பக்கங்கள்

புதன், 13 செப்டம்பர், 2017

நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் - பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்!

நீட்’ என்ற பெயரால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கதவு திறக்கும் மோசடியைப் பாரீர்! பாரீர்!!


‘நீட்’ தேர்வால் பாதிப்பு இல்லை என்போரே - உண்மை நிலை என்ன?


இதோ நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் - பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்!


தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆதாரப்பூர்வமான அறிக்கை




‘நீட்’ என்னும் போர்வையில் வெளிநாட்டு மாணவர் களுக்குக் கதவு திறந்துவிடப்பட்டுள்ளது. ‘நீட்’டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று சொல்லுவது பச்சையான பொய்; உண்மை நிலவரம் என்ன என்பதைப் புள்ளி விவரத்தோடு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் ‘நீட்’ என்ற பெயரில் சமூகநீதியை வெட்டி வீழ்த்தி, முன்னேறிய பார்ப்பனரும், ஏனை யோரும் - முன்பு போலவே, கல்வியை தமது ஏகபோக ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவரக் கூடிய ஆயுதத்தை மருத்துவக் கல்வியிலிருந்து தொடங்கியுள்ளனர் - மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆளும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சியின்மூலம்!

சமூகநீதி - மாநில உரிமைப் பாதிப்பு

இது சமூகநீதி பறிப்பு மட்டுமல்ல; மாநிலங்களின் உரிமைகளையும் பறிப்பு - இரட்டை வேட்டை ஆகும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முற்போக்குக் கட்சிகளும், கல்வியில் மனுதர்மத்தின் வீச்சைத் தடுக்கும் அத்துணை இயக்கங்களும், அமைப்புகளும் ஒருங்கிணைந்து அறவழியில் போராடி வருகின்றனர்!

பார்ப்பனர்களும், அவர்களால் விலைக்கு வாங்கப் பட்ட நம் இனத்து விபீடணர்களும், பா.ஜ.க. கட்சியும் மட்டும்தான் ‘நீட்’ என்ற அகில உலக நுழைவுத் தேர்வினை சிலாகித்துப் பேசி வருகின்றனர்!

இதைப் பெரும் சூழ்ச்சித் திட்டமாக First Global Medical Entrance Test என்ற பெயரால் சட்டத்தினை வளைத்துள்ளார்கள் என்பது நமது தலைவர்கள், கல்வி யாளர்கள், ஊடகவியலாளர்கள் பலரும்கூட அறிந்திராத உண்மையாகும்!

கொல்லைப்புற வழியாக

வெளிநாட்டு மாணவர்கள்

வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குக் கதவு திறக்கக் கூடாது என்ற எதிர்ப்புக்கு மறுப்பு அளிக்க முடியாத நிலையில், உலகமயமாக்கி, தாராளமயமாக்கி, இறுதியில் தனியார் மயமாக்கும்  திட்டத்தினை கொல்லைப்புற வழியில் செய்துள்ளனர்.

வெளிநாட்டவர்களுக்கு நம் வரிப் பணத்தில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங் களை நோகாமல் அவர்களுக்குத் தாரை வார்க்கும் உலக வர்த்தகத் திட்டமும் இதில் அடங்கியுள்ளது!

கல்வியை வணிக மயமாக்கும் திட்டத்தின் முதல் கட்டம் அல்லவா இது!

இதோ, அத்துறை வெளியிட்டுள்ள பத்திரிகைக் குறிப்பு (தனியே காண்க!)

துள்ளிக் குதிக்கும் அரைவேக்காடுகளே, இதற் கென்ன உங்கள் பதில்?

நீட்டால் ஏற்பட்டுள்ள

பாதிப்பைப் பாரீர்!

நடந்து முடிந்த நீட் தேர்வால் பாதிப்பு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஏதும் இல்லை  என்று உளறித் திரியும் உன்மத்தர்களே, இதோ ஒரு புள்ளி விவரம் பாரீர்!

சென்ற ஆண்டில் (2016-2017) எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்

மாநில பாடத் திட்ட மாணவர்கள் - 3546

சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் - 62 மட்டுமே!

2017-2018 இவ்வாண்டு எம்.பி.பி.எஸ். இல் சேர்ந்தோர் பட்டியல்

மாநில பாடத் திட்ட மாண வர்கள் - 2314

சி.பி.எஸ்.இ. மத்திய பாடத் திட்ட மாணவர்கள் - 1220 பேர்!

இதில் இவ்வாண்டு பிளஸ் 2-வில் படித்து, எம்.பி.பி.எஸ். இல் இடம்பெற்றவர் 1310 பேர் மட்டுமே

மற்ற 1004 பேர், முந்தைய ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்று, பல லட்சம் செலவழித்து பயிற்சி (Coaching Class)  பெற்று வெற்றி பெற்றவர்கள்.

இதில் 250 பேர் பெரிதும் பார்ப்பனர் + முன்னேறிய ஜாதியினர் சிலர் மட்டும்.

2016 - சென்ற ஆண்டு முன் னேறிய ஜாதி - பார்ப்பனர் - 108-2.99 சதவிகிதம் (3 சதவிகிதம்)

2017 - இவ்வாண்டு, ‘நீட்’டி னால் வந்தவர்கள் (திசி) - 353

அதாவது (9.99%) 10 சத விகிதம்.

இதனால், பெரிதும் மருத் துவ இடங்களை இழந்தவர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்.

எப்படி? இதோ:

கடந்த 2016 ஆம் ஆண்டு -BC - 1781 இடங்கள்

2017 ஆம் ஆண்டு - BC - 1501 இடங்கள்

MBC மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் சென்ற 2016 ஆம்ஆண்டு பெற்ற இடங்கள் - 854

இவ்வாண்டு 2017 இல் - 621

SC தாழ்த்தப்பட்டோர்

2016 இல் 572 இடங்கள்

2017 இல் 557 இடங்கள்

புரட்டுகளைத் தோலுரிப்போம்!

மற்ற சில மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்கள் (நீட்டினால்) பெரிதும் முந்தைய ஓராண்டு, ஈராண்டு முன்பே படித்து, ஆண்டு முழுவதும் நீட் கோச்சிங் (லட்சக்கணக்கில் செலவு செய்து) பயிற்சி மய்யங்களில் படித்து வந்தவர்கள் என்றால்,

அது எல்லோருக்கும் - ஏழை, எளியோருக்கும் சாத்தியப்படுமா?

புரட்டுகளைத் தோல் உரிப்போம்!

பி.ஜே.பி. கோயபெல்ஸ்களே,

பார்ப்பன இன அடிவருடிகளே,

தகுதி, திறமை பேசும் தகுதிக்குப் பிறந்தவர்களே, நாளை அதுபற்றி எழுதுவோம்!

கி.வீரமணி    
தலைவர்,        திராவிடர் கழகம்

சென்னை  
11.9.2017

-விடுதலை, 11.9.17