மும்பை, பிப். 22- மராட்டிய மாநிலத்தில் உள்ள மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, மராத்தா சமூகத் தலைவர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசு நாளன்று மும்பைக்கு பேரணியாக வந்த அவர், பட்டினிப் போராட்டத்தை தொடங்கினார்.
கோரிக்கைகள் தொடர்பாக அவசர சட்டம் நிறைவேற்றப்படா விட்டால், காலவரையற்ற பட்டின் போராட்டத்தை மேற்கொள்வேன் என கூறினார். இதற்காக தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதா னத்தை தேர்வு செய்திருந்தார். ஆனால் அங்கு செல்வதற்கு முன் பாகவே, அவரது கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் போராட்டத்தை கைவிட்டார். மனோஜ் ஜரங்கேவுக்கு முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே பழச்சாறு கொடுத்து பட்டினிப் போராட் டத்தை முடித்து வைத்தார். இட ஒதுக்கீடு குறித்த அரசுத் தீர்மா னத்தை மாநில அரசு வெளியிட் டது.
ஆனால் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி சட்ட மசோ தாவை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மனோஜ் ஜரங்கே கடந்த 10ஆம் தேதி பட் டினிப் போராட்டத்தை தொடங் கினார்.
இந்நிலையில் மராட்டிய மாநில சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைகளில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஒருமனதாக நிறைவேற் றப்பட்டது. இடஒதுக்கீடு அம லுக்கு வந்ததும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரிசீலனை செய்யலாம் என்றும் மசோதாவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.