மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
சென்னை,பிப்.9. திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவ ருமான தளபதி மு.க.ஸ்டாலின் நேற்று (8.2.2021) விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
“சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகை யில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு” தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மண்டல் ஆணைய தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் ஒரே ஒரு துறையில்கூட முழு மையாகச் செயல்படுத்தவில்லை.
சமூகநீதியை உருக்குலைக்க...
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக் களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து மத்திய அரசின் துறைகளில், இதர பிற் படுத்தப்பட்டோர் மற்றும், தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்தவருக்கு இட மில்லை என்ற எழுதப்படாத உத்தர வினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.
புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூ.பி.எஸ்.சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், அஞ்சல் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து- போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து - இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரச மைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு பதவி
இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றி லும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பா.ஜ.க. தலைமையில் அமைந் திருக்கிறது என்பது, நாட்டிற்கு ஏற்பட் டிருக்கும் கேடு. இதன் அடுத்தகட்ட மாகவே - தற்போது இணைச் செயலா ளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள் ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங் களில் இருந்து ஆட்களை - அதுவும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து- எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனை யளிக்கிறது.
தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந் தத்தில் உள்ளவர்களை அரசுத் துறை களில் சேர்த்து விடுவார்கள்.
குறுக்கு வழியிலும்
இடஒதுக்கீட்டை சீரழிக்க...
பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீர ழிக்க நடக்கும் இந்த முயற்சிகளை தி.மு.க. ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.
இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால் -_ பொதுத் துறை நிறுவனங்கள் தனியா ருக்குத் தாரை வார்ப்பு என்று துவங்கி - அது பேயாட்டம் போட்டுக் கொண்டி ருக்கின்ற நேரத்தில் - மத்திய அரசின் துறைகளையும் தனியார் மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. அதுமட்டுமின்றி - மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின அலுவலர்கள் - அதிகாரிகள் ஆகியோருக்கு உயர்பதவிகளை எட்டாக் கனியாக்கி - அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் - கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!
தேர்தலில் பொய்ப் பிரச்சாரம்
தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்து, இதர பிற்படுத்தப்பட்ட- பட்டி யலின- பழங்குடியின மக்களின் வாக் குகளைப் பெற்ற மத்திய பா.ஜ.க. அரசு இப்போது அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செய லாளர் போன்ற பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்றும் -_ அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த் தப்பட்ட மற்றும் பழங்குடியின மக் களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிர தமர் மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அதைச் செய் யத் தவறி னால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது.
மக்களின் உரிமை
மத்திய அரசு நிர்வாகம் பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் உரிமை என்பதை மத்திய பா.ஜ.க. அரசு உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும், எரிமலையுடன் விளையாடு வதற்கு ஒப்பானதாகும். எனவே, மத்திய பா.ஜ.க. அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதினால், இதுகாறும் கடைப்பிடித்து வந்த அணுகு முறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மட்டுமின்றி, சமூகநீதி காக்கப் போராடும் அனைவரது சார்பிலும் எச்சரிக்க விரும்புகிறேன்!
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக