இடஒதுக்கீட்டுக்காக பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள் பிரிவினை அடையாளம் கண்டு மதிப்பீடு செய்வதற்கு பின்பற்றப்பட்ட கொள்கைகளின் தரத்தைப் பற்றி இந்திய உச்சநீதி மன்றத்தினால் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் இப் பொருள் பற்றி நடைபெற்று வரும் விவாதங்களுக்கு தொடர்புடையவையும், மிகவும் பொருத்தமான வையும் ஆகும். மனநிறைவளிக்கும் வகையில் அக்கேள்விகளுக்கு பதில் அளிக்க ஒன்றிய அரசால் இயலாத அளவுக்கு கூர்மையாகக் கேட்கப்பட்ட அக் கேள்விகளுக்கு, குறிப்பாக ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருவாய் உள்ள பிரிவு மக்கள் மட்டுமே பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பெறமுடியும் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ள கொள்கைகள் மற்றும் நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்வதற்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்திடம் கேட்டுப் பெற் றுள்ளது. எனவே, இந்த இடஒதுக்கீட்டு சலுகையை நியாயப்படுத்துவதற்கு புள்ளி விவரங்களின் அடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வு தேவை என்பதும், எந்தப் பிரிவு மக்கள் அந்த சலு கையைப் பெறப்போகிறார்கள் எவர் பெறப்போவ தில்லை என்பதற்கான நிபந்தனைகள் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதும், இப்போது ஒரு நிர்ணயிக்கப் பட்ட கொள்கையாக ஆகிவிட்டது. பொருளாதார நிலையில் பின்பதங்கி உள்ளவர்களுக்கான பயனீட் டாளர்களை அடையாளம் காண்பதற்கு முன், அது பற்றிய ஆய்வு ஏதேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்து கொள்வதற்கு உச்சநீதி மன்றம் விரும்புவது நியாயமானதேயாகும். 2019 ஆம் ஆண்டில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் அரசமைப்பு சட்ட 103 ஆவது திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்ற அரசமைப்பு சட்ட அமர்வின் முன் பரிசீலனையில் உள்ளன என்ற உண்மையின் அடிப்படையில், மூன்று நீதிபதிகள் அமர்வு இது பற்றி விசாரணை செய்வது தவிர்க்க இயலாத ஒரு தேவையாகும். இந்த அமர்வினால் நடந்து வரும் வழக்கு விசாரணையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 27 சத இட ஒதுக்கீடு மற்றும் நாடு முழுவதிலும் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு, அறிமுகப்படுத்தப் பட்டுள்ள அனைத்திந்திய பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ள 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆகியவை உச்சநீதிமன்ற அமர்வின் முன் பரிசீலனையில் உள்ளன. அரசின் எந்த கொள்கை முடிவையும் தாங்கள் பரிசீலிக்கப் போவதில்லை என்றும், அதற்கான அரசமைப்பு சட்ட தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிக்கவே தாங்கள் விரும்புவதாகவும் இந்த அமர்வு கூறியுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு, ஆண்டுக்கு ரூ.8 லட்சத் துக்கும் மேல் வருவாய் உச்ச வரம்பாக நிர்ணயிக் கப்பட்டுள்ளபடியால், ரூ.8 லட்சத்துக்கும் மேல் வருவாய் பெறுபவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கு தகுதி அற்றவர்கள் ஆவர். இதே வருவாய் உச்ச வரம்புதான் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்களுக்கான இட ஒதுக்கீட்டுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வியிலும், சமூக அள விலும் பின்தங்கியுள்ள மக்களுடன், அவ்வாறு சமூக அளவிலும், கல்வியிலும் பின்தங்கி இராமல், முன் னேற்றம் அடைந்தவர்களை சமப்படுத்திக் காண்பது சரியானதுதானா என்ற நுணுக்கமான கேள்வி எழுகிறது.
எவ்வாறு இருந்தாலும், அகில இந்திய இட ஒதுக்கீட்டு அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள் பிரிவுக்கும் இடஒதுக்கீடு அளிப்பது செல்லத் தக்கதுதானா என்பதை மட்டுமே இந்த அமர்வு முடிவு செய்யும். அகில இந்திய இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ள இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இட ஒதுக்கீடு, தற்போது நடைமுறையில் உள்ள சேர்க்கை விதிகளின்படி செய்யப்பட்டு வருவதாகும்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டு நடைமுறை, ஒன்றிய அரசு மற்றும் மாநிலஅரசுகளினால் நடத்தப்படும் அவரவர் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தனித் தனியாக செய்யப் பட்டு வருகிறது. ஆனால், அகில இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டு இடங்களில் இவ்வளவு ஆண்டுகள் காலமாக இந்த இட ஒதுக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டு வர வில்லை. இந்த மாணவர் தொகுப்பு, இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்பு மாணவர் இடங்களில் 15 சதவிகித இடங்களும், முதுகலை மருத்துவ பட்டப் படிப்பு மாணவர் இடங்களில் 50 சதவிகித இடங்களும் மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கும் செய்யும் இடங்களைக் கொண்டு உருவாக்கப் படுவதுதான் இந்த அகில இந்திய இட ஒதுக்கீட்டுக்கான இந்த தொகுப்பு. இந்தப் பிரிவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இது வரை அளிக்காமல் இருந்ததால் ஏற்பட்ட முரண்பாடு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது.
விடைகாண இயலாமல் இருக்கும் மிகப் பெரிய கேள்வி, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு நட வடிக்கையாகக் கருத முடியுமா என்பதும், சமூக அளவில் முன்னேறியுள்ள சமூகப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு சலுகையில் ஒரு பங்கு அளிக்க இயலுமா என்பதும்தான். இந்தக் கேள்விக்கான முடிவை அர சமைப்பு சட்ட அமர்வுதான் தீர்மானிக்க வேண்டும்.
நன்றி: 'தி இந்து' - 29-11-2021
தமிழில்: த.க. பாலகிருட்டிணன்