• Viduthalai
சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு
சென்னை, செப். 4- அரசு வேலைவாய்ப்பில் 3 சத வீத இடஒதுக்கீடு பெறு வதற்கான விளையாட்டு களில் ஒன்றாக சிலம்பமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் இளைஞர் நலன், விளை யாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்குப் பதில் அளித்து, அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று (3.9.2021) வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:
மாநிலத்தின் 4 மண் டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளது. இங்குஉயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையைஅடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளன. இதற்கான தொழில்நுட்ப பொருளா தார சாத்தியக்கூறு அறிக் கையை தயாரிக்க ஆலோ சகர்களை நியமிக்க உத் தேசிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களால் உரு வாக்கப்பட்ட, வரலாற் றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம், அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக் கொள் ளப்படும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பு டைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதி யாக தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மய்யம் தொடங் கப்படும்.
கிராமப்புற மக்களின் உடற்தகுதி, ஆரோக்கி யத்தை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டுப் பல்கலைக்கழகமானது அதன் உறுப்புக் கல்லூ ரிகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் மூலம் அரு கில்உள்ள கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமப்புற பயிற்சி திட் டத்தின் கீழ் உடற்தகுதி பயிற்சிமேற்கொள்ளும்.
மக்களின் நன்மைக் காக யோகாசனங்கள், மனக்கட்டுப்பாடு போன் றவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கி யத்துக்காக தமிழ்நாடு உடற்கல்வியியல், விளை யாட்டுப் பல்கலைக்கழகம் மூலம் ‘யோகா’என்னும் செயலி உருவாக்கப்படும்.
வேலைவாய்ப்பு பிரிவின் மூலம் தமிழ்நாடு உடற்கல்வியியல், விளை யாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், நேர்முகத் தேர் வுக்கான பல்வேறு பயிற் சிகள் வழங்கப்படும்.
விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வளாகத் தில் உள்ள கட்டமைப்பு வசதிகளை ‘கேலோ இந் தியா’ திட்டம் மூலம் தரம் உயர்த்தவும், புதிதாக உரு வாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 11 அறிவிப்பு களை பேரவையில் அமைச் சர் வெளியிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக