அகர்வால் ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேலைக்கு வாருங்கள்!''
ரயில்வே உணவு வழங்கும் பிரிவு கொடுத்த விளம்பரம்
ஜெய்ப்பூர், நவ. 13 ரயில்வேயின் துணை நிறுவனமான அய்.ஆர்.சி.டி.சி.யின் சார்பில் ரயில்களில் உணவு அளிக்கும் ஒப்பந்தத்தை எடுத்துள்ள நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிய அகர்வால் வைசிய ஜாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும் என்று விளம்பரம் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ரயில்வேதுறை உணவு வழங்கலுக்கு அய்.ஆர்.சி. டி.சி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் நாடு முழுவதும் பல்வேறு நிறுவனங் களிடம் ரயிலில் உணவுவழங்கும் பணியை ஒப்படைத்து வருகிறது, ராஜஸ்தானைச்சேர்ந்த பிருந்தா வன் உணவுப் பொருட்கள் வழங்கும் நிறுவனமும் மத்திய மேற்கு ரயில்வே சார்பில் உணவு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவ னம் ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு இடையில் ஓடும் சில ரயில்களில் உணவு வழங்கும் பணியைச் செய் கிறது. இந்த நிறுவனத்திற்கு சமீபத் தில் மேலும் பல புதிய ரயில்களில் உணவு வழங்க ஒப்பந்தமிடப்பட்டது.
இதனை அடுத்து இந்த நிறுவ னத்தின் சார்பில் ரயில் உணவக மேலாளருக்கான ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த விளம்பரத்தில் “ரயில்வேயில் கேட்டரிங், கிச்சன் மற்றும் ஸ்டோர் மேலாளர் காலி பணியிடங்களுக்கு 100 ஆண்கள் தேவை, விண்ணப்பதாரர்கள் அகர் வால் வைஷ்ணவ சமூகம், நல்ல குடும்பப் பின்னணியை உடையவர் களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி 10, 12ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டி ருந்தது.
இது தொடர்பாக புனே அய்.ஆர்.சி.டி.சி. ஊழியர் ஒருவர் கூறும் போது, ”இவ்விவகாரம் ஊடகத்தில் வெளிவந்த காரணத் தால் தான் விவாதப் பொருளானது. ஆனால் நீண்ட காலமாகவே ரயில் வேயில் உணவு வழங்குபவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்கள் தான் வேலை பார்க்கின்றனர்.
ராமன்தான் பணித்தாராம்!
அகர்வால் பிரிவினர் அனை வரும் ராமன் அயோத்தி திரும்பிய பிறகு நடந்த கொண்டாட்டத்தின் போது தன்னலமில்லாமல் உணவு சமைத்து தங்களது கையாலேயே அனைவருக்கும் வழங்கினார்கள். மேலும் இவர்களுக்கு ராமன் தனது சேனைகளுக்கு உணவு வழங்கும் பணியைக் கொடுத்தார். இதனா லேயே மிகப்பெரிய உணவுப் பரி மாறல் வலைப்பின்னலைக் கொண்ட இந்திய ரயில்வேதுறையில் பெரும்பாலும் அகர்வால் ஜாதி னரையே தேர்ந்தெடுக்கின்றனர். சமீப காலமாக ரயில்வே சார்பில் வெளியிடப்படும் ஒப்பந்ததாரர் பணியிடங்களுக்குத் தரும் விளம் பரத்தைப் பார்த்து பலரும் வரு கின்றனர். இதனால் அனைவரிட மும் நேர்காணல் நடத்தவேண்டியுள் ளது. ஆகவே ஊடகத்திலேயே குறிப்பிட்ட ஜாதியினர் தான் ரயில் வேயில் உணவு வழங்கும் பணிக்கு வரவேண்டுமென்று விளம்பரம் கொடுத்துவிட்டால் நேரம் மிச்ச மாகும்'' என்று கூறினார்.
”இந்தியாவைப் பொருத்தவரை ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர். இதில் பெரும் பாலானோர் இந்துக்கள் ஆவார் கள். இவர்களின் நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் அகர் வால் ஜாதியைச்சேர்ந்தவர்களை மட்டும் நியமிக்கின்றனர்” என்றும் கூறினார்.
மதிய உணவிலும்
குறிப்பிட்ட ஜாதியினர் தானாம்!
இஸ்கான் என்ற அரே ராமா அரே கிருஷ்ணா அமைப்பின் சார்பில் மோடி பிப்ரவரி மாதம் மதுராவில் உள்ள சந்திரோதயா பிருந்தாவன் கோவிலுக்குச் சென்று அக்ஷயா பாத்திரம் என்ற ”3 கோடிப் பள்ளிமாணவர்களுக்கு மதிய உணவு” என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இஸ்கான் சார்பில் உணவு வழங்கப்படுகிறது, இங்கு பணி புரிபவர்கள் அனைவருமே சுத்த வைணவர்களாக இருக்க வேண்டும். அதாவது கிருஷ்ணனை மட்டும் கும்பிடுபவரக்ளாக இருக்க வேண்டும் கட்டாயம் குடுமி வைத் திருக்க வெண்டும். இணையதளத்தில் அங்கு வேலைபார்ப்பவர்கள் அனை வரும் வேதப் பாரம்பரியத்தின் படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமர்சனம் எழுந்த போது ”இங்கு ஜாதி பேதம் இல்லை. ஆனால் இந்தியக் கலாச்சாரத்திற்கு ஏற்ற வாழ்க்கை முறைப்படி வாழ நாங்கள் வலியுறுத்துகிறோம். இங்கே அனைத்து ஜாதியினரும் வேலை பார்க்கின்றனர்'' என்று விளக்கம் கொடுத்திருந்ததுதான் வேடிக்கையும், விஷமமுமாகும்.
- விடுதலை நாளேடு 13 11 19