அய்தராபாத்,செப்.5 ஆந்திராவில் விநா யகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொள்ள வந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண் சட்டப்பேரவை உறுப்பினரை அங் கிருந்து விரட்டியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் உள்ள தடிகொண்டா தொகுதியின் சட்டப் பேரவை உறுப்பினரான உண்ட வள்ளி சிறீதேவி என்பவர் தாழ்த் தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் ஆவார். இவர் மருத்துவராக பணி புரிபவர். சிறீதேவி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம் குண்டூர் மாவட் டத்தில் துள்ளூர் பகுதியில் உள்ள அனந்தவரம் என்னும் ஊரில் மறைந்த மேனாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜ சேகர் ரெட்டியின் நினைவு தின நிகழ்வு நடந்தது. அதில் சிறீதேவி கலந்துகொண்டார்.
ஜாதிப்பெயர் சொல்லி கூச்சல்
அப்போது அங்கிருந்த சிலர் அவரை அதே ஊரில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அழைத்துள்ளனர். அங்கு சென்ற சிறீதேவி அந்த பந்தலில் அமைக் கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வணங்கி உள்ளார். அப்போது அங்கு வந்த உயர்ஜாதியினர் சட்டமன்ற உறுப்பினர் சிறீதேவியை அவர் சார்ந்த ஜாதிப்பெயர் சொல்லி கூச் சலிட்டு அங்கிருந்து செல்ல வேண்டும் எனக் கூறியுள்ளனர். அவர் தொடர்ந்து அங்கு பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தாக்கி விரட்டி யுள்ளனர்.
விழாவிற்கு ஏற்பாடு செய்தவர் களிடம் அங்கு திரண்ட உயர்ஜாதி யினர் “இவர் தீண்டத்தகாதவர், இவரை ஏன் இங்கு அனுமதித்தீர்கள்? இவரால் நமது ஊரே தீட்டுப்பட்டு விட்டது'' எனச் சத்தம் போட்டுள் ளார். இதனால் உயர்ஜாதியினருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தேவியின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் இரு தரப் பையும் சமாதானம் செய்துள்ளனர். சிறீதேவி இதுகுறித்து, ‘‘ஜாதியின் பெயரால் என்னைச் சிறுமைப்படுத் துவது மிகவும் அவமானகரமான செயல் ஆகும், அதுவும் மாநிலத்தின் தலைநகர் பகுதியில் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. என்னை இவ்வாறு அவமதித்தவர்கள் உயர்ஜாதியினர்'' என்று கூறினார்.
இதுகுறித்து அந்தப் பகுதி காவல்துறை அதிகாரி சுப்பாராவ் கூறியபோது, ‘‘அப்பகுதியில் இருந்த சிலர் மது குடித்து இருந்தார்கள். அவர்கள் போதை அதிகமாகி சிறீ தேவியை ஜாதி குறித்துத் திட்டினர். இச்சம்பவம் குறித்து யாரும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்போம்'' என்று கூறினார்
தெலங்கானாவில் புகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவர்களில் ஒருவராக கருதப்படுபவரும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினருமான சிறீதேவி தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற் காக விநாயர் கோவிலில் அனுமதிக் கப்படாமல் விரட்டி அடிக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் குறித்து காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ‘‘குடித்துவிட்டு இவ்வாறு செய்விட்டார்கள்'' என்று கூறி இச் சம்பவத்தை மூடி மறைக்கப் பார்க் கிறார்கள்.
- விடுதலை நாளேடு, 5.9.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக