தமிழர் தலைவர் ஆசிரியர் புள்ளிவிவரங்களோடு கூடிய அறிக்கையின்மூலம் தெளிவுபடுத்தினார்
கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி விளக்கவுரை
சென்னை, பிப்.14 அகில இந்திய தொகுப்பு இடங்களில், மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் பொழுது, அந்தந்த மாநில இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பவேண்டும் என்கின்ற அந்த விதியினை, ஒன்றிய அரசே நிராகரித்தது. அதன்படி நிறைவேற்றவில்லை; எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 15 - 7.5 என்கின்ற இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினார்களே தவிர, ஓபிசி பிரிவினருக்கான இடங்களை நிறைவேற்றவில்லை. ஓபிசி-க்கான பிரிவினருக்கு ஒதுக்கப் பட்ட சதவிகிதம் பூஜ்ஜியம் என்கின்ற அள விலேதான் இருந்தது. அந்த விவரங்களை, மருத்துவ கல்வி நிலையங் களில் படிக்கக்கூடிய மாணவர்கள், அதனுடைய அமைப்புகள் வெளி உலகிற்குக் கொண்டு வந்தார்கள் என்றார் திராவிடர் கழக வெளியுறவு துறை செயலாளர்
கோ.கருணாநிதி அவர்கள்.
உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு
கடந்த 1.2.2022 அன்று மாலை உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரை வருமாறு:
‘‘உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு'' என் கின்ற தலைப்பிலே நடைபெறுகின்ற இந்தக் காணொலி சிறப்புக் கூட்டத்தில் நிறைவுரை - சிறப்புரை நிகழ்த்த விருக்கும் நம்முடைய மதிப்பிற்கும், வணக்கத்திற்கும் உரிய தமிழர் தலைவர் அவர்களே,
வரவேற்புரை நிகழ்த்திய மூத்த வழக்குரைஞர் த.வீரசேகரன் அவர்களே,
இணைப்புரை ஆற்றுகின்ற தம்பி பிரின்சு, மற்றும் திராவிடர் கழக நிர்வாகிகளே, தோழர்களே, புதிய சிறகுகளினுடைய அருமைத் தம்பிகளே, தங்கைகளே அனைவருக்கும் வணக்கம்.
மருத்துவப் படிப்பில், அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் சிறப்பு அம்சங்களை மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்கள் இங்கே விரிவாக எடுத்துரைக்க உள்ளார்.
இந்தத் தீர்ப்பினை வரலாறு படைத்த தீர்ப்பாக நாம் ஏன் குறிப்பிடுகின்றோம் என்பது குறித்து ஒரு சில செய்திகளை உங்களுடைய கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
ஆல் இண்டியா கோட்டா
வெளி மாநிலமாணவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடிய வகையிலே, 1984 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், அகில இந்திய தொகுப்பு (ஆல் இண்டியா கோட்டா) என்ற முறையை மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்வியில் உருவாக்கியது.
அன்றைய தினம், பிரதீப் ஜெயின் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலே, ஜூன் 22 ஆம் தேதி, 1984 ஆம் ஆண்டு அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான், இந்த அகில இந்திய தொகுப்பு என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், அதன் பிறகு வந்த பல்வேறு தீர்ப்புகளின் அடிப்படையிலும், தற் போது மருத்துவக் கல்வி பட்டப் படிப்புகளிலே - அதாவது எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 15 சதவிகித இடங்களையும், முதுநிலை பட்டப் படிப்புகளில் - அதாவது எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகிய படிப்புகளில் 50 சதவிகித இடங்களையும் மாநிலங்கள் தங்களுடைய மருத்துவக் கல்லூரிகளிலிருந்து அகில இந்திய தொகுப்பிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளித்திட வேண்டும் என்கின்ற ஒரு திட்டத்தினை, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலே ஒன்றிய அரசு உருவாக்கியது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதன் அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை
இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடங்களிலே, எஸ்.டி., எஸ்.சி., பிரிவினருக்கு தொடக்கக் காலகட்டத்தில் இட ஒதுக்கீடு இல்லை. முழுவதும் தகுதி என்கின்ற அந்தப் போர்வையில், இடங்கள் நிரப்பப்படவேண்டும் என்ப தாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியதன் அடிப்படையில், இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
மன்மோகன்சிங் தலைமையிலான
யு.பி.ஏ. அரசு
2007 ஆம் ஆண்டு, அபய்நாத் எதிர் டில்லி பல்கலைக் கழகம் என்கின்ற வழக்கு, உச்சநீதிமன்றத்திற்கு அந்த வழக்கு வந்த நிலையில், அன்றைய தினம் மன்மோகன் சிங் தலைமையிலான யு.பி.ஏ. அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்காடிய, அரசு வழக்குரைஞர் அகில இந்திய தொகுப்பிலும் மருத்துவ மேற்படிப்பில், அதேபோல, பட்டப் படிப்பில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்கின்ற ஒரு முடிவினை, உச்சநீதிமன்றத்திற்குத் தெரிவித்து, அதனை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொண்டதின் அடிப்படையில்தான்,
2007-2008 கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இட ஒதுக்கீடும்,
அதேபோல, பட்டப் படிப்பில், 2008-2009 கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடும் அவர்களுக்கு அளிக்கப் பட்டது.
ஆனால், அந்தக் காலகட்டத்தில், ஓ.பி.சி. பிரிவின ருக்கான ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், உச்சநீதிமன் றத்தில் அதற்கான தடையாணை இருந்த நிலையில், ஓ.பி.சி., பிரிவினருக்கு அந்த நிலையில், எந்தவிதமான கோரிக்கையும் எழுப்பப்படவில்லை.
27 சதவிகித இட ஒதுக்கீட்டை
உடனடியாக அவர்கள் நிறைவேற்றவில்லை
அந்த நிலையில்தான், மத்திய அரசினுடைய கல்வி நிலையங்களில், அதற்குப் பின்னால் சேர்ந்த, ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவிகித இடங்கள் மத்திய அரசி னுடைய கல்வி நிலையங்களில் அளிக்கப்பட்டாலும்,
அய்.அய்.டி., அய்.அய்.எம்., அதேபோல, எய்ம்ஸ் போன்ற கல்வி நிறுவனங்களிலே, 27 சதவிகித இட ஒதுக்கீட்டை உடனடியாக அவர்கள் நிறைவேற்ற வில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் 9 சதவிகித இடங்களைத்தான் அளிக்க முடியும் என்று சொல்லி, ஏறத்தாழ 4, 5 ஆண்டுகளை அதிலேயே இழுத்தடித்துவிட்டார்கள்.
அப்போதுகூட மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பில், ஓ.பி.சி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு குறித்து எந்த சட்டமும் ஒன்றிய அரசால் நிறைவேற்றப் படவில்லை.
இந்த சூழலில்தான், 2010 மற்றும் 2012 ஆம் ஆண்டு மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா என்று சொல்லப்படுகின்ற இந்திய மருத்துவக் கழகம் - அதில், அப்பொழுது இருக்கக்கூடிய விதிகளில் சில திருத் தங்களைச் செய்தது.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிலே சில திருத்தங்களைச் செய்து, நீட் என்கின்ற பொது நுழைவுத் தேர்வின்மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்கின்ற அறிவிப்பினை வெளியிட்டது.
விதியில் சொல்லப்பட்ட திருத்தம்
அந்தத் திருத்தத்தின் அடிப்படையில்தான், அதில் சொல்லப்பட்ட வாசகங்கள் - இன்றைக்குத் திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட தோழ மைக் கட்சிகள் வழக்காடிய நிலையில், அந்த விதியைச் சுட்டிக்காட்டித்தான் வழக்கே தொடுக்கப்பட்டது.
அந்த விதியில் சொல்லப்பட்ட திருத்தம் என்ன வென்று சொன்னால்,
''The Reservation of seats in Medical Colleges / Institutions for respective categories shall be as per applicable laws prevailing in States / Union Territories.''
என்பதாக, மருத்துவப் படிப்பு - முதுநிலை படிப்பிற் கான சேர்க்கையிலும் 2012 ஆம் ஆண்டிலே பட்டப் படிப்பிற்கான விதிகளிலும் திருத்தம் செய்தார்கள்.
அந்த விதிகளின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில், மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும் பொழுது, அந்தந்த மாநில இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பவேண்டும் என்கின்ற அந்த விதியினை, ஒன்றிய அரசே நிராகரித்தது. அதன்படி நிறைவேற்றவில்லை.
மத்திய பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் என்று சொல்லப்படுகின்ற (DGHS) - அதுதான் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வினை நடத்துகின்றது.
ஓபிசி-க்கான பிரிவினருக்கு
ஒதுக்கப்பட்ட சதவிகிதம் பூஜ்ஜியம்
அவர்கள் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 15 - 7.5 என்கின்ற இட ஒதுக்கீட்டை நிறைவேற்றினார் களே தவிர, ஓபிசி-க்கான இடங்களை நிறைவேற்ற வில்லை. ஓபிசி-க்கான பிரிவினருக்கு ஒதுக்கப் பட்ட சதவிகிதம் பூஜ்ஜியம் என்கின்ற அள விலேதான் இருந்தது.
மருத்துவ கல்வி நிலையங்களில் படிக்கக்கூடிய மாணவர்கள்,
வெளி உலகிற்குக் கொண்டு வந்தார்கள்
அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு நீட் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை 2017 ஆம் ஆண் டிற்குப் பிறகு முழுமையாக நடைபெறத் தொடங்கிய பிறகுதான், அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகின்றது என் கின்ற அந்த விவரங்களை, மருத்துவ கல்வி நிலையங் களில் படிக்கக்கூடிய மாணவர்கள், அதனுடைய அமைப்புகள் வெளி உலகிற்குக் கொண்டு வந்தார்கள்.
மக்களவையில் கேள்வி எழுப்பினார்
இந்தப் பிரச்சினை குறித்து அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், ஒரு கடிதம் நாடாளுமன்ற பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராக இருந்த திரு.தினேஷ்சிங் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.
அவருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று, மார்ச் 23 ஆம் தேதி, 2018 இல் நாடாளுமன்ற மக்களவையில் இதுகுறித்து அவர் ஒரு கேள்வி எழுப்பினார்.
அகில இந்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில்,
அதற்குப் பதிலளித்த அன்றைய சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வின்குமார் துபே அவர்கள்,
27 சதவிகித இட ஒதுக்கீட்டை நாங்கள் ஒன்றிய அரசு கல்வி நிலையங்களில் நிறைவேற்றுகின்றோம் என்ப தோடு நிறுத்திக் கொண்டார்.
அகில இந்திய தொகுப்பு இடங்களைப்பற்றி தன்னுடைய பதிலில் எதையும் குறிப்பிடவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர்
வழக்குரைஞர் திரு.வில்சன்
அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை உறுப்பினர் வழக்குரைஞர் மரியா தைக்குரிய திரு.வில்சன் அவர்கள், ஜூன் 1, 2019 ஆம் தேதியன்று இதுகுறித்த பிரச்சினையை மாநிலங் களவையில் எழுப்பினார்.
மாநில இட ஒதுக்கீடு அடிப்படையில், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்பதனை அந்த ரெகுலேஷன் விதியை சுட்டிக்காட்டி அந்தப் பிரச்சினையை அவர் எழுப்பினார்
ஆனால், அதற்குரிய பதில் அளிக்கப்படவில்லை.
ஒன்றிய சுகாதாரத் துறை
அமைச்சருக்குக் கடிதம்
தொடர்ந்து, நவம்பர் 1, 2019 இல் வில்சன் அவர்கள், அன்றைய ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு விரிவான ஒரு கடிதத்தை எழுதினார்.
அதற்குப் பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள், டிசம்பர் 18, 2019 அன்று அளித்த பதிலில், இந்தப் பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி என்பவர் 2015 இல் ஒரு வழக்குத் தொடர்ந்திருக்கின்றார் என்கின்ற ஒரு தகவலை, அந்த பதிலில்தான், முதன்முதலாகக் குறிப் பிடுகின்றார்.
ஊடகங்களில் எந்தச் செய்தியும் வரவில்லை; ஒன்றிய
அரசின் சார்பிலும் சொல்லவில்லை
2015 இல், சலோனி குமாரி என்பவர் உச்சநீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சத விகித இட ஒதுக்கீட்டை - அகில இந்திய தொகுப் பில் கொடுத்திருந்தால், தனக்கு மருத்துவ முது நிலை படிப்பிற்குச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும் என்பதுதான் வழக்கு.
ஆனால், அதுகுறித்து ஊடகங்களில் எந்தச் செய்தியும் வரவில்லை. ஒன்றிய அரசின் சார்பி லேயும் சொல்லவில்லை.
முதன்முறையாக, டிசம்பர் 18, 2019 ஆம் தேதிதான் அந்தத் தகவலை ஒன்றிய அமைச்சர் வெளியிட்டார்.
அதற்குப் பின்னர், 2020 ஆம் கல்வியாண்டில், மருத்துவ கல்வி பட்ட மேற்படிப்பு (பிஜி 2020)க் கான தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, 2020, ஏப்ரல் மாதத்தில் ஒன்றிய அரசு, அதனுடைய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டது.
புள்ளிவிவரங்களோடு கூடிய
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
அதில், ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட அந்த அநீதியை சுட்டிக்காட்டி, திராவிடர் கழகத் தலைவர் நம்முடைய மதிப் பிற்குரிய தமிழர் தலைவர் அவர்கள், 8.5.2020 அன்று ஓர் அறிக்கையினை வெளியிட்டார்.
முதன்முதலாக தமிழ்நாடு அரசியலில், இது குறித்து வந்த விரிவான அறிக்கையாகும் அது.
அதற்குப் பின்பு மீண்டும் மே 16, 2020 இல் ஆசிரியர் அவர்கள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை எழுதி யிருந்தார்.
இந்த சமூக அநீதியை எதிர்த்து, அனைவரும் ஒன்று திரண்டு போராடி, வெற்றி பெறவேண்டும் என்பதுதான் அந்த அறிக்கையினுடைய சாராம்சம்.
ஒன்றிய அரசுக்குக்
கண்டனம் தெரிவித்து அறிக்கை
அதனைத் தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மரியாதைக்குரிய திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், இதுகுறித்து ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.
தோழமை கட்சிகளின் கூட்டத்தை மே 31, 2020 அன்று நடத்தி, அக்கூட்டத்தில், இப்பிரச்சினை குறித்து வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
திராவிடர் கழகத்தின் சார்பிலே, ஜூன் 4, 2020 ஆம் தேதியன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், மருத்துவப் படிப்பில், அகில இந்திய தொகுப்பு இடங்களில், அந்தந்த மாநில இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு என்கின்ற அடிப்படையில், அந்த ஒதுக்கீட்டு இடங்களை ஒன்றிய அரசு தரவேண்டும் என்பதாக, அந்த மனுவிலே குறிப்பிடப்பட்டு, வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதனுடைய தோழமைக் கட்சிகள் இப்பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 11.6.2020 ஆம் தேதி அன்று வழக்குத் தொடர்ந்தார்கள்.
அவர்களும், எம்.சி. ஆக்ட் பிரிவினைச் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில், மாநில அரசு என்ன இட ஒதுக்கீடு தருகின்றதோ, அதன்படியே அகில இந்திய தொகுப்பிலும் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டு வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த நிலையில், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், ஒன்றிய அரசு வெளியிட்ட பட்டியலை ஆராய்ந்து, மாநில வாரியாக எத்தனை இடங்கள் தரப்பட்டு இருக்கிறது ஓபிசி பிரிவினருக்கு என்று பார்த்தபொழுது, பூஜ்ஜிய சதவிகிதம் என்ற விவரம் வெளியிடப்பட்டது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர்
ஆணையத்தில் புகார்
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்குப் புகார் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு, விவரம் கேட்கப்பட்டது.
அப்பொழுது அவர் என்ன சொன்னார் என்றால், உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி வழக்குத் தீர்ப்பின் அடிப்படையில் நாங்கள் இதுகுறித்து முடிவு செய்வோம் என்று சொன்னார்.
அவர் சொன்ன காலகட்டம் மே, 2020 ஆம் ஆண்டு. சலோனி குமாரி வழக்கு வந்தது 2015 ஆம் ஆண்டு. ஆனால், அய்ந்தாண்டுகள் சென்ற பிறகும்கூட, ஒன்றிய சுகாதாரத் துறை இந்த வழக்கு குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்திருக்கிறது.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு!
ஆனால், தமிழ்நாட்டினுடைய வரலாற்றி லேயே, இந்தப் பிரச்சினை குறித்து, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று இருந்த அனைத்துக் கட்சி களையும் ஒருங்கிணைக்கப்பட்டது - அதிலே நம்முடைய தமிழர் தலைவர் அவர்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து (பா.ஜ.க.வை தவிர) ஒரே நிலையில் நின்று, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன. ஒன்றிய அரசினுடைய எம்.சி. ஆக்ட் என்று சொல்லப்பட்ட அந்த விதிகளின்படி, மாநிலத்தில் என்ன இட ஒதுக்கீடு தரப்படுகிறதோ, அதையே அகில இந்திய தொகுப்பிலும் தரவேண்டும் என்று வழக்குத் தொடரப்பட்டது.
ஒன்றிய அரசின் சார்பில், சென்னை உயர்நீதி மன்றத்தில், அபிடவிட்டில் என்ன தெரிவிக் கப்பட்டு இருந்தது என்று சொன்னால்,
''நாங்கள் மாநில வாரியான இட ஒதுக்கீட்டை, 50 சதவிகிதத்திற்கு மிகாமல் தரவிருக்கின்றோம்'' என்று சொல்லப்பட்டது.
ஒன்றிய அரசு அபிடவிட் தாக்கல்
இதேபோன்ற ஒரு அபிடவிட்டைத்தான் உச்சநீதி மன்றத்தில், சலோனி குமாரி வழக்கிலும் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலத்தில் என்ன இட ஒதுக்கீடு இருக்கிறதோ, அதனடிப்படையிலேயே நாங்கள் தரலாம் என்கின்ற ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றோம். இதுகுறித்து மாநி லங்களோடு கலந்தாய்ந்து நாங்கள் முடிவு செய்வோம் என்று 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அபிடவிட் தாக்கல் செய்தது.
அதேபோன்றுதான், சென்னை உயர்நீதிமன்றத்திலே ஜூன் 2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார்கள்.
(தொடரும்)
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில் இருந்ததினால் கிடைத்த வெற்றி இந்தத் தீர்ப்பு
தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கமாக விவரமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்
கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி உரை
சென்னை, பிப்.15 தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில் இருந்ததினால் கிடைத்த வெற்றி இந்தத் தீர்ப்பு. உச்சநீதிமன்றத் தீர்ப்பை பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியாருக்குக் காணிக்கை யாக்குகிறேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுகுறித்து நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கமாக விவரமாக நமக்கு சொல்ல விருக்கின்றார் என்றார் திராவிடர் கழக வெளியுறவு துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள்.
உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு
கடந்த 1.2.2022 அன்று மாலை உச்சநீதிமன்றத்தின் வரலாறு படைத்த தீர்ப்பு என்ற தலைப்பில் காணொலி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் சங்கரநாராயணன் அவர்கள், தன்னுடைய வாதத்தில் என்ன குறிப்பிட்டார் என்று சொன்னால்,
''பொதுநலம் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கையில் சுணக்கம் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டு, ஓபிசி ஒதுக்கீடு கோரும் மனுவினை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றுதான் குறிப்பிட்டிருந்தார்.
இன்றைக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு, தாங்கள்தான் அந்த சமூகநீதிக்காகப் போராடினோம் என்று ஒரு சிலர், குறிப்பாக ஒன்றிய அரசில், ஆளுங்கட்சியில் அந்தக் குரல் கேட்கின்றது என்று சொன்னால், அவர்களுடைய நிலைப்பாடு, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் இந்த ஆதாரப்பூர்வமான தகவலை இந்த மன்றத்திலே நாங்கள் வைக்க விரும்புகின்றோம்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பு
அனைத்து வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சாஹி, செந்தில்குமார் ராமமூர்த்தி அவர்கள், 27.7.2020 அன்று அளித்த தீர்ப்பில் என்ன சொன்னார்கள் என்றால்,
''ஓபிசி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டு கொள் கையை சட்டமாக்குவதற்கு ஒன்றிய அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு அதிகாரங்களைப் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கப்படவில்லை.
அதேபோல, பட்டப்படிப்பு, முதுநிலைப் படிப்பு, மருத்துவப் படிப்புகளிலேயே மாநிலங்கள் பங்களித்த அகில இந்திய தொகுப்பு இடங்களில், ஓபிசி பிரி வினருக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த சட்டமும் அல்லது அரசமைப்புச் சட்டமும் தடையாக இல்லை'' என்பதாக அந்தத் தீர்ப்பிலே நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்கள்.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை யிலே - திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு.டி.ஆர்.பாலு அவர்கள், செப்டம்பர் 23, 2020 அன்று இதே பிரச்சினையை அங்கு எழுப்பினார்.
உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்கின்ற எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை
அப்பொழுது அதற்குப் பதிலளித்த ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை இணையமைச்சர் அஸ்வினிகுமார் துபே அளித்த பதிலில்,
''சலோனி குமாரி வழக்கில், அரசின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், அந்தந்த மாநிலத்தில் உள்ள அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை அளிப்போம்'' என்கின்ற அந்தத் தகவலைத்தான் சொன்னாரே தவிர, உறுதியாக நாங்கள் நிறைவேற்றுவோம் என்கின்ற எந்த உத்தரவாதத்தையும் தரவில்லை.
மீண்டும் அந்தப் பிரச்சினையை மக்களவையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஜோதிமணி ஆகியோர் எழுப்பினர்.
அதேபோல, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதினார்.
அனைத்திற்குமே ஒன்றிய அரசின் சார்பில், நாங்கள் இத்தனை சதவிகித இட ஒதுக்கீட்டை அளிப்போம் அல்லது மாநில வாரியான இட ஒதுக்கீட்டை நிறை வேற்றுவோம் என்பதான பதில் இல்லாமல், அதனை ஒட்டுமொத்தமாக நாங்கள் பரிசீலிக்கின்றோம் என் கின்ற அளவிலேதான் அரசினுடைய கருத்து இருந்தது.
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில்...
இந்த நிலையில்தான், 8.10.2020 அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஒன்றிய சுகாதார செயலாளருக்கு, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் ஒரு உத்தரவிட்டது.
அதில், நீங்கள் வரும் கல்வியாண்டிலே ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள்.
ஆனால், அதுகுறித்தும் ஒன்றிய அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, அக்டோபர் 16, 2020 அன்று, உச்சநீதி மன்றத்தில், ஒன்றிய அரசின் சார்பில், என்ன அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டது என்று சொன்னால்,
''மருத்துவப் படிப்பிற்கு, அகில இந்திய தொகுப்பில், ஓபிசி பிரிவினருக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு சாத்தியமில்லை'' என்றுதான் பதிலளிக்கப்பட்டது.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நீட்டிக்க முடியாது: ஒன்றிய அரசு தகவல்
அதுமட்டுமல்ல, அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, மாநில அரசு வழங்குகின்ற மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களில், இட ஒதுக்கீடு 2020 - இந்த ஆண்டு தமிழ்நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பி னருக்கு நீட்டிக்க முடியாது என்று நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையின் அமர்வு முன் ஒன்றிய அரசு தெரிவித்தது.
அதற்குப் பின்பு பிப்ரவரி 23, 2021 அன்று முதுநிலை படிப்பிற்கான நீட் அறிவிப்பினை ஒன்றிய அரசு வெளியிட்டது.
தி.மு.க. சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
அதில், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்து எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. அதன் பிறகுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மார்ச் 2, 2021 ஆம் தேதியன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத் தார்கள்.
அந்த வழக்கின் அடிப்படையில், ஜூலை 20, 2021 ஆம் தேதியன்று இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஒன்றிய அரசினுடைய கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு வந்து, சென்ற ஜூலை 21, 2020 அன்று நாங்கள் அளித்த தீர்ப்பினை நீங்கள் மதிக்கவில்லை; அதனை அவமதித்தீர்கள் என்று கண்டனம் செய்தார்கள்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் வாசகம்!
அந்த வாசகங்களை இங்கே நான் சொல்ல விரும்புகின்றேன்.
"The Union government's attempt to not implement the OBC reservation quota in respect of the All India Quota (AIQ) seats for admission to medical courses in the state in the academic year 2021-22 appears to be contumacious, inderogation of the order dated July 27, 2020, passed by this court and contrary to the representation made before the Supreme Court."
contumacious என்ற கடுமையான வார்த் தையைப் பயன்படுத்தினார்கள். contumacious என்று சொன்னால், திட்டமிட்டே கீழ்ப்படியாமை இருப்பது என்பதுதான் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள். அதுமட்டுமல்ல, எங்களுடைய ஆணையை ஒன்றிய அரசு அவமதிக்கின்றது என்கின்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்கள்.
ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், கலந்தாய்வினை நடத்த முடியாது
அந்த வழக்கின் தீர்ப்பில் மேலும் அவர்கள் சொன்னது, ''நீங்கள், வருகின்ற இந்த ஆண்டிலே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல், கலந்தாய்வினை நடத்த முடி யாது என்று சொல்லிவிட்டார்கள்.
அதனால்தான், உடனடியாக ஒன்றிய அரசினுடைய தலைமை வழக்குரைஞர் துஷார் மேத்தா 26.7.2021 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து, ஒன்றிய அரசு இதுகுறித்து விரைவான முடிவை எடுத்திருக்கிறது; அதனை ஓரிரு நாளில் அறிவிக்கும்'' என்றார்.
உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கும் தருவோம் என்பதை இணைத்து அந்த ஆணையை வெளியிட்டது ஒன்றிய அரசு
அதனைத் தொடர்ந்துதான், ஜூலை 29, 2021 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்புக் கண்டனத்தைத் தொடர்ந்து ஒன்றிய அரசு மருத்துவப் படிப்பில், அகில இந்திய தொகுப்பு இடங்களில், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்பதான ஆணையை -அத்தோடு யாரும் கேட்காமல், எந்தப் போராட்டமும் இல்லாமல், எந்தக் கோரிக்கையும் இல்லாமல், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி அரிய வகை ஏழைகளுக்கும் தருவோம் என்பதை இணைத்து அந்த ஆணையை வெளியிட்டது ஒன்றிய அரசு.
இந்த நேரத்தில் இன்னொரு செய்தியையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.
நாக்பூர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணையைப் பெற்றனர்
இதேபோன்ற ஒரு வழக்கு, நாக்பூர் நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்த வழக்கில், 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அகில இந்திய தொகுப்பு இடங்களில் தரவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு 31.7.2018 அன்று தீர்ப்பு வழங்கியது.
அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான ஒன்றிய அரசினுடைய வழக்குரைஞர், இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது - ஆகவே, ஒரு நாள் நீங்கள் காத்திருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு, மறுநாளே, 1.8.2018 அன்று உச்சநீதிமன்றம் சென்று, நாக்பூர் நீதிமன்றத் தீர்ப்புக்குத் தடையாணையைப் பெற்றனர்.
இதுதான் வரலாறு.
இதுபோன்ற நிலைமையில்தான், ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துகொண்டு வந்தது. இறுதியாக, 29.7.2021 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு - கண்டனத்திற்கு எதிரொலியாகத்தான் ஒன்றிய அரசு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை அளிக்கக்கூடிய ஒரு நிர்ப்பந்தத்திற்கு ஆளானது என்கின்ற செய்தியை இந்த நேரத்தில் நான் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
அந்த அளவிலேதான், உச்சநீதிமன்றத்தின் 29.7.2021 அன்று கொடுத்த ஆணைக்கு எதிராக, உச்சநீதிமன்றத் தில் ஒரு வழக்கு வந்தது - அந்த ஆணை செல்லாதது என்று அறிவிக்கவேண்டும் என்று. முக்கியமாக, உயர்ஜாதி ஏழைகளுக்கு எதிராகத்தான் வழக்கு. ஆனால், அது மட்டும் எடுக்கப்பட்டு இருந்தால், நிச்சய மாக அதற்குத் தடை கூட கிடைத்திருக்கும். ஆனால், அவ்வாறு தீர்ப்பு வந்துவிடும் என்கின்ற எண்ணத் தினால்தான், ஒன்றிய அரசு, 27 சதவிகித இட ஒதுக் கீட்டையும் இணைத்து அறிவிப்பை வெளியிட்டதோ என்கின்ற சந்தேகம் இன்றைக்குப் பலருக்கும் இருக் கிறது.
உயர்ஜாதி அரிய வகை ஏழைகளைப்பற்றித்தான் தொடர்ச்சியாகக் கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்!
ஆனால், அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பொழுது, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் 27 சதவிகித இட ஒதுக்கீட்டைப்பற்றி எந்தக் கேள்வியும் கேட்க வில்லை.
மாறாக, உயர்ஜாதி அரிய வகை ஏழைகளைப் பற்றித் தான் தொடர்ச்சியாகக் கேள்விகளை வைத்தார்கள்.
அந்த 10 சதவிகிதத்திற்கு உங்களிடத்திலே தரவுகள் இருக்கின்றனவா?
8 லட்சம் ரூபாய் வருமான வரம்பை எதனடிப் படையில் வைத்தீர்கள்? என்கின்ற இரண்டு கேள்வி களுக்கும் ஒன்றிய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
மாறாக, ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான், நாங்கள் அதனை நியாயப்படுத்துகின்றோம் என்ற அடிப்படை யில்தான், 8 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு இல்லை என்பதாக, ஒரு குழுவினுடைய அறிக்கையை வைத்தார்கள்.
வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு
ஆனால், இந்த ஆண்டு, அதனை தடை செய்யக் கூடாது என்கின்ற நிலையிலேதான், 7.1.2022 அன்று, மாண்புமிகு நீதிபதிகள் டாக்டர் சந்திரசூட், போபண்ணா ஆகியோர், 27 சதவிகித இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்கின்ற வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினைக் கொடுத்து,
EWS தொடர்பாக வழக்கினை மார்ச் மாதம் 3 ஆம் வாரத்திற்கு ஒத்தி வைத்து, இந்த ஆண்டு இதனைக் கடைப்பிடிக்கவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த வரலாற்று தொகுப்பை இங்கே பதிவு செய்ததற்குக் காரணம், இன்றைக்குப் பலரும், இந்த வெற்றிக்கு, இந்த சரித்திரம் வாய்ந்த தீர்ப்பிற்கு, தாங்கள்தான் போராடினோம், தாங்கள் தான் கோரிக்கை வைத்து வென்றோம் என்று சிலர் சொல்லிக் கொள்கிறார்களே, அதற்காக. உண்மை யாகப் போராடியது திராவிட இயக்கம், தமிழ் நாட்டில் தொடங்கிய இயக்கத்தின் காரணமாகத் தான் இத்தகைய வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பினை நாம் பெற்றிருக்கின்றோம் என்று உணர்த்துவதற்காகத்தான் அந்தக் கருத்துகளை இங்கே சொல்லியிருக்கின்றேன்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும்
ஒரே உணர்வில்...
அந்த வகையிலேதான், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே உணர்வில், இந்த சமூக நீதிப் போராட்டத்தினை நடத்தினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் சமூகநீதிக் கான சரித்தரி நாயகர் - சட்டப் போராட்டத்தினைத் தொடர்ந்து நடத்தி, இந்த சாதனையைப் படைத்திருக் கின்றார். அவருக்கு நம்முடைய வாழ்த்துகள்!
அதேபோன்று நீதிமன்றத்தில் மிகச் சிறப்பான முறையிலே வாதாடி, திறன்பட வாதங்களை எடுத்து வைத்த மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி., அவர்களுக்கு நம்முடைய பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறிய இரண்டு செய்திகள் மிக மிகச் சிறப்பான செய்திகளாகும்!
தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன்
ஒன்று, அந்தத் தீர்ப்பு வந்த நேரத்தில், அவர் சொன்ன கருத்து என்னவென்று சொன்னால்,
இந்தத் தீர்ப்பை நான் தந்தை பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்று சொன்னார்.
அதேபோல, சமூகநீதியின்பால் பற்றுகொண்ட தி.மு.க.விற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி. சமூகநீதி வர லாற்றில் முக்கியமான மைல்கல் என்று சொன்னார்.
நம்முடைய தமிழர் தலைவர்அவர்களும், அதே கருத்தை வலியுறுத்துகின்ற வகையில்தான் அறிக்கை வெளியிட்டார்கள்.
நூறு விழுக்காடு இடத்தையும் நிரப்பிக் கொள்ள நடைமுறையும் வரவேண்டும்
அதுமட்டுமல்ல, முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையில் மேலும் இரண்டு செய்திகளை கூறினார்.
அந்த வாசகங்களை நான் இங்கே சொல்ல விரும்பு கின்றேன்.
''அண்மைக்காலத்தில், எல்லா மாநிலங்களிலும் பரவலான அளவில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப் பட்டு, அந்த மாநில மாணவர்கள், தங்கள் மாநிலத் திலேயே படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப் பட்டுள்ளன.
எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி, எம்.பி.பி.எஸ். படிப்பிலும் அகில இந்திய தொகுப்பு இடங்கள் ஒதுக்கப்படும் முறைக்கு முற்றுப் புள்ளி வைத்து, ஒவ்வொரு மாநிலமும், அதன் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைப் பின்பற்றி, நூறு விழுக் காடு இடத்தையும் நிரப்பிக் கொள்ள நடைமுறையும் வரவேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் நிலை.
இரண்டு, அதை நோக்கிப் போராடுவதோடு, தாழ்த் தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும் எதிர்காலத்தில் முயற்சிகளைத் தொடருவோம்'' என தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிய கருத்துகள் நிச்சயமாக பாராட்டத்தக்க ஓர் அறிவிப்பாக நாம் பார்க்கவேண்டும்.
நீதிபதிகளுக்குப் பாராட்டு!
இந்த நேரத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பு - பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்த நீதிபதிகள் டாக்டர் சந்திரசூட், போபண்ணா ஆகியோருக்கு நம்முடைய பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தகுதி, திறமை, மதிப்பீடு குறித்து அவர்கள் அளித்திருக்கின்ற விளக்கமானது மிகமிக சிறப்பானது.
இதுநாள் வரை நம்முடைய திராவிட இயக்கம், தந்தை பெரியார் தொடங்கி, சமூகநீதி ஆர்வலர்கள் கூறி வந்த தகுதி திறமை குறித்து அரசமைப்புச் சட்டம் 15(4), 15(5) ஆகியவை குறித்த விளக்கமும், நமது அடுத்தகட்ட சமூகநீதி குறித்து பெரும் கேடயமாக விளங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இங்கே விரிவாக, விளக்கமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்கள்
ஆகவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக இருக்கிறது. அந்தத் தீர்ப்பினுடைய விளக்கங்கள் மிகமிக ஆழமானவை; மிகமிக சிறப் பானவை என்பதை நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் இங்கே விரிவாக, விளக்கமாக நமக்கு சொல்லவிருக்கின்றார்கள்.
அவருடைய கருத்தினை நாம் அனைவரும் கேட்போம்.
வாய்ப்புக்கு நன்றி!
வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக