மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன்
புதுடில்லி, மார்ச் 30- இதர பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டை 1992ஆம் ஆண்டே அரசமைப்புச் சட்டத்தில் கொண்டுவந்தும், 28 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நடைமுறைப்படுத்தப்படாததால் அதில் உள்ள சிக்கல்களை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவை யில் திமுக உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
அய்யா நமது அரசமைப்புச் சட்டம் இதர பிற்படுத்தப்பட்ட மக் களுக்கான உள்ளாட்சித் தேர்தலுக் கான இட ஒதுக்கீட்டை 1992 ஆம் ஆண்டே கொண்டுவந்துவிட்டது, ஆனால் 28 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அது நடை முறைப்படுத்தப்படவில்லை.
மார்ச் 2011 இல், 15வது மக்கள வையில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் தவிர இதர அனைத்து ஜாதிகளின் மக்கள்தொகை கணக் கெடுப்பை உள்ளடக்கிய சமூக பொருளாதார ஜாதிவாரிக் கணக் கெடுப்பை மேற்கொள்வதற்கான தீர்மானத்தின்படி,
மத்திய அமைச்சரவை, மாநிலங் கள்/யூனியன் பிரதேசங்களின் உத வியுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். இதற்காக 4693.60 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்தக்கணக்கெடுப்பின் மூலம் ஜாதித் தரவு 2015 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசால் சேகரிக்கப்பட்டது மற்றும் மாண்புமிகு பிரதமர் தலை மையிலான அமைச்சரவையின் முன் வைக்கப்பட்டது.
அந்த புள்ளிவிபரங்களை சிறந்த ஆய்வுக்குழுவினரைக் கொண்டு நிதி ஆயோக் அதை நிறைவேற்றும் முறைகள் குறித்து வழிகாட்ட அனுப்பட்டது. இன்று வரை அது என்ன ஆனது என்றே தெரிய வில்லை. அது குறித்து பேசவே மறுக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட மக்கள்தொகை குறித்த புள்ளி விபரங்கள் கிடைக்கும் போது மட் டுமே வழங்கப்பட முடியும் என்றும், அதற்கான ஆணையம் அதை அங்கீகரிக்கும் போது மட்டுமே வழங்க முடியும் என்றும் கூறி யுள்ளது.
இது ஒரு அரசமைப்பு சிக்கலை உருவாக்கி உள்ளது 20.12.2021 தேதியிட்ட செய்திக்குறிப்பு மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவகுப்பினருக்கு அரசியல் இடஒதுக்கீட்டை அனு மதிக்க மறுஆய்வு மனு தாக்கல் செய்வதாக ஒன்றிய அரசு தெரிவித்தது, ஆனால் இன்று வரை அவ்வாறு செய்யவில்லை.
ஒருபுறம் அரசியலமைப்பு இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடுகளை வழங்குகிறது,
ஒருபுறம் உரிமைகளுக்கன கதவு களைத் திறந்துவைத்துகொண்டே மறுபக்கம் அதற்கான தரவுகளைக் கொண்ட புள்ளிவிபரங்களை வெளியிட மறுக்கிறது, அதில் கூட அரசியல் லாபம் கிடைக்காதா என்று பார்க்கிறது.
இதனால் மாநில அரசுகள் தங்களின் அரசமைப்புப் கடமை களை அம்மக்களுக்கு செய்ய இய லாத சூழல் நிலவுகிறது. நீதிமன்றங் களும் மாநிலங்களில் நடவடிக்கை களுக்கு முட்டுக்கட்டை போடும் சூழல் உள்ளது. மாநில அரசுகள் செயல்படும் போது நீதிமன்றம் மூலம் தடையாணை பெற்று மாநில அரசுகளில் செயல்பட்டை முடக் குவதுதான் ஒன்றிய அரசின் நோக் கமா? மாநில அரசுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியாது, அப்படி நடத்த முன் வந்தாலும் நீதிமன்றம் அதற்கு இடமளிக்காது.
ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசின் கடமையாக அரசியலமைப் பின் 7 கூறப்பட்டுள்ளது.
எனவே, ஜாதிவாரிக் கணக் கெடுப்பு 2011 இன் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் தரவை வெளியிடுவதன் மூலமோ அல்லது சட்டப்பிரிவு 243(ஞி)(6) க்கு திருத்தம் கொண்டு வருவதன் மூலமோ இட ஒதுக்கீட்டில் உள்ள அரசியலமைப்பு சிக்கலில் இருந்து மீள வழிசெய்யு மாறு பிரதமருக்கு அவையின் மூலம் நான் மனப்பூர்வமாக வேண்டு கோள் விடுக்கிறேன்.
பிரிவு 243 (T)(6) 342A(3) இன் கீழ் மாநிலங்களால் சேகரிக்கப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடுகளை கட்டாயமாகிறது இதன் மூலம் உள்ளாட்சி மட்டத் தில் சமூக நீதியை நிலைநிறுத்தப்படும் இதன் மூலம் அம்மக்களுக்கு நீதி கிடைக்கும். ஒன்றிய அரசு இதைக் கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படவேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்