உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராமர் கோவிலில் 10 நாள் பூஜைக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் ஹமிர்பூர் மாவட்டத் தில் உள்ள கதா என்ற ஊரில் பிரபல ராமர் கோவில் உள்ளது, அந்தக் கோவிலில் 10 நாள் ராமாயணப் பாடம் படிக்கும் திருவிழா நடைபெற உள்ளது. இந்த நிலையில் திருவிழா நடத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டுள்ளது. அதில் :-
"ஊரில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் 10 நாட்கள் நடைபெறும் ராமாயணப்பாடம் படிக்கும் திருவிழா நடக்கும் காலங்களில் கோவில் பூஜைகளில் கலந்துகொள்வதை தடைசெய்கிறோம். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தவறுதலாக கோவிலுக்குள் நுழைந்து விடுவார்கள். ஆகையால் அவர்கள் திரு விழா நடக்கும் 10 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் அப்படி வர நேர்ந்தால் கோவிலின் புனிதம் கெட்டு விடும், மேலும், கோவில் திருவிழாவில் உயர்ஜாதியினர் அதிகம் கலந்துகொள்ள வருவார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டுவிட்டாலோ, பார்க்க நேரிட்டாலோ தீட்டுப் பட்டுவிடும். ஆகவே, தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியது கோவில் நிர்வாகம்.
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் வருவதை கண்காணிக்க தனியார் பாது காப்பு நபர்களை நியமித்துள்ளனர். இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் ராம் ஜானகி கோவிலுக்குச் சென்று விசாரணை செய்தபோது "தாழ்த்தப்பட்டவர்கள் இங்கே வந்தால் கோவில் புனிதம் கெட்டு விடும். ஆகையால் தான் நாங்கள் இந்த சுற்றறிக்கையை அனுப்பினோம்" என்று கூறினர்.
இந்த விவகாரம் அங்குள்ள உள்ளூர் தொலைக்காட்சியில் வெளிவந்த பிறகு ஊரில் சில இடங்களில் ஒட்டப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற நோட்டீசை அகற்றியுள்ளனர். ஆனால் தனியார் நிறு வன பாதுகாவலர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் அதிகம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது, இதனை அடுத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராம்ஜானகி கோவிலுக்குச் சென்று விசா ரணை நடத்த வருவாய்த்துறை அதிகாரி களை அனுப்பினார். அவர்களின் விசார ணையில் தாழ்த்தப்பட்டமக்களில் அதிகம் பேர் இறைச்சி சாப்பிடுகின்றனர், மது அருந்துகின்றனர். ஆகவே தான் இது போன்ற ஒரு சுற்றறிக்கையை நாங்கள் அனுப்பியுள்ளோம் என்று பதில் கூறியுள் ளனர். மேலும் இந்த கோவில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தது, இந்துமத சாம்பிரதா யங்களின் படி சூத்திரர்கள் கோவிலில் நுழையக்கூடாது என்பதை வலியுறுத்தி இருக்கலாம் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்களி டம் நடத்த விசாரணையில் அவர்கள் கூறும் போது, “கோவிலில் நுழைவதற்கு நீண்டகாலமாகவே எங்களுக்கு கடுமை யான எதிர்ப்புகள் வருகிறது, எங்களை கோவில் உள்ள தெருக்களில் கூட நடக்க அனுமதி மறுக்கின்றனர். மேலும் எங்களை பூஜை செய்ய அனுமதிப்பதில்லை" என்றனர்.
மற்றொரு தாழ்த்தப்பட்ட நபரான ராஜூ சாகு என்பவர் கூறும் போது "கோவில் பகுதியில் நாங்கள் சென்றால் எங்களை அடித்து விரட்டுகிறார்கள். எந்த ஒரு விழா மற்றும் பூஜைகளுக்கும் எங்களை அனுமதிப்பதில்லை. ஆனால் எங்களிடம் வந்து கோவில் திருவிழாவிற்கு பணம் மட்டும் வசூலித்துச்சென்றுவிடுகின்றனர்" என்று கூறினார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர் சுரேஷ் குமார் மிஸ்ரா கூறும்போது, “ நாங்கள் விசாரணைக்கு அதிகாரிகளை அனுப்பியுள்ளோம். அதிகாரிகள் கொண்டு வரும் விசாரணை அறிக்கையினை அடுத்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இங்கு யாரும் எந்த காரணத்தைச் சொல்லியும் கோவி லிலோ, பொது இடங்களிலோ தாழ்த்தப் பட்டமக்கள் வருவதை தடுக்க முடியாது என்று கூறினார்.
- விடுதலை ஞாயிறு மலர், 7 .9 .19