பக்கங்கள்

வியாழன், 9 மார்ச், 2023

வட இந்தியாவில் தொடரும் ஜாதிய வன்கொடுமைகள்

 

தாய் செய்த வயல் வேலைக்கு கூலி கேட்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூக சிறுவனை அடித்து காலணியை நக்க வைத்த கொடூரம்!

பரேலி, செப்.27 உத்தரப்பிரதேச மாநிலம் ரேப ரேலியில் சிறுவன் ஒருவனை சில உயர் ஜாதியினர் தங்களின் காலணியை நக்கி சுத்தப் படுத்த, அடித்துப் பணியவைத்து அதனை காணொலியாக எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனைத்தொடர்ந்து இந்த கொடூரச்செயலைச் செய்ததற்காக 7 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு,  உயர்ஜாதியினர் அணிந் திருந்த காலணியை நக்க வைத்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில்  2 நிமிட 30 வினா டிகள் கொண்ட காணொலியில் பாதிக்கப்பட்ட சிறுவன் தரையில் அமர்ந்து காதுகளில் கை வைத்து, இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்தி ருப்பவரின் காலணி மற்றும் கால்களை நக்குகிறார். அங்கிருப்பவர்களில் சிலர் அவனது முதுகில் மிதிக்கின்றனர். கம்பால் அடிக்கின்றனர். அதில், ‘‘என்ன துணிச்சல் இருந்தால் எங்களிடம் கூலி கேட்டு வருவாய், இனிமேல் எங்களிடம் கூலி கேட்டு வரக்கூடாது, இனிமேல் இப்படிச் செய்தால் கை காலை உடைத்துவிடுவோம்'' என்று பேசுகிறார்

இந்த நிகழ்வு ஏப்ரல் 10 ஆம் தேதி நடந் ததாகவும், பாதிக்கப்பட்டவர் சிறுவனாக இருந் ததாலும். புகார் கொடுக்க அச்சப்பட்டதாலும் இதை வெளியில் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் சிறுவனின் அம்மா சில சமூக ஆர் வலர்களின் உதவியுடன் காவல்துறையில் புகார் செய்தார், இதனை அடுத்து இந்த நிகழ்வில் தொடர்புடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், தந்தை இறந்த நிலையில், தாயுடன் வசித்து வருகிறார். பாதிக்கப்பட்ட மாணவரின் தாய் உயர்ஜாதியி னரின் வயல்களில் வேலை செய்துவந்தார். செய்த வேலைக்கு நீண்ட நாட்களாக கூலி கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவரது தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் செல வுக்கு பணம் தேவைப்பட தனது தாய்க்கு கொடுக்கவேண்டிய கூலியைக் கேட்க அந்த சிறுவன் சென்றதாகவும், இதனால் கோப மடைந்த உயர்ஜாதியினர் காலணியை நாவால் நக்க வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. ஆனால், இந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்  இந்த விவரங்கள் குறிப் பிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக