சமூக நீதி

பக்கங்கள்

  • முகப்பு

ஞாயிறு, 17 ஏப்ரல், 2022

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததுபோல - அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது பாராட்டத்தக்கது!



  April 14, 2022 • Viduthalai

'சமூகநீதிக்கான சரித்திர நாயகர்' நமது முதலமைச்சர் என்பதற்கு அடையாளம்!

தமிழர் தலைவர் ஆசிரியர்

தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்ததுபோலவே, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்தது, திராவிட இயக்க சாதனை மகுடத்தில் சமூகநீதிக் கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பதித்த மற்றொரு முத்தே என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டின் ஒப்பற்ற முதலமைச்சரான 'சமூகநீதிக் கான சரித்திர நாயகர்' மு.க.ஸ்டாலின் அவர்கள், புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை (14.4.2022) தமிழ்நாடு அரசு சமத்துவ நாளாக இனி கொண்டாடும் என்று நேற்று (13.4.2022) சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது, தித்திக்கும் தேன் போன்ற வரவேற்கப்படவேண்டிய வரலாற்று சிறப்பு மிகுந்த பிரகடனமாகும்.

அண்ணல் அம்பேத்கருக்குத்

தமிழ்நாடு அரசு செய்துள்ள சிறப்பு!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாளாக அறிவித்து, உறுதிமொழி ஏற்கச் செய்து, ஓர் அமைதிப் புரட்சிப் பொன்னேட்டை, திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றில் இணைத்தார்.

நேற்று அறிவித்திருக்கும் அறிவிப்பு மிகவும் பாராட்டி - வரவேற்கப்படும் - திராவிட இயக்க சாதனை மகுடத்தில் மற்றுமோர் ஒளிமுத்தே!

காரணம், தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் புரட்சிக் கருத்துகள், சமத்துவ இலட்சியங்களுக்காகப் போர் புரிந்து, போராயுதங்களைத் தரும் அறிவாயுதத் தொழிற்சாலைகள்.

ஒரே (கொள்கை) நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

டாக்டர் அம்பேத்கர் பேசப்படாத ஜாதி ஒழிப்பு மாநாட்டின் தலைமையுரையை, 1936-லேயே உரிமை பெற்று, தமிழிலேயே வெளியிட்டு, அம்பேத்கரை தமிழ்நாடு அறிந்து, வியந்து பாராட்டும்படி செய்தவர் தந்தை பெரியார்.

மும்பையில் தந்தை பெரியார் தலைமையில், அண்ணல் அம்பேத்கர் உரையாற்றினார். அப்பொழுது தந்தை பெரியாரின் தமிழ் உரையை ஆங்கிலத்திலும், அண்ணல் அம்பேத்கரின் ஆங்கில உரையைத் தமிழிலும் மொழி பெயர்த்தவர் அறிஞர் அண்ணா என்பது குறிப்பிடத்தக்க கூடுதல் செய்தியாகும்.

தமிழ்நாட்டில் அம்பேத்கர் பெயரில் கல்லூரி - சட்டப் பல்கலைக் கழகம்

அம்பேத்கர் பெயரில் சென்னை வியாசர்பாடியில் அரசு கல்லூரி அமைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர். பிறகு அம்பேத்கர் பெயரில் தமிழ்நாடு சட்டப் பல்கலைக் கழகம் தலைநகர் சென்னையில்!

அம்பேத்கர் பிறந்த மண்ணில் அவர் பெயரை ஒரு கல்லூரியில் இணைத்தமைக்காக கடுமையான எதிர் போராட்டம் நடந்தது; தமிழ்நாட்டிலோ பலத்த வரவேற்பு. இதுதான் பெரியாரின் சமூகநீதி மண்ணின் தனிச்சாதனை; திராவிட மாடல் ஆட்சியின் இலட்சியங்களை இலக் காக்கிய சுயமரியாதை பூமியின் தனித்தன்மை!

தந்தை பெரியார் தம் வாழ்நாளில், அதிக தடவை சந்தித்த தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களே!

தமிழ்தான் இந்தியா முழுவதிலும் பரந்து இருந்த மொழி - நாகர்களின் மொழி என்று ஆய்வுடன் எழுதிய வர் அண்ணல் அம்பேத்கர்.

பர்மாவில் உலகப் பவுத்தர்கள் மாநாட்டில்

தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும்!

1953 ஆம் ஆண்டு பர்மாவில் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் ஒன்றாக உலக பவுத்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர். அப்போதுதான் டாக்டர் அம்பேத்கர் பவுத்தம் தழுவுவதற்கான முடிவின் இறுதி வடிவத்தை தந்தை பெரியாரிடம் கூறியபோது,

''நீங்கள் பெருங்கூட்டத்துடன் சேருங்கள்'' என்று யோசனை கூறியவர் தந்தை பெரியார்.

நாகபுரியில் 5 லட்சம் பேருடன் பவுத்த நெறிக்கு மாறினார் அம்பேத்கர் என்பது வரலாற்றுச் சுவடுகள்!

மனுதர்மத்தை எரித்த இருவரும் சமத்துவத்துக்காக - பெண்ணுரிமைக்காகப் பாடுபட்ட போராளிகள் - இருபெரும்  தத்துவத் தலைவர்கள்!

அதனால் அந்தச் சுடரை அணையாது கொண்டு செல்கிறார் தமிழ்நாட்டின் திராவிட மாடல் ஆட்சி சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள நமது முதலமைச்சர்.

வருணாசிரம வேரை நறுக்கச் சொன்னவர் அண்ணல் அம்பேத்கர்

ஜாதியை ஒழிக்க அதன் ஆணிவேரான வர்ணதர்மம், சனாதன அடிபீடத்தை நொறுக்கச் சொன்னவர் டாக்டர் அம்பேத்கர்.

அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாகக் கொண் டாட அறிவித்திருப்பது அர்த்தமுள்ளது. அனைத்துத் தரப்பு ''அடிமை வகுப்பினரான'' (''Servile Classes'')  எஸ்.டி., எஸ்.சி., ஓ.பி.சி., அனைத்து ஒடுக்கப்பட்ட மக் களையும் ஒன்றுபடுத்தி - சமப்படுத்தி இணைத்துக் கூறும் அரிய சொற்றொடர் இது.

‘‘ஜாதியை, ஜாதி தர்மத்தைப் பரப்பிடும் மத நூல் களான இராமாயணமும், கீதையும் சமத்துவத்திற்கு எதி ரான நூல்களே!’’ என்று துணிவுடன் - தந்தை பெரியார் போன்று அன்றே பேசிய, எழுதிய, அறிவு நாணயம் மிகுந்த தலைவர்.

‘திராவிட மாடல்’ ஆட்சி இதுதான்!

திராவிடர் இயக்கத்தின் ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு, சமூகநீதி என்பது வெறும் நீர் எழுத்துகள் அல்ல; பாறையின் செதுக்கல்; லட்சியப் பயணத்தின் தொய்வில்லா சாதனை என்பதை நமது முதலமைச்சரின் இந்த அறிவிப்பு நிரூபித்து, திராவிட மாடல் ஆட்சியின் மாண்பை மலை உச்சி விளக்கொளி ஆக்கிக் காட்டுகின்றது.

கி.வீரமணி 

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

14.4.2022            

இடுகையிட்டது parthasarathy r நேரம் 10:35 PM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அம்பேத்கர், ஆசிரியர் அறிக்கை, சமத்துவ நாள்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23

மண்டல் சிலை திறப்பு-குண்டூர் 12.2.23
தமிழர் தலைவர் கி.வீரமணி-எழுச்சித் தமிழர் திருமா

ஜாதிவாரி கணக்கெடுப்பு

ஜாதி ஒழிந்தால் தான் சமத்துவம் வரும்; அதற்கு சமூக நீதி தேவை! அந்த சமூக நீதிக்கான புள்ளிவிவரம் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு! சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஜாதிவாரி கணக்கெடுப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை!

இந்த வலைப்பதிவில் தேடு

Translate

இதற்கு குழுசேரவும்

இடுகைகள்
Atom
இடுகைகள்
கருத்துகள்
Atom
கருத்துகள்

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

பின்பற்றுபவர்கள்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2025 (1)
    • ►  மே (1)
  • ►  2024 (12)
    • ►  நவம்பர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2023 (33)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (2)
  • ▼  2022 (29)
    • ►  டிசம்பர் (5)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
    • ▼  ஏப்ரல் (1)
      • தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாளாக அறிவித்த...
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (7)
    • ►  ஜனவரி (4)
  • ►  2021 (44)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (3)
    • ►  ஆகஸ்ட் (18)
    • ►  ஜூலை (3)
    • ►  மே (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (5)
  • ►  2020 (29)
    • ►  டிசம்பர் (3)
    • ►  நவம்பர் (2)
    • ►  அக்டோபர் (1)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (4)
    • ►  மார்ச் (7)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (4)
  • ►  2019 (90)
    • ►  டிசம்பர் (1)
    • ►  நவம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (4)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (7)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (6)
    • ►  ஜனவரி (39)
  • ►  2018 (85)
    • ►  டிசம்பர் (8)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (6)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (21)
    • ►  ஜூலை (12)
    • ►  ஜூன் (4)
    • ►  ஏப்ரல் (6)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (3)
  • ►  2017 (57)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (8)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (4)
    • ►  ஜூன் (6)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (6)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (7)
  • ►  2016 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (11)
    • ►  செப்டம்பர் (5)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (12)
    • ►  மே (28)
  • ►  2015 (52)
    • ►  டிசம்பர் (12)
    • ►  நவம்பர் (31)
    • ►  அக்டோபர் (9)

லேபிள்கள்

  • 10.5%
  • 10%
  • 10%இட ஒதுக்கீடு
  • 27%
  • 69 % இட ஒதுக்கீடு
  • 69%
  • அடித்தல்
  • அதிரடி க.அன்பழகன்
  • அநீதி
  • அம்பேத்கர்
  • அமர்த்தியாசென்
  • அமெரிக்கா
  • அய்.அய்.டி
  • அய்ஏஎஸ்
  • அய்யப்பன்
  • அர்ச்சகர்
  • அர்ஜுன்சிங்
  • அரசாணை
  • அரசு ஆணை
  • அரசு பணி
  • அலறல்
  • அறிக்கை
  • அறிவிப்பு
  • அனைத்து கட்சி
  • அனைத்து சாதியினர்
  • ஆ.ராசா
  • ஆசிரியர்
  • ஆசிரியர் அறிக்கை
  • ஆசிரியர் உரை
  • ஆசிரியர் பேச்சு
  • ஆணை
  • ஆதி திராவிடர்
  • ஆதிக்கம்
  • ஆந்திரா
  • ஆம் ஆத்மி
  • ஆர் எஸ் எஸ்
  • ஆர்ப்பாட்டம்
  • ஆனந்தவிகடன்
  • இட ஒதிக்கீடு
  • இட ஒதிக்கீடு. நடுவன் அரசு
  • இட ஒதுக்கீடு
  • இடஒதுக்கீட்டில் மோசடி
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இந்தியா
  • இந்து ஏடு
  • இமாசலப் பிரதேசம்
  • இராம்விலாஸ் பஸ்வான்
  • உச்சநீதிமன்றம்
  • உணவு
  • உத்தரப் பிரதேசம்
  • உத்தரப்பிரதேசம்
  • உதவித்தொகை
  • உயர்நீதிமன்றம்
  • உரிமை
  • உரை
  • உள்இட ஒதுக்கீடு
  • ஊனமுற்றோர்
  • எகனாமிக்கல் டைம்ஸ்
  • எம்.ஜி.ஆர்
  • எஸ்.சி.எஸ்.டி.
  • எஸ்சி எஸ்டி
  • ஐநா சபை
  • ஒ.பி.சி
  • ஒடிசா
  • ஒதுக்கீடு
  • ஒப்புதல்
  • ஒன்றிய அரசு
  • ஓ பி சி
  • ஓ.பி.சி
  • ஓபிசி சங்கம்
  • கட்டி வைப்பு
  • கட்டுரை
  • கண்காணிப்புக் குழு
  • கண்டனம்
  • கணக்கெடுப்பு
  • கர்நாடகம்
  • கர்நாடகா
  • கருத்தரங்கம்
  • கருத்தரங்கு
  • கல்வி
  • கல்வியில் இட ஒதுக்கீடு
  • கலி.பூங்குன்றன்
  • கலைஞர்
  • கவிஞர்
  • காங்கிரஸ்
  • காணொளி
  • காலனி
  • காவலர் பணி
  • கி.வீரமணி
  • கிரிமிலேயர்
  • கிரீமிலேயர்
  • கிறித்தவ நாடார்
  • குடிநீர்
  • குடியரசுத்தலைவர்
  • குதிரை ஊர்வலம்
  • கூட்டம்
  • கேரளா
  • கொடூரம்
  • கொலை
  • கோ. கருணாநிதி
  • கோ.கருணாநிதி
  • கோயில்
  • கோயில் நுழைவு
  • கோரிக்கை
  • சட்ட திருத்தம்
  • சட்டத்துறை
  • சட்டம்
  • சட்டவிரோதம்
  • சண்டாளர்
  • சமத்துவ நாள்
  • சமதர்மம்
  • சமூக அநீதி
  • சமூக நீதி
  • சமூகநீதி
  • சரத்பவார்
  • சாதி
  • சாதி தடை உடைப்பு
  • சாதி மறுப்பு
  • சாதிகொடுமை
  • சாதிவாரி கணக்கெடுப்பு
  • சாதிவெறி
  • சாமியார்
  • சித்தராமையா
  • சிலம்பம்
  • சிலை
  • சுடுகாடு இடுகாடு
  • சுயமரியாதை மாநாடு
  • சூழ்ச்சி
  • செவ்வி
  • டில்லி
  • தடை
  • தண்ணீர்
  • தமிழ்தேசியம்
  • தலையங்கம்
  • தனித்தொகுதி
  • தனியார்
  • தாக்குதல்
  • தாழ்த்தப்பட்டோர்
  • திருமா
  • தில்லி
  • திறமை
  • தினத்தந்தி
  • தீக்கதீர்
  • தீட்டு
  • தீண்டாமை
  • தீர்ப்பு
  • துக்ளக்
  • தெலுங்கானா
  • தொழிற்கல்வி
  • தோள்சீலை
  • தோள்சீலை போராட்டம்
  • நங்கேலி
  • நடுவண் அரசு
  • நரிக்குறவர்
  • நல வாரியம்
  • நலத்துறை
  • நாக்பூர்
  • நாடாளுமன்றம்
  • நீக்கம்
  • நீட்
  • நீதிமன்றம்
  • நுழைவுத் தேர்வு
  • நூற்றாண்டு
  • பட்டியல்
  • பணி நியமனம்
  • பதவி உயர்வு
  • பதவிஉயர்வு
  • பதவு உயர்வு
  • பயன்
  • பரோடா
  • பல்கலைக்கழகம்
  • பலி
  • பழங்குடி
  • பழங்குடியின பெண்
  • பழங்குடியினர்
  • பழங்குடியினர் பட்டியல்
  • பாகுபாடு
  • பாட்னா
  • பார்ப்பன ஆதிக்கம்
  • பார்ப்பன திமிர்
  • பார்ப்பனர்
  • பாராட்டு
  • பாலியல் உறவு
  • பாலியல் வன்முறை
  • பாவாணர்
  • பாஜக
  • பிரதமர்
  • பிராமணாள் ஒழிப்பு
  • பிற்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர்
  • பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்
  • பீகார்
  • புதிரை வண்ணார்
  • புள்ளிவிவரம்
  • பெங்களூர்
  • பெண்
  • பெண் ஓதுவார்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரியார் திடல்
  • பேரணி
  • பொருளாதார இடஒதுக்கீடு
  • பொருளாதார இட ஒதுக்கீடு
  • பொருளாதாரம்
  • போராட்டம்
  • போலி சான்றிதழ்
  • மக்களவை
  • மசோதா
  • மடம்
  • மண்டல்
  • மண்டல் அறிக்கை
  • மண்டல் ஆணை
  • மண்டல் குழு
  • மத்திய பிரதேசம்
  • மத்தியஅரசு
  • மராட்டிய மாநிலம்
  • மராட்டியம்
  • மராத்தா
  • மராத்தா சமூகம்
  • மருத்துவ படிப்பு
  • மருத்துவ மாணவர்
  • மருத்துவகல்லூரி
  • மருத்துவப் படிப்பு
  • மருத்துவம்
  • மலம் திணிப்பு
  • மாணவர்
  • மாநாடு
  • மாற்றுத் திறனாளி
  • மீசை
  • முசுலீம்
  • முதல் பிற்படுத்தப்பட்டோர் மாணவர்
  • முதலமைச்சர்
  • முரசொலி
  • முலைவரி
  • முற்பட்டோர்
  • முன்னோடி
  • மைசூர்
  • மோசடி
  • ரயில்வே
  • ராகுல்
  • ராஜஸ்தான்
  • லாலுபிரசாத்
  • வகுப்புரிமை
  • வங்கி
  • வட இந்தியா
  • வடநாடு
  • வயது வரம்பு
  • வர்ணதர்மம்
  • வரலாறு
  • வருமான வரம்பு
  • வருமானம்
  • வருமானவரம்பு ஆணை
  • வழக்கு
  • வழிபாடு
  • வறுமை
  • வன்கொடுமை
  • வன்னியர்
  • வி.பி. சிங்
  • வி.பி. சிங் சிலை
  • வி.பி.சிங்
  • வி.பி.சிங் சிலை
  • விடுதலை சந்தா
  • விபிசிங்
  • விருது
  • விழா
  • விளையாட்டு
  • வேல்முருகன்
  • வேலை
  • வைகோ
  • ஜாதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி கொடுமை
  • ஜாதி பாடம்
  • ஜாதி வெறி
  • ஜாதிவாரி
  • ஜாதிவாரி கணக்கெடுப்பு
  • ஜார்க்கண்ட்
  • ஜூனியர் விகடன்
  • ஸ்டாலின்
  • ஸ்டேட் பேங்க்
  • B.B.C.NEWS தமிழ்
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.