பக்கங்கள்

வியாழன், 15 செப்டம்பர், 2022

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு வரவேற்கத்தக்கது


முதலமைச்சருக்கும், ஒன்றிய அமைச்சரவைக்கும் பாராட்டுகள், நன்றி!

தமிழர் தலைவர் அறிக்கை

சமூகத்தில் பல்வேறு அவலங்களை நாள்தோறும் சந்திக்கும் நரிக்குறவர் சமூக மக்களையும், குருவிக்காரர்கள் என்ற சமூகத்தவரையும் S.T. என்ற பழங்குடி சமூகப் பிரிவின்கீழ் சேர்க்க வேண்டுமென்று பிரதமரிடம் நமது தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு வேண்டுகோள் வைத்து மனு அளித்தார்.

புதுடில்லியில் நேற்று (14.9.2022) நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் இது ஏற்கப்பட்டு, அதன்படி அவ்விரு சமுதாயப் பிரிவுகளும் பழங்குடி இனப் பிரிவான Schedule Tribes  கீழ்வருவதால் அவர்களது முன்னேற்றம், வளர்ச்சி பெரிதும் சிறப்பாக அமையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்குக் காரணமான தமிழ்நாடு முதல் அமைச்சர் அவர்களையும், ஒன்றிய அமைச்சரவையையும் பாராட்டி நன்றி கூறுகிறோம்.

- கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
15.9.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக