மதுரை, நவ.1 வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட் டம் பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு வில், தமிழ்நாட்டில் மிக வும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஏராளமானவர் கள் உள்ளனர்.
இவர்களுக்கு மொத்த மாக 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட் டுள்ளது. இதில் 10.5 சதவீ தத்தை வன்னியர் சமுதா யத்தினருக்கு உள்ஒதுக் கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றியது.
இதனால் மிகவும் பிற் பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக் குறியாகிவிட்டது. முறை யாக ஜாதிவாரிக் கணக் கெடுப்பு நடத்திய பின் னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
எனவே, வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக் கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறு வனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக் கீட்டை அமல்படுத்த இடைக் கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந் தனர். இந்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின்பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை உயர்நீதிமன்றத்தில் நாள் தோறும் விசாரித்தனர்.
விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக் குரைஞர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீதத்தை வன்னி யர்களுக்கு வழங்கி இருப் பது, சட்டத்துக்கு முர ணான இட ஒதுக்கீடாக உள்ளது.
ஜாதி ரீதியான கணக் கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன் றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற ஜாதி மாண வர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர். அரசு தரப்பிலும் சட்டத்தின் நியாயத்தை எடுத்துரைத் தனர். பின்னர் இந்த வழக் கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்தி வைத்து இருந்தனர்.
இந்தநிலையில் இன்று (1.11.2021) காலை யில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறியிருந்ததாவது:-
மிகவும் பிற்பட்டவர் களுக்கான இட ஒதுக்கீட் டில் உள்ஒதுக்கீடாக வன் னியர்களுக்கு 10.5 சதவீ தத்தை ஒதுக்க மாநில அர சுக்கு அதிகாரம் உள்ளதா?
ஜாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்படாத சூழ் நிலையில் இது போன்ற அரசாணை பிறப்பிக்க லாமா? ஜாதி அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என் பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.
இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு அளித்த பதில்கள் ஏற்றுக் கொள் பவையாக இல்லை. இந்த அரசாணை அரசமைப்பு சட்டங்களுக்கு எதிரான தாக உள்ளது.
எனவே வன்னியர் களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக் கைகள் ரத்து செய்யப்படுகின்றன.
இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அர சுப்பணிகளில் உள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின் றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படு கிறது. இவ்வாறு நீதி பதிகள் உத்தரவில் கூறி யுள்ளனர்.