பக்கங்கள்

ஞாயிறு, 12 மார்ச், 2023

கோவிலுக்குள் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்துத் தள்ளிய கொடுமை

 இதுதான் பக்தியா?

கோவிலுக்குள்  சென்ற தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்துத் தள்ளிய கொடுமை

பெங்களூரு, ஜன.8 கருநாடக மாநிலத்தில் கோயிலுக்குள் நுழைந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளம்பெண்ணை கோயில் நிர்வாகி ஒருவர் கடுமையாக தாக்கி தர தரவென வெளியே இழுத்துச் சென்று தள்ளி விட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கருநாடக மாநிலத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பெங்களூருவின் அம்ருதஹள்ளி பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் இளம்பெண் வழிபாடு செய்வதற்காக சென்றிருக்கிறார். கோயிலில் கூட்டம் அதிகம் இல்லாத நேரம் அது. 

இந்நிலையில், அங்கு வந்த கோயில் நிர்வாகி அப்பெண்ணிடம் ஜாதி குறித்து கேட்டுள்ளார், மேலும் நீங்கள் எல்லாம் வெளியே நின்று கும்பிட்டு விட்டுப் போகவேண்டியதுதானே என்று கூறி அங்கிருந்து அவரை வெளியே போகச் சொல்லியிருக்கிறார். ஆனால் அப்பெண் தான் ஏன் வெளியே செல்ல வேண்டும்? என்றும், 'சாமி' குடும்பிடத்தானே வந்திருக்கி றேன் எனவும் கூறியுள்ளார். ஆனால் கோயில் நிர்வாகி இதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. அந்தப் பெண்ணின் கையை பிடித்து வெளியே இழுத்து வர முயன்றுள்ளார். ஆனால் அப்பெண் வெளியே வர வில்லை.  தொடர்ந்து கோயில் நிர்வாகி யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள் ளார். இதனால் கோபமடைந்த கோயில் நிர்வாகி அப்பெண்ணை சரமாரியாக தாக்கத் தொடங்கியுள்ளார். உடனே அப்பெண் தரையில் அமர்ந்து விட்டார்.  அப்போதும் கூட விடாமல் அப்பெண்ணை தர தரவென இழுத்து கோயில் சன்னதிப் பகுதியிலிருந்து வெளியேற்றியுள்ளார். அப்போதும் அப்பெண் மீண்டும் உள்ளே நுழைய, கோயில் அதிகாரி அப்பெண்ணின் முடியை பிடித்து இழுத்து வெளியே தள்ளியுள்ளார். பின்னர் கன்னத்தில் அறைந்து அப்பெண்ணை வெளியே போகச் சொல்லியுள்ளார். அப்பெண் அப்போதும் கோயிலிலிருந்து வெளி யேறாத நிலையில், கம்பை எடுத்துக் கொண்டு கோயில் நிர்வாகி தாக்க ஓடி வந்துள்ளார்.

இதுவரை இந்த சம்பவங்கள் அனைத்தையும் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கோயில் பூசாரிகளில் ஒருவர் கம்பை கண்ட வுடன் கோயில் நிர்வாகியை தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத கோயில் நிர்வாகி அப்பெண்ணை தாக்கி விரட்டி யுள்ளார். இவையனைத்தும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளது. கோயிலில் பக்தர் களுக்கு எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது என்று கருநாடக மாநில அரசு உத்தரவிட்டிருந்தும் இந்த உத்தரவுகள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகம் காற்றில் பறக்கவிட் டுள்ளது.  இந்த நிகழ்வையடுத்து அம்ருதஹள்ளி காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகிகளுக்கு எதிராக அப்பெண் புகார் அளித்திருக்கிறார்

கருநாடக மாநிலத்தில் தாழ்த்தப் பட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தப் படுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் கடவுளர் சிலையை தொட்ட தற்காக தாழ்த்தப்பட்ட சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டி ருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருந்தது. கருநாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹல் லியில் பூதம்மா கோயில் அமைந் திருக்கிறது. இந்த கோயிலுக்கு கிராமத் தில் இருக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் செல்லக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு ஒன்று நடை முறையில் இருந்து வருகிறது. மீறி சென்றால் கடவுளின் சாபத்திற்கு ஆளாகி விடுவார்கள் என்று சொல்லப் பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேரந்த சிறுவன் ஒருவன் கோயிலுக்குள் சென்றுள்ளான். இது மட்டுமல்லாது கருவறைக்குள் சென்று சாமி சிலையையும் தொட்டுள்ளான். அவ்வளவுதான் பஞ்சாயத்து வெடித் திருக்கிறது. சிறுவனை சிலர் தாக்கியுள் ளனர். பின்னர் ஊர் பஞ்சாயத்தில் வைத்து சிறுவன் செய்தது தவறு என்றும், அவனது குடும்பத்தினருக்கு ரூ.60 ஆயிரம் அபராதமும் விதிக்கப் பட்டது. பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பஞ்சாயத்து நடத்தியவர்கள் மீது வழக் குப்பதிவு செய்யப்பட்டது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக