூடாது என்று விதித் திருந்ததையும் இந்தச் சிவில் அதிகாரிகள் மதிக்கத்தவறினர்.

நெடிய இந்த நூறாண்டுகளில் F.A.-க் களும் B.A.-க்களும் மட்டுமே அரசுப் பதவிகட்காகத் தேர்வு செய்யப்பட வேண்டு மென்ற கூச்சல் முன் எப்போதும் கிளம்பியது கிடையாது. ஏனென்றால், எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் வண்ணம் தகுதி பெறுவதில் பார்ப்பனர் கருத்துச் செலுத்தி வந்தனர். இப்போது அவர்களுக்கான எதிர் காலம் வந்துவிட்டதால், தம் நெஞ்சாற்றல் அத்துணையும் கொண்டு வெறியோடு கத்தத் துணிகின்றனர். F.A.-க்களும் B.A.-க்களும் இல்லாமல் அரசுப் பணிகளை நடத்த முடி யாதா? கடந்த காலத்தில் நடத்தவில் லையா? வெறும் அன்றாட வழக்கமான பணிகட்கு F.A.-க்களும் B.A.-க்களும் தேவையே யில்லை.

மக்கள் பிரதிநிதித்துவ அரசாங்கம் பார்ப்பனரின் தேவைகள் எல்லாவற்றுக்கும் ஏற்ற சஞ்சீவியாகும் ஆகவே, அவர்கள் அதை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார் கள். பார்ப்பனர் தமது மேல் நிலையை மக்களின் அறியாமை எனும் அடித்தளத் தின் மீதுதான் கட்டினர். இந்தியா என்னும் ஒரு தேசம் இல்லவே இல்லை. அளவிறந்த சூழ்ச்சியுடன் பார்ப்பனர் தம் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக உருவாக்கும் கற்பனைச் சொல்லே இந்திய தேசம் என்பது. தமது இன மக்களாலேயே வழி நடத்தப்பெறும் பல்வேறு அரசியல் கட்சிகளென்ற சூழ்ச்சிவலையை நாடு தழுவிய முறையில் விரிப்பதில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதிநிதித்துவ அரசு அமைப்பில் தங்கட்குத் தாங்களே எஜ மானர்களாவதோடு, இந்தியாவிற்கே தடை யில்லா எஜமானர்களாவது உறுதி என்றி ருக்கின்றனர் பார்ப்பனர்.

இதுதான் அந்தக் கடிதம்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண் டால்தான் மிகப் பெரிய எழுச்சி நாட்டில் ஏற்பட நிலையிலும், சட்டங்களும் ஆணை களும் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப் பட்ட பிறகும் கூட பார்ப்பனர்களின் ஆதிக் கம் அவர்களின் விகிதாசாரத்துக்கு மேலாக பன்மடங்கு பன் மடங்கு செங்குத்தாகக் கோலோச்சி நிற்கிறது!

வெள்ளைக்காரர் ஆட்சிக் காலத்தில் ஒரே ஒரு குடும்பம் மட்டும் ஆக்டோபசாக எத்தனை எத்தனை பதவிகளை சுருட்டி விழுங்கி ஏப்பமிட்டுள்ளது. ஏப்பமிட்டு உள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டே போதுமானது.

கடப்பை மாவட்டத்தில் ஒரேயொரு பார்ப்பன அதிகாரியான டி.கிருஷ்ணராவ் என்பவர்ஹுஸுர் செரஸ்தார் என்ற கலெக் டருக்கு இணையாக தனது பதவியைப் பயன்படுத்தி தனது 116 உறவினர்களை அரசு பதவிகளில் அமர்த்தினார்.

கடப்பை மாவட்டத்தில் தமது உறவி னர்கள் 116 பேர்களை வேலை வாய்ப்பில் அமர்த்தினார் என்றால் அனந்தப்பூர் மாவட்டத்திலோ தனது உறவினர்கள் 108 பேரை பணிகளில் அமர்த்தினார் என்றால் பார்ப்பன ஆக்டோபசின் ஆக்ரோச ஆட் டத்தை என்னவென்று சொல்லுவது.

தென்னாட்டில் நீதிக்கட்சி, சுயமரியரிதை இயக்கம், திராவிடர் இயக்கம் இவற்றின் எழுச்சியால் ஆண்டாண்டுக் காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் ஊட்டச்சத்து ஊன்று கோல் கிடைத்து கண்விழித்து நடைபோடத் தொடங்கியுள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் முயற்சியால் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் வாய்ப்புக் கதவுகள் திறக்கப்பட்டன.

எல்லாம் வெறும் 50 ஆண்டு காலத் திற்குள் ஏற்பட்ட வாய்ப்புகள்தான். உண் மையைச் சொல்லப்போனால் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்க்கென்று சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டு அளவின் முனையைக் கூடத் தொட முடியாத நிலைதான்.

பிற்படுத்தப்பட்ட மக்களைப் பொறுத்த வரை அரசமைப்புச் சட்டம் செயலுக்கு வந்த 1950ஆம் ஆண்டு முதல் இடஒதுக் கீடு வந்ததா என்றால் அதுதான் இல்லை.

கடும் போராட்டத்துக்குப் பின் 40 ஆண்டுகளுக்குப் பின்தான் மாண்புமிகு வி.பி.சிங் பிரதமராக வந்தபோது முதற் கட்டமாக  வேலை வாய்ப்பில் 27 விழுக் காடு பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக் கிறது.

மண்டல் குழுப் பரிந்துரை செயல் பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் நடத்த வேண்டி யிருந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் அதற்கும் 15 ஆண்டுகள் கழித்துத்தான் டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகவும், அர்ஜுன் சங் மனித வள மேம்பாட்டுத் துறை (கல்வி) அமைச்ச ராகவும் இருந்தபோதுதான் செயல் பாட்டுக்கு வந்தது.

இதில் இன்னும் கொடுமை என்னவென் றால் பிரதமர் வி.பி.சிங் நாடாளுமன்றத்ல் பிரகடனப்படுத்தினாரே (7.8.1990) அந்த நாள் முதலாவது செயல்பாட்டுக்கு வந்ததா என்றால், அதுதான் இல்லை. அதனை எதிர்த்து வழக்குப் போடப்பட்டதால் இரண்டாண்டுகள் கழித்து 1992இல் தான் செயல்பாட்டுக்கு வந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கும் கல்வியில் இடஒதுக்கீடு வந்து 13 ஆண்டுகள்தான் ஆகின்றன, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வந்து 26 ஆண்டுகள் ஆகின்றன.

உண்மையைச் சொல்லவேண்டுமா னால் 78 ஆண்டுகளாக இடஒதுக்கீடு பெற்று வந்த தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் மக்களுக்கும் சரி 26 ஆண்டுகள் இட ஒதுக்கீடு பெற்று வரும் பிற்படுத்தப்பட்ட வர்களும் சரி, அவர்களுக்குரிய விகிதா சாரத்தின் அளவில் இடங்கள் பெற்று இருக்கின்றனரா என்றால், அதுதான் இல்லை.

மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்த புள்ளி விவரம் அதிர்ச்சிக் குரியது. மத்திய அரசின் 40 அமைச்சகங் கள் மற்றும் சமூக நீதித்துறை உள்ளிட்ட 48 துறைகளில் 12 சதவீதத்திற்குக் குறைவா கவே இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப் பட்டது.

தாழ்த்தப்பட்டவர்களின் நிலையும் இதேதான். சட்டப்படியான விகிதாச்சார எண்ணிக்கையில் தாழ்த்தப்பட்டோ ருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் அளிக் காத நிலையைப் பற்றி மத்திய பிஜேபி அரசுக்கு அக்கறையில்லை.

ஆனால் கிடக்கிறது கிடக்கட்டும்; கிழ வியைத் தூக்கி மணையில் வை என்பது போல் உயர் ஜாதியில் ஏழையானவர் களுக்கு 10 விழுக்காடு இடம் என்பது சட் டத்துக்கு எதிராக என்ற தீர்ப்புகளுக்கும் எதிராக மத்திய பிஜேபி அரசு தங்கத் தாம்பாளத்தில் பட்டுக் குஞ்சம் கட்டித் தூக்கிக் கொடுக்கிறது என்றால் இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல!

இது பாரதிய ஜனதா அல்ல. பார்ப்பன ஜனதா தான் என்று திராவிடர் கழகம் தொடர்ந்து சொல்லி வருவது நியாயத்தின் பாற்பட்டது என்பது நின்ற சொல் அல்லவா?

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட் டோரும் போராடிப் போராடி இடஒதுக் கீட்டைப் பெற்றிருக்க, உயர் ஜாதியினரோ ஒரு சொட்டு வியர்வை சிந்தாமல், நகத்தில் அழுக்குப் படாமல் 10 சதவீத இடஒதுக் கீட்டை லாட்டரி சீட்டு போல ஜாக்பாட் போல் பெற்று விட்டனரே!

சூத்திரனுக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்பானுக்குக்கொரு நீதி என்று பார்ப்பனப் பாரதி சொன்னதுதான் நினைவிற்கு வந்து தொலைகிறது.

உயர் ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடாம். உயர் ஜாதி ஏழைகள் என்றால் யார் தெரியுமா? ஆண்டு ஒன்றுக்கு  ரூ.8 லட்சத்துக்கும் கீழாக வருமானம் உள்ளவர் களாம். 5 ஏக்கர் நிலத்துக்கு கீழாக இருக்க வேண்டுமாம். 1000 சதுர அடிக்கு கீழ் வீடு உள்ளவர்களாக நகரத்திலும், 2000 சதுர அடிக்குக் கீழாக கிராமப்புறங்களிலும் இருக்க வேண்டுமாம்.

பார்ப்பன ஜனதா அரசு கூறும் இந்த வித்தை என்ன தெரியுமா? ஆண்டு ஒன் றுக்கு ரூபாய் எட்டு லட்சம் வருமானத்துக் கும் கீழ் என்றால் நாள் ஒன்றுக்கு வரு மானம் ரூ.2500.

நாள் ஒன்றுக்கு ரூ.2500 வருமானம் உள்ள உயர் ஜாதிக்காரர் பார்ப்பன ஜனதா பார்வையில் ஏழையாம். மாதம் ஒன்றுக்கு ரூ.66,666 உடைய மேல்ஜாதியினர் ஏழைகளாம்.

மேல்ஜாதி ஏழை என்றால் சாதார ணமா? அவர்கள் முகத்தில் பிறந்தவர்களா யிற்றே. பிராமணோத்தமர் ஆயிற்றே - சும்மாவா?

கிராமப்புறங்களில் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய்க்குக் கீழும், நகரப்புறங்களில் 33 ரூபாய்க்குக் கீழும் வருமானம் உள்ளவர் கள் வறுமைக் கோட்டுக்கும் கீழ் உள்ளவர் கள் என்று இதே அரசாங்கம் தான் சொல்லு கிறது. வறுமையில்கூட வருணம்தானா?

நோபல் பரிசு பெற்ற அறிஞர் அமெர்த் தியா சென் மிக நேர்த்தியாகக் கூறி யுள்ளார். இப்படியெல்லாம் ஒதுக்கீட்டைக் கொடுத்துக் கொண்ட போனால் இட ஒதுக்கீடே ஒன்றுமில்லாமல் போய்விடும் என்று கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா என்ற பார்ப்பன அமைப்பின் நோக்கமே அதுதான்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீடு பற்றி என்ன சொன்னார்?

RSS Chief Mohan Bhagwat on sunday pitched for a review of the reservation policy, contending it has been used for political ends and suggesting setting up of non-political committee to examine who needs the facility and for how long.


(PTI, 21.9.2015)

தற்போதைய இடஒதுக்கீடு பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினாரே!

அதன் முதல் அடிதான் உயர்ஜாதியின ருக்குப் பொருளாதார அடிப்படையிலும் இடஒதுக்கீடு என்பது.

மனுதர்மம்தான் இந்தியாவின் அரசியல் சட்டமாக வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். குருநாதரான எம்.எஸ்.கோல்வாக்கர் கூறி னார் அல்லவா?

பா.ஜ.க. ஆட்சிக்கான முடிவு இரண் டொரு மாதங்களில் நிகழ இருப்பதால் அதற்குள் இந்த அவசர அவசரமாக சமூக நீதிக்கு கல்லறை எழுப்பும் அஸ்திவாரக் கட்டட வேலை தொடங்கிவிட்டது.

சமூக நீதிக்குக் கல்லறை கட்டும் கட்டட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பா.ஜ.க.வுக்கு வரும் தேர்தலில் நாட்டின் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் கல்லறைக் கரசேவையில் ஈடுபடு வார்களாக.

-  விடுதலை ஞாயிறுமலர், 26.1.19