கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளுக்கும்
உயர்ஜாதி ஏழைப் பார்ப்பனர்களுக்கான இடஒதுக்கீட்டில் சலுகை!
சென்னை, ஜூன் 21 ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், பொருளாதார நலிந்த பார்ப்ப னர்களுக்கான (EWS) இட ஒதுக்கீட்டில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதுகுறித்து விரிவான விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
ஒன்றிய அரசின் விதிமுறைப்படி, ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குக் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கே 10% இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகள் வழங்கப்பட சட்டம் இருக்கிறது. ஆனால், அண்மையில் தேர்ச்சி பெற்ற உயர்ஜாதி ஏழைப் பிரிவைச் சேர்ந்த 104 மாணவர்களின் பின்னணி குறித்து ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள் வெளி
வந்துள்ளன.
பிரபல பயிற்சி மய்யங்கள்
தேர்ச்சி பெற்ற 104 பேரில் 67 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ. 2.65 லட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் நாட்டின் மிக புகழ்பெற்ற சிவில் சர்வீசஸ் பயிற்சி மய்யங்களில் படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சொகுசு பள்ளி மற்றும் உயர்கல்வி
46 மாணவர்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதும், 14 மாணவர்கள் அய்.அய்.டி (IIT), என்.அய்.டி (NIT) போன்ற நாட்டின் உயர்தர கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
தேர்ச்சி பெற்றவர்களில் 28 மாணவர்களின் பெற்றோர்கள் பெரிய தொழிலதிபர்களாகவும், நிறு வனங்களின் உரிமையாளர்களாகவும், சொந்தமாகப் பெரிய கடைகள் மற்றும் குடும்பத் தொழில் நடத்துப வர்களாகவும் உள்ளனர்.
கார்ப்பரேட் ஊழியர்கள்
10 மாணவர்கள் ஏற்ெகனவே பன்னாட்டு நிறு வனங்கள் உள்ளிட்ட முன்னணி தனியார் நிறுவனங் களில் நல்ல ஊதியத்துடன் பணி புரிந்தவர்கள் ஆவர்.
லட்சக்கணக்கில் பள்ளிக் கட்டணம் செலுத்திய வர்களும், கோடிக்கணக்கில் வணிகம் செய்யும் தொழிலதிபர்களின் வாரிசுகளும், பன்னாட்டு நிறு வனங்களில் பணிபுரிந்தவர்களும் எப்படி ‘பொரு ளாதாரத்தில் நலிந்தவர்கள்’ என்ற வரம்புக்குள் வர முடியும் என கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
உண்மையான ஏழை எளிய மாணவர்களின் வாய்ப்புகளைப் பறிக்கும் வகையில் நடைபெற்றுள்ள இந்த இடபுள்யுஎஸ் மோசடி குறித்து ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, ஒரு உயர் மட்ட விசா ரணை ஆணையம் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் கல்வி யாளர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக