பக்கங்கள்

புதன், 3 மார்ச், 2021

மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விவகாரம் மத்திய, மாநில செயலர்கள் உட்பட 9 பேர் பதில் அளிக்க தி.மு.க. தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு


சென்னைமார்ச் 2- மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத் தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய விவகாரத்தில் மத்தியமாநில சுகாதாரத் துறை செயலர்கள் உள்ளிட்ட 9 பேர் பதில் அளிக்க சென்னை உயர் நீதி மன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

தமிழகத்தில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்பு களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 50 சதவீதம் ஒதுக்கக் கோரி தமிழக அரசு மற் றும்திமுகஅதிமுகபாமக உள் ளிட்டகட்சிகள் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தை அணுக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுஅதன்படிஇதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2021-2022 கல்வி ஆண்டு முதல் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கு வது தொடர்பாக மத் திய பொது சுகாதாரப் பணிகள் இயக் குநர்தமிழக சுகாதாரத் துறை செயலர்பல் மருத்துவ கவுன்சில் செயலர் உள் ளிட்டோர் அடங்கிய குழுவை அமைத்து இதுதொடர்பாக மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஜூலை யில் உத்தர விட்டது.

இதுதொடர்பாக மத்திய அரசுஅமைத்துள்ள குழுஉயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவுப்படி இல்லை’ என்று கூறிமத்திய அரசுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவமதிப்பு வழக்கு தொடர்ந் தார்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிநீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு இந்த வழக்கு விசாரணை நேற்று (1.3.2021) நடந்தது.

மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் வாதிட்டார்.

இதுதொடர்பாக மத்தியமாநில சுகாதாரத் துறை செய லர்கள்தமிழக தலைமைச் செயலர் உள்ளிட்ட 9 உயரதி காரிகள் பதில்அளிக்க நீதி பதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக