• Viduthalai
சமூக நீதிக்காக தமிழகத்தில் அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் தளகர்த்தாக்களில் இருவர் மருத்துவர். சமூக நீதிக்காக போராடுவதில் மருத்துவர்கள் எப்போதும் முன்னணியில் களமாற்றி இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி இந்த நாளில் பதிவிடுவதை பெருமையாக கருதுகிறேன்.
உலகின் சமூகப் புரட்சிக்கு வித்திட்டதில் மருத் துவ இனத்திற்கு வரலாற்றில் பெரும்பங்கு எப்போதும் உண்டு.உலகின் மிகப்பெரும் புரட்சியாளன் சேகு வேரா ஒரு மருத்துவர் என்பது நாமறிந்ததே.
இந்தியாவில் எப்போதும் ஓர் தனித்துவமிக்க மாநிலமாக ,ஏன் மற்ற மாநிலங்களுக்கு மாநில சுயாட் சியை,சுயமரியாதையை, சமூக நீதியை, மொழியுரி மையை,கற்றுக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் எப்போதும் திகழ்ந்திருக்கிறது.
அயோத்திதாச பண்டிதர் ஆரம்பித்து வைத்த இந்த வரலாற்றை நீதிக் கட்சி நிலைநாட்டியது.
நீதிக்கட்சியை உருவாக்கிய மூவரில் இருவர் மருத்துவர்களே.
மருத்துவர் டி..எம்.நாயர் (1868-1919)
மருத்துவர் சி.நடேசனார் (1875-1937)
மருத்துவர் டி.எம்.நாயர்:
பெரியாராலேயே 'திராவிட லெனின்' என்று அழைக்கப்பட்டவர். பிரிட்டன் பிரான்சில் மருத்துவப் படிப்புகளை முடித்த இவர் நீதிக்கட்சியை தொடங்கிய வர்களில் ஒருவர்... 'ஜஸ்டிஸ்' பத்திரிகையின் ஆசிரி யராக இருந்தவர்.
மருத்துவர் சி.நடேசனார்:
பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்டபோது 'திராவிட இல்லம்' விடு தியை தொடங்கினார். சென்னை அய்க்கிய சங்கம், சென்னை 'பப்ளிக் சர்விஸ் கமிஷன்' அமைப்பதில் இவரின் பங்கு அளப்பரியது.
தீண்டாமை ஒழிப்பு, ஆலய பிரவேசம், ஆதி திராவிட நலனுக்காக மிகத் தீவிரமாக போராடினார்.
தமிழகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதில் நீதிக்கட்சியின் பங்கு அளப் பரியது. அதன் தள கர்த்தாக்கள் இருவர் மருத்துவர் என்பது மருத்துவ உலகிற்கு வரலாற்றுப் பெருமை.
மருத்துவ உலகம் மருத்ததுவம் தாண்டி சமுகத் திற்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டிய வரலாற்று கடமையை சேகுவேராக்களும், நடேசனார்களும், நாயர்களும், முத்துலெட்சுமிகளும், ரவீந்திரநாத்து களும் நமக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!
ஸ்டெதாஸ்கோப்புகள் சமூக இதயத் துடிப்பு களையும் கேட்கட்டும்!
நம்பிக்கையோடு
மருத்துவர் ச.தட்சிணாமூர்த்தி,
தலைவர் - திசைகள் அமைப்பு,
அறந்தாங்கி, 9159969415
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக