லக்னோ, ஜன.20 சாமியார் ஆதித்யநாத் 2017-ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மிகுந்த இழுபறிக்கு இடையில் முதல்வராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சில நாட் களிலேயே அவரது அமைச் சகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தலைமைச் செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு காத்திருப்பு மற்றும் அதிகாரமில்லாப் பதவிகளுக்கு மாற்றப்பட்டனர். அதன் பிறகு தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சி யாளர்கள் மற்றும் மாவட்ட காவல் ஆணையர்களும் மாற்றப்பட்டனர். அப்படி மாற்றப்பட்டவுடன் காலியான இடங்களுக்கு பார்ப்பன அதிகாரிகளும், உயர்ஜாதி இனத்தவரும் அமரவைக்கப்பட்டனர்.
அண்மையில் புதிதாக வெளியிடப்பட்ட மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல்துறை ஆணையர்கள், பார்ப்பனர்கள் மற்றும் உயர் ஜாதியினராகவே உள்ளனர்.
சுல்கான் சிங் (உ.பி மாநில காவல்துறை ஆணையர்),
ராஜீவ் சிங் ரோதேலா (கோரக்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
ராகேஷ் சிங் (கான்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
அமித்கிஷோர் சிங் (இடா மாவட்ட ஆட்சியாளர்),
நரேந்திர குமார் சிங் (சஹான் பூர் மாவட்ட ஆட்சியாளர்),
அரவிந்த் குமார் சிங் (பரத்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
சரத் சிங் (பிரதேப்கர் மாவட்ட ஆட்சியாளர்),
இந்திரா விகாஷ் சிங் (சாம்ளி மாவட்ட ஆட்சியாளர்),
நவ்நீத் சிங் (அமோகா மாவட்ட ஆட்சியாளர்),
நாகேந்திர பிரதாப் சிங் (சகாரன்பூர் மாவட்ட ஆட்சியாளர்),
விகேஷ் நாராயன் சிங் (கவுதம் புத்தா நகர் மாவட்ட ஆட்சியாளர்),
ராகேஷ் சிங் (முர்தாபாத் மாவட்ட ஆட்சியாளர்),
சுரேந்திர சிங் (கான்பூர் நகர் மாவட்ட ஆட்சியாளர்),
தன்ராஜ் சிங் (நொய்டா மாவட்ட ஆட்சியாளர்),
அரிநாராயன் சிங் (காசியாபாத் மாவட்டக் காவல் ஆணையர்)
தன்சியாம் சிங் (கான்பூர் மாவட்ட காவல் ஆணையர்),
கவுரவ் சிங் (ராய்பரேலி மாவட்ட காவல் ஆணையர்),
அபிசேக் சிங் (பல்ராம்பூர் மாவட்ட காவல்துறை ஆணையர்)
பாஜகவின் ஜாதிவாரியாக வாக்கு வாங்கும் சூழ்ச்சியை அறியாமல் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்த பிற்படுத்தப்பட்ட, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவான பெரும்பான்மை மக்கள் தொகைகளைக் கொண்ட குர்மி, கோயிரி,தேளி,மவுரியா, லோதா, நிசாத் கும்பார் பிரிவு அய்.ஏ.எஸ். அய்.பி.எஸ். அதிகாரிகள் அதிக அளவு இருக்கின்றனர். ஆனால் சாமியார் முதல்வர் ஆதித்யநாத் பார்ப்பனர்களையும், உயர் ஜாதியினரையும் மாவட்ட ஆட்சியாளர்களாக, காவல்துறை ஆணையர் களாக பதவி உயர்த்தி வழங்கியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 20.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக