பக்கங்கள்

செவ்வாய், 22 டிசம்பர், 2020

ஜாதியை ஒழிக்க அய்.நா.வில் பேசிய மதுரை மாணவி!

வெள்ளி, 4 டிசம்பர், 2020

தலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது!


திங்கள், 30 நவம்பர், 2020

69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய சட்ட முன்வடிவு

 69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய அரசியல் சட்டம் 31(சி) விதியைப் பயன்படுத்தி 9ஆவது செட்டியூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் அதற்கான ஒரு தனிச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் இதை தமிழக முதல்வர் செய்து வரலாற்றச் சாதனையைப் படைத்து, சமூக நீதி வரலாற்றினுள் நிரந்தர இடத்தைப் பெற வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டோம்.

ந்நூ.ந்நூபுயூடுஷிட்

30.12.1993 தமிழக சட்ட மன்றத்தில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க - தமிழ்நாடு அரசே தனிச்சட்டம் இயற்ற முன்வந்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான மசோதாவை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

 காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தனிச் சட்டத்துக்கான மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகம் செய்தார்.(இது ஒரு தமிழக வரலாற்றுப் பொன்னாள்.)

மசோதா அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு - ஆரவாரத்துக்கிடையே முதலமைச்சர் அறிமுகப்படுததினார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு அவையில் ஓர் உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! இந்த மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும். சட்டப் பேரவையில் மசோதா நிறைவேறிய பிறகு - குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகும். நகல் மசோதாவின் முன்னுரையில் “இந்தச் சட்டமானது அரசமைப்பின் IV---ம் பகுதியில், அதிலும் குறிப்பாக 38ஆம் உறுப்பிலும், 34ஆம் உறுப்பின் (b) மற்றும் (c) எனும் கூறுகளிலும், மற்றம் 69ம் உறுப்பிலும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிற வகையில், அரசின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக இயற்றப்படுகிறது என்று இதன் மூலம் விளம்பப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவை முன்மொழிந்து தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பேசியதாவது:

1. “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு ஜாதியினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி நிலையங்களில் இடங்களை ஒதுக்குங்கள் மற்றும் அரசுப் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல் என்னும் கொள்கையானது. 1921ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் நீண்டதொரு வரலாற்றினைப் பெற்று வந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அளவானது பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கிணங்கிய வகையில், நிலையாக மேல் நோக்கி வளர்த்துவந்து, தற்போது அது 69 சதவீதம் என்னும் அளவினை எட்டியுள்ளது.

2. உச்சநீதிமன்றமானது, இந்திரா சஹானி-க்கும், இந்திய அரசுக்குமிடையேயான (AIR 1993 5C பக்கம் 477) வழக்கில், அரசமைப்புச் சட்த்தின் 14(4) எனும் உறுப்பினர் படியான மொத்த இடஒதுக்கீடுகள், 50 சதவிதத்திற்கு மேற்படுதல் ஆகாது என்று கூறி 24.11.1982 அன்று தன் தீர்ப்புரையினை வழங்கியது. நடப்புக் கல்வியாண்டிற்குக் கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னர் வந்தபோது, இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தன் இடஒதுக்கீட்டுக் கொள்கையினை தமிழ்நாடு அரசு நடப்புக் கல்வி ஆண்டின்போது தொடர்ந்து கடைப்பிடித்து வரலாம் என்றும், அந்த இடஒதுக்கீட்டு அளவானது அடுத்த

1994-95ஆம் கல்வி ஆண்டின்போது, தற்போதுள்ளதைக் குறைத்து 50 சதவீதத்திற்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொடர்ந்து முன்னேற்றத்தை உறுதி செய்ய மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையானது மீண்டும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதற்காக வேண்டி, தமிழ்நாடு அரசானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்சொன்ன தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனி அனுமதி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றமானது, கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்த அளவில் இட ஒதுக்கீடானது 80 சதவிதத்திற்கு மேற்படுதல் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி இடைக்கால ஆணையொன்றைப் பிறப்பித்துள்ளது.

69% இடஒதுக்கீட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர்

3. இம்மாநிலத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீத அளவினர் குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் ஷெட்யூல்டு சாதியும், ஷெட்யூல்டு பழங்குடிகளையும் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதிலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றுதான், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் தொடர்ந்த முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்பதோடு, மாறி வருகின்ற சூழ்நிலைகளுக்கும் அது வகை செய்யும் என்பதால், மேற்சொன்ன இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வர இயலும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9ஆம் நாளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையில், 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24ஆம் நாளில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் 69 சதவீத இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் எந்தவிதமான அய்யப்பாடோ, காலத் தாழ்வோ இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தியது. அந்தக் கூட்டத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தமொன்று கொண்டு வரப்பட வேண்டும், அல்லது இம்மாநில அரசு தனிச்சட்டமொன்றை இயற்றுதல் வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் சமூக அமைப்புகளும் இம்மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கிணங்கிய வகையில், சமூக நீதி என்னும் குறிக்கோளை எய்துவதற்காக வேண்டி, தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் பெருவிழைவிற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தனிச் சட்டமொன்றை ஒரு முன் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருகின்ற வகையிலும், ஏற்கெனவே இது குறித்துச் செய்யப்பட்ட செயல்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செல்லத் தக்கனவாக்குவதற்குத் தேவையான வகை முறைகளுடன் சேர்த்தும், கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. இச்சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.’’

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த மசோதாவை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.

அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

நான் “தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்ததற்காக முதல்வரைப் பாராட்டி நன்றி’’ தெரிவித்தேன்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நமது வேண்டுகோளை, வழிகாட்டுதலை ஏற்று சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மான நிறைவேற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாய், ஆந்திர ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் 90 வயது நிரம்பிய சுதந்திரப்போராட்ட வீரர் சர்தார் கோது லட்சண்ணா எனக்குத் தந்தி அனுப்பி பாராட்டினார்.

கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கும், முயற்சிக்கும் இது ஒரு மாபெரும் வெற்றியாகும். சமூக நீதிக்குக் கிடைத்த அசைக்க முடியாத நிரந்தர பாதுகாப்புக்கு அடிப்படையாகவும் இது அமைந்தது. கழகம் தந்தை பெரியாருக்குப்பிறகு இப்படி ஒரு வரலாறு படைத்தது.

- அய்யாவின் அடிச்சுவட்டில் கட்டுரையின் ஒரு பகுதி

- உண்மை இதழ் ஜூன் 16 ஜூலை 15.2020


செவ்வாய், 24 நவம்பர், 2020

கருநாடகாவில் தலைவிரித்தாடும் ஜாதியக் கொடுமை கீழ்ஜாதிக்காரர்களுக்கு முடி வெட்டக் கூடாதாம்!

 

November 22, 2020 • Viduthalai • இந்தியா

புகார் கொடுத்தும் கருநாடகா பா.ஜ.க. ஆட்சியில் நடவடிக்கை இல்லை

மைசூரு, நவ.22 கருநாடகத்தில்,  உயர் ஜாதியினர் அல்லாதவர்களுக்கு முடி திருத்தம் செய்ததற்காக, மல்லி கார்ஜூன் ஷெட்டி என்பவர், நாயக் ஜாதிக்காரர்களால் ஊர் விலக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றும் அவ ருக்கு ரூ.50000 அபராதமும் விதிக்கப் பட்டுள்ளது.

47 வயதாகும் அந்த முடிதிருத்துநர், மைசூரு மாவட்டத்தின் நன்ஜன்குட் தாலுகாவில், ஹல்லாரா கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது முடிதிருத்தம் செய் யும் நிலையத்தில் அனைத்து ஜாதி யினருக்கும் முடிதிருத்தம் செய்து வந்தார்.

அந்த ஊரில் உள்ள உயர்ஜாதியி னர் இவரை வீட்டிற்கு அழைத்து முடிவெட்டி வந்தார்கள். கரோனா பொது முடக்கம் முடிந்த பிறகு இவர் கடையில் முடிவெட்டுபவர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கவே இவருக்கு உயர் ஜாதி யினரின் வீட்டிற்குச் சென்று முடி வெட்ட நேரம் இல்லை. இதனால் நீங்கள்கடைக்கு வாருங்கள்என்று உயர்ஜாதியினரிடம் கேட்டுக்கொண் டார்.இதனால்ஆத்திரமடைந்த  உயர்ஜாதியினர், இனிமேல்உயர்ஜாதி யினருக்குமட்டுமே கடையில்முடி வெட்டவேண்டும் என்று உத்தர விட்டுள்ளனர்.  இவரின் கடைக் குச் சென்ற, இவரது கிராமத்தின் உயர்ஜாதி சமூகத்தைச் சேர்ந்த மகா தேவா நாயக், சங்கரா மற்றும் சிவராஜு உள்ளிட்டோர், இனி மேல் தங்களைத் தவிர வேறு யாருக்கும் முடிவெட்டக் கூடாது, அப்படி வெட்டினால் ஊரை விட்டு விரட்டிவிடுவோம் என்று மிரட்டி யுள்ளனர்.

அதற்கு அவர் நான்  யாருக்கும் ஜாதி பார்ப்பதில்லை என்பதாகப் பதிலளித்தார். இதனை அடுத்து தாங்கள் சொல்வதைக் கேட்கவில்லை என்றால் இந்த ஊரைவிட்டுச் சென்றுவிடு என்று கூறி அவர் ரூ.50000அபராதம் செலுத்த வேண்டு மெனவும் கூறினர்.  ஆனால், இதற்கு உடன்பட மறுத்துவிட்டார் மல்லிகார்ஜூன். எனவே, அவர்மீது ஊர்விலக்க நடவடிக்கையை அறிவித் ததோடு, அவரின் கடைக்கு யாரும் முடிதிருத்தச்செல்லக்கூடாதுஎன் றும் ஊருக்குள் பிரச்சாரம் செய்தனர்

கடந்த 3 மாதங்களாகவே உயர் ஜாதியினர் மிரட்டி வருவதால், காவல்துறையில் புகார் அளித்தார்.  காவல்துறையினர், புகாரைப் பதிவு செய்யாமல் விட்டு விட்டனர். காவல் துறையினரிடம் தங்கள் மீது புகார் அளித்ததை அறிந்த உயர்ஜாதியினர் மல்லிகார்ஜூனின் 21 வயது மகனை வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்து  நாயக் சமூகத்தைப் பற்றிகேவலமாகப் பேசுமாறுசெய்து, அதை காணொலியில் படம் பிடித்த னர். இதன்மூலம், காவல் துறையிடம் சென்றால், அந்தக் காணொலியை வெளியிட்டு விடுவதாகவும் மிரட் டியுள்ளனர்.

மல்லிகார்ஜூன் தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்துவருவதை அடுத்து அப்பகுதி வட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், வட்டாட்சியர் உயர்ஜாதியினருக்கு ஆதரவாகப்பேசி அவரைசமாதா னப் படுத்த முயன்றார். இதனை அடுத்து அவர் உள்ளூர் ஊடகவி யலாளர்களைச் சந்தித்து தனது குறையைக்கூறி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித் துள்ளார்.


வியாழன், 22 அக்டோபர், 2020

முலைவரி - தோள்சீலை போராட்டம்


#முலைவரி

இந்து நாடாக இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." 

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் முலைகளை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவருடைய #மனைவியாக, #மகளாக, #சகோதரியாக, #தாயராக, #பாட்டியாக, இருந்தாலும் "முலைகளை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்." 

இந்த இந்துத்துவ அடக்குமுறையை கூறும்போது கண்டிப்பாக நாங்கிலி என்ற பெண்ணைபற்றி கூறியே ஆகவேண்டும்.

நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ என்பது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. 
(முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப் பட்டது.) 

தொடர்ந்து மார்பக வரி வசூலிப்பவர்களை நாங்கிலியின் வீட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், அழகி நாங்கிலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவமானமாகக் கருதினார். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதியில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில்  முலைக்கர்ணம் என்று பெயர்.

தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். நாங்கிலியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

‘முலைக்கர்ணம் பார்வத்தியார்’ அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தியார் ஒரு நாள் நாங்கிலியை தேடிப் போய்விட்டார்.

நாங்கிலி தன் வீட்டுக்கு வந்த அவரை, சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகையோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள்.

ஓர் வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத்தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள்.

மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நாங்கிலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் ‘முலைவரி’ என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.

இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் ஆதிக்ககார்கள். அதனால் அந்த இடத்தை ‘முலைச்சிபரம்பு’ என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் “நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி’’ என அவரை பாராட்டுகின்றார்கள்.

இந்த வரலாறுகள் எல்லோரும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்குமுறைகளும் மக்களை எவ்வாறு பாடாய்ப்படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.
நன்றி

க. கார்த்திக் சியான் சியான்/ ஆறாம் அறிவு முகநூல் பதிவு, 22.10.19

1. இணைய முகவரி
https://www.opindia.com/2018/01/the-recurring-myth-of-breast-tax-doesnt-seem-to-die-down-this-time-propagated-by-scroll/

2.
https://indusscrolls.com/marxists-fabricate-nangeli-and-travancores-breast-tax-myths-to-divide-hindus/

புதன், 15 ஜூலை, 2020

இந்திய அறிவியல் கழக (Indian institute of science)த்தில் முதல் பிற்படுத்தப்பட்டோர்

நேற்றைய தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்ததலைவர் பி.கே.ஹரிப்ரசாத் இந்திய அறிவியல் கழகம் (Indian institute of science) துவங்கப்பட்ட 1907 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகள் கழிந்து 2007 ம் ஆண்டில்தான் முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சொன்னார். அதுவும் மறைந்த அர்ஜூன் சிங் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது உயர்கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக என்கிற கூடுதல் தகவலையும் அவர் சொன்ன போது மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

யோசித்துப்பாருங்கள் ஒரு நூறாண்டுகளில் ஒரு பிற்பட்டவகுப்பினர்கூட நுழைய முடியாமைக்கு தகுதியின்மை மட்டுமா காரணமாக இருக்க முடியும்..? இந்த அநீதி எவ்வளவு குரூரமானது..?

இதற்கெல்லாம் வராத அறச்சீற்றம் 10% அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதென்றால் அது எவ்வளவு தேர்ந்தெடுத்த கயமைத்தனம்..?

பக்கத்து வீட்டில் அடுத்த தெருவில் விரும்பிய படிக்க முடியாமல் அரசு வேலை கிடைக்காமல் கிருஷ்ணா ஸ்வீட்நெய் மைசூர்பா வாங்கி உண்ண வழியில்லாமல் இருக்கும் அரியவகை ஏழைகளின் சோகம் பிழியும் கதைகளை தூக்கிக்கொண்டு வருபவர்கள் எவரும் துளிகூட நேர்மையற்ற சல்லிகள்.. இரக்கவுணர்வினை சுரண்டி எத்திப்பிழைக்கவும் எத்திப்பிழைப்பவர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் இந்த உண்மைகள் சுடுவதேயில்லை..

இந்த மண்ணில் சமூகநீதிக்கான போராட்டம் நேற்று துவங்கியதுமில்லை.. இன்று முடிவதுமில்லை.. நமது காலத்தில் அது தொய்வடைந்தது என்கிற அவப்பெயரின்றி இதற்காக உறுதியுடன் நின்றாக வேண்டியதொன்றே நம் வரலாற்று கடமை.. டாட்..
16.07.18
From Muruganantham Ramasamy

சனி, 4 ஜூலை, 2020

தனியார்த் துறையில் இடஒதுக்கீடு!

இன்றைய நிலையில் இடஒதுக்கீடு என்பது அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்களில் மிகவும் சுருங்கி விட்டது.
தனியார் மயம், தாராள மயம், உலக மயம் என்ற திரிசூலம் - சமூகநீதியை வெகுவாகப் பதம் பார்த்து விட்டது. இந்த நிலையில் தனியார்த்துறையில் இடஒதுக்கீடு என்பதுதான் சமூகநீதி கண்ணோட்டத்தில் மிகச் சரியானதாக இருக்க முடியும்.
26.6.2020 அன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் காணொலி மூலம் கருத்துத் தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இடஒதுக்கீட்டில் நமது அடுத்த இலக்கு தனியார்த் துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறுவதே என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மண்டல் குழுப் பரிந்துரையில்கூட இது வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு உதவிபெறும் தனியார் நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய - மாநில உறவுகள் குறித்து வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையமும், தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும்போதும், அல்லது அதில் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும்போதும், ஏற்கெனவே அந்தப் பொதுத்துறை நிறுவனம் செயல்படுத்தி வந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும், நீதித்துறையிலும் இடஒதுக்கீடு கொண்டு வரப் பட வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் விகிதாச்சார அளவை நிர்ணயிக்கும் உரிமையும், சட்டம் இயற்றும் உரிமை யும் மாநில சட்டமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதி வெங்கடாசலய்யா ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டன.
அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படுகிறது. (Affirmative action)
11 பேர்களுக்குமேல் பணியாற்றும் ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒவ்வோர் ஆண்டும் கருப்பர், இஸ்லாமியர், பெண்கள் எத்தனைப் பேர் என்று அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அந்த நிலை பின்பற்றாவிடின் வழக்குத் தொடரலாம் என்கிற அளவுக்கு அமெரிக்காவில் சட்டம் உள்ளது.
இங்கிலாந்தில் Equality act என்றும், கனடாவில் Employment Equality Act என்றும், சீனாவில் Affirmative Minorities Nationality Act என்றும் இடஒதுக்கீட்டு பெயர்களாகும்.
இந்தியாவில் பிஜேபி ஆட்சி வந்த பிறகு. அரசு நிர்வாகமே தனியார்த் துறைகளிலிருந்து பெறப்பட்ட அதிகாரிகளின் கைகளில் குவிந்து வருகிறது.
2014-ஆம் ஆண்டு திட்டக்குழு கலைக்கப்பட்டு நிதி ஆயோக் என்ற பெயரில் வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது, முதல் முதலாக இந்த வளர்ச் சிக்குழுவில் இந்தியாவின் பிரபல தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் ஆலோசகர்களாகவும், நிர்வாகிகளாகவும் நியமிக்கப்பட்ட னர்.
இதற்கு அரசு கொடுத்த விளக்கம் தனியார் துறைகளில் சிறப்பாகச் செயல்படும் பல துறைசார் நிபுணர்களின் சேவையை அரசு பயன்படுத்திக் கொண்டது என்பதாகும்.
அதன் பிறகு அரசு பணியிலும், 'லேட்டரல் என்டரி' எனப்படும், தனியார்த் துறைகளில் பணிபுரிவோரை, அரசுப் பணியில் சேர்க்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒன்பது துறைகளுக்கான இணைச் செயலர் பதவிக்கு, தனியார் துறையில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தோர் என்று கூறி நியமிக்கப்பட்டனர். வழக்கமாக, இணை, உதவி செயலர் பத விக்கு, அய்.ஏ.எஸ்., எனப்படும் இந்தியக் குடிமைப் பணிகள், அய்.பி.எஸ்., எனப்படும் இந்திய போலீஸ் சேவை, அய்.எப்.எஸ்., எனப்படும் இந்திய வெளியுறவு சேவை, அய்.ஆர்.எஸ்., எனப்படும் இந்திய வருவாய் சேவை அதிகாரிகளே நியமிக்கப்படுவர்.
ஆனால், மோடி அரசு தனியார்த் துறை அதிகாரிகளை இந்தப்பணிகளில் நியமித்து வருகிறது. தற்போது இந்த அரசு மத்திய அரசில் காலியாக உள்ள 1300 இயக்குநர்கள் மற்றும் உதவி செயலாளர்கள் பணியிடங்களுக்கு தனியார் துறையினரை நியமிக்க முடிவு செய்துள்ளது. இணைச் செயலாளர் பதவியில் அமர்த்தப்படும் இவர்களுக்கு ரூபாய் 1 லட்சத்து 44 ஆயிரத்து 200 முதல் ரூபாய் 2 லட்சத்து 18 ஆயிரத்து 200 வரை மாத சம்பளம் என்றும், இந்தப் பணி நியமனம் மூன்று வருடத்திற்கு முதலிலும், அதன் பிறகு அய்ந்தாண்டுகள் வரை ஒப்பந்த அடிப்படையில் நீடிக்கப்படலாம் என்றும் கூறியுள்ளது. அதே நேரத்தில், அவர்கள் கொள்கை முடிவுகளை எடுக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் பயன்படுத்தப்படுவார்கள்; இன்று மத்திய அமைச்சரவையில் உள்ள பெரும்பாலானோர் பார்ப்பனர்களே, தனியார்த் துறைகளில் பெரும் அதிகார மட்டத்தில் இவர்கள் நிறைந்து உள்ளனர்.
வருமான வரித் துறை, கலால் துறை, ரயில்வே, தொலைத் தொடர்பு, அஞ்சலகம் மற்றும் வணிகம் உட்பட 37 அரசுத் துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்களே தகுதி உயர்வு வழங்கப்பட்டு, அரசின் செயலாளர்களாக நியமிக்கப்படுவது மரபு. ஆனால், மோடி தலைமையிலான பாஜக அரசால், லேட்ரல் எண்டரி முறையில், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்கள், மத்திய அரசின் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர்,
இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில் மத்திய வேளாண் துறையில் ககோலி கோஷ், விமானப் போக்குவரத்துத் துறையில் அமர் துபே, வணிகத்துறையில் அருண் கோயல், பொருளாதார விவகாரத் துறையில் ராஜீவ் சக்சேனா, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் சுஜித் குமார் பாஜ்பாய், நிதிச் சேவைத் துறையில் சவுரவ் மிஸ்ரா, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தினேஷ் தயானந்த் ஜகதலே, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை பிரிவில் சுமன் பிரசாத் சிங், கப்பல் போக்குவரத்து துறையில் பஷன் குமார் ஆகியோரை அரசு இணைச் செயலாளர்களாக நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் நியமிக்கப்பட்ட இந்த 9 இணைச் செயலாளர்களும் அடுத்த 3 ஆண்டு களுக்கோ அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையிலோ பதவியில் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். அதுமட்டுமல்லாமல் நேரடியாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொடர்பில் உள்ளவர்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
இப்படி இருக்க அரசுத்துறையிலும் தனியார்களை அனுமதிக்கும்போது அங்கு பார்ப்பனர்களே அமருவார்கள். இதன் மூலம் இட ஒதுகீட்டை முற்றிலும் ஒழித்துக்கட்டி, பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோர் பதவிக்குவந்து கொள்கை முடிவுகளை எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும். இதன் மூலம் அரசாங்க ரகசியங்களின் பாதுகாப்புக்கும் ஆபத்தே! ஏற்கெனவே அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும், தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு கொண்டிருக்கும் சூழலில் மத்திய அரசின் செயலாளர்கள் மட்டத்திலும் தனியாரை நியமித்து அரசமைப்புச் சட்டத்தின் அச்சாணியையே இந்த அரசு அசைத்துப் பார்க்கிறது.
இந்த மிகப் பெரிய அபாயம் உரிய வகையில் வெளிச்சத்துக்கு வரவில்லை. சமூகநீதியாளர்கள் மிகப் பலமாகக் கட்டமைத்து இதற்கொரு முடிவு எட்டப்படாவிடின் சமூகநீதி பட்டப் பகலிலேயே 'படுகொலை' செய்யப்படும் நிலைதான்.
நமது அடுத்த இலக்கு தனியார்த்துறைகளில் இடஒதுக்கீடு நோக்கியே என்று திராவிடர் கழகத் தலைவர் காணொலியில் கூறியது - காலத்தால் ஊதப்பட்ட சமூகநீதி சங்கே ஆகும்.
- கலி.பூங்குன்றன், 4.7.20