இதர பிற்படுத்தப்பட்டோர்
திருவனந்தபுரம், மார்ச் 2- எஸ் அய்யுசி அல்லாத கிறித்தவ மதத்தைச் சேர்ந்த நாடார் சமூகத்தினரை மாநில இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் இணைக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
1958இல் கேரள மாநில மற்றும் துணை விதியில் 2021 ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் விதமாக திருத்தம் கொண்டுவரப்படும். எஸ் அய்யுசி அல்லாத கிறித் தவ நாடார் சமூகத்தினரை இதர பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இணைத்து 2021 பிப்ரவரி 6 இல் அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
அரசமைப்பு சாசனத் தின் 127 ஆவது திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சமூகத்தினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைப்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு மீண்டும் வழங்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் கேரள அமைச்சரவை 25.2.2022 அன்று இந்த முடிவை மேற்கொண்டது.