பக்கங்கள்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்க்கப்படும்

 

சட்டப்பேரவையில் அமைச்சர் மெய்யநாதன் அறிவிப்பு

சென்னைசெப். 4- அரசு வேலைவாய்ப்பில் 3 சத வீத இடஒதுக்கீடு பெறு வதற்கான விளையாட்டு களில் ஒன்றாக சிலம்பமும் சேர்த்துக் கொள்ளப்படும் என்று அமைச்சர் சிவ.வீமெய்யநாதன் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இளைஞர் நலன்விளை யாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்துக்குப் பதில் அளித்துஅமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று (3.9.2021) வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:

மாநிலத்தின் 4 மண் டலங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் அமைக்க உத்தேசிக் கப்பட்டுள்ளதுஇங்குஉயர்திறன் வாய்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பதக்க மேடையைஅடைவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட உள்ளனஇதற்கான தொழில்நுட்ப பொருளா தார சாத்தியக்கூறு அறிக் கையை தயாரிக்க ஆலோ சகர்களை நியமிக்க உத் தேசிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களால் உரு வாக்கப்பட்டவரலாற் றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம்அரசு வேலைவாய்ப்புகளில் 3 சதவீத விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள விளையாட்டுகளில் ஒன்றாக சேர்த்துக் கொள் ளப்படும்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தின் திட்டங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பு டைய செயல்பாடுகள் குறித்த விவரங்களை விளையாட்டு வீரர்கள்பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ள வசதி யாக தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் அழைப்பு சேவை மய்யம் தொடங் கப்படும்.

கிராமப்புற மக்களின் உடற்தகுதிஆரோக்கி யத்தை கருத்தில் கொண்டுதமிழ்நாடு உடற்கல்வியியல்விளையாட்டுப் பல்கலைக்கழகமானது அதன் உறுப்புக் கல்லூ ரிகளின் மாணவர்கள்ஆசிரியர்கள் மூலம் அரு கில்உள்ள கிராமங்களில் சிறப்பு கவனம் செலுத்தி கிராமப்புற பயிற்சி திட் டத்தின் கீழ் உடற்தகுதி பயிற்சிமேற்கொள்ளும்.

மக்களின் நன்மைக் காக யோகாசனங்கள்மனக்கட்டுப்பாடு போன் றவற்றை உள்ளடக்கிய முழுமையான ஆரோக்கி யத்துக்காக தமிழ்நாடு உடற்கல்வியியல்விளை யாட்டுப் பல்கலைக்கழகம் மூலம் ‘யோகாஎன்னும் செயலி உருவாக்கப்படும்.

வேலைவாய்ப்பு பிரிவின் மூலம் தமிழ்நாடு உடற்கல்வியியல்விளை யாட்டுப் பல்கலைக்கழக மாணவர்கள் வேலை வாய்ப்பு பெறுகின்றனர்இவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில்நேர்முகத் தேர் வுக்கான பல்வேறு பயிற் சிகள் வழங்கப்படும்.

விழுப்புரம் மாவட்ட விளையாட்டு வளாகத் தில் உள்ள கட்டமைப்பு வசதிகளை ‘கேலோ இந் தியா’ திட்டம் மூலம் தரம் உயர்த்தவும்புதிதாக உரு வாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 11 அறிவிப்பு களை பேரவையில் அமைச் சர் வெளியிட்டார்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

இன்று உலக சமூக நீதி நாள்- சமூகநீதியின் முன்னோடிகளான மருத்துவர்கள்

 

சமூக நீதிக்காக தமிழகத்தில் அடித்தளமிட்ட நீதிக்கட்சியின் தளகர்த்தாக்களில் இருவர் மருத்துவர்சமூக நீதிக்காக போராடுவதில் மருத்துவர்கள் எப்போதும் முன்னணியில்  களமாற்றி இருக்கிறார்கள்அவர்களைப் பற்றி இந்த நாளில் பதிவிடுவதை பெருமையாக கருதுகிறேன்.

உலகின் சமூகப் புரட்சிக்கு வித்திட்டதில் மருத் துவ இனத்திற்கு வரலாற்றில் பெரும்பங்கு எப்போதும் உண்டு.உலகின் மிகப்பெரும் புரட்சியாளன் சேகு வேரா ஒரு மருத்துவர் என்பது நாமறிந்ததே.

இந்தியாவில் எப்போதும் ஓர் தனித்துவமிக்க மாநிலமாக ,ஏன் மற்ற மாநிலங்களுக்கு மாநில சுயாட் சியை,சுயமரியாதையைசமூக நீதியைமொழியுரி மையை,கற்றுக் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் எப்போதும் திகழ்ந்திருக்கிறது.

அயோத்திதாச பண்டிதர் ஆரம்பித்து வைத்த இந்த வரலாற்றை நீதிக் கட்சி நிலைநாட்டியது.

நீதிக்கட்சியை உருவாக்கிய மூவரில் இருவர் மருத்துவர்களே.

மருத்துவர் டி..எம்.நாயர் (1868-1919)

மருத்துவர் சி.நடேசனார் (1875-1937)

மருத்துவர் டி.எம்.நாயர்:

பெரியாராலேயே 'திராவிட லெனின்என்று அழைக்கப்பட்டவர்பிரிட்டன் பிரான்சில் மருத்துவப் படிப்புகளை முடித்த இவர் நீதிக்கட்சியை தொடங்கிய வர்களில் ஒருவர்...  'ஜஸ்டிஸ்பத்திரிகையின் ஆசிரி யராக இருந்தவர்.

மருத்துவர் சி.நடேசனார்:

பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு விடுதிகளில் இடம் மறுக்கப்பட்டபோது 'திராவிட இல்லம்விடு தியை தொடங்கினார்சென்னை அய்க்கிய சங்கம்சென்னை 'பப்ளிக் சர்விஸ் கமிஷன்அமைப்பதில் இவரின் பங்கு அளப்பரியது.

தீண்டாமை ஒழிப்புஆலய பிரவேசம்ஆதி திராவிட நலனுக்காக மிகத் தீவிரமாக போராடினார்.

தமிழகம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஓங்கி ஒலிப்பதில் நீதிக்கட்சியின் பங்கு அளப் பரியதுஅதன் தள கர்த்தாக்கள் இருவர் மருத்துவர் என்பது மருத்துவ உலகிற்கு வரலாற்றுப் பெருமை.

மருத்துவ உலகம் மருத்ததுவம்  தாண்டி சமுகத் திற்கு தொடர்ந்து பங்காற்ற வேண்டிய வரலாற்று கடமையை சேகுவேராக்களும்,  நடேசனார்களும்நாயர்களும்முத்துலெட்சுமிகளும்ரவீந்திரநாத்து களும் நமக்கு தொடர்ந்து உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்!

ஸ்டெதாஸ்கோப்புகள் சமூக இதயத் துடிப்பு களையும் கேட்கட்டும்!

நம்பிக்கையோடு

மருத்துவர் .தட்சிணாமூர்த்தி,

தலைவர் - திசைகள் அமைப்பு,

அறந்தாங்கி, 9159969415

தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சி!

 

August 27, 2021 • Viduthalai

அரசு உதவி பெறும் பள்ளிகளையும் இக்குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம்!

தொழிற்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்  என்பது கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சியாகும்அரசு உதவி பெறும் பள்ளி களையும் ஒரு குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது வரவேற்கத்தக்கது!

தி.மு.ஆட்சிப் பொறுப்பேற்றுமுதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நூறு நாள்களுக்குள்செய்த சாதனைகளில் முக்கியமானதுஅரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைஎளியகல்வி ரீதியாகவும்சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றவர்களோடு - நகர்ப்புற வசதி வாய்ப்பு பெற்ற மாணவர்களை சேர்த்துப் கற்பிக்கும் தனியார் பள்ளி களைப்போல - அதைவிட சிறப்பாக படிக்க வைக்கும் வாய்ப்பையும்தரத்தினையும் மேம்படுத்தி, ‘கல்வியின் மேடு பள்ளங் களைச்சீராக்கிசம வாய்ப்பு என்பது சம நிலையில் உள்ளவர்கள் போட்டியிட்டால் தான் கிட்டும் என்ற அரிய உண்மையை நிலை நிறுத்திஜஸ்டீஸ் முருகேசன் (ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிதலைமையில் குழு அமைத்துவிரைவாக அறிக்கை பெற்றுஅதன் பரிந்துரை அடிப்படையில் அரசு பள்ளி களில்பொறியியல்வேளாண்மைகால் நடை மருத்துவம்மீன்வளம்சட்டம் போன்ற தொழிற் படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் முன்னேற வாய்ப்பளிக்கும் வகையில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை முதல மைச்சர் முன்மொழியஅது ஏகமனதாக - எதிர்ப்பின்றி நிறைவேறியுள்ளது வர வேற்கத்தக்கது!

மருத்துவக் கல்லூரி படிப்பில் உள்ள சட்டத்தை முந்தைய .தி.மு.அரசு செய் தது -  நீதிபதி கலையரசன் பரிந்துரைப்படி,

இப்போது மற்ற முக்கிய தொழிற்படிப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு இத்துறையில் கற்க இது ஓர் அருட்கொடை யாகும்!

கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சி!

மருத்துவப் படிப்புக்கு எவ்வகையிலும் இத்தொழிற்கல்வி படிப்புகள் குறைந்த தில்லைபெற்றோரும்மாணவர்களும் இப்போது உணர்ந்துஇப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டும் நிலையில்வாய்ப்புக் கதவு இதன்மூலம் அரசு பள்ளி மாணவர் களுக்கு அகலமாகத் திறக்கப்படுவது கல்வித் துறையில் ஓர் அமைதிப் புரட்சி யாகும்!

தனியார் பள்ளிகளில் கூடுதல் வெற்றி மாணவர்களிடையே கிடைப்பதற்கு முக்கிய காரணம் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கே பள்ளியில் இடம் தரும் வகையில் அந்தந்த நிர்வாகம்தலைமை ஆசிரியர்களின் முடிவினால்தான்.

முயன்றால் முடியாதது எதுவுமில்லை!

ஆனால்அரசு பள்ளிகள் ‘வெகுமக்கள் பள்ளிகள்என அனைவருக்கும் வாய்ப்பு அளிப்பதால்குறைந்த மதிப்பெண் பெற்றவர்களானாலும்முதல் தலைமுறைஇரண்டாம் தலைமுறையினரைச் சேர்த்துப் படிக்க வாய்ப்பளிக்கும் முறை அமலில் உள்ளதுகூழாங்கற்களைவைரக் கற் களாக்குவதுதான் சிறப்பான கல்விப் பணிமுயன்றால் முடியாதது எதுவுமில்லை.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருவதே இதற்கு ஓர் உதாரணம் ஆகும்!

அரசு பள்ளிகளுக்கு கிடைத்துள்ள இந்த அருமையான வாய்ப்பை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்ட வேண்டும்.

இரண்டிற்கும் உள்ள ஒரே வேறுபாடு - நிர்வாகம்தானே தவிரகல்வி முறையோஆசிரியர்களோமாணவர்களோ அல்ல.

பல்லாயிரக்கணக்கில் பயன்பெற்று விழி பெற்று பதவி கொள்வர்

எனவேஅப்பள்ளிகளையும் இத்திட் டத்தின்கீழ் கொண்டு வந்தால்மேலும் தமிழ்நாட்டு மாணவர்மாணவியர் பல் லாயிரக்கணக்கில் பயன்பெற்று விழி பெற்று பதவி கொள்வர்இதையும் தமிழ்நாடு முதலமைச்சர் (விரிவாக்கமாகதிருத்தம் மூலம் செய்தல் நலம்.

இத்தகைய தொழிற்கல்விஇளைஞர் களின் அறிவுத் திறன்வேலை வாய்ப்புக் கிட்டாவிடினும் சொந்தக்காலில் நிற்கும் தனித்தன்மையை அவர்களுக்குத் தரும் அருமையான படிப்பாகும்.

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும்...

ஆதலால், 7.5 விழுக்காடு இட ஒதுக் கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும்அந்தக் குடையின்கீழ் கொண்டு வருவது அவசியம்!


கி.வீரமணி

தலைவர்

27.8.2021

திராவிடர் கழகம்.

சென்னை