வேலூர், ஜூன் 25 தமிழகம் மற்றும் கேரளா இந்தியாவிலேயே அதிகம் எழுத் தறிவுள்ள மக்கள் வாழும் மாநிலம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இங்கு படிப்பை பாதியிலேயே விட்டு விட்டு வேலைக்குச் செல்லும் குழந்தைத் தொழி லாளர்கள் அதிகம் உள்ளனர் என்ற தகவ லை அய்.நா குழந்தைகள் நல ஆணையம் வெளியிட்டுள்ளது.
அய்க்கிய நாடுகளுக்கான குழந்தைகள் நல அமைப்பு(யுனிசெஃப்) இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய ஆய் வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதில் இந்திய மாநிலங்களிலேயே கேரளாவில் 81.2 விழுக்காடு குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் இது சிறிது குறைந்து 81.3 விழுக்காடு என்ற நிலையில் உள்ள தாகவும் கூறியுள்ளது, மேலும் தமிழகத்தில் உள்ள 44 லட்சம் குழந்தை தொழிலாளர்களில் 5- முதல் 14 வயதுள்ள குழந்தைகள் அதிகம் என்றும் இவர்கள் முழு நேர பணியாளர்களாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யுனிசெஃப் பிரதிநிதி எல்லினா சமனா டரீ இந்த அறிக்கையை மேற்கோள்காட்டி பேசும் போது, இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில் மொத்தம் 1.2 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். 2002-ஆம் ஆண்டை விட 2011-ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறை வாகவே உள்ளது. இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பிற்கான வலுவான சட்டங்கள் எதுவுமே இல்லாதால் குழந்தை தொழிலாளர்களை உருவாவதை தடுக்க முடியவில்லை. நகர்ப்புறங்களை விட சிறு நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் சமீப காலமாக நகர்ப்புறங் களிலும் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்து வருவது கவலை தருகிறது என்றார்.
படிப்பை பாதியில் விட்டு விட்டுவரும் குழந்தை தொழிலாளர்களில் பின்னனியை ஆராயும் போது, வீட்டிலிருந்து கல்விகற்க நீண்ட தூரம் செல்லவேண்டிய நிலை, தரமற்ற பள்ளிக் கட்டிடம் குழந்தை களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்திவிடுகிறது, மேலும் பள்ளிக் கூடங்களில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் குடிநீர், ஆசிரியர்கள் பற்றாக் குறை, ஆசிரியர்கள் இல்லாத நிலை அதே நேரத்தில் இருக்கும் ஒரு சில ஆசிரியர்களும் தகுதியற்றவர்களாக உள்ள நிலை போன்ற வற்றால் குழந்தைகள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வேலைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் 2.75 குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு முழுநேர பணியாளர்களாக மாறிவிட்டனர். தமிழ கத்தில் உள்ள 24 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர். மெலும் அந்த அறிக்கையில் வகுப்பறைகளில் ஜாதி பேதம் பார்க்கப் படுவதால் 6 முதல் 14 வயதுவரையிலான குழந்தைகள் அதிக அளவில் கல்வியை பாதி யிலேயே விட்டுவிடுகின்றனர் என்ற ஒரு தகவலையும் கோடிட்டு காட்டியுள்ள னர். மேலும் சமீப காலமாக வேலைதேடி அந்நிய மாநிலங்களுக்குச் செல்லும் பெற் றோர் குழந்தைகளையும் தங்களுடன் அழைத்துச் சென்று விடுகின்றனர். செல் லும் இடங்களில் மொழி மற்றும் பொருளா தாரச்சூழல் காரணமாக குழந்தைகள் கல்வியை பாதியிலேயே விட்டு விடும் சூழலுக்கு ஆளாகிவிடுகின்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த அய்.நா. குழந் தைகள் நல முன்னாள் பிரதிநிதி ர.வித்யா சாகர் கூறும் போது,சில ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தின் அனைவருக்கும் கல்வி திட்டம், கல்விகற்பது எனது உரிமை போன்ற விழிப்புணர்வு திட்டங் களாலும் பிரச்சாரங்களாலும், பழங்குடி இனக்குழந்தைகள் வரை கல்வி கற்க ஆர் வத்துடன் முன்வந்தனர். குழந்தைகளின் நல்ல கல்விக்காக இடம் பெயரும் நிலை கூட பல கிராமங்களில் உருவாகியது. அதே நேரத்தில் இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக குறைந்துவருகிறது, முக்கிய மாக பள்ளிநேரத்திற்கு பிறகு வேலைக்குச் செல்லும் அவலம் தற்போது உருவாகி யுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பல சிறு நகரம் மற்றும் கிராமங்களில் குழந்தைகள் பெற்றோர் பணிபுரியும் பீடி தொழிற் சாலைகளில் சென்று உதவிசெய்கின்றனர். அதே போல் சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் வெள்ளி ஆபரணம் தயா ரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிகின் றனர். பள்ளி முடிந்து மாலை நேரம் விளையாடச் செல்லும் குழந்தைகள் பலர் தனது பெற்றோர்களுடன் இரவு 8 மணி வரை தொழிற்கூடங்களில் உதவி செய்கின்றனர். 62.5 குழந்தைகள் பள்ளிக் கூடம் செல்லும் நிலையில் 15 மற்றும் 18 வயதிற்குள் 37 லட்சம் குழந்தைகள் தங்களது கல்வியை பாதியிலேயே விட்டு விடுகின்றனர் என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வித்யாசாகர் தெரிவித்தார்.
தமிழகமும் கேரளமும் குழந்தைகளை பணியில் அமர்த்துவோருக்கு எதிரான நடவடிக்கைகளை கடுமையாக எடுப்போம் என்ற உறுதிமொழியில் கையொப்பமிட்டும் குழந்தை தொழிலாளர்கள் இந்த மாநிலங் களில் அதிகரித்து வருவது கவலை யளிக்கிறது, மேலும் கேரளம் மற்றும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது, இந்தியாவிலேயே அதிக அளவு குழந்தை தொழிலாளர்கள் உள்ள மாநிலங்களும் தெலங்கானா முதலி டம் வகிக்கிறது, இங்கு 10 ஆம் வகுப்பு வரைகூட தாண்டாத குழந்தைகள் பல் வேறு காரணங்களுக்காக கல்வியைத் துறந்து வேலைக்குச்செல்லும் சூழ் நிலைக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-விடுதலை,25.6.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக