பக்கங்கள்

புதன், 26 மே, 2021

102 ஆவது சட்டப்பிரிவில் 342-ஏ பிரிவு கூறுவது என்ன?


காணொலியில் தமிழர் தலைவர்  விளக்கம்

சென்னை, மே 21 102 ஆவது சட்டப் பிரிவில் 342-ஏ பிரிவு கூறுவது என்ன? என்பதற்கு விளக்கத்தைக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இட ஒதுக்கீடுக்கு ஆபத்து

கடந்த 13.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘இட ஒதுக்கீடுக்கு ஆபத்து'' என்ற  தலைப்பில் நடை பெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொடக்கவுரையாற்ற,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

அப்படியில்லை அது. மராத்தா பிரச்சினை என்பது ஒரு பகுதியில்தான். அதைவிட மிக முக்கிய மான பகுதி - மாநிலங்களுக்கு (‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கு' இட ஒதுக் கீட்டைத் தர உரிமை இல்லை) உரிமையில்லை - அதை முடிவு செய்யவேண்டியது மத்திய அரசு என்று சொல்லுவதற்குரிய அளவிற்கு, 102 ஆவது அரசமைப்புச் சட்டப் பிரிவில், 342-ஏ ஆவது பிரிவை உருவாக்கியிருக்கிறார்கள்.

சட்ட ரீதியாக உங்களுக்கு சொல்கிறேன். புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கும். இது அறிவார்ந்த அரங்கம் என்பதால், அதைச் சொல்கிறேன்.

 Article 342A in The Constitution of India

(102 ஆவது அரசமைப்புச் சட்டப் பிரிவின்மூலம்)

Socially and educationally backward classes

(1) The President may with respect to any State or Union territory, and where it is a State, after consultation with the Governor thereof, by public notification, specify the socially and educationally backward classes which shall for the purposes of this Constitution be deemed to be socially and educationally backward classes in relation to that State or Union territory, as the case may be. (2) Parliament may by law include in or exclude from the Central List of socially and educationally backward classes specified in a notification issued under clause (1) any socially and educationally backward class, but save as aforesaid a notification issued under the said clause shall not be varied by any subsequent notification. 

அதாவது அந்த அதிகாரம் மாநிலங்களுக்கு என இருந்தது அப்படியே தூக்கி எடுத்தால், இப்பொழுது மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இருக்கிறது.

ஆனால், இப்போது மத்திய அரசு எல்லாவற்றையும் தன் வசம் வைத்துக் கொள்ளவேண்டும் என்று நினைக்கிறது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் சொன் னது போல், பரிந்துரை செய்யலாம். இதில் மாநிலங் கள் பாதிக்கப்படாது என்று மத்திய அரசின் வழக்கு ரைஞரான கே.கே.வேணுகோபால் எழுந்து சொல் கிறார்; மாநில உரிமைகள் பறிக்கப்படவில்லை என்று.

ஆனால், சட்டத்தில் என்ன இருக்கிறது என்பதுதான் முக்கியமானதாகும். தனி நபர் கருத்து நிற்காது.

அரசமைப்புச் சட்டப் பிரிவான 366 ஆவது பிரிவு

அரசமைப்புச் சட்டப் பிரிவான 366 ஆவது பிரிவில் - வரையறைகள் என்று இருக்கிறது.

Article 366 in The Constitution of India

விளக்கங்கள் (Definitions) கூறப்படுகின்றன.

In this Constitution, unless the context otherwise requires, the following expressions have the meanings hereby respectively assigned to them, that is to say.

அதில், 26-சி என்ற உட்பிரிவில்,

26C “socially and educationally backward classes”  இதுதான் 15(4)இல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதுதான் முதல் அரசமைப்புச் சட்டத்தில் இருப்பது - இதுதான் அம்பேத்கர் கொண்டு வந்தது - இதுதான் நேரு கொண்டு வந்தது - இதனால் தான் கம்யூனல் ஜி.ஓ. ரத்தானதற்குப் பிறகு, அந்தத் தீய விளைவுகளில் இருந்து காப்பாற்றப்பட்டது. படிப்பு, கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது.

இதே வார்த்தையை 340-லிருந்து எடுக்கப்பட்டது என்று சொல்லி, அதற்கு விளக்கங்களையெல்லாம் சொன்னார்கள். அதில் பொருளாதாரத்தைப் போடக் கூடாது என்று தவிர்த்துவிட்டுத்தான் இரண்டே வார்த் தையைப் போட்டார்கள். “socially and educationally backward classes” என்று அவர்கள் அடையாளம் கண்டார்கள். அதில் ஸ்டேட் என்று வருகின்றபொழுது, மாநில அரசுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்ததை அறவே நீக்கிய ஒரு நிலையை உண்டாக்கி விட்டார்கள்.

26-சி என்ற உட்பிரிவில்,

26C) “socially and educationally backward classes” means such backward classes as are so deemed under article 342A for the purposes of this Constitution;

ஆக, இதன்படி பார்த்தால், 342-ஏ பிரிவின்படி பார்த்தால், இந்த அரசமைப்புச் சட்டப் பிரிவின்படி பார்த்தால், மத்திய அரசாங்கம் என்ன சொல்கிறதோ, அதுதான்  backward classes என்பதை இனி முடிவு செய்யும் உரிமை உள்ளது.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 342 எப்படி பயன் படுத்தப்பட்டு இருக்கிறது?

ஆகவே, மத்திய அரசுக்குத்தான் அந்த உரிமை என்று இந்த வாக்கியத்தைத்தான் மராத்தா தீர்ப்பில். 5 நீதிபதிகள் எடுத்துக்காட்டி, மாநில அரசுகளுக்கு உரிமை இல்லை. மத்திய அரசுக்குத்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 342 எப்படி பயன் படுத்தப்பட்டு இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

ஆக, மராத்தா வழக்கின் தீர்ப்பு மகாராட்டிரத்தை பாதிப்பது மட்டுமல்ல; எல்லா மாநிலங்களையும் பாதிக்கக் கூடியதாகும்.

மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமையே கிடை யாது என்று எடுத்துச் சொல்லி, நீதிபதிகள் ஆணி அடிக்கிறார்கள் தீர்ப்பில்.

எனவே, இந்தத் தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய தீர்ப்பாகும்.

ஏனென்றால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தில் இருப்பது என்ன?

‘‘ஸ்டேட்'' என்பதற்கு என்ன அர்த்தம்?

In this Part, 12  என்று வருகின்ற நேரத்தில், அவர்கள் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தை மிக முக்கியமான ஒரு சொல். அந்த சொல்லையும் சட்ட ரீதியாகப் பயன்படுத்தலாம்.

இது கொஞ்சம் நுணுக்கமானது. ஆகவே, அதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதைச் சுட்டிக்காட்டினால்,

In this Part, unless the context otherwise requires, "State" includes the Government and Parliament of India and the Government and the Legislature of each of the States and all local or other authorities within the territory of India.

இந்தக் குறிப்பிட்ட பகுதி - பொத்தாம் பொதுவில் அதில் இருக்கிறது. குறிப்பிட்ட பகுதி என்று இதில் இருக்கிறது. இரண்டையும் வித்தியாசப்படுத்த வேண் டும். சட்ட நுணுக்கமான பகுதிகள். இதற்குமேல் போக வேண்டிய அவசியமில்லை.

ஆகவே நண்பர்களே, 342-A என்கிற பிரிவை உள்ளே தள்ளுகிறார்கள்.

மாநில அரசுகள்தானே அடையாளம் காண முடி யும்; மாநில அரசுகளிடம்தானே நீண்ட காலமாக பட்டியல் வரலாறு உண்டு. மத்திய அரசிடம் பட்டியல் வரலாறு இல்லையே!

மாநில அதிகாரத்தைப் பறித்திருக்கிறார்கள்

ஆனால், மராத்தா வழக்கில் 5 நீதிபதிகள், socially and educationally  என்று சொல்லக்கூடியதை மத்திய அரசாங்கம் தான் நிர்ணயிக்க முடியும் என்று 366 பிரிவின் உட்பிரிவான 26-சியைப் பயன் படுத்தி இருக்கிறார்கள். மாநில அதிகாரத்தைப் பறித்திருக்கிறார்கள்.

இங்கேதான் ஆபத்து இருக்கிறது!

ஆகவே, மாநில அரசுகள் முன்வந்து, வலி யுறுத்தி, இதற்கான திருத்தத்தை வலியுறுத்தி பதிவு செய்யவேண்டும். அதை வலியுறுத்தி சட்டத் திருத் தத்தை நிறைவேற்றினாலொழிய ஆபத்து எப்போதும் உண்டு. எதிர்காலத்தில் எந்த நேரத்திலும், எல்லா பட்டியலும் அவர்கள் வசம் போய்விடும். இப்பொழுதே போய்விட்டது - அதற்கான அறிகுறிதான் இது. மாநில அரசாங்கங்களுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்று சொல்லக்கூடிய நிலை.

அதற்கடுத்து நண்பர்களே, அடுத்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு வருவோம்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டில், உள் ஒதுக்கீடு எல்லாம் இருக்கிறது. 30 சதவிகிதம், 20 சதவிகிதம்; 18 சதவிகிதம்; 1 சதவிகிதம். இப்பொழுது அண்மைக்காலத்தில் 10.5 சதவிகிதம்; அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கு ஒதுக் கீடுகள் உள்ளன.

எல்லா இட ஒதுக்கீடுகளிலும் வேலை வாய்ப்புகள், கல்வி இவை அத்தனையும் பறிபோகக்கூடிய ஆபத்து ஏற்படலாம்; ஆனால், உடனடியாக வராது. என்றாலும் வராது என்று நாம் மெத்தனமாக இருக்கக் கூடாது.

ஆங்கிலத்தில், சட்ட ரீதியாக சொல்லும்பொழுது ஒரு கருத்தைச் சொல்லுவார்கள்.

‘‘By Way of Abundant Caution'', we say this

‘‘போதிய மிகுந்த முன்னெச்சரிக்கைக்காக'' இதை எடுத்துச் சொல்கிறோம்.

கவனத்தோடும் கவலையோடும் இதை எடுத்துச் சொல்லவேண்டும்.

27 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்துவிட்ட ஒன்று!

அதுபோன்று 69 சதவிகித இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில், 27 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்துவிட்ட ஒன்று.

அதற்கு ஆபத்து ஒன்றும் எளிதில் வர முடியாது.

ஆனால், நம்மூரில் சிலர் இருக்கிறார்கள்; அவர் களுக்கு ஆரம்பத்தில் இருந்தே 69 சதவிகித இட ஒதுக்கீடு கண்களை உறுத்திக் கொண்டேயிருக்கிறது. எப்படியாவது இதை ஒழித்துவிட வேண்டும் என்று.

வழக்கு, வழக்கு என்று எத்தனை வழக்குகளைச் சந்திப்பது - எவ்வளவு காலத்திற்குச் சந்திப்பது.

69 சதவிகித இட ஒதுக்கீட்டின் வரலாற்றைப்பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், தோழர் கரு ணாநிதி அவர்கள் அருமையாகப் பதிவு செய்திருக் கிறார். ‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?'' என்ற தலைப்பில் தமிழில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இந்த நூலை முழு வதுமாகப் படித்தீர்கள் என்றால், இட ஒதுக்கீடு வரலாறுகளையெல்லாம் தெரிந்துகொள்ளலாம். ஆங் கிலத்திலும் அந்த நூல் வெளிவந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் அவர்கள் முன்னுரையையும் எழுதியிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, எப்படி இந்த 69 சதவிகித இட ஒதுக்கீடு 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் மிக பாதுகாப்பாக இருக்கிறது என்பதை விளக்கு வதற்கு, அப்போதேகூட மிகத் தெளிவான ஒரு துண்டறிக்கையைக்கூட நாம் வெளியிட்டு இருக் கிறோம். அந்தத் துண்டறிக்கையையும்கூட நம்மு டைய கருணாநிதி அவர்கள், இந்த புத்தகத்தில் இணைத்திருக்கிறார்.

ஆனால், குறிப்பிட்ட சிலர், இந்த இட ஒதுக்கீடு நீடிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து என்று சொல்வதில் இரண்டு வகையானவர்கள் இருக்கிறார்கள்.

ஒன்று, கவலையோடு அதைப் பார்க்கக் கூடிய வர்கள்; அது நியாயமான கவலையாகும். பொறுப் பானவர்கள் அவர்கள்.

அடுத்து இன்னொரு சாரார், 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வரும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களே, அவர்கள் சொல்வது, மற்றவர்களை எல்லாம் பலகீனப்படுத்துவதற்கும், நம்பிக்கையை இழக்கக் கூடிய அளவிற்கு செய்வதுமான ஒரு தொடர் பிரச்சாரப் புழுதி!

இதில் நம்பிக்கை இழக்கக்கூடிய அளவிற்கு இல்லை. இருந்தாலும், நான் முன்பே சொன்னதுபோல்,

‘By Way of Abundant Caution, we say this’

போதிய மிகுந்த முன்னெச்சரிக்கையோடு இதை எடுத்துச் சொல்லவேண்டும். கவனத்தோடு, கவலை யோடு இதை எடுத்துச் சொல்லவேண்டும்.

ஓய்வு பெற்ற ஒரு நீதிபதியின் கருத்து

‘9 ஆவது அட்டவணை பாதுகாப்பு' என்று சொன்னோம் அல்லவா - அதற்கு இப்பொழுதுகூட ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி கருத்து ஒன்றைச் சொல்கிறார்.

‘‘9 ஆவது அட்டவணை பாதுகாப்பிற்காக வழங்கப் பட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யலாம்'' என்று சொல்கிறார்.

அது எவ்வளவு தூரம் சரியானது என்பது முதல் கேள்வி.

ஆனால், வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இந்த 9 ஆவது அட்டவணை ஏன் வந்தது? எப்படி வந்தது? இதுவே ஆராய்ச்சிக்குரிய தனித் தலைப்பாகவே பேசக்கூடிய விஷயமாகும்.

முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்திற்கே அவசியம் ஏற்பட்டுத்தான், அதன் விளைவாக 9 ஆவது அட்டவணை பின்னாளில் வந்தது.

நிலச் சீர்திருத்த சட்டங்களை, நில உச்சவரம்பு சட்டத்தைக் கொண்டு வந்து, ஜமீன்தாரி ஒழிப்பு முறையை கொண்டு வந்தார் பிரதமர் நேரு அவர்கள்.

அதை எதிர்த்து அடிக்கடி நீதிமன்றம் சென்றார்கள். அப்பொழுது நீதிமன்றங்களுக்குத் தேவையில்லாத, சமூகநீதி பிரச்சினைகளையெல்லாம், ஒரு புரட்சிகரமான சிந்தனைகளையெல்லாம் தடுத்துவிடுகின்றன என்று அந்த அதிகாரத்தை எடுத்து, தனியே சில விஷயங்கள் நீதிமன்றங்களுக்குப் போகவேண்டிய அவசியமில்லை.

திராவிடர் கழகத்திற்கே உண்டு - நமக்கே உண்டு!

நாடாளுமன்றத்தில் மக்களுடைய கருத்துகள் வந்ததே - காலங்காலமாக இருந்த அநீதிகளைப் போக்குவதற்காக உருவாகும் சட்டங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நிலச் சீர்திருத்த சட்டங்களுக்காக உருவானது. முதன் முறையாக, சமூகநீதிச் சட்டத்தையும் அதில் இணைக்கலாம் என்று காட்டிய பெருமை திராவிடர் கழகத்திற்கே உண்டு - நமக்கே உண்டு.

அந்த முறையில் இடம்பெற்றதுதான் - ‘‘சமூகநீதி காத்த வீராங்கனை'' என்று நம்மால் போற்றப்பட்ட, செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது கொண்டு வந்து, நம்முடைய கருத்தை ஏற்று, வாதாடி அவர்கள் நிறைவேற்றிய - 76 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் என்ற 9 ஆவது அட்டவணை தக்கப் பாதுகாப்புடன் கூடியது.

மராத்தா வழக்கில் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அது என்னவென்றால்,

அந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் சொல் கிறார், ‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கையும் இணைத்து நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும்'' என்று.

ஆனால், நீதிபதிகள் சொன்னார்கள், ‘‘69 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்த வழக்கில் இணைத்து வாதாட வேண்டிய அவசியமில்லை. அது  9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் இருக்கிறது. ஆகவே, அதையும் சேர்த்து விசாரிக்கவேண்டிய அவசிய மில்லை'' என்றார்கள்.

விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளாமல் நிறைவேற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது

என்றாலும்,  342-A - வரையறை  - மத்திய அரசு - இவற்றை இன்றைக்குத் தொலைநோக்கோடு பார்க்க வேண்டும். நேரிடையாக எப்பொழுதும் அவர்கள் வருவதில்லை. மறைமுகமாகத்தான் வருவார்கள்; அதுவும் நாம் ஏமாந்த நேரத்தில், கரோனா காலகட்டம் போன்ற காலகட்டத்தில் - நாடாளுமன்றத்தில் பெரும் பான்மை இருக்கின்றது என்கிற காரணத்தினால், விவாதத்திற்கே எடுத்துக்கொள்ளாமல் நிறைவேற்றக் கூடிய ஆபத்து இருக்கிறது.

ஆகவேதான், எச்சரிக்கை செய்யவேண்டும் என்ற அளவில், இதைத் தெளிவாக எடுத்துச் சுட்டிக் காட்டுகிறோம்.

எனவே, இந்த கொயல்கோ என்ற ஒன்று இருக்கிறது. அதில் 9 ஆவது அட்டவணைக்கு ஆபத்து வரும் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பேசுகிறார்கள்.

அந்தத் தீர்ப்பை அடிப்படையாக வைத்துப் பார்த் தால்கூட, 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு பெற்ற 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அவ்வளவு சீக்கிரம் நகர்த்திவிட முடியாது. சட்ட வலிமை இருக்கிறது இதற்கு. அந்தத் தீர்ப்பின்படி பார்த்தாலும்!

இதுவரையில் பல தீர்ப்புகள், பல வழக்குகள் வந்தி ருக்கின்றன. அப்படி வந்திருக்கின்ற நிலையில், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பினை எதிர்த்து ஏராளமான வழக்குகள் வந்தாலும்கூட, 284 சட்டங்கள் - 9ஆவது அட்டவணைப் பாதுகாப்பில் வந்திருக்கின்றன. இது வரையில் எதுவுமே சேலஞ்ச் ஆகவில்லை.

‘‘கொயல்கோ தீர்ப்புப்படி'' பார்த்தால்கூட

அப்படியே வந்தாலும் - எப்படிப்பட்ட வழக்கு அதில் வர முடியும்? அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு ஆபத்தை உருவாக்கக்கூடிய - அதைப்பற்றிய பிரச்சினை இருந்தால்தான், அந்த வழக்கையே எடுக்க முடியும். 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புப்படி - ‘‘கொயல்கோ தீர்ப்புப்படி'' பார்த்தால்கூட - அது இதற்கு வராது. இதுதான் தெளிவான ஒரு வாதம்.

எனவே, அந்த ஆபத்து என்பது ரிமோட்- தொலைதூரத்தில் உள்ளது. ஆனாலும், அது அருகில் கொண்டுவரக் கூடிய சூழல்கள் உருவாக்கப்படலாம்.

எனவே, மாநில உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.

அந்த அடிப்படையிலே உள்ளே நுழைந்துவிட்டு, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஆபத்து வரக்கூடாது.

இன்னொன்றையும் அந்த ஓய்வு பெற்ற நீதிபதி சொல்கிறார்,

‘‘69 சதவிகித இட ஒதுக்கீடு - சயிண்டிபிக் டேட்டா வோடு வரவில்லை'' என்கிறார்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக சட்டத்தை உருவாக்கும்பொழுதே, சட்டத்தின் காரண காரிய வழிமுறையை தெளிவாகப் போட்டிருக்கிறார்கள்.

80 விழுக்காட்டினருக்கு மேலே இருக்கின்ற பிற் படுத்தப்பட்டவர்களுக்குத்தான் 50 விழுக்காடுதான். இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று விளக்கப்பட்டது நீதிமன்றத்திலும்.

வெறும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல இந்த சட்டம். எஸ்.சி., எஸ்.டி., ஆகியோரையும் சேர்த் ததுதான்!

‘தாழ்த்தப்பட்டவர்கள்' என்கிற சொல்லை நான் பயன்படுத்துவது யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல.

என்னைப் பிற்படுத்தப்பட்டவன் ஆக்கியது யார்?

ஒருவர் சொல்கிறார், ‘‘ஆகா, எனக்கு அந்த சொல் லைப் பார்த்து இவர்மீது கோபம் வருகிறது'' என்கிறார்.

கோபம் வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்தச் சொல். ஆனால், யார்மீது உங்களுக்குக் கோபம் வருகிறது. இதைச் சுட்டிக்காட்டுபவரின் மேல் உங்களுக்குக் கோபம் வருகிறதே தவிர, இதை செய்தவன்மேல் கோபம் வரவில்லையே! அதற்கு யார் மூலகாரணமாக இருக்கிறானோ அவன்மேல் அல்லவா உங்களுக்குக் கோபம் வரவேண்டும். அந்தக் கோபத்தை உருவாக்கவேண்டும்.

‘பிற்படுத்தப்பட்டவன்' என்று நான் சொல்லும் பொழுது, என்னைப் பிற்படுத்தப்பட்டவன் ஆக்கியது யார்?

‘‘என்னை வரிசையிலிருந்து கீழே தள்ளியவன் யார்?''

‘‘என்னை அடித்தளத்திற்குக் கொண்டு சென்றவன் யார்?''

‘‘என்னைத் தாழ்த்தியவன் யார்?''

அவனை நான் தேடுகிறேன் என்றுதானே சொல்ல வேண்டும்?

அதுதான் உண்மையான கோபத்திற்கு அடை யாளம்; அதுதான் சமத்துவத்திற்கு அடையாளம் - வழிவகுக்கும்.

எனவேதான் நண்பர்களே,

இதில் சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்று சொன்னால், மிக ஆழமாக, தெளிவாக,

69 சதவிகித இட ஒதுக்கீட்டில்,

எஸ்.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., எல்லா பிரிவினரும் இருக்கிறார்கள். இப்பொழுது உள் ஒதுக்கீடு உள்பட.

இதில் கை வைத்து ஆட்டினால், எல்லாமே போய்விடும்.

ஆகையால்தான் அவன் என்ன செய்கிறான், இதை தனியாக எடுக்கவேண்டாம் - மாநிலங்களுக்கே உரிமையில்லை; மத்திய அரசாங்கத்திற்குத்தான் உரிமை என்று ஆக்கிவிட்டால், பிறகு இதை சுலபமாக ஒழித்துவிடலாம் என்கிற பெரிய திட்டம். அதன் மூலமாக கோளாறு ஏற்படுத்த  ஒரு வழிமுறையை ஏற்படுத்துகிறார்கள்.

அந்த ஆபத்து உடனடியாக வராது.

‘‘சயிண்டிபிக்காக'' இதில் ஒன்றையும் சேர்க்கவில்லை என்கிற வாதத்தை வைக்கிறார்கள் எங்கே பார்த்தாலும்.

யார் சொன்னது?

அந்த சட்டத்தை எழுதும்பொழுதே, ஜெயலலிதா அம்மையார் அவர்கள் ஆட்சியில், 80 விழுக்காட்டிற்கு மேல் இருக்கிறோம் என்று உச்சநீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள்; மூத்த வழக்குரைஞர் பராசரன் வாதம் செய்திருக்கிறார். மூத்த வழக்குரைஞர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கபாடியா என்ற தலைமை நீதிபதி தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

மீண்டும் மீண்டும் அதையே சொல்வது, மீண்டும் மீண்டும் அதை உருவாக்குவது - ஊடகங்களுடைய உதவி - உயர்ஜாதிக்காரர்களின் ஆதிக்கத்தை வைத்துத்தான்.

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்,

இரண்டு பேர் பேசிக் கொள்கிறார்கள்;

‘‘என்னங்க, நல்லா இருக்கீங்களா?''

‘‘நன்றாகத்தானே இருக்கிறேன்.''

“இல்லையே, ஆள் மிகவும் டல்லாக இருக்கிறீர்களே''

‘‘இல்லையே!''

‘‘முகம் எல்லாம் சோர்வாக இருக்கிறதே, முன்பு போல் உங்களுடைய உருவம் இல்லையே” என்று நான்கு பேர் தொடர்ந்து ஒருவரை கேட்டால்,

நன்றாக இருப்பவனும்கூட, கடைசியில் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவான்.

ஒடுக்க முறை - ஒரு போர் முறை

அதுபோன்று மனோதத்துவ ரீதியான ‘Whispering Campaign'  ஒடுக்கு முறை - ஒரு போர் முறை - இதை உயர்ஜாதிக்காரர்களும், ஊடகங்களும் செய்வதில் வல்லாதி வல்லவர்கள் - அவாள்!

ஆகவே, அதை மிக சாமர்த்தியமாக செய்து வருகிறார்கள்.

‘‘சயிண்டிபிக்காக'' எந்த ஆதாரமும் இல்லை என்று யார் சொன்னது?

50 சதவிகித்திற்குமேல் இட ஒதுக்கீடு போகக்கூடாது என்பதற்குத்தான் அப்படி ஆதாரம் இல்லையே தவிர, 69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு நிச்சயம் ஆதாரம் உண்டு.

அம்பாசங்கர் கமிசன் என்று இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிசன்

இரண்டாவதாக, 50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டபொழுதே, அதிகமாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று கேள்விப் பட்டபொழுதே, நீங்கள் புள்ளி விவரத்தை எடுங்கள் என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அம்பாசங்கர் கமிசன் என்று இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் கமிசன் அமைக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்திற்கே சென்று, அது முடிவு செய்யப்பட்ட விஷயம். அதை உச்சநீதிமன்றம் மாறுபட்ட கருத்து கூறவில்லை!

சட்ட நிபுணர்கள் சிந்திக்கவேண்டிய விஷயம் இது. நான் ஒரு சாதாரண வழக்குரைஞர் என்கிற முறையில், சட்டம் படித்தவன் என்ற முறையில் என்னுடைய கருத்தை வைக்கிறேன்.

ஒருமுறை முடிவு செய்த விஷயத்தை - மீண்டும் மீண்டும் வேறு ஒரு ரூபத்தில் கொண்டு வருகிறார்கள். (Res Judicata)

ஆகவே நண்பர்களே!

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு உடனடியான ஆபத்து இல்லை. உடனடியாக என்பதைக் கோடிட்டுக் காட்டுங்கள்.

ஆனால், ஆபத்து வராது  என்று நாம் உறுதியாக, அசதியாக, அசமந்தமாக, அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

எனவேதான், போதிய எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என்பதுதான் மிக முக்கியம்.

எல்லாவற்றையும்விட, மாநில உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. கூட்டாட்சித் தத்துவத்தினுடைய உரிமைகளை, கபளீகரம் செய்யக்கூடிய பேரபாயம் இந்தத் தீர்ப்பின் மூலமாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலமாகவும் அதற்கு அடிப்படையாக அமைந்திருக்கின்ற 342-ஏ பிரிவும், அதற்கு விளக்கம் சொல்கின்ற 366 ஆவது பிரிவின் உட்பிரிவான 26-சி என்பதில் இருக்கக்கூடிய வரையறை பிரிவும் இருப்பது இவையெல்லாம் மாற்றப்பட வேண்டும் என்பதை, மாநில சட்டமன்றங்களில் தீர்மானங்களாக நிறைவேற்றுவது மட்டுமல்லாமல், நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை வலியுறுத்தவேண்டும். சட்ட அறிஞர்களும் வலியுறுத்தவேண்டும்.

நீதியரசர் போன்றவர்களும், நீதிபதிகளும், ஓய்வு பெற்றவர் களும், அறிஞர்களும் ஆங்காங்கே கருத்தரங்கங்களை நடத்தி, மக்களுக்கு ஒரு நல்ல விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்.

“Eternal Vigilance is the price for our liberty” என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு.

எப்பொழுதும் கவனமாக இருப்பதுதான், சுதந்திரத்தை எப்போதும் பாதுகாப்பதற்கு ஒரு சரியான விலையாகும் என்பதுதான் அதனுடைய தத்துவம்.

சமூகநீதியை உயிரினும் - மேலாகப் பாதுகாப்போம்!

ஆகவே, அதன்படி இருக்கவேண்டும் என்று கேட்டு, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்! வளர்க சமூகநீதி!!

பாதுகாப்போம், பாதுகாப்போம்

சமூகநீதியை உயிரினும்

மேலாகப் பாதுகாப்போம்!

அது நம் தலைவர்கள் நமக்குத் தந்த சொத்து

அதை ஒருபோதும் அழித்துவிட முடியாது

வேடிக்கை பார்க்க மாட்டோம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

செவ்வாய், 25 மே, 2021

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு இத்தனை சதவிகிதம்தான் என்ற வரையறை உண்டா?


காணொலியில் தமிழர் தலைவரின் வினா?

சென்னை, மே 19 இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீடு இத்தனை சதிவிகிதம்தான் என்ற வரையறை உண்டா? என்று என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வினா எழுப்பினார்.

இட ஒதுக்கீடுக்கு ஆபத்து

கடந்த 13.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘இட ஒதுக்கீடுக்கு ஆபத்து'' என்ற  தலைப்பில் நடை பெற்ற காணொலி கருத்தரங்கத்தில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி அவர்கள் தொடக்கவுரையாற்ற,  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய  தொடக்க வுரையாற்றிய கழக வெளியுறவுச் செய லாளர் அருமைத் தோழர் கோ.கருணாநிதி அவர் களே, கழக துணைத் தலைவர் உள்பட இந்த அறிவார்ந்த அவையில் குழுமியிருக்கக்கூடிய அருமைத் தோழர்களே, கொள்கையாளர்களே, அன்பர்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இட ஒதுக்கீடு, சமூகநீதி என்பதற்கு அடிப்படையே அந்தந்த மாநிலங்களில் இருந்து கிளம்புவதாகும். அடிப்படையான சில கருத்துகளை முதலில் சுட்டிக் காட்டினால், பிறகு நான் மற்ற செய்திகளை விளக்கமாகச் சொல்ல சரியாக இருக்கும்.

ஏன் இட ஒதுக்கீடு?

மனுதர்மத்தில்தான் ஆரம்பித்தார்கள்!

இட ஒதுக்கீட்டை யார் ஆரம்பித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். மனுதர்மத்தில்தான் ஆரம்பித் தார்கள்!

சரி, அதிலிருந்த அநீதிகளைப் போக்குவதற்காக, நீக்குவதற்காக ஒரு பரிகாரம்தான் இன்றைக்கு இருக்கும் இட ஒதுக்கீடு என்ற சமூகநீதிச் சட்டங்கள்.

காலங்காலமாக கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, அதன்காரணமாக வேலை வாய்ப்புகளும் கிட்டாத ஒரு சூழ்நிலை இருந்தது.

ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, சிறுபான்மை மக்கள் அத்தனை பேரையும், ‘‘அடிமை ஜாதிகள்'' (Servile Classes) என்று ஒரே வார்த்தையில் அழகாக டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சொன்னார். அப்படிப்பட்ட மக்கள் மத்தியில், அவர் களுக்கு எழுச்சியை உண்டாக்குவதற்காக செய்யப் பட்ட சிறப்பான ஒரு தொடக்கம்தான் இட ஒதுக்கீடு.

அதைத் தூண்டுவது என்பது மிக முக்கியம். எப்படி ஒரு விமானம் புரெப்பல்சன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு சுற்றி, பிறகு மேலே பறக்கத் தொடங்குகிறதோ - அதுபோலத்தான் அதற்கு வேண்டிய உந்து சக்தியாகத்தான் இட ஒதுக்கீடு காலங்காலமாக இருக் கிறது என்று உச்சநீதிமன்றத்திலேயே பல நீதிபதிகள் கருத்துகளை சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, அந்தக் கருத்தினுடைய அடிப்படையில், தெளிவாகச் சொல்லவேண்டிய சில கருத்துகள் இருக் கின்றன.

யாருக்கோ வந்த விருந்து என்று இருப்பது போன்ற ஒரு நிலை!

இன்றைக்கு இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டுக்கு எதிரிகளாக இருக்கக்கூடிய ஆதிக்க சக்திகள் - குறிப்பாக பார்ப் பனர்கள், ‘‘முன்னேறியவர்கள்'' என்று தங்களைக் கருதிக்கொண்டு ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள்  - இவர்கள் காலங்காலமாக நேரிடையாக இந்தப் பிரச் சினையில் கை வைப்பதற்குப் பதிலாக, மறைமுகமாக தங்களுக்கு இருக்கின்ற நீதிமன்ற ஆதிக்கங்கள், ஊடக செல்வாக்குகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, எந்த மக்கள் பயனடைய வேண்டியவர்களோ, எந்த மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ, அந்த மக்களுக்கே அதுபற்றி புரியாத அளவிற்கு - ஒன்று குழப்புவது; அல்லது அவர்கள் அதைப்பற்றி கவலைப்படாமல், யாருக்கோ வந்த விருந்து என்று இருப்பது போன்ற ஒரு நிலையை உருவாக்கி வைத்தி ருக்கிறார்கள்.

இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை இந்தியாவிற்கே வழிகாட்டியாக இருக்கக்கூடிய மாநிலங்கள் தமிழ கமும், கருநாடகமும்தான்! காலங்காலமாக இந்த உரிமை உணர்வு தென்னகத்தில் இருந்துதான் வந்தது. அதற்கடுத்து சொல்லவேண்டுமானால், மராட்டியத்தில் முன்பு ஜோதிபாபூலே காலத்தில் தொடங்கி, சாகுமகராஜ் அவர்கள் காலத்தில், ஒரு நூற்றாண்டுக்கு முன்பே 50 சதவிகிதம் கொடுக்கக்கூடிய அளவிற்கு முன்பு இருந்தாலும், அதனைக் கொள்கை ரீதியாக எடுத்துக்கொண்டு வந்து சிறப்பாக செய்த வரலாறு தமிழ்நாட்டைப் பொறுத்தது; கருநாடகத்தைப் பொறுத்தது வரலாற்றில்! இது பழைய செய்தி.

இடஒதுக்கீட்டைப் பொறுத்தவரையில், இன்றைக்கு ஏற்பட்டு இருக்கின்ற பிரச்சினைகள் என்ன? தொடக்க வுரையாற்றிய கழக வெளியுறவுத் துறை செயலாளர் கருணாநிதி அவர்கள் எல்லாவற்றையுமே அழகாக விளக்கியிருக்கிறார்.

மாநிலங்கள்தான் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தக் கூடியவைகளாக இருக்கின்றன. அதற்குக் காரணம், மாநிலங்களுக்குத்தான் மக்கள் இருக்கிறார்கள் - ஆளுவதற்கு!

ஜாதி என்பது நிலைத்துவிட்ட உண்மை. அது ஒரு நாள் ஒழிக்கப்பட்டால், அது வேறு பிரச் சினை.‘‘இட ஒதுக்கீடு ஜாதி அடிப்படையிலா?'' என்று கேட்பவர்களுக்கு, பலமுறை பதில் சொல்லியிருக்கி றோம்.

மனித குலத்தில் பேதமில்லை என்று சொல்லுங்கள்!

‘‘ஜாதியை ஒழித்துவிடுங்கள்; நாளைக்கே அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள்; ஒரே தேசம், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ரேசன் கார்டு என்று ஒற்றை வரியில் சொல்லிக் கொண்டிருக்கின்ற நீங்கள், ‘‘ஒரே ஜாதி'' என்று சொல்லிவிடுங்கள்; மனித குலத்தில் பேதமில்லை என்று சொல்லுங்கள்.

ஜாதியை ஒழித்து, தீண்டாமையை ஒழித்து நீங்கள் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் மனிதகுலம்'' என்று சொல்லக்கூடிய அளவிற்குக் கொண்டு வாருங்கள்; அப்போது இட ஒதுக்கீட்டைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம்; அதிலே இழப்புகள் ஏற்பட்டாலும்கூட.

ஜாதியை நாம் உருவாக்கவில்லை; ஜாதியினால்தான் இட ஒதுக்கீடு வந்ததே தவிர, இட ஒதுக்கீட்டினால் ஜாதி வரவில்லை. இதை இன்றைக்குத் தலைகீழாகப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

மண்டல் கமிசன் வந்த நேரத்தில், வி.பி.சிங் அவர்களைப் பற்றியெல்லாம் தவறாகப் பிரச்சாரம் செய்தார்கள். ஜாதி அடிப்படையிலா இட ஒதுக்கீடு? என்று ‘பிறவிலேயே ஜாதியிலே ஆதிக்கவாதிகளாக, அர்ச்சகர்களாக இருக்கவேண்டும்; அதைத் தடுக்கக் கூடாது’ என்று சொல்லுகிறவர்கள் - அங்கே ஜாதி அடிப்படையில் அனுபவித்துக்கொண்டு, இங்கே ஜாதி அடிப்படையிலா என்று கேட்கிறார்கள்.

எனவே, ஜாதியை நாம் உருவாக்கவும் இல்லை. நாம் ஆதரிக்கவும் இல்லை. நாம் அதை ஒழிக்கவேண்டும் என்று சொல்பவர்கள்! எந்தக் காரணத்தினாலே அவர்கள் பாதிக்கப்பட்டார்களோ, அதையே மூலாதார மாக வைத்துக்கொண்டு, ‘‘அதே கிருமியை'' எடுத்து உள்ளே செலுத்தி, அதற்குத் தடுப்பூசியை போட வேண்டும் என்று சொல்லக்கூடிய வாய்ப்பாகத்தான் இட ஒதுக்கீடு அமைந்திருக்கிறது.

நீதிமன்றம் என்று சொல்லி லாவகமாகப் பறித்துவிடக் கூடிய  சூழல்!

‘‘அதுகூட எவ்வளவு காலத்திற்கு? எவ்வளவு அளவிற்கு?'' என்று சொல்லுகின்றபொழுது, நேரிடை யாக இதற்குப் பதில் சொல்ல முடியாதவர்கள் - அவ்வப்பொழுது நீதிமன்றம், நீதிமன்றம் என்று கூக்குரலிடுகிறார்கள். காலங்காலமாக மறுக்கப்பட்ட நியாயங்களை மக்கள் மன்றத்தினுடைய தீர்ப்பின் மூலம், மக்களுடைய பிரதிநிதிகள் கொஞ்சம் உணர்ந்து, உரியவற்றைச் செய்து,  அதனால் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு நீதி கிடைக்கின்ற நேரத்தில் - அவர்கள் அந்த உணவை எடுத்துப் பசியாற உண்ணப் போகின்ற நேரத்தில், அந்த உணவைத் தட்டிவிடக்கூடிய அள விற்கும், அதை நீதிமன்றம் என்று சொல்லி லாவகமாகப் பறித்துவிடக் கூடிய  சூழலும் இன்றைக்கு உருவாகி இருக்கிறது.

எனவே, சில கருத்துகளை முதலில் தெளிவு படுத்துகின்றோம்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கின்ற ஆபத்து என்ன?

இரண்டு செய்திகளைச் சொன்னார்கள்.

மத்தியிலே இட ஒதுக்கீடு என்னும்போது, ஷெட்யூல்டு காஸ்ட், ஷெட்யூல் டிரைப் என்று, மிக முக்கியமாக 1935 ஆம் ஆண்டு முதல் பட்டியல் தயாரிக்கப்பட்டு, செய்யப்பட்டுவிட்ட ஓர் ஏற்பாடு.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ‘‘மண்டல் கமிசன் பரிந்துரை வந்து, அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகே, வி.பி.சிங் ஆட்சியில்தான் மத்திய அரசில் முதல் வேலை வாய்ப்பு'' என்று வந்தது!

அதற்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்துதான் கல்வி யில் இடஒதுக்கீடு என்று 93 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்தது - நம்முடைய தொடர் போராட்டத்தால்!

‘கம்யூனல் ஜி.ஓ.' நமக்கு சென்னை ராஜ்ஜியத்தில் மட்டும் இருந்தது அப்பொழுது. அது செல்லாது என்று வந்த வரலாறு எல்லாம் உங்களுக்குத் தெரியும்; அதை சொல்லவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.

ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பு

அதன் காரணமாக தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டுதான், முதன்முறையாக இந்திய வரலாற் றிலேயே தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடைத்த அனு கூலமான, வாய்ப்பான, இட ஒதுக்கீட்டின் நன்மை - சமூகநீதியின் பலன் - இந்தியா முழுவதும் கிடைக்கக் கூடிய வாய்ப்பு, 1951 ஆம் ஆண்டு முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலமாக, பிற் படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கும் சேர்த்துக் கிடைக்கக்கூடிய ஒரு வாய்ப்பும், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஒரு பாதுகாப்பும் 15(4) பிரிவின் மூலமாக ஏற்பட வழிவகுத்தது!

பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் பிரதமர்; பாபா சாகேப் அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் சட்ட அமைச்சர் - அவர்கள் காலத்தில் இது நிறைவேற்றப்பட்டது.

நண்பர்களே, இப்போது ஏன் அதைச் சுட்டிக்காட்டு கிறோம் என்றால், ‘‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally) பிற்படுத்தப்பட்டவர்கள்'' என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களை, அடை யாளம் காணுகின்ற பொறுப்பு, வாய்ப்பு மக்களை ஆளுகின்ற மாநில அரசுகளுக்கே உண்டு.

அப்படி பட்டியல்கள் எல்லாம் தயாரித்து, இட ஒதுக்கீடு வரக்கூடிய சூழலில், இப்பொழுது மறுபடியும் பல வழிகளில் திட்டமிட்டு இதனை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்று படிப்படியாக பல்வேறு காலகட்டங்களில் இந்த முயற்சிகளை செய்து கொண் டிருக்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு விரோதமாக....

இட ஒதுக்கீடே கூடாது என்ற கொள்கை உள்ள ஆர்.எஸ்.எஸ். அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க. - எப்படியாவது இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று, தங்களுக்குக் கிடைத்திருக்கின்ற வாய்ப்பாக மத்தியில் ஆட்சி அவர்களுடைய கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு காரணத்தால், அதனைப் பயன்படுத்தி, அடுத்து ஆட்சிக்கு வருகிறோமோ இல்லையோ என்று நினைத்து, அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, உயர்ஜாதியில் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று 10 சதவிகித இட ஒதுக்கீட்டை உருவாக்கி அரசமைப்புச் சட்டத்தினுடைய அடிக்கட்டுமானத்திற்கு விரோதமாக ஒரு சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினார்கள்!

அதற்கு முன்பே நாம் கேட்ட ஒரு கோரிக்கையை, ஏற்பதுபோல, முதலில் அதற்கு இணங்கி வருவதுபோல ஒரு புறத்தோற்றத்தை ஏற்படுத்தினார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத்திலும், நாடெங்கிலும் அந்தக் கிளர்ச்சி இருந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கென்று பார்லிமெண்டரி கமிட்டி உருவாக்கவேண்டும் என்று சொன்னோம்; உருவாக்கினார்கள். ஆனால், அதற்கு சட்ட வடிவம் இல்லை. ‘பல்' வலிமையுடன் கூடிய சட்ட வடிவம் கொடுங்கள் என்று கேட்டோம்.

அங்கேதான் ஆபத்து முளைத்து இருக்கிறது!

அந்தச் சட்ட வடிவம் கொடுக்கின்ற கோரிக்கையை ஏற்கின்ற சாக்கில் அமைந்ததுதான் 102 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமாகும். நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுகின்றோம் என்கிற சாக்கில், ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கின்ற உரிமையை, நாம் பல பேர் எதிர்த்தும், போராடியும்கூட, அவர்கள் நினைத்தபடி அவசர அவசரமாக சில நாள்களிலேயே, நாடாளுமன்றத்தில் அதிக விவாதங்கள்கூட நடை பெறாமல், செலக்ட் கமிட்டி சொன்ன பிறகும்கூட, அதைப்பற்றிக் கவலைப்படாமல், அவர்கள் தெளிவாக அந்த வரையறையை உருவாக்கி வைத்துவிட்டார்கள். அங்கேதான் ஆபத்து முளைத்து இருக்கிறது!

இரண்டு வகையாக இந்த உரையை நான் பிரித்துக் கொள்கிறேன்.

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு ஏதோ பெரிய ஆபத்து ஏற்பட்டுவிட்டதா என்றால், உடனடியான ஆபத்தோ, பிரச்சினையோ கிடையாது. அவ்வளவு எளிதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டில் கை வைக்க முடியாது. அதற்குக் காரணம், 9 ஆவது அட்டவணை பாதுகாப்பு அதற்கு இருக்கிறது - அரசமைப்புச் சட்டத் திருத்தப்படி அது நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

அதைப்பற்றி நான் அடுத்து விளக்கிச் சொல்கிறேன்.

இப்பொழுது எதைச் சொல்கிறார்கள், அவர்கள் எந்த ரூபத்திற்கு வருகிறார்கள் என்றால், நேரிடையாக வரவில்லை.  ‘50 சதவிகிதத்திற்குமேல்  இட ஒதுக்கீடு என்பது ஏற்க முடியாது என்று அரசமைப்புச் சட்ட தீர்ப்பு சொல்லியிருக்கிறது’ என்கிறார்கள்.

50 சதவிகித இட ஒதுக்கீடு என்பதைப்பற்றி முதலில் தெளிவுபடுத்தவேண்டும்.

முதலாவது கேள்வி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில், இட ஒதுக்கீடு என்று சொல்லுகிறபொழுது, எவ்வளவு சதவிகிதம் இருக்கவேண்டும் என்ற நிர்ண யத்தை அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவர்கள் எந்த இடத்திலாவது சுட்டிக்காட்டி, இதற்குமேல் வரக்கூடாது என்று எங்கேயாவது அரசமைப்புச் சட்ட பிரிவுகளில் நுழைத்திருக்கிறார்களா? வரைந்திருக்கிறார்களா? பதில் சொல்லட்டும்!

அரசமைப்புச் சட்டத்தினுடைய எந்தப் பிரிவிலும் இல்லை!

ஒரு இடத்தில்கூட உச்சவரம்பு இவ்வளவுதான் இருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. 50 சதவிகிதம் என்ற உச்சவரம்பை, ‘‘பாலாஜி'' என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொன்னார்கள் என்பதைத் தவிர, அவர்கள் நிர்ணயித்துக் கொண்டார்களே தவிர, நீதிமன்றமே உருவாக்கிக் கொண்டதே தவிர, அரசமைப்புச் சட்டத்தினுடைய எந்தப் பிரிவிலும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.

‘‘ஜீவாதார உரிமைகள்''

எவ்வளவு இருக்கவேண்டும் என்று சொல்லு கின்றபொழுது, 15(4), 16(4) என்ற பிரிவில்,

15(4) என்ற பிரிவு கல்வி வாய்ப்புகள் பற்றியது;

16(4) என்ற பிரிவு வேலை வாய்ப்புகள் பற்றியது. இவை அடிப்படை உரிமைகள் - ‘‘ஜீவாதார உரிமைகள்'' (Fundamental Rights) என்ற தலைப்பில் இருக்கின்றன.

ஆனால், நீதிமன்றங்களில் இருக்கின்றவர்கள் அந்தத் தலைப்பைப்பற்றிக் கூட கவலைப்படாமல், நீதிபதி சொல்கிறார்,

அது அடிப்படை உரிமை என்பதைக்கூட ஒப்புக் கொள்ள முடியாது என்று இப்போது கூறுகிறார்கள்! எவ்வளவு விசித்திரம்?

எந்த அளவிற்குப் போகிறார்கள் பாருங்கள்.

தலைப்பே, அடிப்படை உரிமைகள் என்று போட்டி ருக்கிறார்கள் அரசமைப்புச் சட்டத்தை உருவாக் கியவர்கள்.

சமூகநீதியை தகர்த்து வருகிறார்கள்

ஆனால், இவர்கள் அதையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்று கொள்ள முடியாது என்று சொல்லி, ஒரு மலையை கொஞ்சம் கொஞ்சமாக வெடி வைத் துத் தகர்ப்பதைப்போல, சமூகநீதியை தகர்த்து வரு கிறார்கள்.

அரசமைப்புச் சட்டம் 16(4) பிரிவில் உள்ளதை அருள்கூர்ந்து ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Nothing in this article shall prevent the State from making any provision for the reservation of appointments or posts in favour of any backward class of citizens which, in the opinion of the State, is not adequately represented in the services under the State.

‘‘மாநில அரசினுடைய கருத்துப்படி அமைய வேண்டும். போதுமான அளவிற்கு, மற்றவர்களோடு சமப்படுத்தக்கூடிய அளவிற்கு அந்த நியமனங்கள் இல்லை என்று அந்த அரசு கருதுமேயானால், அந்த அரசு அதற்கேற்ப வேலை வாய்ப்பிலே இட ஒதுக்கீட்டை செய்யலாம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ‘adequately' என்பதுதான் அவர்கள் பயன்படுத்தியிருக்கின்ற வார்த்தையே தவிர, அது எத்தனை விழுக்காடு என்று எந்த இடத்திலும் கிடை யாது. ஆனால், 50 விழுக்காடு என்பதை இவர்களே உருவாக்கிக் கொள்கிறார்கள்!

இவர்களாக உருவாக்கிக் கொண்டதுகூட எப்படி என்கிற அந்த வரலாற்றையும் சொல்கிறேன், அதை முக்கியமாக நீங்கள் எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு முன்பாக ஒரு செய்தி; பல கூட்டங்களில் சொல்லியிருந்தாலும், மீண்டும் மீண்டும் ஒரே செய்தியை சொன்னாலும், மக்கள் மனதில் பதியக்கூடிய அளவில் சொல்லவேண்டும்.

adequately represented in the services under the State என்கிற வரிகள் அரசமைப்புச் சட்டம் 16(4) இல் இருக்கின்ற வாசகம்.

‘adequately'  என்ற வார்த்தைக்கு என்ன பொருள்?

அது adequatus என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது. அதற்கு என்ன பொருள் என்றால்,  till it is equalised - மற்றவர்களோடு சமப்படுத்துகின்ற வரையில் என்பதுதான் அதன் பொருள்.

ஒரு பக்கம் மேடாக இருக்கிறது; இன்னொரு பக்கம் பள்ளமாக இருக்கிறது. இரண்டையும் சமப்படுத்த வேண்டும். சமப்படுத்தப்படும் வரையில் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எவ்வளவு என்று சொல்லவில்லை.

அதற்காக பல விவாதங்கள் நடைபெற்று இருக் கின்றன. அங்கே நாம் போகவேண்டிய அவசியமில்லை.

எப்படி வந்தது? யாரால் வந்தது? ஏன் வந்தது?

ஆகவே, 50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது எப்படி வந்தது? யாரால் வந்தது? ஏன் வந்தது? அதற்கு ஏதாவது ஒரு ‘‘சயிண்டிபிக் டேட்டா'' (அறிவியல்ரீதியான புள்ளிவிவரங்கள்) இருக்கிறதா? என்றால் கிடையாது.

(தொடரும்)

திங்கள், 17 மே, 2021

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும்


சட்டத்துறை அமைச்சர் உறுதி 

சென்னை, மே 12 சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்ட வல்லுநர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு பின்னர், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் பாதுகாக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உறுதிபட கூறினார்.

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்ட தனி உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.

இதன்மூலம் தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 சதவீத இடஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து நேரிடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது.

முதலமைச்சர் ஆலோசனை

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நேற்றிரவு (11.5.2021) ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் மற்றும் சட்ட வல்லு நர்கள் கலந்துகொண்டனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த கூட்டம் நடந்தது.

இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்களுக்குப் பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திரா சஹானி தீர்ப்பு அடிப்படையில்...

தமிழகத்தை பொறுத்தவரை நமக்குள்ள ஒரே ஆயுதம், இந்திய அரசமைப்பு சட் டத்தின் 9 ஆவது அட்ட வணையில் நமது 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் சேர்க் கப்பட்டு இருக்கிறது. எனவே ஒரு மாபெரும் சட்ட பாது காப்பு நமக்கு கிடைத் திருக்கிறது. இந்திரா சஹானி தீர்ப்பு அடிப்படையில் தான், மராட்டிய இடஒதுக்கீடு வழக்கின் அடிப்படையில் தான் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்து இருக்கிறது.

நமது 69 சதவீத இடஒதுக்கீட்டுக்காக சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று உரிய அங்கீகாரம் பெறப்பட்டு அது அரசமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில்  வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் சேர்த்துள்ளோம். மேற்கொண்டு இந்த இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர்

எஸ்.ரகுபதியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டு பிரச்சினை வராது என்று உறுதி அளிக்கமுடியுமா?

பதில்: எங்களால் எந்த பாதிப்பும் வராது. அதை பாதுகாக்க வேண்டும் என்பதே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நோக்கம். அதை நிச்சயம் அவர் காப்பாற்றுவார்.

கேள்வி: பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்படும்?

பதில்: அந்த கோரிக்கை குறித்து விரைவில் நல்ல முடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுப்பார்.

7 பேரை விடுதலை செய்யவேண்டும் என்பதுதான் எங்கள் முடிவு. தேர்தல் அறிக்கையிலேயே அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேற்கண்டவாறு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி செய்தியாளர்கள் கேட்ட கேள்வி களுக்குப் பதில் அளித்தார்.

பாராட்டத்தக்கத் தலையங்கம் - வகுப்புவாரி உரிமை - மாநிலங்களின் உரிமையே!


சமூகநீதி - வகுப்புவாரி - இட ஒதுக்கீடு எனப் படும் அனைத்து உரிமைகளுக்கும் அச் சுறுத்தலான தீர்ப்பு ஒன்றை உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கி இருக்கிறது! இதனை நாம் மிக உன்னிப்பாக கவனித்தாக வேண்டும். மராத்திய இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் அது என்று நாம் அதனை கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்த்ய்ஹா சமூகத்தினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 16 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் 2018 ஆம் ஆண்டு புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மும்பை உயர்நீதிமன்றம் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டது. ஆனால், சில திருத்தம் செய்தது. மராத்தா சமூகத்தினருக்கு வேலைவாய்ப்பில் 12 சதவிகிதமும், கல்வியில் 13 சதவிகிதமும் வழங்கலாம், 16 சதவிகிதம் என்பது அதிகம் என்று தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிலர் மனு தாக்கல் செய்தார்கள். மகாராஷ்டிரா மாநில அரசு பிறப்பித்துள்ள சட்டமானது உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிர்ணயித்துள்ள 50 சதவிகித இட ஒதுக்கீட்டின் வரம்பை மீறுவதாக உள்ளது என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த அமர்வு கடந்த மே 5ஆம் தேதி தீர்ப்பளித்தது. மராத்தியர்களுக்கான இட ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மராத்திய இடஒதுக்கீடு சட்டம் 50 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதாலும், மண்டல் வழக்கில் 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, 50 விழுக் காட்டிற்கு மேற்பட்டு இட ஒதுக்கீடு அமையுமானால், அது தனி விதி விலக்குக்குரியது என்பதை - போதிய ஆதாரத்துடன் விளக்குவதாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கலாம் என்ற நிபந்தனைக்கு உகந்ததாக மராத்திய ஒதுக்கீடு அமையவில்லை என்று கூறி, அது செல்லாது என்று தீர்ப்பளித்துள்ளது. இன்று மராத்தாவுக்கு வந்தது. நாளை நமக்கும் வரலாம். எவருக்கும் வரலாம்.

அனைத்து மாநிலங்களும் 50 சதவிகித இடஒதுக்கீட்டை தாண்டக் கூடாது என்ற இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய பெரிய அமர்வுக்கு அனுப்ப இந்நீதிபதிகள் ஒருமனதாக மறுத்துவிட்டார்கள். தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு - சட்ட அங்கீகாரத்தோடு - அதற்கான வலிமையோடு இருந்தாலும் இந்தத் தீர்ப்பை நாம் சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. கூடாது.

இந்தத் தீர்ப்பின் போது இன்னொரு ஆபத்தும் வெளிப்பட்டுள்ளது. அதுதான், இனி பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது என்பதாகும். இது மட்டும் நிறைவேறினால் இந்தியா முழுவதும் இருக்கிற பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமை களை இழந்து மிகமிக பின்னுக்குத் தள்ளப்படு வார்கள்.

இனி, பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு செய்யும் உரிமை மாநில அரசுகளுக்குக் கிடையாது; காரணம் அந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம்

102-இல் உள்ள 342-ஏ என்ற புதிதாக இணைக்கப் பட்ட பிரிவு, ‘சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்' பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை அடை யாளம் கண்டு சேர்க்கும் உரிமை - வரையறை செய்வது நாடாளுமன்றத்தையும், குடியரசுத் தலை வரையுமே - அதாவது மத்திய (டில்லி) அரசினை மட்டுமே சார்ந்த ஒன்று என்பதாக பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மாநிலங்கள் தீர்மானிக்க முடியாது - குடியரசுத் தலைவர் தான் தீர்மானிக்க முடியும் என்கிறது இந்தத் தீர்ப்பு. அனைத்து மாநிலங்களிலும் ஜாதி இருக்கிறது. அது ஒரே மாதிரியான ஜாதியாக இல்லை. இவர் பிற்படுத்தப்பட்ட ஜாதி - இவர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என மாநிலங்கள் தான் தீர்மானிக்க முடியும். இது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். அதனை மாநிலங்களால் மட்டுமே அடையாளம் காண முடியும். அளவிட முடியும்.

இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். “இதனால் ஏற்படும் ஆபத்தான விளைவுகளும்; சமூக நீதிக்கான - மாநிலங்களின் உரிமைப் பறிப்பும் மிகவும் மோசமானதாக - இனிமேல் மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு, அதற்கேற்ப உள் ஒதுக்கீடுகள் உட்பட எதையும் கொடுப்பதற்கு எந்த உரிமையும் அற்றவைகளாகவே ஆகக் கூடும்'' என்று ஆசிரியர் கி.வீரமணி சுட்டிக் காட்டியுள்ளார்.

‘‘ஏற்கெனவே 1951 இல் தந்தை பெரியார் போராடி, பிரதமர் நேருவும், சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கரும், நாடாளுமன்றமும் கல்வி யில் இட ஒதுக்கீடு செய்ய பிற்படுத்தப்பட்ட வர்களுக்கென - சமூகரீதியாகவும், கல்வி ரீதியாகவும், (socially and educationally) என்று அடையாளப்படுத்திய வரைமுறையைத் தந்த முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தமும், அதனால் விளைந்த அத்துணைப் பயன்களும் காணாமற் போகச் செய்யும் - பறிமுதல் செய்யும் பேராபத்தான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது'' - என்றும் அவர் கொந்தளித்துள்ளார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்ட வலிமை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

சமூகநீதி என்பது சமூகங்களின் உரிமையே தவிர, சட்ட உரிமை அல்ல. சமூகநீதி என்பது குடிமக்களின் உரிமையே தவிர, குடியரசுத் தலைவரின் உரிமை அல்ல. - இதனை நிரூபிக்க வேண்டிய சமூகநீதிக்கடமை நம் அனைவர் தலையிலும் விழுந்துள்ளது.

சமூகநீதி மட்டுமல்ல, மாநில உரிமையும், இன உரிமையும் தொடர்புடையது!

நன்றி: ‘முரசொலி' , 12.5.2021,

பக்கம் 2

செவ்வாய், 11 மே, 2021

மைசூரில் சமூகநீதி எழுச்சி

உங்களுக்குத் தெரியுமா?                        1916ஆம் ஆண்டு(தென்னிந்திய நல உரிமைச் சங்கம் துவக்கப்பட்ட அதே ஆண்டு) மைசூர் நாட்டு சட்டமன்றத்தில் பிற்படுத்தப்             பட்ட மக்களைப் பற்றிய எச்.நரசிங்கராவ் (பிற்படுத்தப் பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் தோன்றிய பெருமகனார்)பேருரையாற்றினார்.பிற்படுத்தப்பட்ட       மக்களுக்குக் கல்வி வாய்ப்பு வேண்டும் எனவும்,கல்வியில் மேல் நிலயடைய அரசு உதவித் தொகை வழங்க வேண்டும் எனவும் அதுவே அவர்கள் தன்னிறைவடையத் தேவை என்று முழங்கினார்.அவரைத் தொடர்ந்து        அங்கிருந்த மற்ற பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களும் கல்வி வாய்ப்பில் சீர்திருத்தங்கள் செய்வதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் என  உரிமை முழக்கமிட்டனர்.         1900 ல் பிற்ப்படுத்தப்பட்ட ஒரு ஜாதியில் துவங்கிய போராட்டம் 1946ல்  35 சமூககங்கள்             இணைந்த பெரும் போராட்டமாக மாறிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா?          (ஆதாரம்:பேரா.நிரமல்ராஜ்.the backward class movement in the princely state of Mysore .)