• Viduthalai
இந்தூர், ஜூலை 20 தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த மண மகனை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்து, ஜாதி ஆதிக்கக் கூட்டம் தாக்குதல் நடத்திய சம் பவம், மத்தியப்பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள மான்பூர் பகுதியில் உள்ள கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட சமூக மணமகன் ஒருவர், தனதுதிருமணத்தை யொட்டி வழிபாட்டிற் குச் சென் றுள்ளார். ஆனால், அந்த இளை ஞரை, கோயிலுக்கு உள்ளேயே நுழைய விடாமல், அந்தஊரின் ஜாதியாதிக்க வெறிக்கும்பல் தகராறு செய்துள்ளது. ஒருகட்டத் தில், தாழ்த்தப்பட்ட சமூக மண மகன் மற்றும் அவருடன் வந்திருந்த உறவினர்கள் மீது கொடூரமான தாக்குதலை அரங்கேற்றி, அவர் களை அங்கிருந்து வெளியேற்றி யுள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட மண மகனின் தந்தை மான்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரில்4 பேரைக் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 341, 323, 506, 153-,295- மற்றும் 147 கீழ் வழக்கும் பதிவுசெய்தனர்.பின்னர் போலீசார் பாதுகாப்புடன் மண விழா மற்றும் பூஜைகள்கோயிலில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனிடையே, மணவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் மது அருந்தி இருந்ததாகவும், அதன் காரணமாக பிரச்சினை ஏற்பட் டதாகவும் அந்த ஊரின் ஜாதி யாதிக்க கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி யுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக