பக்கங்கள்

வியாழன், 22 ஜூலை, 2021

வங்கிகளில் கிளார்க் நியமனம்: பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்!

 

அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளார்க்பணி நியமனத்திற்கான தேர்வு குறித்த விவரங்களை வங்கி பணியாளர் தேர்வு மய்யம் வெளியிட்டுள்ளதுவருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படிதமிழ்நாட்டில்இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு - 27 விழுக்காடுதாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு - 18 விழுக்காடுபழங்குடியின பிரிவினருக்கு - 1, EWS  - 10 விழுக்காடு என்ற விகிதத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால் வெளியிடப்பட்ட விளம்பரத்தில்குறிப்பாகயூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தமிழ் நாட்டில் 147 எழுத்தர் பணியிடங்களில்இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கு 40 இடங்களுக்கு பதிலாக பூஜ்யம் இடங்களும்EWS  எனப்படும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு’ 14 இடங்களுக்குப் பதிலாக 21 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதுஅதாவதுஇதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பூஜ்யம் இடங்களும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு 7 இடங்கள் அதிகமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல மாநிலங்களில்,  இதர பிற்படுத்தப்பட்டதாழ்த்தப்பட்டபழங்குடியின  பிரிவினர்க்கு அவர்களுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதத்தின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பின்குறிப்பிட்டுள்ள மாநிலங்களில் இதர பிற்படுத்தப்பட்ட  பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மறுப்பு மற்றும் உயர்ஜாதி ‘ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அதிக இடங்கள்” குறித்த விவரம்:

                                                     ஓபிசி          உயர்ஜாதி ஏழை’ EWS 

மாநிலம்          மொத்த            ஒதுக்கப்பட்ட             வாய்ப்பு           ஒதுக்கப்பட்ட               கூடுதல்          

               இடங்கள்        இடங்கள்        மறுப்பு              இடங்கள்        இடங்கள்

ஆந்திரா           248        0             67           51           +26

கருநாடகா     209        33           23           37           +16

மகாராட்டிரா               321        9             79           52           +20

ஒடிசா               113        2             29           22           +11

தமிழ் நாடு     147        0             40           21           +07

தெலங்கானா              205        0             55           43           +22

உத்தரப்பிரதேசம்     244        45           21           48           +24

மேற்கு வங்கம்          71           13           06           12           +05

இது குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்சம்பந்தப்பட்ட வங்கி பணியாளர் தேர்வு மய்யம்யூனியன் பாங்க் ஆப் இந்தியா உயர் அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருக்கும் பா...  தலைமையிலான கூட்டணி அரசு இடஒதுக்கீட்டின் முதுகெலும்பை முறித்துஆணி வேரை அறவே சுட்டு எரித்து விட்டுத் தான் மறு வேலை பார்க்கும் போலும்.

மேற்கண்ட புள்ளி விவரம்மக்கள் தொகையில் 52 விழுக்காடு உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கு பூஜ்ஜியம் இடம் என்றால் இந்தப் பார்ப்பன ஆதிக்கக் கொழுப்புக்கு முடிவுதான் என்ன?

கடந்த 2020இல் பாரத ஸ்டேடட் வங்கியின் எழுத்தர் (கிளார்க்தேர்வின் முடிவுகள் சொல்லுவது என்ன?

பழங்குடியினருக்கு கட்ஆஃப் மார்க் - 53.75

தாழ்த்தப்பட்டோருக்கு -  61.25

பிற்படுத்தப்பட்டோருக்கு - 61.25

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர்ஜாதிப் பிரிவினருக்கு - 28.5 என்னே கொடுமை!

இது உயர்ஜாதி ஏழை ( EWS ) என்ற ஒன்றை ஏற்படுத்தி பார்ப்பனர்கள் கொல்லைப்புறம் வழியாக நுழைவதற்கான ஏற்பாடு அல்லாமல் வேறு என்ன?

"ஆயிரங்கால் பூதமடா தொழிலாளி" - என்று ஜீவானந்தம் பாடியதை நினைவு கொள்கஒடுக்கப்பட்ட மக்கள் ஓங்கி எழாவிட்டால் ஓட்டாண்டியாக வீதிகளில் நிற்க வேண்டியதுதான்.

பார்ப்பனர் நாயகத்தை வீழ்த்திடபழிவாங்கப்படும் மக்கள் சக்தி - 'ஆயிரங்கால் பூதமாகக்கிளர்ந்து எழுகஎழுகஎழுகவே!

ஜாதிய வன்கொடுமை.... தாழ்த்தப்பட்ட சமூக மணமகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து தாக்குதல்

 

இந்தூர்ஜூலை 20 தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மண மகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்துஜாதி ஆதிக்கக் கூட்டம் தாக்குதல் நடத்திய சம் பவம்மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் பகுதியில் உள்ள கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட  சமூக மணமகன் ஒருவர்தனதுதிருமணத்தை யொட்டி வழிபாட்டிற் குச் சென் றுள்ளார்ஆனால்அந்த இளை ஞரைகோயிலுக்கு உள்ளேயே நுழைய விடாமல்அந்தஊரின் ஜாதியாதிக்க வெறிக்கும்பல் தகராறு செய்துள்ளதுஒருகட்டத் தில்தாழ்த்தப்பட்ட சமூக மண மகன் மற்றும் அவருடன் வந்திருந்த உறவினர்கள் மீது கொடூரமான தாக்குதலை அரங்கேற்றிஅவர் களை அங்கிருந்து வெளியேற்றி யுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மண மகனின் தந்தை மான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்அதன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில்பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341, 323, 506, 153-,295- மற்றும் 147 கீழ் வழக்கும் பதிவுசெய்தனர்.பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண விழா மற்றும் பூஜைகள்கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளது.

இதனிடையேமணவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் மது அருந்தி இருந்ததாகவும்அதன் காரணமாக பிரச்சினை ஏற்பட் டதாகவும் அந்த ஊரின் ஜாதி யாதிக்க கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.

வெள்ளி, 16 ஜூலை, 2021

அரசு வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சதவீத இட ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

 சென்னை, ஜூலை 7 அரசு வேலைவாய்ப்பில் மாற்று த்திறனாளிகளுக்கு 4 சத வீத இட ஒதுக்கீடு வழங் குவது உறுதி செய்யப்பட வேண்டும் என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல் பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமை செய லகத்தில் நடைபெற்றது.

இந்தக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்வித தாமதமும் இன்றி வழங்கிட அனைத்து துறை களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் என அறிவுறுத் தினார்.

நலத்திட்டங்கள், உப கரணங்கள் பெற விண் ணப்பித்து காத்திருப் போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனை வருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கை களை அரசு துறைகள் முனைப்புடன் செயல் படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாற் றுத்திறனாளிக ளுக்கு அரசு வேலை வாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற் றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனி யார் நிறுவனங்களில் ம £ற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கப்படு வதையும் உறுதி செய்யு மாறு முதல்வர் அறிவுறுத் தினார்.