பக்கங்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2021

முதல் வகுப்புரிமை ஆணையின் நூற்றாண்டு (1921-2021)


சமூகநீதிக்கு எதிரான மத்திய பா..ஆட்சி -

மாநில .தி.மு.ஆட்சிக்கு எதிரான பேராயுதம் சமூகநீதியே!

காணொலியில் தமிழர் தலைவர்


* கவிஞர் கலி. பூங்குன்றன்

"மத்திய பா..ஆட்சியின் சமூகநீதி பறிப்பும் - மாநில அரசின் மவுனமும்எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு

கிவீரமணி அவர்கள் நேற்று (13.2.2021) மாலை 7 மணி யளவில் காணொலி மூலம் ஆற்றிய உரையின் செறிவு.

நாட்டில் ஒவ்வொரு மணித் துளியிலும் வரும் தகவல்கள்செய்திகள் பெரும்பாலும் சமூகநீதி பறிப்புகள் பற்றியதாகவே உள்ளன.

சமூகநீதி பிச்சையாசலுகையா?

இவற்றை சாதாரண கண்ணாடியில் பார்த்தால் விளங்காது - புரியாதுபெரியார் என்னும் ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் துல்லியமாக விளங்கும் - புரியும்.

நாம் கூறும்கோரும் சமூகநீதி என்பது சலுகையோபிச்சையோ அல்லபோராடிப் போராடி நாம் பெற்ற உரிமைகள் நம்பிக்கைகளின் எதிர்காலம் பற்றியதாகும்அவை எல்லாம் பறிபோகும் நிலை - இப்பொழுது!

மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான ஆட்சி சட்ட விரோதமாகவேதிட்டவட்டமாக சமூகநீதியை வீழ்த்திஉயர் ஜாதி பார்ப்பனர்களுக்குச் சாதகமான நிலைப்பாடுகளை எடுக்கிறது என்றால்தமிழ்நாட்டில் உள்ள அதிமுக ஆட்சியோ அதற்கு அடிபணியும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.

அவர்கள் கூறும் நம்பும் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக வருமான வரம்பு ஆணை ஒன்றினைக் கொண்டு வந்தார்ஆண்டு வருமானம் 9,000 ரூபாய் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்பதுதான் அந்த ஆணை!

அதனை எதிர்த்து திராவிடர் கழகம்  தொடர்ந்து போராடியதுஅந்த ஆணையை எரித்து கோட்டைக்கு சாம்பலை அனுப்பி வைத்ததுதமிழ்நாடெங்கும் மாநாடு களைஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து நடத்தியது.

அந்தக் கால கட்டத்தில் 1980 ஜனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 39 இடங்களில் 37 இடங்களில் தோற்றார்புதுச்சேரி மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கிடைத்த இடங்கள் பூஜ்ஜியம்.

தி.மு.., காங்கிரசில் ஒரு சிலர்இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சிஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்ஜனதா தளம் (ரமணிபாய்இவர்கள் எல்லாம் திராவிடர் கழகத்தின் முயற்சியால் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு மக்கள் மத்தியிலே விழிப்புணர்வை ஏற்படுத்தியதால் ஏற்பட்ட தோல்வியால் - இடஒதுக்கீட்டில் கை வைத்ததால் தான் இந்தத் தோல்வி என்பதை உணர்ந்துவருமான வரம்பு ஆணையை ரத்து செய்ததோடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 31 விழுக்காடு இடஒதுக்கீட்டின் அளவை 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்தார்இந்த வரலாற்றையெல்லாம் அதிமுக அரசு மறக்கலாமா?

சமூகநீதி விரோதத்திற்கு பச்சைக் கொடியா?

அதே போல நூற்றுக்கு நூறு அம்மா ஆட்சி - அம்மா ஆட்சி என்கிறார்களே -  அந்த அம்மா ஆட்சியின் போது தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு ஆபத்து வந்தபோதுதிராவிடர் கழகத்தின் ஆலோசனையை ஏற்று (திராவிடர் கழகத் தலைவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சி பிரிவின்கீழ் மாநில அரசே சட்டம் இயற்றும் மாதிரி சட்ட மசோதாவைத் தயாரித்துக் கொடுத்தார்சட்டம் இயற்றிநாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுஅரசமைப்புச் சட்டம் 9ஆம் அட்டவணையில் சேர்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா கையொப்பமிட்டு 76ஆவது சட்டத் திருத்தமாக சட்டப் பாதுகாப்புடன் நிலை பெற்று இருக்கிறது. (இதற்காக சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டமும் கழகத்தால் அளிக்கப்பட்டதுண்டு).

இந்த வரலாறாவது அதிமுகவுக்குத் தெரிந்திருந்தால் மத்திய அரசின் சமூகநீதி விரோத செயல்களுக்கு எல்லாம் பச்சைக் கொடியைக் காட்டுவார்களா?

எம்.ஜி.ஆர்அரசு பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தியதற்கான அர சாணை எண் 73. அதில் தெளிவாகவே கூறப்பட்டிருப்பது என்ன?

"மாநில அரசின் உதவி - நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்பல்கலைக் கழகங்கள் உள்பட மாநில அரசு பின்பற்றும் இடஒதுக்கீட்டைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாரதியார்அழகப்பாபெரியார்பாரதிதாசன் பல்கலைக்  கழகங்களும் எம்.டெக் பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக் கம்ப்யூட்டெஷனல்  பையாலஜி - இந்த முதுநிலைப்பட்ட படிப்புகளுக்கான இடங்கள் அந்தந்த மாநில அரசுகள் பின்பற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையைப் பின்பற்ற வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவே சுற்றறிக்கை அனுப்பிய பிறகும்தமிழ்நாடு அரசின் 69 விழுக்காட் டைப் பின்பற்றாமல்மத்திய அரசின் 49.5 விழுக்காடு இடஒதுக் கீட்டை (பிற்படுத்தப்பட்டோர் 27%, தாழ்த்தப்பட்டோர் 15, பழங்குடி யினர் 7.5 பின்பற்றியது ஏன்?

அந்த அதிகாரத்தை பல்கலைக் கழகங்களுக்குக் கொடுத்தது யார்மாநில அரசுக்குக் கொடுத்தது யார்?

இத்தோடு நின்று விட்டதாபொருளாதாரத்தில் நலிந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு என்னும் மத்திய பா..அரசின் அரசமைப்புச் சட்ட விரோதமான ஒன்றை (EWSநாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று அதிமுக அரசு சொல்லி வந்த நிலையில் இந்த நான்கு பல்கலைக் கழகங் களில் அதை அமல்படுத்தியது எப்படிமத்திய பா..அரசின் சமூகநீதிப் பறிப்பும்தமிழக அரசின் மவுனமும் என்பதையும் தாண்டி செயல்பட்டிருப்பது எப்படி?

.தி.மு.அரசு எதிர்க்காதது ஏன்ஏன்?

இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்பது அரசமைப்புச் சட்டம் முதல் திருத்தத்தின்போதே நிராகரிக் கப்பட்ட ஒன்றாயிற்றே! (பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக 5 விழுக்காடும்எதிராக 243 விழுக்காடும் தானே பதிவானது)

பி.விநரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது பொருளா தாரத்தில் பின் தங்கியோருக்கு 15 விழுக்காடு  இடஒதுக் கீடுக்கு வகை செய்யும் ஆணையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யவில்லையா?

குஜராத் முதல் அமைச்சராக நரேந்திர மோடி இருந்தபோது பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10 விழுக்காடு இடம் என்பதையும்மத்தியில் சிவராஜ் சவ்கான் (பா...) இந்த அடிப்படையில் 15 விழுக்காடு கொண்டு வந்தபோதும் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்கள் அவற்றை நிராகரிக்கவில்லையா?

அவசர அவசரமாக கொண்டு வந்த உயர்ஜாதியின ருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை அதிமுக எதிர்த்து இருந்தால் அந்த சட்டம் தோல் வியை அடைந்திருக் குமேஎவ்வளவுப் பெரிய துரோகத்தை அதிமுக அரசு செய்திருக்கிறது?

எம்.ஜி.ஆர்ரத்து செய்த பொருளாதார அளவுகோலை - அதிமுக அரசு ஆதரித் தது ஏன்ஏன்?

இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்ட மல்ல என்று உச்சநீதி மன்ற நீதிபதி .சின்னப்ப ரெட்டி தம் தீர்ப்பில் கூறியதுண்டே!

ஏழைப் பார்ப்பனர்கள் என்றால் அவர்களுக்குப் பொருளாதார உதவி செய்யட்டும்கல்வி உதவித் தொகை (ஸ்காலர்ஷிப்தரட்டும் - நாங்கள் தடுக்கவில்லைஅதே நேரத்தில் கல்வியில்சமூகத்தில் உயர்ந்த நிலையில் ஆதிக்க நிலையில் இருக்கும் உயர் ஜாதியினர் மேலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கலாமா?

மத்திய அரசு துறைகளில் இன்றைய நிலை என்ன? 89  செயலாளர்களில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் கூடக் கிடையாதேபார்ப்பனர்களையும் சேர்த்து உயர் ஜாதியினர் 15 விழுக்காடு என்று தாராளமாகவே வைத்துக் கொண்டாலும் மீதி 85 விழுக்காடு மக்கள் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோரும்சிறுபான்மையினரும்தானே,

ஆனால் கல்விஉத்தியோகங்களில் உண்மை நிலவரம் என்ன?

புள்ளி விவரம் சொல்லும் உண்மை!

குரூப் 'என்பதில் உயர் ஜாதியினர் 69.3 விழுக்காடுமக்கள் தொகையில் 85 விழுக்காடு உள்ள தாழ்த்தப் பட்டோர்பிற்படுத்தப்பட்டோர்சிறுபான்மையினரோ வெறும் 30.97 விழுக்காடுஅதே போல குரூப் 'பி'யை எடுத்துக் கொண்டால் உயர்ஜாதி பார்ப் பனர்கள் உட்பட 64.59, தாழ்த்தப்பட்டோர்பிற்படுத்தப்பட்டோர்சிறு பான்மையின ருக்கான இடங்களோ வெறும் 35.41.

எல்.அய்.சி.யில் நிலை என்ன?

பொது மேலாளர்கள் - உயர் ஜாதி யினர் - 84%

தாழ்த்தப்பட்டோர்பிற்படுத்தப் பட்டோர் - 16%

உச்சநீதிமன்றத்தை எடுத்துக் கொண் டால் தாழ்த்தப்பட்டோர் ஒரே ஒருவர்பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் கூடக் கிடையாதுஇவர்கள்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்வார்களாம் - சமூகநீதி கிடைக்குமா?

இது பச்சையான சமூக அநீதி இல்லையாஜனநாயகம் என்ற போர் வையில் பெரும்பான்மையினரை சிறிய எண் ணிக்கையில் உள்ள கூட்டம் ஆதிக்கம் செலுத்த அனுமதிக் கலாமா?

மத்திய பா..அரசின் காபினட் அமைச்சர்கள் மொத்தம் 58. உயர் ஜாதி - 32, பிற்படுத்தப்பட்டோர் - 13, தாழ்த்தப்பட்டோர்  6, பழங்குடியினர் - 2, இஸ்லாமியர் - 1

இதுதான் ஜனநாயகமா? (1925ஆம் ஆண்டில் சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் கூறிய 'பிராமி னோகிரஸிஎன்பது இதுதான்).

இன்றைக்கு (13.2.2021) வெளிவந்த 'இந்துஆங்கில ஏட்டில் அதிர்ச்சி ஊட்டக் கூடிய ஒரு தகவல் வெளி வந்துள்ளது.

அய்.அய்.டி.யில் பி.எச்.டிஇடங்கள் வாய்ப்பு என்பது பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 2.7 விழுக்காடு தாழ்த்தப் பட்டோருக்கு 2.11.

இன்னும் எவ்வளவு காலத்திற்கு இடஒதுக்கீடு என்று கேட்போர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகி றார்கள்?

'தேசிய கல்விக் கொள்கை 2020' என்ற ஒன்றைக் கொண்டு வரத் துடிக்கிறார்களே - அந்தக் கல்வித் திட்டத் தில்  எந்த ஒரே ஒரு இடத்திலாவது இடஒதுக்கீடு என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதாஇல்லையேஎவ்வளவுப் பெரிய சதி - சட்ட விரோதம்!

நீட்டை எடுத்துக் கொள்வோம். 'நீட்தேர்வு வராத கால கட்டத்தில் தமிழ் வழி பயின்றோர் பெற்ற இடங்கள் 2015-2016இல் 510 இடம் 2016-2017இல் பெற்ற இடங்கள் 537

 'நீட்வந்தபிறகு நிலை என்ன!

2017 - 2018இல் பெற்ற இடங்கள் - 52.

2018 - 2019இல் பெற்ற இடங்கள் - 106

நீட் இல்லாதபோது அரசு பள்ளி மாணவர்களுக்குக் கிடைத்த இடங்கள் - 30.

நீட்டுக்குப் பிறகு வெறும் - 5 இடங்கள்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்டோர்மலைவாழ் மக்கள்பிற்படுத்தப்பட்டோர்சிறுபான்மையினர்  என்ற வகையில் இவர்கள்தானே பெரும்பான்மையினர் - கட்சிகளைக் கடந்து போராட வேண்டாமாசமூகநீதியைக் காப்பாற்ற வேண்டாமா?

அடுத்த ஒரு பெரிய ஆபத்து பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார்த் துறைகளுக்கு வேக வேகமாக தாரை வார்க்கப்படுகின்றன.

300 பொதுத்துறை நிறுவனங்கள் 24 ஆகக் குறைக்கப் படப் போகின்றனநாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள் எல்லாம் மீண்டும் தனியார்மயமாக்கப்பட உள்ளன.

பா..ஆட்சியில் சமூகநீதிதான் முதல் காவு

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது சமூகநீதிக்கு - இடஒதுக்கீடுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விடும்தனியார்த் துறையில் இடஒதுக்கீடு கிடையாது என்பதை எண்ணிப் பார்த்தால்தான் இதனுள் பதுங்கி இருக்கும் பேராபத்து அபாயம் என்ன என்பது விளங்கும்.

தனியார்த் துறைகளில் பணியாற்றும் 30 பேர்கள் மத்திய அரசின் இணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்இதில் இடஒதுக்கீடுக்கு இடம் இல்லைஇது பச்சையான சட்ட விரோதம் அல்லவா?

தனியார்மயமானால் இருக்கும் இடங்கள் பறி போகுமே தவிரபுதிய வேலை வாய்ப்புகள் ஏற்படாது என்பது நினைவில் இருக்கட்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகப்புரை என்ன சொல்லுகிறது?  Justice Social, Economic and  Political பற்றிப் பேசுகிறதுசமூகநீதி என்கிறபோது முதல் இடத்தில் Justice Social  - சமூகநீதிக்குத்தான் முதலிடம்.

ஆனால் மத்திய பா..ஆட்சியில் சமூகநீதிதான் முதல் காவு.

இந்திய அரசமைப்புச் சட்டமும்அதனையொட்டிய உச்சநீதிமன்ற முக்கிய தீர்ப்பும் என்ன கூறுகின்றன?  Basic Structure of Constitution  என்பதில் கை வைக்க முடியாது என்றுதான் கூறுகின்றன.

மத்திய பிஜேபி எதைப் பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை சட்டமானாலும்நீதிமன்ற தீர்ப்புகளே யானாலும்  சரி அவற்றை எல்லாம் குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து சமூகநீதியை ஒழித்துக் கட்டி பார்ப்பன ஆதிக் கத்தைமேலாண்மையை நிலை நிறுத்தவே துடிக்கிறது.

தகுதி - திறமை பற்றி ஓங்கிப் பேசுகிறார்கள்இட ஒதுக் கீட்டால் தகுதி - திறமை போய் விடும் என்கிறார்கள்அப்படியானால் உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர்க்கு 10 விழுக்காடு ஒதுக்கியுள்ளார்களே - அப்பொழுது மட்டும் தகுதி திறமை ஒழிந்து போகாதா?

1980 முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் முதல் நிலைஇரண்டாம் நிலை அதிகாரிகளின் நிர்வாகத் திறன் குறித்து அமெரிக்க - இந்திய பொருளாதார நிபுணர்கள் அடங்கிய ஆய்வுக் குழு ஆய்வினை மேற் கொண்டது.

முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் பதவிகளில் இடஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றவர்களைவிட தங்களின் நிர்வாகத் திறமையை மிகச் சிறப்பான வகையில் வெளிப்படுத்தினர் என்ற ஆய்வு முடிவுக்கு என்ன பதில்?

இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தோர் அதிக மாகப் பணியாற்றிய துறையில் பொதுப் பிரிவினரைவிட உற்சாகமாகப் பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவு களை எடுத்து அவற்றை செயல்படுத்திய காரணத்தால் இரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்று நிபுணர்களின் ஆய்வுக் குழு அறிக்கை கொடுத்துள்ளதே - என்ன பதில்?

இது 2021ஆம் ஆண்டு - இந்த ஆண்டுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டுநீதிக்கட்சி ஆட்சியில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1921ஆம் ஆண்டில்தான்.

தென் மாநிலங்களை இணைத்து சமூகநீதி எழுச்சி!

சரியாக நூறு ஆண்டுகளுக்குமுன் திராவிட இயக்க ஆட்சியில் - நீதிக் கட்சி ஆட்சியில் முதல் முதலாக இடஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த ஓர் ஆண்டு முழுமையும் சமூகநீதி பற்றி  பட்டி தொட்டி எல்லாம் எடுத்துச் செல்லுவோம் - ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்று திரட்டுவோம்.

முதற்கட்டமாக தென் மாநிலங்களை ஒருங்கிணைப் போம்மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்திட திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங் களையும் நடத்தி வெற்றிக்கொடியை நாட்டவில்லையா?

அதன் பலனை இந்தியா முழுவதும் உள்ள கோடானுக் கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும்வேலை வாய்ப்பிலும் பலன் பெறவில்லையா?

முதற் கட்டமாக தென் மாநிலங்களை இணைத்து சமூகநீதி உணர்ச்சியைக் கூர்மைப்படுத்துவோம் - சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைப்போம்.

அடுத்தகட்டமாக வடமாநிலங்களிலும் இந்தப் பணியை முடுக்கிவிடுவோம்.

முதல் வகுப்புரிமை ஆணையின் நூற்றாண்டு விழா வில் இந்தப் பணிதான் திராவிடர் கழகத்தின் முதன்மையான பணிசமூகநீதிக்கு எதிரான சக்திகளைஆட்சிகளை வீழ்த்திட இதுதான் சரியான தேர்தல் ஆயுதம் - சமூகநீதிப் போர் ஆயுதம்.

மத்திய பா..ஆட்சிமாநில அதிமுக ஆட்சி இரண்டுமே சமூகநீதிக்கு எதிரான அணி என்பதை  வீடு வீடாக எடுத்துச் செல்லுவோம் - வெற்றி பெறுவோம்.

கோட்டைக்கு வெளியே பறக்கும்  கொடி வேறாக இருக்கலாம்கோட்டைக்குள் நுழைவோர் சமூகநீதிக் கொடியைக் கொண்டு செல்ல வழிவகுப்போம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான அணி வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று தளபதி மு..ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி ஆட்சி அமையும். 'திராவிடம் வெல்லும்என்றார் கழகத் தலைவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக