பக்கங்கள்

சனி, 22 பிப்ரவரி, 2020

கோயில்களில் தீட்டு

*பார்ப்பனர்களும் –* *தீட்டும்* 
----------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.

1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா? 

10)  1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

11)  2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?

12)  2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள்  நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?✍🏼🌹
- பகிரி வழியாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக