பக்கங்கள்

சனி, 19 ஆகஸ்ட், 2017

இந்தியாவின் முதல் சமூகநீதி ஆணை வெளியிடப்பட்ட நாள்: ஜூலை 261902ஆம் ஆண்டு ஜூலை 26 இந்தியத் துணைக் கண்ட வரலாற்றில் சமூகநீதி காவியத்தில் புதிய பொன்னேட்டைப் பொறித்த நாள். ஆம். இந்நாளில்தான் இன்றைக்கு 115 ஆண்டுகளுக்கு முன் சாகு மகராஜ் முதன்முதலாக இடஒதுக்கீடு தொடர்பான ஓர் ஆணையைப் பிறப்பித்த நாள்!

50 சதவிகித இடங்களைப் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் வகையில் ஆணை ஒன்றைப் பிறப்பித்தார். தாழ்த்தப்பட்டவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், தாழ்த்தப்பட்டவர்கள் தங்கிப் படிக்க விடுதி ஒன்றையும் ஏற்படுத்தினார். அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் தாழ்த்தப்பட்டவர்களையும் சமமாகக் கவனிக்கவும், நடத்திடவும் ஆவன செய்தார்.

தஞ்சாவூர் வல்லம் பெரியார் _ மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் சமூக நீதியாளர் சாகு மகராஜ் நினைவைப் போற்றும் வண்ணம் மாணவியர் விடுதியின் ஒரு பகுதிக்கு அவர் பெயரைச் சூட்டி மகிழ்ந்தார் தமிழர் தலைவர் கி.வீரமணி (1995)இல்.

வாழ்க சாகு மகராஜ்! வளர்க சமூக நீதி!
-உண்மை,16-32.7.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக