உத்தரப் பிரதேச மாநிலம் காசியா பாத் திற்கு அருகில் உள்ள தவுசா என்ற கிராமத்தில் தாகத்திற்காக இஸ்லமிய சிறுவன் கோவிலில் இருந்த குழாயில் தண்ணீர் குடித்தார். அப்போது அங்கு இருந்த அஸ்வினி குமார் என்ற 'ஹிந்து ஏக்தா சங்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர் இந்து கோவில் தண்ணீரை ஏன் குடித்தாய் என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர் நான் அருகில் உள்ள ஊரில் இருந்து வேலைக்காக நடந்து வந்தேன் தண்ணீர் தாகம் எடுத்தது ஆகையால் குடி நீர் குழாயில் இருந்து தண்ணீர் குடித்தேன் என்று கூறினார். அதற்கு அவர் உன் பெயர் என்ன என்று கேட்க சிறுவன் பெயரைக் கூறியதும் ஒரு இஸ்லாமியர் எப்படி இந்து கோவிலுக்குச் சொந்தமான குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் குடிக்கலாம் என்று கூறி அடித்து துன்புறுத்தியுள்ளார்.
இதை அருகில் உள்ள அந்த அமைப் பைச் சேர்ந்த ஒருவர் காணொலியாக எடுத்துள்ளார். இந்த நிலையில் அவர்கள் கையை முறுக்கியதில் அந்தச் சிறுவனின் வலது கை மூட்டு பிசகி விட்டது, வலியில் துடித்த அந்தச் சிறு வனை அவர்கள் அருகில் உள்ள வயல் வெளியில் தூக்கிப் போட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். அதன் பிறகு அங்கு சாலையில் சென்று கொண்டு இருந்த சிலர் அந்தச்சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் சிறுவனின் உறவினர்கள் புகார் அளித்தும் புகாரை எடுக்க மறுத்துவிட்டனர். பின்னர் மேலும் சிறுவனின் மீது திருட்டுவழக்கு போடுவ தாக கூறி மிரட்டவும் காசியாபாத் காவல் ஆணையரிடம் இது தொடர் பாக சிறுவன் வசிக்கும் ஊர்மக்கள் ஒன்றுதிரண்டு சென்று புகார் மனுவைக் கொடுத்தனர். இதனை அடுத்து உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யுமாறு காசியாபாத் காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனை அடுத்து தாக் குதல் நடத்திய ஹிந்து ஏக்தா சங் அமைப்பினர் தப்பி அருகில் உள்ள பீகார் மாநிலத்திற்கு ஓடி விட்டனர்.
காவல்துறை ஆணையரின் உத்தர விற்கு இணங்க தனிப்பிரிவு அமைத்து பீகார் மாநிலத்தில் உள்ள சம்பரா பாகல்பூர் பகுதியில் பதுங்கி இருந்த அஷ்வினி குமார் மற்றும் அவரது நண்பர் ஒருவரை காவல்துறை கைது செய்து காசியாபாத் கொண்டுவந்து விசாரணை நடத்தி வருகிறது,
ஆனால் இந்த நிகழ்வை சமூக வலைதளத்தில் பகிர்ந்த ஹிந்து ஏக்தா சங் அமைப்பினர் ஒரு இஸ்லாமியனின் கையை உடைத்து இந்து சக்தியை உலகிற்கு உணர்த்திய துணிச்சலை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும் என்று கூறி கையை உடைத்த அஷ்வினி குமாருக்கு பாராட்டு தெரிவித்து நாட்டைகலவரத்துக்கு உள் ளாக்க பார்க்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக