பக்கங்கள்

வெள்ளி, 8 அக்டோபர், 2021

எந்த அடிப்படையில் பொருளாதார வரம்பை முடிவு செய்தீர்கள்?

 

10 சதவீத இட ஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லிஅக்.8 மருத்துவ கல்லூரிகளில் சேர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும் பொரு ளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு (Economically Weaker Section - EWS) 10 சதவீத இடமும் ஒதுக் கிய ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து தொ டரப்பட்ட வழக்கு நேற்று (7.10.2021) உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் டி.சந்திரசூட்விக்ரம் நாத் மற்றும் பி.விநாகரத்னா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்ததுஅகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூ ரிகளில் 2021_2022ஆம் ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ்மற்றும் எம்.எஸ்., எம்.டிஉள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பில் சேர இடஒதுக்கீடு கடை பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

எம்.பி.பி.எஸ்படிப்பில் 15 சதவீத இடங்களும் எம்.எஸ்., மற்றும் எம்.டிஉள்ளிட்ட முதுநிலை படிப்பில் சேர 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் வருகிறது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள்பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களாக வகைப்படுத்த 8 லட்ச ரூபாய் என்ற அளவீடு எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும்இதற்காக ஒன்றிய அரசு நடத்திய ஆய்வு என்ன ? இது குறித்த தரவுகள் ஏதும் உள்ளதா ? எந்த அடிப்படையில் ரூ.8 லட்சம் என்ற தொகை வரையறுக்கப்பட்டது ? என்று அடுக் கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இது அரசின் கொள்கை முடிவு என்று கூற முடியாது என்று அரசு தரப்பில் ஆஜரான வழக் குரைஞரிகளிடம் கூறிய நீதிபதிகள் இந்த வழக் கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.