பக்கங்கள்

சனி, 8 ஜூலை, 2017

'ஆதி திராவிடர்' பெயர் மாற்றம்

பள்ளர், பறையர் போன்ற தமிழ்க் குடிகளை ஆதித்தமிழர் என அழைக்காமல் 'ஆதி திராவிடர்' என ஏன் அழைக்கிறார்கள்? இதுதான் திராவிடம் செய்த சதி என சிலர் வரலாற்றை திரித்து கதை சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் உண்மை என்ன?
பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்தில் மதராஸ் மாகாண சட்டசபையில் 20 ஜனவரி 1922ல் M.C.ராசா சட்டசபையில் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அந்த தீர்மானத்தின்படி #பறையர், #பள்ளர் என்ற பெயர் நீக்கப்பட்டு ஆதிதிராவிடர் என்ற பெயர் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசாணை எண் 817 மூலம் (25.03.1922) பறையர், பள்ளர் மக்களுக்கு #ஆதிதிராவிடர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
பெயர் மாற்றம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாகியும் பல பத்திரப் பதிவு அலுவலகங்களில் பறையன், பஞ்சமன் என்றே பதிவு செய்யப்படுகிறது. இதை அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என #இரட்டைமலை #சீனிவாசன் 25.08.1924ல் சட்டசபையில் முறையிட்டார். உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய முதல்வர் பனகல் அரசர் பதிலளித்தார்.
'ஆதி திராவிடர்' என பெயர் மாற்றும்போது இந்தியா என்ற ஒரு சுதந்திர நாடே அப்போது கிடையாது. தமிழ்நாடு என்றவொரு மாநிலமும் அப்போது இல்லை. திராவிட கட்சிகள் அப்போது பிறக்கவே இல்லை.
அப்போது பிறக்காத திராவிட இயக்கங்களை இழுத்து அவர்கள்தான் ஆதித்தமிழருக்கு ஆதி திராவிடர் என பெயர் சூட்டியதாக பொய்யை சொல்லி வரலாற்றை திரித்து அரசியல் செய்வது தற்போது நடக்கிறது.
போகிறபோக்கில் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் தமிழரே இல்லை என சொல்லாமல் இருந்தால் சரி.
Nambikai Raj
-முகநூல்,8.7.17(இரவிக்குமார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக